search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடியோ"

    பெரம்பலூர் பாலியல் சம்பவம் தொர்பான ஆடியோவை வெளியிட்ட வக்கீல் மீது அ.தி.மு.க. மகளிரணி புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பெரம்பலூர்:

    பொள்ளாச்சியை போன்று, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் சிலரை அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் மற்றும் சிலர் பாலியல் தொந்தரவு செய்ததாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

    இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் கடந்த 21-ந் தேதி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் கொடுத்தார். அது தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் வக்கீல் அருள் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மேற்கண்ட புகார் தொடர்பாக தன்னுடன் செல்போனில் பேசிய ஆடியோவினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி, பாதுகாப்பு கேட்டும் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்திருந்தார்.

    வக்கீல் அருள் கொடுத்த புகார் எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இன்றி உள்ளதாகவும், எனவே அருள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. வக்கீல் அணியினர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தனர்.

    இந்தநிலையில் பெரம்பலூர் வக்கீல்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த வக்கீல்கள் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தலிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், வக்கீல் அருள் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களை பற்றி எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இன்றி ஆடியோ ஒன்றை வெளியிட்டு, தவறான செய்தியையும் பரப்பி வருகிறார்.

    அவர் மீது பல்வேறு புகார்கள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஏன்? இன்னும் போலீசார் விசாரணையில் ஆஜராகவில்லை. அ.தி.மு.க. பிரமுகர் ஒரு பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதால், அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி, அவர் மீது திட்டமிட்டு அடிப்படை ஆதாரமற்ற பொய் செய்திகளை பரப்பி வரும் வக்கீல் அருள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இதேபோல் அ.தி.மு.க. பிரமுகர் மீது பொய்யான பாலியல் புகார் கொடுத்த அருள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. மகளி ரணியினரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளனர்.
    கேரளாவில் கவுரவ கொலையில் ஈடுபட்ட கொலையாளிகளுக்கு உதவுவதாக போலீஸ்காரர் ஒருவருடன் செல்போனில் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#honourkilling #kerala #lovemarriage
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள நட்டாசேரி பகுதியை சேர்ந்தவர் கெவின் ஜோசப். இவரும் கொல்லம் அருகே தென்மலை பகுதியை சேர்ந்த நீனு என்பவரும் காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் தெரியவந்ததும் நீனு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கெவின்ஜோசப் தலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அவர்கள் காதலை ஏற்க குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். மேலும் வேறு இடத்தில் மாப்பிள்ளையும் பார்க்க தொடங்கினர்.

    இதனால் கெவின் ஜோசப் - நீனு ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதனால் நீனுவின் தந்தை சாக்கோ ஜாண், அண்ணன் சயானு சாக்கோ ஆகியோர் ஆத்திரம் அடைந்தனர். மேலும் சயானு சாக்கோ தலைமையிலான கும்பல் கெவின் ஜோசப்பை கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்தனர்.

    கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். போலீசாரால் தேடப்பட்ட சாக்கோ ஜாண், சயானு சாக்கோ ஆகியோர் நேற்று கண்ணூர் பகுதியில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

    அவர்களை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய சிலரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த கொலையில் ஆரம்பம் முதலே போலீசார் மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. கெவின் ஜோசப் கடத்தப்பட்டவுடன் அவரது மனைவி நீனு காந்திநகர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் பணியில் இருந்த சப்- இன்ஸ்பெக்டர் ஷிபு, தான் முதல்-அமைச்சரின் பாதுகாப்பு பணிக்கு செல்வதால் உடனே அந்த புகாரை விசாரிக்க முடியாது என்று கூறி உள்ளார்.

    அவர் உடனடியாக விசாரணை நடத்தி இருந்தால் கெவின் ஜோசப்பை காப்பாற்றி இருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஷிபு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் கொலையாளி சயானு சாக்கோ கொலை நடந்த அன்று காந்தி நகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருடன் செல்போனில் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    அந்த உரையாடலில் சயானு சாக்கோ அந்த போலீசிடம் கூறுகையில் நாங்கள் கெவின் ஜோசப்பின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தினோம். அங்கிருந்த கெவின் ஜோசப்பை காரில் கடத்திச் சென்றோம். எனக்கு பின்னால் வந்த காரில் கெவின் ஜோசப்பை ஏற்றி வந்தபோது அவர் எங்களிடம் இருந்து தப்பிச் சென்றுவிட்டார். அவர் எப்படியும் உங்கள் போலீஸ் நிலையத்திற்குதான் வருவார் என்று கூறுகிறார்.

    அதற்கு பதில் அளிக்கும் போலீஸ்காரர் கெவின் ஜோசப் எப்படி தப்பினார், எந்த இடத்தில் வைத்து தப்பிச் சென்றார் என்று கேட்கிறார். அவரது கேள்விகளுக்கு சயானு சாக்கோ பதில் அளிக்கும்போது இடம் சரியாக தெரியவில்லை என்று கூறுகிறார். அதற்கு அந்த போலீஸ்காரர் எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்கிறேன். பயப்படாமல் இருங்கள் என்று அவருக்கு தைரியம் அளிக்கிறார்.

    மேலும் சயானு சாக்கோ தனக்கு திருமணமாகி 6 மாதம் தான் ஆவதாக கூறி தனது மனைவி பற்றியும் போலீஸ்காரரிடம் கவலையை வெளிப்படுத்துகிறார். அவருக்கு போலீஸ்காரர் ஆறுதல் கூறுகிறார். அத்துடன் அந்த உரையாடல் முடிகிறது.

    இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. கொலையாளியுடன் பேசும் அந்த போலீஸ்காரர் யார்? என்பதை கண்டுபிடிக்க விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் கேரளாவில் நடந்த கவுரவ கொலை தொடர்பாக முதல் மந்திரி பினராய் விஜயன் பேட்டி அளித்தார். அப்போது நாட்டில் நடக்கக்கூடாத ஒரு வருத்தமான சம்பவம் கேரளாவில் நடந்து விட்டது. இனி இதுபோல சம்பங்கள் நடக்கக்கூடாது.

    கால மாற்றத்திற்கு ஏற்ப பிள்ளைகள் நலனை கருதி பெற்றோர் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். காதல் திருமணம் செய்துகொண்டவர்களே தங்கள் மகளின் காதலை ஏற்காமல் அவரது வாழ்வை சிதைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் போலீசார் விரைவாக செயல்பட்டு முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #honourkilling #kerala #lovemarriage
    கர்நாடகாவில் இன்று எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் முதல்வர் எடியூரப்பா பேரம் பேசும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #KarnatakaFloorTest #Yeddyurappaaudio
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மை பெறாத பா.ஜ.க. ஆட்சிபொறுப்பை ஏற்றதில் இருந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. எடியூரப்பா முதல்வராக பதவியேற்றதை எதிர்த்து காங்கிரஸ், ஜே.டி.எஸ். கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டது. அதன்படி இன்று சட்டமன்றக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

    இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை வளைக்கும் பா.ஜ.க.வின் உச்சகட்ட பேரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாட்டீலுடன் முதல்வர் எடியூரப்பா பேசுவது போன்ற ஆடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.



    அதில், பாட்டீலுக்கு அமைச்சர் பதவியுடன் நீங்கள் கேட்டதை தருகிறோம் என்று எடியூரப்பா கூறுவதுபோல் உள்ளது. மேலும் 3 பேரை அழைத்து வாருங்கள் என்றும் எடியூரப்பா கூறுகிறார். இந்த ஆடியோ விவகாரம் அரசியலில் புதிய புயலைக் கிளப்பி உள்ளது.

    ஏற்கனவே எடியூரப்பாவிற்காக ராய்ச்சூரை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி, அது தொடர்பான ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. #KarnatakaFloorTest #Yeddyurappaaudio

    கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசும் ஜனார்த்தன ரெட்டி தொடர்பான ஆடியோ ஆதாரத்தை காங்கிரஸ் இன்று வெளியிட்டது. #KarnataElection2018 #Congress #AudioRelease
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தனிப் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். எடியூரப்பாவுக்கு முதல் மந்திரியாக பதவிப் பிரமாணம் செய்து வைத்த அவர், இன்னும் 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

    கர்நாடகத்தில் ஆட்சியமைக்க 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு மெஜாரிட்டி இருந்தும் கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. எனவே, கவர்னரை கண்டித்து காங்கிரசார் நாடு முழுவதும் இன்று பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

    இதற்கிடையே, பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்நிலையில், ராய்ச்சூரை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி, அது தொடர்பான ஆடியோ ஆதாரத்தை இன்று வெளியிட்டது.

    அந்த ஆடியோவில் ஜனார்த்தன ரெட்டி பேசுகையில், பணம், மந்திரி பதவி மற்றும் பாஜக தேசிய தலைவர்களை நேரில் சந்திக்க வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்த ஆடியோ போலியாக தயாரிக்கப்பட்டது என பாஜக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார். #KarnataElection2018 #Congress #AudioRelease
    ×