search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவுரங்கசீப்"

    பிரதமர் மோடி அவுரங்கசீப்பின் நவீன அவதாரம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளார். #PMModi #Aurangzeb #SanjayNirupam
    வாரணாசி:

    அரியானா மாநிலம் குருசேத்திரத்தில் பிரதமர் மோடி நேற்று பிரசாரம் செய்தபோது, தன்னை எப்படியெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர் என வேதனையுடன் பட்டியலிட்டார்.

    இதற்கு மத்தியில் பிரதமர் மோடியை அவரது வாரணாசி தொகுதியிலேயே நேற்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது. அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் நிருபம், அவரை அவுரங்கசீப்பின் நவீன அவதாரம் என குறிப்பிட்டார்.

    இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இந்த தொகுதி மக்கள் அவுரங்கசீப்பின் நவீன அவதாரத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். வாரணாசியில் பெரும் சாலைகள் அமைப்பதற்காக மோடியின் அறிவுறுத்தலால் நூற்றுக்கணக்கான கோவில்கள் இடித்து தள்ளப்பட்டுள்ளன” என கூறினார்.

    “விஸ்வநாதரை தரிசிக்க கோவிலுக்கு வருகிறவர்களிடம் மோடி அறிவுறுத்தலின்பேரில் ரூ.550 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அவுரங்கசீப்பால் செய்ய முடியாததை மோடி செய்கிறார் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது” எனவும் அவர் கிண்டல் செய்தார்.  #PMModi #Aurangzeb #SanjayNirupam 
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆறுதல் கூறினார். #NirmalaSitharaman #JammuKashmir #Aurangzeb
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்த வீரர் அவுரங்கசீப். இவர் ரம்ஜான் விடுமுறை அன்று தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது அவரை துப்பாக்கி முனையில் கடத்திய பயங்கரவாதிகள், பின் அவரை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.



    இந்நிலையில், உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினரை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து பேசிய அவர், ராணுவ வீரரின் குடும்பத்தினருடைய பொறுமையும், தைரியமும் பிரமிக்க வைப்பதாகவும், மறைந்த ராணுவ வீரர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒட்டுமொத்த நாட்டுக்கும் முன் உதாரணமாக விளங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் இந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. #NirmalaSitharaman #JammuKashmir #Aurangzeb
    ×