search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்யுத்தம்"

    விளையாட்டுத்துறையில் உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு வினேஷ் போகத், பஜ்ரங் புனியா பெயர்களை இந்திய மல்யுத்த பெடரேசன் பரிந்துரை செய்துள்ளது. #WFI #KhelRatna
    விளையாட்டுத்துறையில் சாதனைக் படைக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகள் வழங்கி கவுரவிக்கும்.

    இந்த விருதுகளுக்கு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெயர்களை அந்தந்த விளையாட்டுத்துறை மத்திய அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யும். அதன்படி இன்று இந்திய மல்யுத்த பெடரேசன் கேல் ரத்னா விருதுக்கு வினேஷ் போகத், பஜ்ரங் புனியா பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.


    வினேஷ் போகத்

    ராகுல் அவேரா, ஹர்ப்ரீத் சிங், திவ்யா கக்ரன், பூஜா தண்டா ஆகியோர் பெயர்களை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது. விரேந்தர் குமார், சுஜீத் மான், நரேந்திர குமார் மற்றும் விக்ரம் குமார் ஆகியோர் பெயர்களை துரோணாச்சாரியார் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    நேற்றுடன் முடிவடைந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் பதக்கம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    நேற்று தனது 35-வது பிறந்த நாளை கொண்டாடிய யோகேஷ்வர் தத் மல்யுத்த போட்டியில் இருந்து ஒதுங்கியது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்தார். #YogeshwarDutt #Wrestling
    சோனிபட்:

    2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் மல்யுத்த போட்டியில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். தற்போது அவர் சக வீரர் பஜ்ரங் பூனியாவுக்கு ஆலோசகராக இருந்து வருகிறார்.

    நேற்று 35-வது பிறந்த நாளை கொண்டாடிய யோகேஷ்வர் தத் மல்யுத்த போட்டியில் இருந்து ஒதுங்கியது ஏன்? என்பது குறித்து அளித்த பேட்டியில், ‘2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் அளவுக்கு பஜ்ரங் பூனியாவை தயார்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானதாகும். அவர் சிறந்த வீரர். இருப்பினும் அவர் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் நான் பங்கேற்கவில்லை. எனவே பஜ்ரங் பூனியாவுக்கு உதவி செய்வது சிறப்பானதாக இருக்கும். 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல பஜ்ரங் பூனியாவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.

    நான் நீண்டகாலம் விளையாடி விட்டேன். பஜ்ரங் பூனியா நல்ல பார்மில் இருப்பதாலும், என்னால் அவர் பாதிக்கக்கூடாது என்பதாலும் தான் இந்த ஆண்டு நடந்த உலக போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை’ என்று தெரிவித்தார். அரியானாவை சேர்ந்த 24 வயதான பஜ்ரங் பூனியா இந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கமும், உலக போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  #YogeshwarDutt #Wrestling
    ஆசிய விளையாட்டு போட்டி மல்யுத்தத்தில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத்துக்கு அரியானா மாநில அரசு ரூ.3 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது. #AsianGames2018 #VineshPhogat
    சன்டிகார் மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற அரியானா வீரர் பஜ்ரங் புனியாவுக்கு (65 கிலோ பிரிஸ்டைல்) அம்மாநில அரசு ஏற்கனவே ரூ.3 கோடி பரிசு தொகை அறிவித்துவிட்டது.

    அம்மாநிலத்தை சேர்ந்த வினேஷ் போகத் பெண்களுக்கான 50 கிலோ பிரிஸ்டைலில் 2-வது தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். வினேஷ் போகத்துக்கும் அரியானா மாநில அரசு ரூ.3 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது. இதேபோல துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற அரியானா வீரர் லக்ஷாய் ஷெரோனுக்கு ரூ.1½ கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. #AsianGames2018 #VineshPhogat
    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு அரியானா மாநில அரசு 3 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. #AsiansGames2018 #BajrangPunia
    சண்டிகர்:
       
    ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாளில் மல்யுத்தத்தில் இந்தியாவின் 5 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான 65 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில் பஜ்ரங் புனியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப் போட்டியில் பஜ்ரங் புனியா ஜப்பானைச் சேர்ந்த தைசி டகாடனியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இந்தோனேசியா ஆசியக் கோப்பையில் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.

    இந்நிலையில், இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு அரியானா மாநில அரசு 3 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அரியானா மாநிலத்தின் விளையாட்டு துறை மந்திரி டுவிட்டரில் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற புனியாவுக்கு வாழ்த்துக்கள். அரியானா மாநில அரசு சார்பில் பஜ்ரங் புனியாவுக்கு 3 கோடி ரூபாய் பரிசு வழங்க உள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

    மேலும், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #AsiansGames2018 #BajrangPunia
    ×