search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்துகள்"

    என் சொத்துகளை இழந்ததெல்லாம் சினிமா தயாரிப்பு பணிகளால்தான். இப்போதும் என் உடன்பிறந்தவர்கள், குடும்பத்தினர் எனக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள் என்று நடிகை ஜெயசுதா கூறி உள்ளார். #Jayasudha
    அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள், நினைத்தாலே இனிக்கும் உள்பட பல தமிழ் படங்களிலும் இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் கதாநாயகியாக நடித்தவர் ஜெயசுதா. கடந்த ஆண்டு வெளியான செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    இவரின் சொத்துக்களை குடும்பத்தினரும் உறவினர்களும் அனுபவித்ததாகவும், அதனால் அவர் வருத்தப்பட்டதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து ஒரு தனியார் இணையதளத்துக்கு ஜெயசுதா பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனக்கு 2 அண்ணன்கள், ஒரு தங்கை. நான் நடிக்க தொடங்கிய பிறகு என் குடும்பத்தினரின் தேவைகளை நான் பார்த்துக்கொண்டேன். பிறகு கல்யாணமாகி, எல்லோருக்கும் தனித்தனி குடும்பங்கள் உண்டானது. 1980, 1990களில் தெலுங்கில் முன்னணி நடிகையாக நிறைய சம்பாதித்தேன். அப்போது எனக்கு எதிர்காலத்தை பற்றிய சிந்தனை எல்லாம் அதிகமாக இல்லை.

    அப்போது புத்திசாலித்தனமா யோசித்து இருந்தால், சம்பாதித்த பணத்தை எதிர்காலத் தேவைக்கு உதவும் வகையில் சேமித்து இருக்க முடியும். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. ஆனாலும் ஓரளவுக்குச் சொத்துகளை வாங்கினோம். நல்ல நிலையில்தான் இருந்தோம்.



    எனக்கும், என் கணவருக்கும் சினிமா தொழில்தான் தெரியும். அதனால், கணவர் சினிமா தயாரிப்பாளர் ஆனார். என் கணவர் மூன்று தெலுங்கு படங்கள் எடுத்தார். அவை ஹிட்டாகி, எங்களுக்கு லாபமும் கிடைத்தது. அடுத்து இந்தியில் ஒரு படம் எடுத்து, அது சுமாராக தான் ஓடியது. அந்த படத்தால் கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டது.

    பிறகு கடன் வாங்கி, மீண்டும் தெலுங்குப் படங்களைத் தயாரித்தார். அடுத்து எடுத்த 3 தெலுங்கு படங்களும் பெரிய தோல்விகளைத் தழுவின. இதனால் எங்களுக்குப் பெரிய அளவில் நஷ்டம் உண்டானது. கடன், வட்டிச்சுமை, மன உளைச்சல் என்று எங்கள் இருவருக்கும் தினந்தோறும் மனக்கஷ்டங்கள்தான்.

    அதன் பிறகு பயத்தில் என் கணவர் மீண்டும் படம் எடுக்க தயங்கினார். அதையே நினைத்துக்கொண்டே இருந்ததால்தான் என் கணவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. கடன் கேட்டு கொடுத்தவர்கள் அடிக்கடி போன் பண்ணுவது, வீட்டு வாசலில் நிற்பது, நாலு பேர் நாலு விதமா பேசுவது எல்லாம் எங்கள் இருவருக்கும் சுத்தமா பிடிக்காது. அதனால் கடன் சுமை தீர்ந்தா போதும் என்று முடிவு எடுத்து, எங்கள் சொத்துகளை விற்றோம்.

    அப்போது பொருளாதார ரீதியாக எங்களுக்கு உதவும் அளவுக்கு என் குடும்பத்தார் யாரும் வசதியாக இல்லை. அதனால் சினிமாவில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தேன். நடிப்புக்கும், என் வயதுக்கும் ஏற்ற பொறுப்பு உள்ள கதாபாத்திரங்களில் இப்போது வரை நடிக்கிறேன். நடித்து சம்பாதித்த பணத்தில், கடன் சுமைகளை எல்லாம் முழுமையாக சரிப்படுத்தினேன்.

    பசங்களை படிக்க வைத்து வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்துகிட்டேன். இப்போது சில சொத்துகள் மட்டும் இருக்கு. ஆனால் எந்தக் கடன் சுமையும் இல்லை என்கிற நிறைவும், சந்தோ‌ஷமும் அதிகமாகவே இருக்கு.

    எங்களுக்கு கஷ்டமான நிலை ஏற்பட்ட போதும், இப்போதும் என் உடன்பிறந்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாகத்தான் இருக்காங்க. சொத்துகளை இழந்ததெல்லாம், சினிமா தயாரிப்பு பணிகளால்தான்.

    இந்நிலையில் என் கணவர் இறந்துட்டார். பின்னர் என் பசங்களுக்கு அடுத்து, என் குடும்பத்தினர்தான் எனக்குப் பக்கபலமா இருக்காங்க. அவங்க யாரும் என் சொத்துக்களை அபகரிக்கவில்லை. உண்மைநிலை இதுதான். யாரும் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்’.

    இவ்வாறு ஜெயசுதா கூறினார்.   #Jayasudha
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சொத்துகள் உள்ளதா? என பதிலளிக்குமாறு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Jayalalithaa #Jayalalithaaassets
    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய அசையும், அசையா சொத்துக்களுக்கு உரிமை கோரி அவரது உறவினர்கள் தீபா, தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

    அதேபோல், ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும். எம்.ஜி.ஆர். சொத்துக்களை பராமரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமனை நியமித்தது போல் ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடமையாக்கவும், அவற்றை பராமரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கவும் கோரி தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதனிடையே, ஜெயலலிதா பெயரில் ரூ.913 கோடி சொத்துக்கள் உள்ளதால் இவற்றை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை கே.கே.நகரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் புகழேந்தி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.



    இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்கப் போவது யார்? என கேள்வி எழுப்பியது. அத்துடன், ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று தீபா, தீபக் ஆகியோர் உள்ளதால் இதுகுறித்து அவர்கள் நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    மேலும், மனுதாரரான புகழேந்தி ஜெயலலிதாவின் எந்த சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று கேட்பது அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்த வருமானத்தை மீறிய வகையிலான சொத்துக்களா? அல்லது, ஜெயலலிதா தனது வேட்பு மனு தாக்கலின்போது கணக்கு காட்டி இருந்த சொத்துக்களையா? என இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

    இந்த இரண்டு வகையான சொத்து விபரங்களையும் ஜனவரி 2-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும்  முன்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    இவ்வழக்கு கடந்த இரண்டாம் தேதி விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் மொத்த சொத்து விபரங்களை தெரிந்துகொள்ள முடியாத நிலை நீடிப்பதால் அவரது சொத்து மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை மற்றும் பொருளாதார அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சொத்துகள் உள்ளதா? என பதிலளிக்குமாறு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. #Jayalalithaa #Jayalalithaaassets

    வெளிநாடுகளில் சட்டவிரோத சொத்துகள், கருப்பு பணம் வைத்துள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு எதிரான பிரமாண்ட வேட்டையை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது. #IncomeTax #ForeignAsset #BlackMoney
    புதுடெல்லி:

    வெளிநாடுகளில் எண்ணற்ற இந்தியர்கள் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ளனர். சொத்துகளையும் வாங்கி குவித்துள்ளனர். இதற்கு எதிரான பிரமாண்ட வேட்டையை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது. இதை மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா உறுதிப்படுத்தினார்.

    வருமான வரித்துறையின் இந்த கண்காணிப்பு வளையத்துக்குள் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கொண்டுவரப்பட்டு உள்ளனர்.



    அவர்கள் வெளிநாடுகளில் வங்கிகளில் போட்டுள்ள பணம், வாங்கிய சொத்துகள் ஆகியவை பற்றி வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது. அந்தந்த நாட்டு வரித்துறையுடன் இணைந்து இந்த விசாரணை நடந்து வருகிறது.

    மேலும், மேற்கண்ட இந்தியர்கள், வெளிநாடுகளில் செய்த பண பரிமாற்ற விவரங்களை நிதி புலனாய்வு பிரிவிடம் இருந்து வருமான வரித்துறை பெற்றுள்ளது. அதன் அடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த பண பரிமாற்றம் குறித்து விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இவர்களில் செல்வாக்கான, முக்கிய பிரமுகர்களும் அடங்குவர். அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களும் உள்ளனர்.

    வெளிநாடுகளில் கருப்பு பணம், சட்டவிரோத சொத்துகள் வைத்துள்ளவர்களுக்கு எதிராக புதிய கருப்பு பண ஒழிப்பு சட்டம், கடந்த 2015-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன்படி, கருப்பு பணம், சட்டவிரோத சொத்துகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுவரை ஜெயில் தண்டனையும், 120 சதவீத வரி மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.

    இந்த புதிய சட்டத்தின் கீழ், மேற்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இருப்பினும், தங்களது வெளிநாட்டு பண, சொத்து விவரங்களை வருமான வரி கணக்கு தாக்கலில் தெரிவிக்காதவர்கள் மற்றும் வரிஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் செயல்பட்டவர்கள் மீது மட்டுமே அந்த புதிய சட்டம் பாய்ச்சப்படும் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. #IncomeTax #ForeignAsset #BlackMoney 
    ×