search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரான்ஸ்"

    மாட்ரிட் ஓபன் டென்னிஸில் 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் கயல் மான்பில்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். #MadridOpen #RogerFederer
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் பிரான்ஸ் வீரரான கயல் மான்பில்சை எதிர்கொண்டார். இதில், 6-0, 4-6, 7-6 (3) என்ற கணக்கில் பெடரர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இது அவரது 1200வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. #MadridOpen #RogerFederer 
    பிரான்சில் இயங்கிவரும் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,100 கோடி வரியை அந்நாட்டு அரசு தள்ளுபடி செய்துள்ளது. #France #AnilAmbani #TaxSettlement
    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டில் ரிலையன்ஸ் அட்லாண்டிக் பிளாக் பிரான்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை அனில் அம்பானி நடத்தி வருகிறார். 2007ம் ஆண்டில் இருந்து 2012ம் ஆண்டுவரை 141 மில்லியன் யூரோ பணம் வரியாக செலுத்த பிரான்ஸ் அரசு உத்தரவிட்டது. ஆனால், 7.6 மில்லியன் யூரோ மட்டுமே வரியாக தர முடியும் என்று அனில் அம்பானி தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரான்சில் இயங்கிவரும் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,100 கோடி வரியை அந்நாட்டு அரசு தள்ளுபடி செய்துள்ளது என அந்நாட்டு பத்திரிகை லி மாண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், நரேந்திர மோடி பிரதமர் ஆனவுடன் பிரான்சில் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்புதல் ஆனது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை அடுத்து அனில் அம்பானிக்கு ரூ.1,100 கோடி வரியை பிரான்ஸ் அரசு தள்ளுபடி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. #France #AnilAmbani #TaxSettlement
    பயங்கரவாதி மசூத் அசாருக்கு எதிராக பிரான்சு கொண்டுவந்துள்ள தீர்மானத்துக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது. #MasoodAzhar
    பெர்லின்:

    புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாத அமைப்பு தலைவர் மவுலானா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்க கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் தீர்மானம் கொண்டு வந்தது. அதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி 4-வது தடவையாக தடுத்து நிறுத்தியது.



    இதற்கிடையே புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரத்தை சர்வதேச நாடுகளிடம் இந்தியா கொண்டு சென்றது. அதை தொடர்ந்து பயங்கரவாதி மசூத் அசாருக்கு எதிராக பிரான்சு கொண்டுவந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவு பெருகியுள்ளது.

    தீர்மானத்துக்கு தற்போது ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த தகவலை இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் ஹன்ஸ் கிறிஸ்டியன் வின்கலர் உறுதி செய்துள்ளார்.

    இதுகுறித்து ஐரோப்பிய யூனியனில் ஆலோசிக்கப்பட்டது.அதில் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளின் அடிப்படையில் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் அனைத்தும் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க கோரும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    இதன் மூலம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 உறுப்பினர்களில் 14 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்துள்ளன. #MasoodAzhar
    புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு சொந்தமாக பிரான்ஸ் நாட்டில் உள்ள சொத்துக்களை முடக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. #MasoodAzhar #Pulwamaattack
    பாரிஸ்:

    காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம்தான் காரணம் என்பது தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.

    இதற்கிடையில், பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனாக இருக்கும் மசூத் அசாரை தடை செய்யப்பட்ட சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் சார்பில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தனது ‘வீட்டோ’ சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சீனா முட்டுக்கட்டை போட்டு தடுத்து விட்டது.

    இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றதால் அந்த இயக்கத்துக்கு சொந்தமாக பிரான்ஸ் நாட்டில் இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் முடக்கப்போவதாக பிரான்ஸ் அரசு இன்று அறிவித்துள்ளது.

    பிரான்ஸ் உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆகியவை வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. #MasoodAzhar #Pulwamaattack
    ஜம்மு காஷ்மீரில் 40 வீரர்கள் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, இதற்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசாருக்கு எதிராக ஐநா சபையில் பிரான்ஸ் தீர்மானம் கொண்டு வர உள்ளது. #JammuKashmir #CRPF #PulwamaAttack

    பாரீஸ்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அசார் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. தற்போது இவன் தலைமறைவாக இருக்கிறான்.

    இந்த நிலையில் மசூத் அசாரை ஐ.நா. சபையில் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க பிரான்ஸ் தீவிரமாக உள்ளது.

    அதற்காக ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டில் இங்கிலாந்து பிரான்ஸ் ஆதரவுடன் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.

    ஆனால் தனது ‘வீட்டோ’ சிறப்பு அதிகாரம் மூலம் சீனா தடுத்து விட்டது. எனவே அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தற்போது பங்கரவாதி மசூத் அசாருக்கு எதிராக 2-வது தடவையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்னும் சில நாட்களில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

    அதற்கான நடவடிக்கையில் பிரான்ஸ் அரசின் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீர்மானம் கொண்டு வருவது குறித்து பிரான்ஸ் அதிபர் மெக்ரானின் ஆலோசகர் பிலிப் எடின் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாவுடன் நேற்று டெலிபோனில் ஆலோசனை நடத்தினார்.

    இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். #JammuKashmir #CRPF #PulwamaAttack

    ஐரோப்பிய யூனியன் அமல்படுத்தி இருக்கும் பயனரின் புதிய டேட்டா விதிமுறைகளை பின்பற்றாததால் கூகுள் நிறுவனத்திற்கு சுமார் ரூ.462 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #Google



    ஐரோப்பா சமீபத்தில் விதித்த கடுமையான டேட்டா தனியுரிமை விதிகளை மீறியதாக கூகுள் நிறுவனத்தின் மீது பிரான்ஸ் அரசு ரூ.4,62,49,03,172 கோடி அபராதம் விதித்துள்ளது. 

    பயனரின் தகவல்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகிறது என்றும் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்ற விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை என கூகுள் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் தனிப்பட்ட முறையில் பிரத்யேக விளம்பரங்களை வழங்க வாடிக்கையாளர்களிடம் முறையான அனுமதி பெறவில்லை என்றும் கூகுள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.



    கூகுள் நிறுவனம் ஐரோப்பாவின் பொது தகவல் பாதுகாப்பு கட்டுப்பாடு (GDPR) விதிகளை மீறியதைத் தொடர்ந்து பிரான்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கூகுள், ஃபேஸ்புக், அமேசான் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களை நெறிப்படுத்தும் வகையில் உலகில் மேற்கொள்ளப்பட்ட முதல் அமைத்தாக GDPR இருக்கிறது.

    இந்த அமைப்பு தொழில்நுட்ப நிறுவனங்கள் பயனர் விவரங்களை சேகரிப்பது பற்றிய விதிமுறைகளை சரியாக பின்பற்றுகின்றதா என்பதை கவனிக்கிறது. ஐரோப்பியா விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப கூகுள் தனது தளத்தில் மாற்றம் செய்திருந்தாலும், பிரான்ஸ் மேற்கொண்ட நடவடிக்கை போதுமானதாக இல்லை என GDPR தெரிவித்துள்ளது.

    கூகுள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு மற்றும் அபராதம் பற்றி கூகுள் இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
    பிரான்சின் மிகவும் பழமையான விடுதியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 2 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். #French #SkiResort #FireAccident
    பாரீஸ்:

    பிரான்சின் கிழக்குப் பகுதியில் உள்ள பனிப்பிரதேசமான கோர்செவல் என்ற மலை கிராமத்தில் மிகவும் பழமையான விடுதி ஒன்று உள்ளது. மரத்தால் ஆன 3 மாடிகளை கொண்ட இந்த விடுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கி இருந்தனர்.

    நேற்று முன்தினம் இரவு விடுதியில் திடீரென தீப்பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. விடுதியில் தங்கி இருந்தவர்கள் அனைவரும் அலறிஅடித்துக்கொண்டு வெளியேறினர்.

    சிலர் மாடியில் இருந்து குதித்து உயிர் தப்பினர். எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 2 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்ததும் சுமார் 70 தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

    தீ விபத்தில் படுகாயம் அடைந்த 25 பேர் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருபவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. #French #SkiResort #FireAccident 
    பிரான்ஸ் மஞ்சள் அங்கி போராட்டத்தில் போலீசாரை தாக்கிய குத்துச்சண்டை வீரர் கிறிஸ்டோப் தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து போலீசில் சரண் அடைந்தார். #France #YellowVest #Protest #ChristopheDettinger #Boxer
    பாரீஸ்:

    பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை ரத்து செய்யக்கோரி வார இறுதிநாட்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். மஞ்சள் அங்கி போராட்டம் என அழைக்கப்படும் இந்த போராடம் 2 வாரங்களாக ஓய்ந்திருந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் வலுப்பெற்றது.

    மேலும் கடந்த வார போராட்டத்தில் வன்முறையும் வெடித்தது. போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்ததால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை விரட்டி அடித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அந்நாட்டின் முன்னாள் குத்துச்சண்டை சாம்பியனான கிறிஸ்டோப் பெட்டிங்கர் என்பவர் போலீசாரை சரமாரியாக குத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த நிலையில், தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து, கிறிஸ்டோப் பெட்டிங்கர் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.  #France #YellowVest #Protest #ChristopheDettinger #Boxer 
    பிரான்சில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ராட்டினத்தில் சிக்கிய 8 பேரும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். #Helicopter #Newyear #Rescued #CarnivalRide
    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள பிரித்தானியா பிராந்தியத்தின் தலைநகர் ரென்னஸ். இங்கு நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ராட்சத ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    அதிக உயரத்தில் இருந்து வேகமாக கீழே இறங்கும் ஒரு ராட்டினத்தில் சிறுவர்கள் உள்பட 8 பேர் ஏறி அமர்ந்தனர். கீழே இருந்து புறப்பட்டு 170 அடி உயரத்துக்கு சென்ற அந்த ராட்டினம் திடீர் எந்திர கோளாறு ஏற்பட்டு, மேல் பகுதியிலேயே நின்றுவிட்டது.

    இதனால் ராட்டினத்தில் இருந்த அனைவரும் பயத்தில் அலறி துடித்தனர். அதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ராட்டினத்தில் சிக்கியவர்களை பத்திரமாக கீழே இறக்க முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் அவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, ராட்டினத்தில் சிக்கிய 8 பேரும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். #Helicopter #Newyear #Rescued #CarnivalRide
    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்தியவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்க படை வீரர்கள் முயற்சித்தபோது அவர் தப்பினார். #France #ChristmasMarket #Shooting
    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அங்குள்ள ஸ்டிராஸ்பர்க் நகர கிறிஸ்துமஸ் சந்தையில் நேற்று முன்தினம் மாலையில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.

    இரவு 8 மணி அளவில் அங்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மர்ம நபர், மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கிருந்த மக்கள் நாலாபுறமும் பதறியடித்தவாறு ஓட்டம் எடுத்தனர்.



    இருப்பினும் துப்பாக்கிச்சூட்டில் குண்டு பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும், அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படை வீரர்கள் அங்கு விரைந்தனர். துப்பாக்கிச்சூட்டை தடுத்து நிறுத்த அவர்கள் முயற்சித்தனர். ஆனால் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், அவர்கள் சொல் கேட்டு துப்பாக்கிச்சூட்டை நிறுத்துவதாக இல்லை.

    ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் அவர் காயம் அடைந்தாலும், சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். அவரை சுட்டும், பிடிக்க முடியாமல் போனது படை வீரர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

    துப்பாக்கிச்சூடு பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், கண்காணிக்கப்பட்டு வந்த சந்தேக நபர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர், 29 வயதான அவரது பெயர் ஷெரீப் என தகவல்கள் கூறுகின்றன.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தைகள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினர். பல உணவு விடுதிகளிலும், ‘பார்’களிலும் கதவுகளை இழுத்து மூடினர். அங்கிருந்த மக்கள் அங்கேயே அடைக்கலம் தேடினர்.

    இதற்கிடையே தாக்குதல் நடத்தி விட்டு தப்பிய நபர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து, அங்கு படையினர் சென்று சுற்றி வளைத்தனர். ஆனால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை.

    இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து, அந்த நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றம் மூடப்பட்டது. தாக்குதலில் பலியானவர்களுக்கு சபாநாயகர் ஆன்டனியோ தஜானி இரங்கல் தெரிவித்தார்.

    அந்த நாட்டின் அதிபர் மெக்ரான் மந்திரிசபை அதிகாரிகளைக் கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்ட மெக்ரான், நடந்த சம்பவத்துக்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார். நாட்டு மக்களுடன் இணைந்து நிற்பதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தாக்குதல் நடத்திய நபரை தேடிப்பிடித்து கைது செய்வதற்காக அந்த நகரில் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 2 ஹெலிகாப்டர்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. #France #ChristmasMarket #Shooting 
    பிரான்சில் பெட்ரோல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடைபெற்ற மஞ்சள் சட்டை ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி தாக்கினர். #Yellowvestprotests
    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் விலை சமீப காலமாக உயர்த்தப்பட்டு வந்தது. ஒரு லிட்டருக்கு 1.24 யூரோ பணம் முதல் 1.53 யூரோ வரை உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஒரு ஆண்டில் 23 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.
     
    இதை எதிர்த்து கடந்த 3 வாரமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டனர்.

    இதனால் பிரான்ஸ் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு தொடர்ந்து கலவரம் நடந்து வந்தது. எனவே பெட்ரோல் விலை உயர்த்தியதை 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்க முடிவு செய்தது. இதனால் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது.

    மஞ்சள் சட்டை அணிந்து போராட்டக்காரர்கள் இதில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டு வந்தனர். எனவே இதற்கு மஞ்சள் ஜாக்கெட் போராட்டம் என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். 

    இதனால் பிரான்சில் மிகப்பெரிய கலவரம் ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக பிரான்ஸ் முழுவதும் பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.



    தலைநகரம் பாரீசில் மட்டும் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவர்களுடன் ராணுவத்தினரும் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். ஆங்காங்கே ராணுவ வாகனம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தலைநகர் பாரீசில் சுமார் 1500க்கு மேற்பட்ட போராட்டக்காரர்கள் இன்று ஒன்றுதிரண்டனர். அவர்கள் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    இதைத்தொடர்ந்து அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்களை அங்கிருந்து கலைக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்கள் 127 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், பிரான்ஸ் முழுவதும் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    பிரான்சில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் இன்று மூடப்பட்டுள்ள நிலையிலும், அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Yellowvestprotests
    பிரான்சில் பெட்ரோல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நடைபெறும் போராட்டம் காரணமாக ஈபிள் கோபுரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #EiffelTower #Yellowvestprotests
    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் விலை சமீப காலமாக உயர்த்தப்பட்டு வந்தது. ஒரு லிட்டருக்கு 1.24 யூரோ பணம் முதல் 1.53 யூரோ வரை உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஒரு ஆண்டில் 23 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.

    இதை எதிர்த்து கடந்த 3 வாரமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டனர்.

    இதனால் பிரான்ஸ் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு தொடர்ந்து கலவரம் நடந்து வந்தது. எனவே பெட்ரோல் விலை உயர்த்தியதை 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்க முடிவு செய்தது. இதனால் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்தனர்.

    ஏற்கனவே சனிக்கிழமை (நாளை) மிகப்பெரிய போராட்டத்தை நாடு முழுவதும் நடத்தப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்து இருந்தனர். மஞ்சள் சட்டை அணிந்து போராட்டக்காரர்கள் இதில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டு வந்தனர்.

    எனவே இதற்கு மஞ்சள் ஜாக்கெட் போராட்டம் என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். அவர்கள் திட்டமிட்டபடி நாளை மஞ்சள் ஜாக்கெட் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

    இதனால் பிரான்சில் மிகப்பெரிய கலவரம் ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக பிரான்ஸ் முழுவதும் 89 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    தலைநகரம் பாரீசில் மட்டும் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவர்களுடன் ராணுவத்தினரும் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். தலைநகரில் ஆங்காங்கே ராணுவ வாகனம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளை நாளை அடைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    கடந்த வாரமும் இதே போல ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பிரான்சில் உலகப்புகழ் பெற்ற ஆர் டி ட்ரோம் சேதப்படுத்தப்பட்டது.

    அதேபோல நாளை போராட்டம் நடக்கும்போது பாரீசில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தை தாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஈபிள் கோபுரம் நாளை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #EiffelTower #Yellowvestprotests
    ×