search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி"

    மடிப்பாக்கம் அருகே பழைய இரும்பு கடையில் மர்ம பொருள் வெடித்து தீப்பிடித்தில் வியாபாரியின் 2 கைகள் கருகின.
    ஆலந்தூர்:

    மடிப்பாக்கத்தை அடுத்த மூவரசன் பட்டில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடை நடத்தி வருபவர் ஜெய்சிங்ராஜ். இன்று காலை அவர் கடையில் இருந்த பழைய இரும்பு பொருட்களை தரம்பிரித்து கொண்டு இருந்தார்.

    அப்போது உருளையாக இருந்த பொருளை அழுத்தினார். திடீரென அந்த பொருள் பலத்த சத்தத்துடன் வெடித்தது. மேலும் கடையிலும் தீப்பிடித்தது. இதில் வியாபாரி ஜெய்சிங்ராஜின் 2 கைகளும் கருகின.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கடையில் பிடித்த தீயை அணைத்தனர். காயம் அடைந்த ஜெய்சிங்ராஜை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கடையில் வெடித்த பொருள் எந்த வகையானது என்பது தெரியவில்லை. வெடி பொருளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதையடுத்து கடையில் சிதறிய மர்மபொருளின் தூள்களை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பண்ருட்டி அருகே வியாபாரியை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அழகப்பா சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கந்தவேல்(வயது 45). இளநீர் வியாபாரி. இவர் காட்டுவேகாக்கொல்லை பகுதிக்கு இளநீர் கொண்டு சென்றார்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(40). அவரது மகன்கள் ஜெயசந்திரன், மதியழகன் ஆகியோர் கந்தவேலிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். பின்பு அவரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதில் காயமடைந்த கந்தவேல் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் கடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தார். ஜெயசந்திரன், மதியழகன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
    திருப்பூரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற வியாபாரியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 25½ கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    நல்லூர்:

    திருப்பூர்-தாராபுரம் ரோடு கோவில்வழி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 28). இவர் நேற்று காலை அந்தபகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று புகையிலை பொருள் கேட்டுள்ளார். ஆனால் அங்கு இல்லை என்று திரும்பினார். அப்போது அவரை பார்த்த ஒரு வியாபாரி தன்னிடம் புகையிலை பொருள் உள்ளது. கடையைவிட குறைந்த விலைக்கு தருகிறேன் என்று கூறி அவருக்கு புகையிலை பொருள் வழங்கினார். இதை சாப்பிட்ட சதீசுக்கு சிறிது நேரத்தில் வாய் எரிச்சல் ஏற்பட்டதுடன் வாந்தி எடுத்தார். இதனால் அவரை அருகில் இருந்த ஒருவர் பத்திரமாக வீட்டில் கொண்டு விட்டார்.

    பின்னர் இது குறித்து திருப்பூர் ஊரக போலீசில் சதீஷ் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் மற்றும் போலீசார் சதீசை அழைத்துக்கொண்டு கோவில் வழி பகுதியில் அந்த வியாபாரியை தேடினர். பின்னர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தேனி அல்லிநகரை சேர்ந்த தங்கராஜ் (39) என்பதும், அவர் திருப்பூர் வீரபாண்டி வள்ளலார் நகரில் தங்கியிருந்து கடந்த 2 ஆண்டுகளாக கடைகளுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 25½ கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அந்த புகையிலை பொருட்கள் போலியானதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள். 
    திருச்சியில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தாக்கிய வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி காஜாமலை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னீஸ்வரி (வயது 40). இவருக்கும் தஞ்சாவூர் வீரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வியாபாரி, உதயகுமார் என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    பொன்னீஸ்வரி தஞ்சையில் கணவருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் உதய குமாருக்கும், தஞ்சையை சேர்ந்த மகாலட்சுமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.

    இதையறிந்த பொன்னீஸ்வரி தனது கணவரை சத்தம் போட்டுள்ளார். இருப்பினும் உதயகுமார் மகாலட்சுமியுடனான கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் உதயகுமாரும், மகாலட்சுமியும் சேர்ந்து பொன்னீஸ்வரியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து திருச்சியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்த அவர், சம்பவம் குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷீலா வழக்கு பதிவு செய்து மகாலட்சுமியை கைது செய்தார். தப்பியோடிய உதயகுமாரை தேடி வருகிறார்.
    பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருட்களை கடத்தும், விற்கும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்ற பஞ்சாப் மந்திரிசபை இன்று தீர்மானித்துள்ளது. #PunjabCabinet #deathpenalty #drugpeddlers
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநில அரசின் மந்திரிசபை கூட்டம் முதல் மந்திரி கேப்டன் அம்ரிந்தர் சிங் தலைமையில் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமரிந்தர் சிங், பஞ்சாப் மாநிலத்தை போதைப்பொருள் நடமாட்டமற்ற மாநிலமாக மாற்ற இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

    போதைப் பொருட்களை கடத்தும், விற்கும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பஞ்சாப் அரசின் சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டார். #PunjabCabinet #deathpenalty #drugpeddlers
    தஞ்சை, நாகை மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளில் ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக புகார்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
    திருவாரூர்:

    கோவை சாய்பாபா காலனியில் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுக்களை அச்சடித்த கும்பல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிக்கியது. அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழகம் மற்றும் கேரளாவில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதன் எதிரொலியாக ரூ.2000 நோட்களை வாங்க வியாபாரிகள் அஞ்சுகின்றனர்.

    டெல்டா மாவட்டங்களில் செயல்படும் டாஸ்மாக் மதுபான கடைகளில் தினமும் மதுவாங்க கூட்டம் நிரம்பி வழிவதால் டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 கள்ள நோட்டுக்களை மாற்ற முயற்சி செய்வது தெரியவந்துள்ளது.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நானலூர் பகுதியை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (வயது 35). இவர் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை விலைக்கு வாங்கி அதனை வெளியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்.

    இவர் நேற்று களப்பாலில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி கொண்டு ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுத்துள்ளார். அதனை வாங்கி பார்த்த சூப்பர்வைசர் ராஜசேகரன் அது கள்ள நோட்டு போல் இருந்ததால் களப்பால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஹரி கிருஷ்ணன் கொடுத்த ரூ.2 ஆயிரம் நோட்டை ஆய்வு செய்தனர். இதில் அது கள்ள நோட்டு என்பது உறுதி செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரி கிருஷ்ணனை கைது செய்தனர்.

    டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் கள்ள நோட்டு புழக்கத்தில் விடுவது தெரியவந்ததுள்ளதால் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கைதான ஹரி கிருஷ்ணனிடம் ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டை கொடுத்தது யார்? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் தஞ்சை, நாகை மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளில் ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக புகார்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பழ வியாபாரி பலியானார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் சரவணன் (வயது 26). பழ வியாபாரி. இந்த நிலையில் நேற்று முன்தினம் சரவணன் தனது மோட்டார் சைக்கிளில் வேலையின் காரணமாக திருவள்ளூருக்கு வந்து கொண்டிருந்தார்.

    அவர் செவ்வாப்பேட்டை துர்க்கையம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்திசையில் பூந்தமல்லி நோக்கி வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சரவணணுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

    அவ்வாறு செல்லும் வழியிலேயே சரவணன் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    ×