search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேதன்யாகு"

    இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்றதையடுத்து, நேதன்யாகு மீண்டும் பிரதமராக பதவியேற்றார். #Netanyahu #Israelpolls
    ஜெருசலேம்:

    இஸ்ரேல் நாட்டில் ‘கென்னெசெட்’ என்றழைக்கப்படும் பாராளுமன்றத்துக்கு கடந்த 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான வலதுசாரி லிக்குட் கட்சி மற்றும் முன்னாள் ராணுவ தளபதி பென்னி கான்ட்ஸ் தலைமையிலான புளு அன்ட் ஒயிட் கட்சிக்கு இடையில் கடும் போட்டி நிலவியது.
     
    இதில், நேதன்யாகுவின் லிக்குட் கட்சி மற்றும் புளு அண்ட் ஒயிட் கட்சி தலா 35 இடங்களில் வெற்றி பெற்றது. லிக்குட் கட்சிக்கு வலதுசாரி கட்சிகளும் ஆதரவு அளித்தன. எனவே, நேதன்யாகு மீண்டும் பிரதமர் ஆவதற்கு 65 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. 

    இதையடுத்து நேதன்யாகு தலைமையிலான புதிய பாராளுமன்றம் இன்று  பதவியேற்றது. பிரதமராக நேதன்யாகு 5வது முறையாக பதவியேற்றுக்கொண்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற உறுப்பினர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

    பதவியில் இருக்கும் போது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய முதல் பிரதமர் நேதன்யாகு என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அவர் பிரதமராக பதவியேற்றாலும், அவர் மீதான ஊழல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும். வழக்கு நிலுவையில் உள்ளதால் அவர் பதவி விலக தேவையில்லை என அரசின் தலைமை வழக்கறிஞர் கூறினார். குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு, அனைத்து முறையீடுகளும் முடிவடைந்தால் மட்டுமே ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார். #Netanyahu #Israelpolls
    120 இருக்கைகளை கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை அமர்த்துவதற்காக இன்று நடைபெறும் தேர்தலில் அதிகளவிலான மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். #Netanyahu #Israelpolls
    ஜெருசலேம்:

    இஸ்ரேல் நாட்டில் ‘கென்னெசெட்’ என்றழைக்கப்படும் பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான வலதுசாரி லிக்குட் கட்சி மற்றும் முன்னாள் ராணுவ தளபதி பென்னி கான்ட்ஸ் தலைமையிலான புளு அன்ட் ஒயிட் கட்சிக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

    இஸ்ரேல் பிரதமராக 4 முறை பதவி வகித்துள்ள பெஞ்சமின் நேதன்யாகு, இந்த முறையும் வெற்றிபெற்று ஐந்தாவது முறையாக அரியணை ஏறுவதில் தீவிர ஆர்வம் காட்டியுள்ளார். தனது நெருங்கிய நண்பரான நேதன்யாகுவின் வெற்றியை உறுதிப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே ஆதரவு திரட்டும் பிரசாரத்தில் நேரடியாக ஈடுபட்டார்.

    ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகரமாக அங்கீகரித்தது, கோலன் ஹைட்ஸ் மற்றும் வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்கும் முடிவுக்கு ஒப்புதல் அளித்தது என பல்வேறு வகைகளில் இஸ்ரேல் மக்களிடையே பெஞ்சமின் நேதன்யாகுவின் செல்வாக்கை நிலைநாட்ட டிரம்ப் அதீத அக்கறை காட்டி வருகிறார்.

    இந்நிலையில், சுமார் 63 லட்சம் வாக்காளர்களை கொண்ட இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலில் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. நாட்டின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 10 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.



    வாக்குச்சீட்டு முறையில் வேட்பாளர்களின் பெயர்களுக்கு எதிராக முத்திரை பதிக்கும் இன்றைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தையும் எண்ணும் பணிகள் இன்றிரவு பத்து மணியில் இருந்து தொடங்குகிறது.

    நாளை பிற்பகலுக்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் தெரியவரும். எனினும், அந்நாட்டு தேர்தல் கமிஷன் வெற்றி-தோல்வி நிலவரத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட ஓரிரு நாட்கள் ஆகும் என தெரிகிறது. இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களில் புதிய மந்திரிசபை பதவி ஏற்கும்.

    தேர்தலுக்கு முந்தைய நிலவரப்படி எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் பெஞ்சமின் நேதன்யாகு - பென்னி கான்ட்ஸ் இருவருமே சமபலத்துடன் இருப்பதாகவே தெரிகிறது.

    எனினும், 13 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்த காலத்தில் இஸ்ரேல் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க துணிச்சலான சில முடிவுகளை எடுத்தவர், அண்டைநாடான ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை திறம்பட எதிர்த்து சமாளித்தவர் என்ற வகையில் பெஞ்சமின் நேதன்யாகு(69) மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்புவதாக பெரும்பாலான மக்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆனால், கடந்த ஆட்சிக்காலத்தின்போது பெஞ்சமின் நேதன்யாகு 3 ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதால் ஆட்சி தலைமையில் மாற்றம் தேவை என எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இருப்பினும், ஒருவேளை நேதன்யாகு ஐந்தாவது முறை பிரதமராக பதவி ஏற்றால் பிரான்ஸ் நாட்டில் உள்ளதுபோல் ஆட்சியின் தலைவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் நடவடிக்கை எடுக்க முடியாதவாறு இஸ்ரேல் பாராளுமன்றத்தில் புதிய சட்டத்தை கொண்டுவந்து அவர் தப்பிக்க வாய்ப்புள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.  #Netanyahu #Israelpolls

    பிரிட்டன் நாட்டின் இளவரசர் வில்லியம்ஸ், இஸ்ரேல் நாட்டின் பிரதம மந்திரி நேதன்யாகுவை ஜெருசலேம் இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து பேசினார். #PrinceWilliam #Netanyahu #Israel
    ஜெருசலேம்:

    பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் முதன்முறையாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பகுதிகளுக்கு அரச குடும்ப உறுப்பினராக பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று இஸ்ரேல் பிரதம மந்திரி நேதன்யாகுவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பிரிட்டன் பிரதமரின் வருகையையொட்டி இஸ்ரேலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இஸ்ரேல் நாட்டின் தலைவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட ஜெருசலேம் இல்லத்தில் இவர்களின் சந்திப்பு இன்று நடைபெற்றது.

    இந்த சந்திப்பு குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. #PrinceWilliam #Netanyahu #Israel
    ×