search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்பீர்"

    பெண் வேட்பாளருக்கு எதிராக மோசமான துண்டுச்சீட்டை நான் வெளியிட்டேன் என நிரூபித்தால் அரசியலைவிட்டு விலக தயார் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார். #gautamgambhir #aap #bjp
    டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் மே 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக அங்கு பிரசாரம் செய்கிறார்கள். அண்மையில் பா.ஜனதாவில் இணைந்த கவுதம் கம்பீர், கிழக்கு டெல்லியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளரான அதிஷி போட்டியிடுகிறார். கவுதம் கம்பீர் 2 வாக்காளர் அட்டை வைத்துள்ளதாக ஆம் ஆத்மியை சேர்ந்த அதிஷி குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

    இந்நிலையில், அதிஷியை மோசமாக விமர்சனம் செய்து துண்டுச் சீட்டு ஒன்று அங்கு வெளியிடப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பா.ஜனதாதான் காரணம் என ஆம் ஆத்மி குற்றம் சாட்டுகிறது. பா.ஜனதா கட்சியோ அதனை நிராகரித்துள்ளது, இது ஆம் ஆத்மியின் மோசமான பிரசாரம் என கூறியுள்ளது. இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால், கவுதம் கம்பீரை விமர்சனம் செய்தார்.

    இப்போது பெண் வேட்பாளருக்கு எதிராக மோசமான துண்டுச் சீட்டை நான் வெளியிட்டேன் என நிரூபித்தால் அரசியலைவிட்டு விலக தயார் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.  “அவர்களிடம் நான் இதனை செய்தேன் என்று நிரூபித்தால், ஆதாரம் வழங்கினால் இப்போதே அரசியலில் இருந்து விலகுகிறேன். 23-ம் தேதி சமர்பித்தாலும் நான் விலகுவேன். இதே சவாலை கெஜ்ரிவாலும் ஏற்கவேண்டும். ஆதாரத்தை சமர்பிக்கவில்லை என்றால் 23-ம் தேதிக்கு பின்னர் கெஜ்ரிவால் அரசியலில் இருக்க கூடாது,” எனக் கூறியுள்ளார்.

    தேர்தல் பிரசாரத்தின்போது யாருக்கு எதிராகவும் நான் எதிர்மறையான அறிக்கையை கொடுத்தது கிடையாது. நான் கண்டிப்பாக அவதூறு வழக்கு தொடருவேன் எனவும் கம்பீர் குறிப்பிட்டார். #gautamgambhir #aap #bjp
    பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக டெல்லி கிழக்கு தொகுதியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். #Gambhir #bjp #parliamenetelection
    டெல்லி: 

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர். இவர் தோனி தலைமயிலான 2011, 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் விளையாடினார். பல்வேறு கேப்டன்களுக்கு கீழ் விளையாடிய இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

    2011 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு இவரும் முக்கிய காரணம். ஐபிஎல் போட்டிகளில் இவர் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிக்காக விளையாடி வந்தார். தற்போது இவர் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விலகி உள்ளார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இவர் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பிரதமர் மோடியின் கொள்கையை பார்த்து பாஜகவில் இணைந்ததாகவும். மக்களுக்கு சேவை செய்வதே தனது குறிக்கோள் என்றும் இவர் கூறி இருந்தார்.

    பாஜகவில் இணைவதை பெருமையாக கருதுவதாக இவர் தெரிவித்தார். இந்த நிலையில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக டெல்லி கிழக்கு தொகுதியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் டெல்லியை சேர்ந்தவர் என்பதால் அங்கு இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் லோக்சபா தேர்தலில் இவர் பாஜக வேட்பாளர்கள் சார்பாக பிரச்சாரம் செய்ய இருக்கிறார். #Gambhir #bjp #parliamenetelection
    தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான சரத்கமல் மற்றும் கம்பீர், அஜய் தாகூர் உள்பட 8 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. #PadmaShri #GautamGambhir
    புதுடெல்லி:

    மத்திய அரசு நேற்றிரவு அறிவித்த பத்ம விருது பெறுவோர் பட்டியலில் 9 விளையாட்டு பிரபலங்களும் இடம் பெற்று இருக்கிறார்கள். காமன்வெல்த் விளையாட்டில் 3 பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான சரத்கமல் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

    இதே போல் இரண்டு உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தவரான கவுதம் கம்பீர், இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, கபடி அணியின் கேப்டன் அஜய் தாகூர், செஸ் வீராங்கனை ஹரிகா, வில்வித்தை மங்கை பம்பைய்லா தேவி, கூடைப்பந்து வீராங்கனை பிரசாந்தி சிங், மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா ஆகியோரும் பத்மஸ்ரீ விருது பெறுகிறார்கள். மலையேற்றத்தில் பல சாதனைகள் படைத்திருக்கும் உத்தரகாண்டை சேர்ந்த வீராங்கனை பச்சேந்திரி பாலுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது. #PadmaShri #GautamGambhir
    ×