search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகள்"

    மாங்காடு அருகே பள்ளி பஸ்சில் உதவியாளர்களே மாணவிகளிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
    மாங்காடு:

    மாங்காடு அடுத்த கொளப்பாக்கம், பல்லாவரம் மெயின்ரோட்டில் ஒமேகா இண்டர்நே‌ஷனல் பள்ளி உள்ளது. இங்கு மாங்காடு, போரூர், குன்றத்தூர் பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். பெரும்பாலான மாணவ- மாணவிகள் பள்ளி பஸ்சில் வந்து செல்கின்றனர்.

    இன்று காலை வழக்கம் போல் கொளப்பாக்கம் பகுதியில் உள்ள மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பள்ளி பஸ் வந்தது. அதில் உதவியாளராக பாஸ்கர் என்பவர் இருந்தார்.

    அப்போது கொளப்பாக்கத்தை சேர்ந்த எல்.கே.ஜி. மாணவி ஒருவர் பள்ளி பஸ்சில் செல்ல மறுத்தார். பெற்றோர் விசாரித்தபோது பஸ்சில் உள்ள உதவியாளர் பாஸ்கர், சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

    அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் பஸ்சில் இருந்த உதவியாளர் பாஸ்கரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை பள்ளி நிர்வாகிகளிடம் ஒப்படைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான மாணவ- மாணவிகளின் பெற்றோர் அங்கு திரண்டனர். அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பஸ்சில் ஏறி, இறங்கும் பல சிறுமிகளிடம் உதவி செய்வதுபோல் நடித்து பாஸ்கர் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் மற்றொரு உதவியாளர் மீதும் மாணவிகளின் பெற்றோர் புகார் தெரிவித்து உள்ளனர். அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள்.

    பள்ளி பஸ்சில் உதவியாளர்களே மாணவிகளிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. #tamilnews
    கோவையில் மகளிர் விடுதி உரிமையாளர், வார்டன் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் மாணவிகள் தங்கியிருந்த விடுதியில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    கோவை:

    கோவை பீளமேட்டில் உள்ள மகளிர் விடுதியில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் விடுதி வார்டன் புனிதா(வயது 32), விடுதி உரிமையாளர் ஜெகநாதன் (48) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இருவரும் செல்போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். அவர்களை கைது செய்ய மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் லட்சுமி மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    உதவி கமி‌ஷனர் சுரேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி மற்றும் தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர். ஜெகநாதனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தியதில் ஜெகநாதன் ஈரோட்டுக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

    இந்த விடுதி கடந்த 2 வருடங்களாக இயங்கி வருகிறது. உரிமையாளர் ஜெகநாதன் விடுதியில் தங்கிய மாணவிகள், இளம்பெண்களை தனது வலையில் வீழ்த்த பல்வேறு வகைகளில் முயற்சி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

    கணவரை பிரிந்து வாழும் புனிதா விடுதியில் தங்கியிருந்த மாணவிகளிடம் கனிவாக பேசி வலை விரித்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம்? என போலீசார் கருதுகின்றனர். அவர்கள் யார்-யார்? என விசாரணை நடந்து வருகிறது.

    நேற்று முன்தினமே விடுதியில் தங்கியிருந்த பெரும்பாலானோர் விடுதியை காலி செய்து வேறு விடுதிகளுக்கு சென்றுவிட்டனர். மும்பை, டெல்லி உள்பட வெளி மாநிலங்களை சேர்ந்த ஒரு சிலர் மட்டும் உள்ளனர். அவர்களும் வேறு இடம் பார்த்து வருகின்றனர்.

    இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதையடுத்து, புகாருக்குள்ளான விடுதிக்கு சமூக நலத்துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். அங்கு தங்கியிருந்த மாணவிகள், இளம்பெண்களிடம் இதுநாள் வரை விடுதியில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்து மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். ஏற்கனவே விடுதி உரிமையார், வார்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விடுதியை மூட வேண்டும் என போலீஸ் தரப்பிலும் மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்ய உள்ளனர். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் விடுதிக்கு சீல் வைக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் தூதுவர்களாக செயல்பட வேண்டும் என கலெக்டர் ஆசியா மரியம் கூறினார்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினவிழா நேற்று கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

    பிளாஸ்டிக் பொருட்கள் எளிதில் மக்காது. பிளாஸ்டிக் பைகள் தரையில் வீணாக கிடந்து, பெய்யும் மழை நீரை மண்ணுக்குள் செல்லாமல் தடுக்கின்றது. இதனால் மழைநீர் மண்ணுக்குள் இறங்காமல் ஓடி வீணாகின்றது. தற்போது அனைத்து தேவைகளுக்கும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் நிலை உள்ளது. இது தவறானதாகும். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, அனைத்து தேவைகளுக்கும் துணிப்பைகளை பயன்படுத்த முடியும்.

    பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் தூதுவர்களாக செயல்பட்டு தங்கள் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் துணிப்பைகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் வருங்காலத்தில் தூய்மையான காற்று மற்றும் சுற்றுச்சூழல் கிடைக்கும்.

    மரங்கள் கார்பன்-டை-ஆக்சைடை உள்வாங்கி நமக்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுகின்றன. மரங்கள் அழிந்தால் மனித இனமும் மற்றும் விலங்கினங்களும் சுவாசிக்க ஆக்சிஜன் இன்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக நேரிடும். பூமி வெப்பமயமாகி மழை பெய்யாத நிலை ஏற்படும்.

    எனவே சுற்றுச்சூழலை மேம்படுத்த மாணவ, மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். மாணவ, மாணவிகள் தாங்கள் வைக்கும் மரங்களுக்கு மட்டுமல்லாமல், மற்றவர்கள் வைத்த மரங்களுக்்கும் நீர் ஊற்றி வளர்க்க வேண்டும். தான் வைத்த மரக்கன்றானது சில ஆண்டுகளுக்கு பிறகு, மரமாக வளர்ந்து நிற்பதை பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியானது எதனுடனும் ஒப்பிட முடியாததாகும். இந்த ஆர்வத்தை மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கதைகள் மற்றும் நிகழ்வுகள் மூலமாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரவேண்டும்.

    நமது வீடுகளில் கட்டிடம் கட்டுவதற்காக மரங்களை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால், மரங்களை வெட்டாமல் வீடுகட்டும் முயற்சியை மேற்கொள்ள மாணவ, மாணவிகள் பெற்றோரை வற்புறுத்த வேண்டும். மேலும் வீடுகளில் துளசி செடி உள்ளிட்ட ஆக்சிஜன் அதிகம் வழங்க கூடிய, செடி வகைகளையும் வளர்த்து வீட்டில் பசுமை சூழலை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர் பள்ளி வளாகத்தில் பல்வேறு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    மேலும் அவர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளையும், ஆக்சிஜன் அதிகம் வெளியிடும் துளசி செடிகளையும் வழங்கினார். உலக சுற்றுச்சூழல் தின விழாவையொட்டி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய விதை நெல் கண்காட்சியினையும், பிளாஸ்டிக் கழிவுகளால் மாணவ, மாணவிகளால் படைக்கப்பட்டிருந்த படைப்புகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் அருளரங்கன், பள்ளி தலைமையாசிரியர் மேனகா உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 52 ஆயிரத்து 365 பேர் தேர்வு எழுதினர். இதில் 91.58 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 88.14 சதவீதமும், மாணவிகள் 95.06 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    அரசு பள்ளிகள் 85.76 சதவீதம், நகராட்சி பள்ளிகள் 87.71 சதவீதம், ஆதி திராவிட நலப்பள்ளி 86.18 சதவீதம், சமூகநலத்துறை பள்ளிகள் 93.02 சதவீதம், அரசு உதவி பெறும் பள்ளிகள் 88.12 சதவீதம், தனியார் பள்ளிகள் 98.09 சதவீதம் தேர்ச்சி பெற்று இருக்கிறது. மாநில அளவில் காஞ்சீபுரம் மாவட்டம் 29-வது இடத்தை பிடித்துள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 222 பள்ளிகளில் 47 ஆயிரத்து 583 பேர் தேர்வு எழுதினர். இதில் 43 ஆயிரத்து 584 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 94.52 சதவீதமும், மாணவர்கள் 88.72 சதவீதம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

    மாநில அளவில் திருவள்ளூர் மாவட்டம் 27-வது இடத்தை பிடித்துள்ளது. அரசு பள்ளிகளில் 34 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
    ×