என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 108268
நீங்கள் தேடியது "சோபியான்"
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். #MilitantKilled
ஸ்ரீந்கர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர்களது தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.
சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். #MilitantKilled
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர். #MilitantsAttack
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சைனபோரா பகுதியில் பயங்கரவாதிகள் இன்று திடீரென நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த தாக்குதலில் 2 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றோம் என போலீசார் தெரிவித்தனர். #MilitantsAttack
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பெண் போலீஸ் அதிகாரியை மர்ம நபர்கள் அவரது வீட்டிலேயே சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir #WomanSPOshotdead
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள வெஹில் பகுதியில் வசித்து வந்தவர் குஷ்பு ஜான். மாநில போலீசில் சிறப்பு போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், இன்று மதியம் 2.40 மணியளவில் வீட்டில் இருந்து குஷ்பு வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் குஷ்புவை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
இந்த தாக்குதலில் குஷ்பு படுகாயம் அடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #JammuKashmir #WomanSPOshotdead
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுவீழ்த்தப்பட்டனர். #JammuKashmir #MillitantsGunnedDown
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதையும் மீறி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஊடுருவி தலைமறைவாக இருக்கும் பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படை ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சஃப்னாக்ரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
அப்போது பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்புவதற்காக பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுத்து பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #JammuKashmir #MillitantsGunnedDown

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #ShopianEncounter
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள கட்போரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் இன்று இரவு அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினர் சுட்டனர். இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. #ShopianEncounter
ஜம்மு காஷ்மீரின் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற என்கவுண்டர் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். #TerroristKilled #Shopian #Baramulla
ஸ்ரீநகர் :
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம், ரபியாபாத் எனும் இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வீட்டில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்தவரான சவர் விஜய் குமார் எனும் அதிகாரி உயிரிழந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்கள் இருவரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
சோபியான் மாவட்டம், கிலூரா எனும் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய மற்றொறு தேடுதல் வேட்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளான். இதனால் மாநிலத்தின் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற என்கவுண்டர் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TerroristKilled #Shopian #Baramulla
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் போலீசை கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Copkidnap
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள வெஹில் பகுதியை சேர்ந்தவர் ஜாவித் அகமது. போலீஸ் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வருகிறார். #c
இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்த ஜாவித் அகமதுவை பயங்கரவாதிகள் சிலர் கடத்திச் சென்று விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் கான்ஸ்டபிள் கடத்தப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்படு உள்ளது. பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். #MilitantsAttacked
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ராணுவ வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் இன்று கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #MilitantsAttacked
×

X