search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரிஸ்"

    தேனி தொகுதியில் மறு வாக்குப்பதிவு தேவை இல்லை என்று தேர்தல் அதிகாரியிடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மனு கொடுத்துள்ளார். #elangovan #congress #electioncommission

    சென்னை:

    தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 2 வாக்குச்சாவடிகளும் அடங்கும். இந்த தொகுதியில் கங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளார்.

    அதில் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேனி தொகுதியில் எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

    தேர்தல் ஆணைய வழிகாட்டுதலில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின் படி பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தப்படாத எந்த வாக்குப்பதிவு இயந்திரத்தையும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டுமானால் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது தலைமை தேர்தல் முகவர்களுக்கு கண்டிப்பாக தகவல் அளிக்க வேண்டும்.

    தகவல் அளிக்கவில்லை என்றால் அது சட்ட விரோதம் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ஏன் மாவட்ட தேர்தல் நிர்வாகம் கடைபிடிக்க வில்லை. தேர்தலில் போட்டியிட்ட யாரும் மறு வாக்குப்பதிவு கோரிக்கை வைக்காத நிலையில் தன்னிச்சையாக மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முயற்சிப்பது யாருடைய நிர்பந்தத்தால் என்ற கேள்வி எழுகிறது.

    தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று இத்தனை நாட்களுக்கு பிறகு மறுவாக்குப்பதிவு என்பது இதுவரை இல்லாத நடைமுறை என்பது அனைவரும் அறிந்ததே! மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில் அதிகார மையத்தில் உள்ளவர்களின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறதோ என்ற அச்சம் எழுகிறது. ஆக உள்நோக்கத்தோடு செயல்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #elangovan #congress #electioncommission

    ×