என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 110025
நீங்கள் தேடியது "ஃபோக்ஸ்வேகன்"
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிரபல போலோ காரின் புதிய வேரியண்ட் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Volkswagen
ஃபோக்ஸ்வேகன் தயாரிப்புகளில் மிகவும் பிரபல மாடலாக போலோ இருக்கிறது. தற்சமயம் சீன சந்தைக்கென போலோ பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. ஷாங்காய் சர்வதேச கண்காட்சியில் இந்த கார் இடம்பெற்றது.
இந்த கார் சீனாவின் எஸ்.ஐ.ஏ.சி. ஃபோக்ஸ்வேகன் ஆலையில் தயாரிக்கப்பட்டதாகும். போலோ பிளஸ் மாடலானது இந்த நிறுவனத்தின் 6-வது தலைமுறை காராகும். இது முந்தைய மாடலைக் காட்டிலும் அதிக நீளம் கொண்டது. இது 4,053 மி.மீ நீளம், அகலம் 1,740 மி.மீ, உயரம் 1,449 மி.மீ. கொண்டது. இதன் சக்கரம் 2,564 மி.மீ. உடையது.
இது இரட்டை வண்ணத்தில் 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்களைக் கொண்டுள்ளது. இரண்டு எக்சாஸ்ட் பைப் கொண்டது. தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள், ஸ்டீரிங் கண்ட்ரோல், ரியர் கேமரா, இ.எஸ்.பி., ஏர்பேக் மற்றும் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இயங்குதளம் உடையது. 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஆட்டோமேடிக் ஸ்பீடு கியர்களைக் கொண்டது. சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் இந்த மாடல் கார்களை அறிமுகம் செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய மைல்கல் சாதனையை கடந்துள்ளது. #Volkswagen
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பூனே உற்பத்தி ஆலையில் இருந்து பத்து லட்சமாவது காரை அந்நிறுவனம் வெளியிட்டது. ஃபோக்ஸ்வேகன் இந்திய உற்பத்தியில் பத்து லட்சமாவது மாடலாக அமியோ செடான் மாடல் கார் இருந்தது.
சிறப்பு மைல்கல் சாதனையுடன் ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் ஃபோக்ஸ்வேகன் இந்தியா தலைவர் குர்பிரதாப் போபாரி மற்றும் ஃபோக்ஸ்வேகன் பயணிகள் கார் பிரிவு தலைவர் ஸ்டீஃப் நேப் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இதுகுறித்து குர்பிரதாப் போபாரி கூறும் போது,
ஃபோக்ஸ்வேகன் இந்தியா உற்பத்தி ஆலை சர்வதேச அளவில் தரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையான வசதியை பெற்றிருக்கிறது. இதுவே இந்தியாவில் எங்களது வெற்றுக்கு முக்கிய பங்கு வகித்திருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் இந்தியா குழுவினரின் அயராத உழைப்பு மற்றும் முயற்சியின் பலனாக எட்டப்பட்டிருக்கும் புதிய மைல்கல் சாதனைக்கு எங்களது மொத்த நிர்வாக குழு சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய சந்தையில் பத்து லட்சமாவது காரை வெளியிடுவது எங்களது நிறுவனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்த மைல்கல் மட்டுமின்றி உள்நாட்டு உற்பத்தியில் மேலும் அதிக கவனம் செலுத்தி, உலகத்தரம் வாய்ந்த வாகனங்களை நாட்டுக்கும் பல்வேறு உலக சந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம். என அவர் தெரிவித்தார்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது போலோ, அமியோ மற்றும் வென்டோ கார்களை பிளாக் மற்றும் வைட் நிற எடிஷனில் அறிமுகம் செய்துள்ளது. #Volkswagen
சொகுசு கார்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது முன்னணி மாடல்களான போலோ, அமியோ, வென்டோ ஆகிய மூன்று கார்களிலும் கருப்பு, வெள்ளை எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. புதிய கருப்பு மற்றும் வெள்ளை நிற எடிஷன் கார்களை பயனர்கள் எவ்வித கூடுதல் விலையும் இன்றி அனைத்து முன்னணி டீலர்களிடமும் வாங்க முடியும்.
இந்த கருப்பு, வெள்ளை பேக்கேஜில் அனைத்து மாடல்களிலும் மேல் பகுதி கிராஃபிக்ஸ், லெதர் சீட் கவர்கள் பின்புற ஸ்பாயிலர், 16 அங்குல போர்டேகோ அலாய் சக்கரங்கள், மேல்பகுதி கருப்பு வண்ணம் பூசப்பட்டது, கருப்பு நிறத்திலான ஓ.ஆர்.வி.எம்., குரோம் பேட்ஜ் ஆகியன இடம்பெறும். இது தவிர முற்றிலும் கருமையான நிறத்தில் போலோ, வென்டோ மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அனைத்து மாடல்களுமே 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் யூனிட்டை கொண்டவை. 90 பி.ஹெச்.பி. திறன் கொண்ட போலோ ஹேட்ச்பேக் மாடலை போன்று இருக்கும் இது 5 மானுவல் கியர் வசதி கொண்டது. அமியோ மற்றும் வென்டோ செடான் மாடலில் 110 பி.ஹெச்.பி. திறனும் 5 கியரும் கொண்டது. இது தவிர 7 ஸ்பீடு இரட்டை கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உள்ள மாடலும் இதில் கிடைக்கும்.
போலோ மற்றும் அமியோ மாடல் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரைக் கொண்டது. இது 76 பி.ஹெச்.பி. திறன் மற்றும் 95 என்.எம். டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியது. வென்டோ மாடலில் 1.6 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் உள்ளது. இது 105 பி.ஹெச்.பி. திறன் 153 என்.எம். டார்க் செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியது.
இதில் 5 கியர் வசதி மட்டுமே உண்டு. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடலும் போலோ மற்றும் வென்டோவில் உள்ளது. இது 105 பி.ஹெச்.பி. திறன் 175 என்.எம். டார்க் இழுவிசை திறனை வெளிப்படுத்துகிறது.
இதில் போலோ மாடல் மாருதி சுசுகி ஸ்விப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ 10, போர்டு பிகோ ஆகிய மாடலுக்கு போட்டியாகவும் அமியோ மாடல் மாருதி சுசுகி டிசையர், ஹூண்டாய் எக்சென்ட், ஃபோர்டு ஆஸ்பயர் மாடலுக்கு போட்டியாக இருக்கிறது. வென்டோ மாடலானது நடுத்தர ரக செடான் காராகும். இது ஹூண்டாய் வெர்னா, மாருதி சுசுகி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ராபிட் ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக விளங்குகிறது.
இந்தியாவில் TDI ரக இன்ஜின்களை தயாரிப்பதில் ஃபோக்ஸ்வேகன் புதிய மைல்கல் எட்டியிருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 1,00,000 TDI (டர்போசார்ஜ்டு டைரக்ட் இன்ஜெக்ஷன்) ரக டீசல் இன்ஜின்களை தயாரித்து இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த இன்ஜின் பூனேவில் இயங்கி வரும் சக்கன் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இரண்டு TDI ரக இன்ஜின்கள் - 1.5 லிட்டர் TDI யூனிட், 108 பிஹெச்பி பவர், 89 என்எம் டார்கியூ செயல்திறன், பெரிய 2.0 லிட்டர் TDI மோட்டார் 141 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்கும் இன்ஜின்களை இந்தியாவில் தயாரித்து வருகிறது.
ஃபோக்ஸ்வேகன் தயாரித்த 1,00,000-வது இன்ஜின் 1.5 லிட்டர் TDI மோட்டார் ஆகும். இந்த இன்ஜின் 108 பிஹெச்பி செயல்திறன் வழங்குகிறது. இது அதிகபட்சம் 250 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மேனுவல் மற்றும் DSG ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்குகிறது.
இந்த இன்ஜின் ஃபோக்ஸ்வேகன் அமியோ, வென்டோ செடான் மற்றும் போலோ GT TDI மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. வழக்கமான போலோ டீசல் இன்ஜின் 89 பிஹெச்பி பவர் செயல்திறன் வழங்குகிறது.
2.0 லிட்டர் TDI இன்ஜின் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டாப் என்ட் மாடல்களான ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யுவி மற்றும் பசாட் செடான் மாடல்களில் வழங்கப்படுகிறது. டகுவான் எஸ்யுவி மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 141 பிஹெச்பி பவர் வழங்குகிறது. பசாட் இன்ஜின் மாடலில் 175 பிஹெச்பி பவர் வழங்குகிரது. இரண்டு இன்ஜின்களும் 2.0 TDI டைரக்ட் ஷிஃப்ட் கியர்பாக்ஸ் (DSG) ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
புகைப்படம்: நன்றி PIXABAY
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கொல்ஃப் GTD மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இந்திய சந்தையில் சர்ப்ரைஸ் வரவாக ஃபோக்ஸ்வேகன் கொல்ஃப் GTD சோதனை செய்யப்படுகிறது. கார்களின் வழக்கமான சோதனை போன்று இல்லாமல், கார் முழுமையாக மறைக்கப்படாமல் சாதாரணமாக சோதனை செய்யப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தின் பதிவு எண் கொண்டிருக்கும் கொல்ஃப் GTD பெங்களூரு சாலைகளில் சோதனை செய்யப்படுகிறது. காரின் பின்புறம் டெயில்பைப்-இல் சோதனை செய்யப்படும் கருவி பொருத்தப்பட்டு இருக்கிறது. இது போஷ் நிறுவனம் தனது டீசல் தொழில்நுட்பங்களை சோதனை செய்ய பயன்படுத்தும் கருவி போன்றே காட்சியளிக்கிறது.
போஷ் நிறுவனத்தின் புதிய டீசல் தொழில்நுட்பம் வாகன தயாரிப்பு நிறுவனங்களை நைட்ரஜன் ஆக்சைடு வெளியேற்றத்தை வெகுவாக குறைக்கச் செய்கிறது. இந்த தொழில்நுட்பம் பொருத்தி சோதனை செய்யப்படும் வாகனங்களின் மாசு அளவு தற்சமயம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் அளவுகளை விட குறைவு என்பதோடு இவை, 2020-ம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் அளவை விட குறைவு ஆகும்.
ஃபோக்ஸ்வேகன் கொல்ஃப் GTD அந்நிறுவனத்தின் MQB பிளாட்ஃபார்ம் சார்வ்து உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது சர்வதேச சந்தையில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் தற்போதைய கொல்ஃப் MK7 மாடலின் செயல்திறன் மிக்க மாடலாகும். பாகங்கள் மற்றும் அம்சங்களை வைத்து பார்க்கும் போது கொல்ஃப் GTD பெரிய மாடலாக பார்க்கப்படுகிறது.
முன்பக்கம் கருப்பு நிற ஸ்டைலிங் செய்யப்பட்டு இருப்பதோடு ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டேடைம் ரன்னிங் லேம்ப்கள், GTD பேட்ஜிங் கொண்ட பிளாக் மெஷ் கிரிள் அதிக காற்றோட்டம் வழங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. ட்வின் 5-ஸ்போக் அலாய் வீல்களை கொண்டிருக்கும் இந்த கார் வரிசையில் எல்இடி டெயில்லேம்ப்களை கொண்டுள்ளது.
காரின் உள்புறம் அதிக தெளிவாக காட்சியளிக்காத நிலையில், கொல்ஃப் GTD மாடலின் கேபின் டிரைவர் சார்ந்த டேஷ்போர்டு, சென்ட்டர் கன்சோல், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் ஏர் கான் சிஸ்டம் இயக்க டையல் கன்ட்ரோல் மற்றும் 12.3 இன்ச் கலர் ஸ்கிரீன் மற்றும் நேவிகேஷன் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் கொல்ஃப் GTD மாடலில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் இன்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் 181 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்கியூ மற்றும் 7-ஸ்பீடு DSG ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
புகைப்படம்: நன்றி Etuners-Motorsport-India and Robesh Vasudevan
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் தனது புதிய கார்களின் ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
புதுடெல்லி:
ஐரோப்பாவை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் தனது போலோ, அமியோ மற்றும் வென்டோ கார்களின் ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள புதிய கார்கள் ஸ்போர்ட் எடிஷன் என அழைக்கப்படுகிறது. ஃபோக்ஸ்வேகன் போலோ, அமியோ மற்றும் வென்டோ ஸ்போர்ட் எடிஷன் மாடலின் ஸ்டைலிங்-ஐ மேம்படுத்துவம் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல்களில் கிளாஸ் பிளாக் ரூஃப் ஃபாயில், ஸ்டைலிஷ் சைடு ஃபாயில், பிளாக் ரியர் ஸ்பாயிலர் மற்றும் கார்பன் ஃபினிஷ் செய்யப்பட்ட ORVM கேப் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கின்றன. இதுதவிர மூன்று மாடல்களின் ஒட்டுமொத்த வடிவமைப்பில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
ஃபோக்ஸ்வேகன் போலோ, அமியோ மற்றும் வென்டோ ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் இந்தியா முழுக்க இயங்கி வரும் ஃபோக்ஸ்வேகன் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்பெஷல் எடிஷன் கார்களுடன் #BeASport என்ற விளம்பர திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ஃபோக்ஸ்வேகன் கார்களை சோதனை செய்து காருக்கான விளம்பர வாசகத்தை #BeASport ஹேஷ்டேகுடன் சேர்த்து பதிவிட வேண்டும். இந்த போட்டியில் வெற்று பெறுபவருக்கு ஸ்பெஷல் எடிஷன் ஃபோக்ஸ்வேகன் கார் பரிசாக வழங்கப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் சமீபத்தில் அறிமுகம் செய்த போலோ மற்றும் அமியோ பேஸ் எடிஷன்களில் சிறிய 1-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. 1-லிட்டர் இன்ஜின் 75 பிஹெச்பி பவர், 95 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X