search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறைவு"

    திமுக முன்னாள் எம்பியான வசந்தி ஸ்டான்லியின் மறைவுக்கு கனிமொழி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். #VasanthiStanley #RIPVasanthiStanley #DMK
    சென்னை:

    திராவிட முன்னேற்ற கழகம் கட்சியிலிருந்து இந்திய பாராளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்ய சபாவில் தமிழகத்தின் பிரதிநிதியாக தோ்வு செய்யப்பட்டவர் வசந்தி ஸ்டான்லி (56). வசந்தி ஸ்டான்லி 2008 முதல் 2014 வரை திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். பத்திரிகையாளரான இவர் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்.

    உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



    இந்நிலையில், திமுக முன்னாள் எம்பியான வசந்தி ஸ்டான்லியின் மறைவுக்கு கனிமொழி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பல சவால்களை தனித்து நின்று சமாளித்தவர், நல்ல பேச்சாளர் வசந்தி ஸ்டான்லி. வசந்தி ஸ்டான்லியின் மறைவு மகளிர் அணியின் சகோதரிகளுக்கும் எனக்கும் பெரிய இழப்பு என பதிவிட்டுள்ளார். #VasanthiStanley #RIPVasanthiStanley #DMK
    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
    புதுடெல்லி :

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மனோகர் பாரிக்கர் மறைவு செய்தி மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. பொதுவாழ்க்கையில் மனோகர் பாரிக்கரின் சேவையை நாட்டு மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.



    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மனோகர் பாரிக்கர் ஈடு இணையில்லாத தலைவர். உண்மையான தேசபக்தர். சிறந்த நிர்வாகி. அனைவராலும் பாராட்டப் பெற்றவர். நாட்டிற்கு அவர் ஆற்றிய பணிகள் பல தலைமுறையினரின் நினைவில் இருக்கும். அவரது மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தனது நோயை எதிர்த்து ஒரு ஆண்டுக்கும் மேலாக போராடிய கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவு வருத்தமளிக்கிறது. கட்சி எல்லைகளை தாண்டி அவருக்கு அனைவரும் மரியாதை அளித்தனர். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
    முன்னாள் ராணுவ அமைச்சரும் கோவா முதல் மந்திரியுமான மனோகர் பாரிக்கர் மறைவுக்கு மத்திய அமைச்சரவை சார்பில் நாளை இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது. #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
    புதுடெல்லி;

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார். கோவா மற்றும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன்பிறகு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    அவருக்கு கணையத்தில் புற்றுநோய் பாதித்திருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றவாறு தனது இல்லத்தில் இருந்தபடி முதல் மந்திரி பணிகளை கவனித்து வந்தார் மனோகர் பாரிக்கர்,

    இதற்கிடையே, இன்று மாலை உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மனோகர் பாரிக்கர் சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இந்நிலையில், முன்னாள் ராணுவ அமைச்சரும் கோவா முதல் மந்திரியுமான மனோகர் பாரிக்கர் மறைவுக்கு மத்திய அமைச்சரவை சார்பில் நாளை காலை 11 மணியளவில் இரங்கல் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
     
    மேலும், மனோகர் பாரிக்கர் மறைவையொட்டி நாளை துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்றும், தேசிய தலைநகரம் மற்றும் மாநில தலைநகரங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
    பிஜு ஜனதா தளம் எம்பி லாடு கிஷோர் ஸ்வெயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #BudgetSession #Budget2019
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அதன்பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டது. மறுநாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. திங்கட்கிழமையில் இருந்து ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று காலை பாராளுமன்றம் கூடியது. அப்போது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஜு ஜனதா தளம் எம்பி லாடு கிஷோர் ஸ்வெயின் (வயது 71) மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.



    ஒடிசா மாநிலம் அஸ்கா தொகுதி எம்பியான லாடு கிஷோர் ஸ்வெயின், ஒடிசா சட்டசபை உறுப்பினராக 2004 முதல் 2009 வரை பணியாற்றினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஓபிசி விவகாரங்களுக்கான பாராளுமன்ற குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

    மக்களவையில் இன்று விவாதம் நடைபெறாததால், நாளை நடைபெற உள்ள கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது தொடர்ந்து விவாதம் நடைபெறும் என தெரிகிறது. விவாதத்திற்கு பிறகு பிரதமர் மோடி பதிலளித்து உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  #BudgetSession #Budget2019
    கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி(111) இன்று காலமானார். அவரது மறைவுக்கு 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. #ShreeShivakumaraSwamiji #Siddagangaseer
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம், துமக்கூரு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சித்தகங்கா மடத்தின் ஜீயராக உள்ளவர் சிவகுமார சுவாமி. இவர் கடந்த 1941-ம் ஆண்டில் இருந்து துமக்கூரு சித்தகங்கா மடத்தின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

    மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் பட்டத்துடன் ‘நடமாடும் தெய்வம்’ என அவரது பக்தர்களால் அழைக்கப்படும் சிவகுமார சுவாமியின் தன்னலமற்ற தொண்டினை சிறப்பிக்குமாறு அவருக்கு நாட்டின் மிக உயரிய ‘பாரத ரத்னா’ விருது அளிக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா பரிந்துரைத்திருந்தார்.

    சிறுநீரகம் சார்ந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சிவகுமார சுவாமிஜி கடந்த ஆண்டு பெங்களூரு நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மடத்துக்கு திரும்பினார்.

    இந்நிலையில், நேற்றிரவு வயோதிகம்சார்ந்த பிரச்சனைகளால் அவரது உடல்நிலையில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவக் குழுவினர் அவரை கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி  இன்று காலை 11.40 மணியளவில் தனது 111-வது வயதில் காலமானார்.

    அவரது மரணம் தொடர்பான தகவல் வெளியானதும் சித்தகங்கா மடத்துக்கு சென்று கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல் மந்திரிகள் சதானந்தா கவுடா, எடியூரப்பா ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.


    நாளை மாலை 4.30 மணியளவில் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் அவரது மறைவுக்கு கர்நாடக மாநில அரசின் சார்பில் மூன்றுநாள் துக்கம் அனுசரிக்கப்படும். பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படும் என முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    கடந்த 2007-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கர்நாடக மாநிலத்துக்கு வந்திருந்தபோது துமக்கூருக்கு சென்று மடாதிபதி சிவகுமார சுவாமியை சந்தித்தது நினைவிருக்கலாம்.

    ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். #ShreeShivakumaraSwamiji #Siddagangaseer
    புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் இன்று காலமானார். #Prabhanjan
    கடலூர்:

    புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன். இவர் 100-க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.

    கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மதகடிப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 மாதகாலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மதகடிப்பட்டில் உள்ள அதே தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரபஞ்சன் இன்று காலமானார்.

    எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருது பெற்றுள்ளார்.  மேலும் தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதையும் பெற்றுள்ளார். இவருக்கு வயது 73. அவரது மறைவுக்கு தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  #Prabhanjan 
    அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யு புஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். #GeorgeHWBush #PMModi
    புதுடெல்லி:

    அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யு புஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். மறைந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவுடன் இருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில் குறிப்பிடுகையில், ‘ஜார்ஜ் புஷ் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்க மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உலகத்தில் முக்கியமான காலக்கட்டத்தில் அவர் சிறந்த தலைவராக செயல்பட்டார்’ என்று அதில் குறிப்பிட்டு உள்ளார். #GeorgeHWBush #PMModi
    வெற்றிப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களுள் ஒருவரான ராபர்ட் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். #Robert #RIPRobert
    ‘பாலைவனச் சோலை’, ‘மனசுக்குள் மத்தாப்பு’ ஆகிய படங்களை இயக்கியவர்கள் இரட்டை இயக்குனர்களான ராபர்ட் ராஜசேகர்.   இவர்கள் இயக்கிய படங்கள் 1980-களில் வெளியாகி வெற்றி பெற்றன. ‘ஒரு தலை ராகம்‘ படத்தை இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். பின்னர் இருவரும் பிரிந்து தனித்தனியாக படங்கள் இயக்கினார்கள்.

    அவை சரியாக போகவில்லை. இந்த இரட்டை இயக்குனர்களில் ராஜசேகர் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். இன்னொருவரான ராபர்ட் கொளத்தூரில் வசித்து வந்தார். உடல்நலக்குறைவால் பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை 10 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 68. #Robert #RIPRobert

    புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சென்னையில் இன்று அவரது இல்லத்தில் காலமானார். #IravathamMahadevan
    சென்னை:

    சென்னையில் ஆதம்பாக்கத்தில் வசித்து வந்தவர் புகழ் பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் (வயது 88). கல்வெட்டுக்கள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். சிந்துவெளி ஆய்வு குறித்த இவரது கட்டுரை மிகுந்த பாராட்டை பெற்றது. 2009ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

    கடந்த சில மாதங்களாக முதுமை சார்ந்த உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஐராவதம் மகாதேவன் இன்று அதிகாலை தனது இல்லத்தில் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

    திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்த இவர்  கடந்த 1987 முதல் 1991 வரை தினமணி பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. #IravathamMahadevan
    ஹாலிவுட்டில் பிரம்மாண்ட படங்களின் பிரபல காமிக்ஸ் கதாபாத்திரங்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ உடல்நலக்குறைவால் காலமானார். #StanLee #StanLeeRIP #StanLeeForever
    ஹாலிவுட்டில் பல சூப்பர் ஹீரோக்களின் வடிவங்களை உருவாக்கிய பிரபல காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ (95) உடல்நலக்குறைவால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று காலமானார். 

    மார்வெல், டிசி காமிக்ஸ்ஸின் பல்வேறு கதாபாத்திரங்களை உருவாக்கியவர் ஸ்டான் லீ என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகின் பிரபலமான ஸ்பைடர் மேன், அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர், பென்டாஸ்டிக் ஃபோர், எக்ஸ் மேன் உள்ளிட்ட மார்வெல்லின் பல காமிக்ஸ் கதாபாத்திரங்களையும், சூப்பர் மேன், அக்குவா மேன், பேட்மேன், சான்ட்மேன், ஒன்டர்வுமன் உள்ளிட்ட டிசி காமிக்ஸ்ஸின் பல்வேறு கதாபாத்திரங்களையும் இவர் உருவாக்கியிருக்கிறார்.



    மேலும் மார்வெல் உருவாக்கத்தின் பிரம்மாண்ட படைப்புகளிர் சிறப்பு தோற்றங்களில் நடித்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். 1961-ல் ஜேக் கெர்பியுடன் இணைந்து இவர் மார்வெல் நிறுவனத்தை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. #StanLee #StanLeeRIP #StanLeeForever 

    பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு மறைவுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். #KaduvettiGurudeath #VaikoMourning
    சென்னை:

    காடுவெட்டி குரு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    வன்னியர் சங்கத் தலைவராகவும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியத் தளகர்த்தராகவும திகழ்ந்த காடுவெட்டி குரு, சமூகநீதி காக்கும் போராளியாக வாழ்ந்தவர்; அரசியல் எல்லைகளைக் கடந்து என்னிடம் நட்பு பாராட்டிப் பழகியவர். அவர் உடல் நலம் இன்றி அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதைக் கேள்விப்பட்ட உடனேயே, அங்கே சென்று சந்தித்தேன். அவருக்குச் சிகிச்சை தந்த மருத்துவர்களையும் சந்தித்து, அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொல்லி வந்தேன்.

    இன்னும் பல ஆண்டு காலம் வாழ வேண்டிய சகோதரர் காடுவெட்டி குரு மறைவினால், துயரத்தில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு, பா.ம.க. தோழர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.  #KaduvettiGurudeath #VaikoMourning
    ×