என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 108743
நீங்கள் தேடியது "திரிபுரா"
திரிபுரா மேற்கு தொகுதியில் 168 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என்றும், 12-ந் தேதி மறுதேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. #LokSabhaElections2019
புதுடெல்லி:
திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. அங்கு திரிபுரா மேற்கு, திரிபுரா கிழக்கு என்ற 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த மாதம் 11-ந் தேதி திரிபுரா மேற்கிலும், 18-ந் தேதி திரிபுரா கிழக்கிலும் வாக்குப்பதிவு நடந்தது.
இதில், திரிபுரா மேற்கு தொகுதியில் ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடந்தன. வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல், கள்ள ஓட்டு போடுதல், வாக்காளர்களை அச்சுறுத்துதல் போன்ற முறைகேடுகளில் பா.ஜனதாவினர் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டன.
இதையடுத்து, திரிபுரா மேற்கு தொகுதியில் 26 சட்டசபை தொகுதிகளில் அமைந்துள்ள 168 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த 168 வாக்குச்சாவடிகளிலும், நாடாளுமன்ற 6-வது கட்ட தேர்தலுடன் சேர்த்து, வருகிற 12-ந் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இதேபோல் தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளிலும், புதுச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #TripuraElection
திரிபுரா முதல் மந்திரி பிப்லப் குமார் தேப், பிரசார கூட்டங்களில் தேர்தல் விதிகளை மீறி காங்கிரஸ் கட்சியினரை தகாத வார்த்தைகளால் பேசுவதாக அவர் மீது புகார் கொடுத்துள்ளனர். #TripuraCM #Biblapkumardep #Congresscomplaints
அகர்தலா:
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. ஏற்கனவே சில அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை முழுவதுமாக அறிவித்த நிலையில், சில கட்சிகள் ஒவ்வொரு கட்டமாக வெளியிட்டு வருகின்றன. மேலும் சில கட்சியினர் பிரச்சார பொதுக் கூட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து திரிபுரா காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் தப்பாஸ் டே கூறியதாவது:-
இலவச கேஸ் சிலிண்டர் சேவை நிறுத்தப்பட்டு, பணம் வசூலிக்கப்படும். மேலும் மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலைக்கு அரிசி வாங்குவதை இந்திய உணவு கழகம் நிறுத்தி விடும் எனவும் பிப்லப் பேசினார். மக்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதுடன், காங்கிரஸ் கட்சியினரையும் மிகவும் அவதூறாக பேசியுள்ளார்.
இவ்வாறு தப்பாஸ் டே கூறினார்.#TripuraCM #Biblapkumardep #Congresscomplaints

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திரிபுரா முதல் மந்திரி பிப்லப் குமார் தேப், காங்கிரஸ் கட்சியினரை ‘கொள்ளையர்கள்’, ‘சாத்தான் கூட்டத்தினர்’, ‘தரகர்கள்’, ‘தந்திர நரிகள்’ என தகாத வார்த்தைகளினால் கடுமையாக தாக்கி பேசினார்.
இந்த செயலுக்கு திரிபுரா முதல் மந்திரி பிப்லப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினர். இதுவரை மன்னிப்பு கேட்காத நிலையில், திரிபுரா காங்கிரஸ் கட்சியினர் இன்று பிப்லப் மீது புகார் கொடுத்துள்ளனர்.
இது குறித்து திரிபுரா காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் தப்பாஸ் டே கூறியதாவது:-
மார்ச் 20 அன்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டங்களில் பிப்லப், வாக்காளர்களை மிரட்டும் வகையில், மோடி மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால், திரிபுரா மற்றும் அகர்தலா என்றுமே நவீன நகரங்களாக மாற சாத்தியமே இல்லை என கூறியுள்ளார்.
இலவச கேஸ் சிலிண்டர் சேவை நிறுத்தப்பட்டு, பணம் வசூலிக்கப்படும். மேலும் மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலைக்கு அரிசி வாங்குவதை இந்திய உணவு கழகம் நிறுத்தி விடும் எனவும் பிப்லப் பேசினார். மக்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதுடன், காங்கிரஸ் கட்சியினரையும் மிகவும் அவதூறாக பேசியுள்ளார்.
இவ்வாறு தப்பாஸ் டே கூறினார்.#TripuraCM #Biblapkumardep #Congresscomplaints
திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதற்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். #TripuraCivicBypolls #BJP #PMModi
அகர்தலா:
திரிபுரா மாநிலத்தில் 11 நகராட்சி மற்றும் 4 மாநகராட்சிகளுக்கு நேற்று முன்தினம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் நேற்று வெளியானது.
உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 11 நகராட்சி மற்றும் 4 மாநகராட்சியின் அனைத்து மேயர் மற்றும் தலைமைப் பொறுப்புகளை பாஜக கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்த வெற்றியை தொடர்ந்து, திரிபுரா மாநில முதல் மந்திரி பிப்லாப் குமார் தேபுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், திரிபுரா மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதற்கு, பிரதமர் மோடி அம்மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த திரிபுரா மக்களுக்கு நன்றி. இந்த வெற்றிக்காக அரும்பாடுபட்ட கட்சி தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி திரிபுரா மாநிலத்தின் வளர்ச்சியை இன்னும் அதிகரிக்கச் செய்யும் என பதிவிட்டுள்ளார். #TripuraCivicBypolls #BJP #PMModi
உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படும் மே தினத்தை மாநில அரசு விடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து நீக்கிய திரிபுரா மாநில பாஜக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Tripura #MayDay
அகர்தலா:
சர்வதேச அளவில் உழைப்பாளர் தினமாக மே தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திரிபுரா மாநிலத்தின் பாஜக அரசு உழைப்பாளர் தினத்தை மாநில பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பலதரப்பில் இருந்தும் கடும் விமர்சனங்களும், கண்டனங்களும் வலுத்து வருகிறது.
ஆளும் பாஜக அரசின் இந்த செயலானது தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரானது என்றும், இதன்மூலம் பாஜக தொழிலாளர்களை எப்படி பார்க்கிறது என புரிந்துகொள்ள முடியும் எனவும் திரிபுரா மாநில முன்னாள் தொழிலாளர் நலத்துறை மந்திரி மனிக் டே கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், இதற்கு முன்னதாக இந்தியாவின் எந்த மாநிலமும் மே தினத்தை பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து நீக்கியதாக கேள்விப்பட்டது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Tripura #MayDay

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அம்மாநில எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி, மே தினத்தை மாநில பொது விடுமுறை பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ஆளும் பாஜக அரசின் இந்த செயலானது தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரானது என்றும், இதன்மூலம் பாஜக தொழிலாளர்களை எப்படி பார்க்கிறது என புரிந்துகொள்ள முடியும் எனவும் திரிபுரா மாநில முன்னாள் தொழிலாளர் நலத்துறை மந்திரி மனிக் டே கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், இதற்கு முன்னதாக இந்தியாவின் எந்த மாநிலமும் மே தினத்தை பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து நீக்கியதாக கேள்விப்பட்டது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Tripura #MayDay
திரிபுரா மாநிலத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 258.5 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பாதுகாப்பு படை மற்றும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். #Tripura #CannabisCaptured
அகர்டலா:
திரிபுரா மாநிலம் ஆடாம்பூர் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடுத்து, போலீசாருடன் அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் சிறிய அளவில் சுரங்கம் ஒன்றை ஏற்படுத்தி அதனுள் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அதனை பறிமுதல் செய்த போலீசார் வீட்டின் உரிமையாளரை கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா 258.5 கிலோ அளவிலான எடை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் மீது போதைமருந்து தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #Tripura #CannabisCaptured

திரிபுரா மாநிலத்தின் காலியாக உள்ள 3 ஆயிரத்து 386 இடங்களுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தல் செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறும் என அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #TripuraPanchayatByelections
அகர்தலா:
திரிபுரா மாநிலத்தில் சுமார் 3 ஆயிரத்து 386 உள்ளாட்சி இடங்கள் காலியாக உள்ளன. இங்கு வேட்பாளர்கள் இறப்பு மற்றும் ராஜினாமா போன்ற காரணங்களால் அந்த இடங்கள் காலியாகின.
பஞ்சாயத்து, பஞ்சாயத்து சமிதி மற்றும் ஜில்லா பரிஷத் என காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, செப்டம்பர் 30-ம் தேதி உள்ளாட்சிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 3-ம் தேதி எண்ணப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. #TripuraPanchayatByelections
திரிபுராவில் மண்சரிவில் இருந்து ரெயிலை நிறுத்தி அதில் பயணம் செய்த 2000 பேரின் உயிரை காப்பாற்றிய பழங்குடி இனத்தை சேர்ந்த 9 வயது சிறுமி அம்மாநில மந்திரி விருந்தளித்து பாராட்டியுள்ளார். #Somati #Tripura #9yearoldSaviour
அகர்தலா:
திரிபுரா மாநிலம் தன்சேரா பகுதியை சேர்ந்தவர் சோமதி என்ற 9 வயது பழங்குடி இன சிறுமி. அவரின் குடும்பத்தினர் அந்த பகுதிகளில் மூங்கில் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அம்மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவுகளால் பல இடங்களில் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. சிலர் உயிரிழந்துள்ளனர். தன்சேரா பகுதியிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 15-ம் தேதி சுமதி தனது தந்தை ஸ்வபன் தெப்பர்மாவுடன் தன்சேராவில் உள்ள ஒரு மலைப்பகுதியில் மூங்கில் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியில் தரம் நகரிலிருந்து பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பகுதியில் ஏற்பட்டிருந்த மண்சரிவை பற்றி தகவல் தெரியாததால் அந்த ரெயில் அந்த வழியாக சென்றுள்ளது.
இதையடுத்து, ரெயில் வருவதை கவனித்த சிறுமி மற்றும் அவளது தந்தை இருவரும் உடனடியாக தங்கள் சட்டைகளை கழற்றி ரெயிலை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். இதை கவனித்த ரெயில் ஓட்டுனர் உடனடியாக ரெயிலை நிறுத்தியுள்ளார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 2000 மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டது.
இந்த சிறுமி மற்றும் அவளது தந்தையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அந்த சிறுமியின் தந்தை ஸ்வபன் தெப்பர்மாவுக்கு ரெயில்வே துறையில் பணி வழங்கவும் திரிபுரா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், திரிபுரா மாநில சுகாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி சுதிப் ராய் பர்மன் அந்த சிறுமி மற்றும் அவளது தந்தை ஆகியோரை தனது இல்லத்திற்கு நேரில் வரவழைத்து பாராட்டினர். அதோடு அவர்களுக்கு விருந்து அளித்து மகிழ்வித்தார். #Somati #Tripura #9yearoldSaviour
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். #AssamFlood #NEflood
கவுஹாத்தி:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அசாம், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளன. அசாம் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு நகரங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. கவுகாத்தி நகரின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பேரிடர் மீட்புக் குழுவினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மழையினால் இதுவரை 12 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் 6 பேரும், அசாம் மாநிலத்தில் 3 பேரும், திரிபுராவில் 3 பேரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 500க்கு மேற்பட்டோர் வெள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். #AssamFlood #NEflood
மேற்கு வங்காள கவர்னர் கேஷரி நாத் திரிபாதி கூடுதல் பொறுப்பாக திரிபுரா மாநில கவர்னராகவும் செயல்படுவர் என ஜனாதிபதி மாளிகை இன்று அறிவித்துள்ளது. #KeshariNathTripathi
புது டெல்லி :
திரிபுரா மாநில கவர்னர் டதகாத ராய் விடுமுறையில் சென்றிருப்பதால், மேற்கு வங்காள கவர்னர் கேஷரி நாத் திரிபாதிக்கு அம்மாநில கவர்னர் பொறுப்பை கூடுதலாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒதுக்கீடு செய்துள்ளார் என ஜனாதிபதி மாளிகை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆனால், திரிபுரா மாநில கவர்னர் டதகாத ராய் விடுமுறையில் சென்றிருப்பதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #KeshariNathTripathi
×

X