என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விமானி"
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 9-11-2018 அன்று பிற்பகல் 1.15 மணிக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகருக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் துணை விமானியாக இருந்த கேப்டன் அரவிந்த் கத்பாலியா என்பவர் மது போதை தொடர்பான பரிசோதனை கருவிக்கு ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு விமானத்தில் ஏறிச் சென்றது டெல்லி விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதையடுத்து, பறந்து கொண்டிருந்த விமானத்தை உடனடியாக தரையிறக்குமாறு கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். அரவிந்த் கத்பாலியா மூத்த விமானியாக மட்டுமில்லாமல் ஏர் இந்தியா நிறுவனத்தின் இயக்கங்கள் (போக்குவரத்து) துறை இயக்குனராகவும் பதவி வகித்து வந்தார்.
அந்த விமானம் டெல்லிக்கு திரும்பி தரையிறங்கியதும் அரவிந்த் கத்பாலியாவிடம் 'பிரீத் அனலைஸர்’ கருவி மூலம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் மது போதையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு அனைத்திந்திய விமானிகள் சங்கம் வலியுறுத்தியது.
இதேபோல் 11-11-2018 அன்றும் டெல்லியில் இருந்து லண்டன் சென்ற விமானத்தை ஓட்டச் சென்றபோது நடத்திய பரிசோதனையிலும் போதையில் இருந்ததாக இவர் சிக்கினார்.
இதைதொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் இயக்கங்கள் (போக்குவரத்து) துறை இயக்குனர் பதவியில் இருந்தும் இன்று அவர் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், அரவிந்த் கத்பாலியா ஏர் இந்தியா நிறுவனத்தின் வடக்கு பிராந்திய இயக்குனராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏர் இந்தியாவின் வடக்கு பிராந்திய இயக்குனர் பங்கஜ் குமார் 30-4-2019 அன்றுடன் பணிஓய்வு பெறுவதால் 1-5-2019 முதல் அந்த பதவியில் அரவிந்த் கத்பாலியா நியமிக்கப்படுகிறார் என அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் விமானம் ஓட்டி தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டதற்கு இந்திய விமானிகள் சங்கத்தின் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுதொடர்பாக, அந்த சங்கம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘பலமான அரசியல் தொடர்பும், செல்வாக்கும் உள்ள நபர்கள் எத்தகையை குற்றங்களில் இருந்தும் தப்பித்துக் கொள்வார்கள் என்பது தற்போது மீண்டும் நிரூபணமாகி உள்ளது.
சட்டத்தை மீறியதற்காக குற்றப்பத்திரிகை நிலுவையில் உள்ள ஒருநபர் மற்ற பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்க முடியாது. மேலும், முன்னர் அரவிந்த் கத்பாலியா மீதான போலீஸ் விசாரணையின்போது அவருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும் வாய்ப்பு உள்ளதால் இந்த நியமனத்தை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. #preflight #alcoholtest #AirIndia #ArvindKathpalia #AirIndiaRegionalDirector
டெல்லியை சேர்ந்தவர் ரோகன் பாசின் (33). இவர் விமானி ஆக இருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 3 வயதில் டெல்லியில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் இவர் சேர்ந்தார்.
அப்போது அவருக்கு சுதா சத்யன் என்ற ஆசிரியை எழுத படிக்க கற்றுக் கொடுத்தார். தனக்கு கல்வி அறிவு அளித்து உயர்ந்த நிலைக்கு வர அடித்தளமிட்ட அவரை கவுரவப்படுத்த ரோகன் விரும்பினார். எனவே, அவரை டெல்லியில் இருந்து அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகருக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார்.
விமானத்தில் ஏறிய ஆசிரியை சுதா சத்யன் தனது இருக்கையில் அமர்ந்ததும், விமானி உடையில் அங்கு வந்த ரோகன் அவரை சக பயணிகள் முன்பு அறிமுகம் செய்து வைத்தார். இவர்தான் எனக்கு முதன் முதலில் கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியை. இன்று நான் விமான கேப்டன் ஆக உயர இவரே காரணம் என பெருமையுடன் கூறினார். அதை கேட்டதும் பயணிகள் அனைவரும் கைதட்டி அவரை வரவேற்றனர்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த சுதா சத்யன் ஆனந்த கண்ணீருடன் தனது மாணவர் கேப்டன் ரோகனை கட்டித் தழுவினார். இந்த மகிழ்ச்சியான தருணம் அனைவரையும் நெகிழ வைத்தது.
கேப்டன் ரோகனின் தாயார் அவர் ஆசிரியை சுதா சத்யனுடன் எடுத்துக் கொண்ட போட்டாக்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். ரோகன் 3 வயது சிறுவனாக இருந்தபோது விளையாட்டு பள்ளியில் சுதா சத்யனுடன் எடுத்துக் கொண்ட படமும் அதில் அடங்கும்.
தனது மகன் ரோகன் விளையாட்டு பள்ளியில் சேரும்போது நடந்த ருசிகர சம்பவத்தையும் அதில் நினைவு கூர்ந்துள்ளார்.
கேப்டன் ரோகன் வசதி படைத்த பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கும், விமானத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவரது தாத்தா ஜெய்தேவ் பாசின் 1951-ம் ஆண்டில் முதன் முதலில் 7 விமானிகள் கமாண்டர்கள் ஆனார்கள். அவர்களில் இவரும் ஒருவர்.
இவரது பெற்றோரும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டவர்கள். ரோகன் பிளஸ்-2 படிக்கும் போதே விமானி ஆனார். 2007-ம் ஆண்டில் இணை விமானி ஆக பொறுப்பேற்றார். #PilotRohan
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹாருக்கு ஏரியானா ஆப்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. அதில், 124 பயணிகளும், 9 சிப்பந்திகளும் இருந்தனர். விமானம் மேலே கிளம்புவதற்காக ஊர்ந்து சென்று கொண்டிருந்தபோது, விமான கடத்தலின்போது பயன்படுத்தப்படும் எச்சரிக்கை பொத்தானை விமானி தவறுதலாக அழுத்தி விட்டார்.
இதனால், விமானம் கடத்தப்படப்போவதாக பீதி ஏற்பட்டது. விமான நிலையத்தில் இருந்த தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகளும் விமானத்தை சூழ்ந்து கொண்டனர். விமானம், தனி இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
விமானத்துக்குள் நுழைந்து அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். 2 மணி நேரம் சோதனை நீடித்தது. விமானிதான் தவறுதலாக பொத்தானை அழுத்தினார் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, விமானம் புறப்பட அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர், விமானம் புறப்பட்டு சென்றது.
பாட்னா:
டெல்லியில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு ‘கோ ஏர்’ விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 150 பேர் பயணம் செய்தனர்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது 27 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் திடீரென எழுந்தார். பின்னர் கழிவறை என நினைத்து விமானத்தின் பின்புற கதவை திறக்க முயன்றார்.
அதைபார்த்த சக பயணி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே அங்கு வந்த விமான ஊழியர் அந்த பயணியை தடுத்து நிறுத்தினார். கேபின் அறையின் காற்றழுத்தம் அதிகமாக இருந்ததால் விமானத்தின் கதவை திறக்க முடியவில்லை. இல்லாவிடில் மிகப்பெரிய விபத்து நடந்திருக்கும்.
இச்சம்பவம் கடந்த 22-ந்தேதி நடந்தது. இதற்கிடையே விமானம் இரவு 7.35 மணிக்கு பாட்னா விமான நிலையத்தில் தரை இறங்கியது. அதையடுத்து அந்த வாலிபர் தொழிற் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பின்னர் அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் அஜ்மீரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிவது தெரியவந்தது.
முதல் விமான பயணம் என்பதால் கழிவறைக்கு பதிலாக விமானத்தின் கதவை தவறுதலாக திறக்க முயன்றதாக கூறினார். வேறு பயங்கரவாத நடவடிக்கை எதுவும் இல்லை என்றார். #Flight
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஊப்ளிக்கு விமானத்தில் சென்றார்.
விமானம் ஊப்ளியை சென்றடைந்ததும் 40,935 அடி உயரத்தில் பறக்கும் வகையில் தானியங்கி மூலம் புரோகிராம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் விமானி அதை தானியங்கிக்கு மாற்றி உயரத்தை குறைத்து குறிப்பிட்ட நேரத்துக்கு பதில் 24 செகண்டுகள் முன்கூட்டியே இயக்கினார்.
இதனால் விமானம் திடீர் என்று 735 அடி உயரத்துக்கு இறங்கியது. விமானம் பயங்கரமாக குலுங்கியது. இதனால் விமானிகள் அதிர்ச்சி அடைந்தனர். என்றாலும் விமானிகள் சாமர்த்தியமாக இயக்கி விமானத்தை பத்திரமாக தரை இறக்கினர்.
இதுபற்றி விமான போக்குவரத்து ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டது. இதில் விமானியின் தவறே தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதற்கு காரணம் என்று தெரிய வந்தது. நேற்று இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், தானியங்கி கட்டுப்பாட்டு கருவிகளை விமானி மாற்றி அமைத்து, தானே இயக்கும் போது அதனால் ஏற்பட்ட தாமதமே தொழில்நுட்ப கோளாறுக்கு காரணம் என்றும், எனவே சம்பந்தப்பட்ட விமானிக்கு அது தொடர்பான பயிற்சியில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. #Congress #RahulGandhi
காஷ்மீரை சேர்ந்த முஸ்லிம் பெண் இராம் ஹபீப் (31). இவர் விமானம் ஓட்ட பயிற்சி பெற்றுள்ளார்.
அதை தொடர்ந்து இவர் ஏர் இண்டியா விமானத்தில் விமானி ஆக அடுத்த மாதம் பொறுப்பு ஏற்கிறார். இதன் மூலம் காஷ்மீரின் முதல் முஸ்லிம் பெண் விமானி என்ற பெருமையை பெறுகிறார்.
இவர் நினைத்தவுடன் விமானி ஆகவில்லை. வனவியல் துறையில் ஆய்வு செய்து பட்டயம் பெற வேண்டும் என்ற குழந்தை பருவ கனவு இவருக்கு இருந்தது. எனவே டேராடூனில் படித்து அதற்கான பட்டம் பெற்றார்.
பின்னர் ஸ்ரீநகரில் உள்ள ஷெரீ காஷ்மீர் பல்கலைக் கழகத்தில் விவசாய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பட்டமேற்படிப்பு படித்தார். அதன் பின்னர் அமெரிக்கா சென்று விமான பள்ளியில் சேர்ந்து படித்தார்.
2016-ம் ஆண்டில் விமானி பயிற்சியை முடித்தார். 260 மணி நேரம் விமானம் ஓட்டிய அவர் அமெரிக்கா மற்றும் கனடாவில் வர்த்தக ரீதியிலான விமானம் ஓட்ட லைசென்சு பெற்றார்.
இவருக்கு முன்பு 2006-ம் ஆண்டில் காஷ்மீர் பண்டிட் குடும்பத்தை சேர்ந்த தான்வி ரெய்னா விமானி ஆனார். இதன் மூலம் காஷ்மீரின் முதல் பெண் விமானி என்ற அந்தஸ்தை பெற்றார்.
காஷ்மீரை சேர்ந்த 50 முஸ்லிம் பெண்கள் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு நிறுவன விமானங்களில் பணிப்பெண்களாக உள்ளனர். #IramHabib
சீனாவில் சாங்குயிங் நகரில் இருந்து திபெத்தின் லாசாவுக்கு சிசுவான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. அதில் 128 பேர் இருந்தனர்.
விமானம் 32 ஆயிரம் அடி (9800 மீட்டர்) உயரத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. மணிக்கு 800 முதல் 900 கி.மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் விமானிகள் அறையான ‘காக்பிட்’டில் துணை விமானி இருக்கையின் அருகே கதவு பாதி அளவு திறந்தது. இதனால் விமானத்திற்குள் காற்று புகுந்தது. எனவே காற்றை தடுத்து நிறுத்தும் கருவி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் விமானி லியூ சுயாங் ஷியான் உஷாரானார்.
அதை தொடர்ந்து அவர் விமானத்தை சிசுயான் மாகாணத்தில் உள்ள செங்கு விமான நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார். அதன் மூலம் 128 பயணிகளும் உயிர் தப்பினர்.
இதனால் விமான லியூ சிசுயானை பயணிகளும், அதிகாரிகளும் பாராட்டினர். இதற்கு முன்பு இவர் சீன விமான படையில் விமானிகளின் பயிற்சியாளராக இருந்தார். #SichuanAirlines #Plane
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்