search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவிட்சர்லாந்து"

    மாட்ரிட் ஓபன் டென்னிஸில் 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் கயல் மான்பில்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். #MadridOpen #RogerFederer
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் பிரான்ஸ் வீரரான கயல் மான்பில்சை எதிர்கொண்டார். இதில், 6-0, 4-6, 7-6 (3) என்ற கணக்கில் பெடரர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இது அவரது 1200வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. #MadridOpen #RogerFederer 
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற 4வது சுற்றுப் போட்டியில் கிரீஸ் வீரர் டிஸ்டிஸ்பசிடம் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். #AustralianOpen #RogerFederer
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4வது சுற்றுப் போட்டியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் கிரீஸ் நாட்டை சேர்ந்த டிஸ்டிஸ்பசை எதிர்கொண்டார்.

    இதில், டிஸ்டிஸ்பசிடம் ரோஜர் பெடரர் 7 - 6, 6 - 7, 5 - 7, 6 - 7 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார். இந்த வெற்றியின் மூலம் டிஸ்டிஸ்பஸ் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். இந்த போட்டி சுமார் மூன்றே முக்கால் மணி நேரம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. #AustralianOpen #RogerFederer
    சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் மிக அழகிய இளஞ்சிவப்பிலான வைரக்கல் ரூ.370 கோடிக்கு ஏலம் போனது. #pinkdiamond #GenevaAuction
    ஜெனீவா:

    சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் மிக அழகிய இளஞ்சிவப்பு வைரக்கல் ஏலம் நடைபெற்றது. இதை கிறிஸ்டி, ஏல மையம் நடத்தியது.

    10 காரட் எடை கொண்ட இந்த வைரக்கல் சுமார் ரூ.370 கோடிக்கு (50 மில்லியன் டாலர்) ஏலம் போனது. இது நீள் சதுரவடிவம் கொண்டது. பளிச்சென்ற இளஞ்சிவப்பு நிறம் கொண்டது.

    இந்த வைரத்தை பலர் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். முடிவில் ஒருவர் அதிக விலை கொடுத்து வாங்கினார். அவரின் பெயரை வெளியிட கிறிஸ்டி ஏல மையம் மறுத்து விட்டது.

    கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1920-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க சுரங்கத்தில் இது கண்டு பிடிக்கப்பட்டது. பொதுவாக வைரங்கள் வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். ஆனால் இந்த வைரம் அரிய இளஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிக்கிறது. #pinkdiamond #GenevaAuction
    சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதி காட்டுக்குள் 2 விமானங்கள் விழுந்து நொறுங்கிய விபத்தில் 23 பேர் பலியாகினர்.
    ஜுரிச்:

    சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் நேற்று ஒரு குட்டி விமானம் சென்று கொண்டு இருந்தது. அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பயணம் செய்தனர்.

    திடீரென்று அந்த குட்டி விமானத்தில் கோளாறு ஏற்பட்டு காட்டுப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 4 பேரும் பலியானார்கள்.

    இந்த விபத்து தொடர்பாக மீட்பு பணி நடந்துகொண்டு இருந்தபோது அதே பகுதியில் சென்ற மற்றொரு விமானமும் திடீர் என்று தரையில் விழுந்து நொறுங்கியது.

    அந்த விமானத்தில் 17 பயணிகள் 2 விமானிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உடல்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விமான விபத்தால் காட்டுப் பகுதிக்குள் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியை நடந்து வருகிறது.

    விபத்து நடந்த மலைப் பகுதி 8,038 அடி உயரம் கொண்ட பனிப்பிரதேசம் ஆகும். இரு விமானங்களும் உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு சொந்தமானவை.
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த கோஸ்டா ரிகா, சுவிட்சர்லாந்து இடையேயான லீக் போட்டி டிரா ஆனது. #FIFAWorldCup2018 #FIFA2018 #SUICRC

    மாஸ்கோ:

    32 நாடுகள் கலந்துகொண்டுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றன. ‘ஈ’ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் சுவிட்சர்லாந்து, கோஸ்டா ரிகா அணிகள் பலப்பரீட்சை செய்தன. கோஸ்டா ரிகா அணி ஏற்கனவே தொடைவிட்டு வெளியேறிவிட்ட நிலையில், இந்த போட்டி சுவிட்சர்லாந்து அணிக்கு அடுத்த சுற்றுக்கு தகுதிபெற முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 

    இப்போட்டி தொடங்கியது முதல் இரு அணியும் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் ஜிமைலி சிறப்பான முறையில் கோல் அடித்தார். இதனால் சுவிட்சர்லாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.  



    கோஸ்டா ரிகா அணியினர் முதல் பாதிநேர ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதிநேர ஆட்டம் சுவிட்சர்லாந்து அணிக்கு சாதகமாக அமைந்தது.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா வீரர் கெண்டால் வாஸ்டன் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. 



    அதன்பின் 88-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ஜோசிப் ட்ரெமிக் கோல் அடித்தார். இதனால் சுவிட்சர்லாந்து அணி 2-1 என முன்னிலை பெற்றது.



    அதைத்தொடர்ந்து கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் கோஸ்டா ரிகா அணிக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. அதில் சுவிட்சர்லாந்து அணியின்  அந்த அணியின் யான் சோமர் எதிரணிக்கு ஒரு கோல் அடித்து கொடுத்தார்.



    அதன்பின் இறுதிவரை இரு அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டி டிராவில் முடிந்தது. இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்த சுவிட்சர்லாந்து அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. #FIFAWorldCup2018 #FIFA2018 #SUICRC
    உலக கோப்பை கால்பந்து தொடரின் இ பிரிவில் நடந்த போட்டியின் இறுதி கட்டத்தில் கோல் அடித்து 2 - 1 என்ற கோல் கணக்கில் செர்பிய அணியை சுவிட்சர்லாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #WorldCup2018 #SWISER
    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இ பிரிவில் இடம் பிடித்துள்ள செர்பியா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.

    போட்டி தொடங்கிய 5-வது நிமிடத்தில் செர்பிய அணியின் அலெக்சாண்டர் மிட்ரோவிக் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் செர்பிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சுவிட்சர்லாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். அந்த அணியின் கிரானிட் சாகா 52-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என்ற சமநிலைக்கு கொண்டு வந்தார்.

    இதையடுத்து, ஆட்டம் முடியும் நிலையில் பரபரப்பான 90-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் செர்டான் ஷாகிரி ஒரு கோல் அடித்தார். இதனால் சுவிட்சர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

    இதைத்தொடர்ந்து கூடுதலா கொடுத்த 6 நிமிடங்களில் செர்பிய அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில், செர்பிய அணியை 1-2 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் பெற்றது.
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற பிரேசில், சுவிட்சர்லாந்து இடையிலான லீக் ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. #WorldCup2018 #FIFA2018 #BRASUI

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் செர்பியா, கோஸ்டா ரிகா அணியையும், இரண்டாவது ஆட்டத்தில் மெக்சிகோ, ஜெர்மனி அணியையும் வீழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பிரேசில் - சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.

    இப்போட்டியின் முதல் பாதி நேர ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பிலிப்பே கவுடின்ஹோ கோல் அடித்தார். இதனால் பிரேசில் அணி 1-0 என முன்னிலை பெற்றது. சுவிட்சர்லாந்து அணியினர் எவ்வளவு முயன்றும் முதல் பாதிநேர ஆட்டத்தில் கோல் அடிக்க முடியவில்லை.



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் ஸ்டீவன் ஜூபர் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. அதன்பின் இரு அணியினரும் கோல் போடும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். ஆனால் இறுதிவரை இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.



    இதைத்தொடர்ந்து இன்று நடைபெற உள்ள லீக் போட்டிகளில் ஸ்வீடன் - கொரியா குடியரசு, பெல்ஜியம் - பனாமா, துனிசியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #WorldCup2018 #FIFA2018 #BRASUI
    ×