search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரியானா"

    புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு புனேயில் அரங்கேறிய 85-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி, அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை சுவைத்தது. #ProKabaddi #PuneriPaltan #HaryanaSteelers
    புனே:

    6-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு புனேயில் அரங்கேறிய 85-வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) புனேரி பால்டன் அணி 35-33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை சுவைத்தது. முதல் பாதியில் 8-23 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த புனே அணி பிற்பாதியில் வியப்புக்குரிய வகையில் ஆடி பிரமாதப்படுத்தியது. புனே அணியில் அதிகபட்சமாக சந்தீப் நார்வல் 7 புள்ளிகள் சேர்த்தார். 17-வது லீக்கில் ஆடிய புனே அணிக்கு இது 7-வது வெற்றியாகும்.

    மற்றொரு ஆட்டத்தில் (பி பிரிவு) பெங்களூரு புல்ஸ் 34-26 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது. இன்றைய ஆட்டங்களில் புனேரி பால்டன்- குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 8 மணி), பெங்களூரு புல்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 9 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.
    அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் மேம்பாலத்தில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கார் ஏறியதில் 5 பேர் உயிரிழந்தனர். #HaryanaAccident
    ஹிசார்:

    அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் நேற்று பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், இரவில் பாலத்தின் மீதுள்ள நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

    அப்போது அதிவேகமாக வந்த ஒரு கார், கட்டுப்பாட்டை இழந்து தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ஏறியது. அத்துடன் எதிரே வந்த மற்றொரு கார் மீதும் மோதிவிட்டு பாலத்தில் இருந்து கவிழ்ந்தது.



    அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயமடைந்தனர். கார்  டிரைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #HaryanaAccident
    புரோ கபடி லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் அரியானாவை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி 4-வது வெற்றியை பெறுமா? என்று தமிழக கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர். #ProKabaddi2018 #TamilThalaivas
    மும்பை:

    6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் சென்னை நகரை மையமாக கொண்ட அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த அணி 9 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 17 புள்ளிகள் பெற்று உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 10-வது ‘லீக்’ ஆட்டத்தில் ‘ஏ’பிரிவில் உள்ள அரியானா ஸ்டீலர்சை இன்று இரவு 8 மணிக்கு சந்திக்கிறது. அரியானாவை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி 4-வது வெற்றியை பெறுமா? என்று தமிழக கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.

    அரியானா அணி 12 ஆட்டத்தில் 4 வெற்றி, 8 தோல்வியுடன் 23 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி 5-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் மும்பை- பெங்களூர் அணிகள் மோதுகின்றன. #ProKabaddi2018 #TamilThalaivas
    புரோ கபடியின் 52-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 39-33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை சாய்த்து 3-வது வெற்றியை பதிவு செய்தது. #ProKabaddi2018 #HaryanaSteeler #DabangDelhi
    நொய்டா:

    12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் நேற்றிரவு நடந்த 52-வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) தபாங் டெல்லி அணி 39-33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை சாய்த்து 3-வது வெற்றியை பதிவு செய்தது. 11-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா அணிக்கு இது 8-வது தோல்வியாகும். மற்றொரு ஆட்டத்தில் (பி பிரிவு) பெங்களூரு புல்ஸ் அணி 37-27 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேச யோத்தாவை வீழ்த்தி 6-வது வெற்றியை ருசித்தது.

    மும்பையில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் யு மும்பா (மும்பை அணி)- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8 மணி), பெங்கால் வாரியர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன. 
    புரோ கபடி தொடரில் நேற்றைய ஆட்டங்களில் அரியானா, உ.பி. யோத்தா அணிகள் வெற்றி பெற்றன. #ProKabaddi2018 #PKL2018 #Haryana #Patna
    பாட்னா:

    6-வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

    இந்த நிலையில் பாட்னாவில் நேற்றிரவு நடந்த 37-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா -தபாங் டெல்லி அணிகள் மோதின. இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை சேர்த்ததால் 3 நிமிடங்கள் இருக்கும் போது 35-35 என்ற புள்ளி கணக்கில் சமநிலை ஏற்பட்டது. அதன் பிறகு கடைசி நிமிடங்களில் அபாரமாக ஆடிய உ.பி.யோத்தா அணி 38-36 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை வீழ்த்தியது. உ.பி. அணியில் ஸ்ரீகாந்த் ஜாதவ் 12 புள்ளிகளும், பொறுப்பு கேப்டன் பிரசாந்த் குமார் ராய் 11 புள்ளிகளும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். 7-வது ஆட்டத்தில் ஆடிய உ.பி.யோத்தா அணி பதிவு செய்த 3-வது வெற்றி இதுவாகும்.

    இதைத் தொடர்ந்து நடந்த இன்னொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 43-32 என்ற புள்ளி கணக்கில் மூன்று முறை சாம்பியனான பாட்னா பைரட்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. பாட்னா கேப்டன் பர்தீப் நார்வால் ரைடு மூலம் 14 புள்ளிகள் சேர்த்த போதிலும் பலன் இல்லை. பாட்னாவுக்கு விழுந்த 4-வது அடி இதுவாகும்.

    போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளைய ஆட்டங்களில் புனேரி பால்டன்-குஜராத் பார்ச்சுன் (இரவு 8 மணி), பாட்னா பைரட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.
    அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தேசிய குத்துச்சண்டை வீரரான தினேஷ் குமார், குடும்ப சூழ்நிலை காரணமாக தற்போது ஐஸ்கிரீம் விற்றுவருகிறார். #DineshKumar #ArjunaAward #Haryana
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் குத்துச் சண்டை போட்டியில் தனது திறமையை கொண்டு தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் விளையாடி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர், இதுவரை 17 தங்கங்களும், ஒரு சில்வர் மற்றும் 5 வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளார்.

    ஆனால், இன்று தனது தந்தை வாங்கிய கடனை அடைப்பதற்காக ஐஸ்கிரீம் விற்று பிழைத்து வருகிறார்.



    இதுகுறித்து வீரர் தினேஷ் குமார் கூறுகையில், தற்போதைய மத்திய அரசோ அல்லது முந்தைய மத்திய அரசோ தமக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை எனவும், தற்போது அரசின் உதவியை நாடி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர் தற்போது குடும்ப சூழ்நிலை காரணமாக ஐஸ்கிரீம் விற்று வருவது, இந்தியாவில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #DineshKumar #ArjunaAward #Haryana
    அரியானாவில் பாதுகாவலரால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதியின் மகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். #JudgeFamilyAttack
    குருகிராம்:

    அரியானாவில் குருகிராம் நகரில் மக்கள் நெருக்கடி மிகுந்த ஆர்கடியா மார்க்கெட் அருகே கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி நீதிபதியின் மனைவி மற்றும் மகனை நீதிபதியின் பாதுகாவலரே துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நீதிபதியின் மனைவி உயிரிழந்ததாக மருத்துவர்கள் முன்னதாக அறிவித்திருந்தனர்.

    பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நீதிபதியின் மகன் துருவ் (18) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.



    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலரே அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கிச்சூடு நடத்திய மகிபால் என்ற பாதுகாவலரை கைது செய்த போலீசார், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #JudgeFamilyAttack

    அரியானாவில் நீதிபதியின் மனைவி, மகன் மீது இன்று துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். #JudgeFamilyAttack
    குருகிராம்:

    அரியானாவில் உள்ள குருகிராம் நகரில் மக்கள் நெருக்கடி மிகுந்த ஆர்கடியா மார்க்கெட் உள்ளது. இன்று மதியம் மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த மார்க்கெட்டில் நீதிபதியின் மனைவி மற்றும் மகன் மீது அவர்களது பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலரே அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



    விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாவலரின் பெயர் மகிபால் என்பதும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. 

    அதைத்தொடர்ந்து, அருகிலுள்ள சதார் போலீசார் தப்பியோட முயன்ற மகிபாலை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். 
    இதுகுறித்து உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #JudgeFamilyAttack
    அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் 19 வயது மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிக்கு 4 நாள் போலீஸ் காவலும், இருவருக்கு 14 நாள் நீதிமன்ற காவலும் விதிக்கப்பட்டுள்ளது. #Rewari #RewariRapeCase
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்து சமீபத்தில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி, கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த சிலர் அவரை கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    அதன்பின்னர், அங்குள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் மாணவியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் சார்பில் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை கைது செய்யதனிப்படை அமைத்து தேடி வந்தனர். 



    மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் நிஷு உள்பட 3 குற்றவாளிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டனர்.

    இதற்கிடையே, மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி நிஷு உள்பட 3 பேரை சிறப்பு அதிரடிப் படை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், ரேவாரி மாணவி பாலியல் வன்புணர்வு விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 3 பேரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களில் முக்கிய குற்றவாளியான நிஷுவுக்கு 4 நாள் போலீஸ் காவலும், டாக்டர் சஞ்சீவ் மற்றும் தீன்தயாள் ஆகியோருக்கு 14 நாள் நீதிமன்ற காவலும் விதிக்கப்பட்டுள்ளது. #Rewari #RewariRapeCase 
    அரியானாவின் ரேவாரி பகுதியில் மீண்டும் ஒரு பெண்ணை இரண்டு பேர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Rewari #RewariGangRape
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தின் மகேந்திரகர்க் மாவட்டத்தில் அமைந்துள்ள ரேவாரி பகுதியில் கடந்த புதன்கிழமை 19 வயதான மாணவியை ஒரு கும்பல் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றது.

    மாணவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அதே ரேவாரி பகுதியை சேர்ந்த ஒரு விதவை பெண்ணை இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ரேவாரி நகரில் உள்ள ஜுலானா பகுதியை சேர்ந்த விதவை பெண் ஒருவர் மருந்து பொருள்களை வாங்கிக் கொண்டு கடையில் இருந்து திரும்பினார்.

    அப்போது பைக்கில் வந்த இரண்டு பேர் அவரது உடல் நிலை குறித்து விசாரிப்பது போல், அவரை அங்கிருந்து கடத்திச் சென்றனர். அருகிலுள்ள ஜிந்த் மாவட்டத்தில் உள்ள வயல்வெளியில் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரத்துக்குள் ரேவாரி பகுதியில் நடைபெற்றுள்ள இரண்டாவது பலாத்கார சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. #Rewari #RewariGangRape
    அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் 19 வயது மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். #Rewari #RewariRapeCase
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்து சமீபத்தில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி, கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த சிலர் அவரை கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    அதன்பின்னர், அங்குள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் மாணவியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் சார்பில் போலீசில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து தேடி வருகிறோம் என்றனர். 

    இதற்கிடையே, மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் ராணுவ வீரர் பங்கஜ், மனீஷ், நிஷு உள்பட 3 குற்றவாளிகளின் புகைப்படங்களை போலீசார் நேற்று வெளியிட்டனர்.

    இந்நிலையில், ரேவாரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி நிஷுவை சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த போலீசார் கைது செய்தனர். #Rewari #RewariRapeCase 
    அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் 19 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளி குறித்து துப்பு கொடுத்தால் 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. #Rewari #RewariRapeCase
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்து சமீபத்தில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி,  கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த சிலர் அவரை கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    பின்னர், அங்குள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் மாணவியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியை இன்று நேரில் சந்தித்த எஸ்.பி. நஷ்னீன் பாசின், பாதிக்கப்பட்ட பெண் தற்போது உடல்நிலை தேரி வருவதாகவும், அவரை பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய குற்றவாளியை அடையாளம் கண்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாகவும் உறுதி அளித்த எஸ்.பி., குற்றவாளி குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தால் 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். #Rewari #RewariRapeCase
    ×