search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியர்"

    குண்டு வெடிப்பு சம்பவங்களை கருத்தில் கொண்டு இந்தியர்கள் அத்தியாவசிய தேவையின்றி இலங்கை செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. #SriLankablasts #Easterblasts #colomboblasts #SriLankablaststoll
    புதுடெல்லி:

    இலங்கையில் கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் இதுவரை 253 பேர் பலியாகி உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.

    இலங்கை ராணுவமும், போலீஸ் படைகளும் பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இலங்கையில் கடந்த 21-ந் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையும், இரவு நேர ஊரடங்கு உத்தரவும், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இலங்கைக்கு பயணம் செய்வதை பாதிப்பதாக உள்ளது. எனவே அங்கு தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு இந்தியர்கள் அத்தியாவசிய தேவையில்லாமல் இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    இலங்கைக்கு அத்தியாவசிய தேவைக்காகவும், அவசரம் கருதியும் பயணம் செய்யும் இந்தியர்கள் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம், கண்டியில் உள்ள இந்திய துணை தூதரகம் மற்றும் ஹம்பன்தோட்டா, யாழ்ப்பாணம் தூதரக அதிகாரிகளை எந்த உதவிக்கும் தொடர்புகொள்ளலாம்.

    இந்திய தூதரகங்களின் தொலைபேசி எண்களை இந்திய வெளியுறவுத்துறையின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #SriLankablasts #Easterblasts #colomboblasts #SriLankablaststoll
    அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் பணியாற்ற 3 இந்திய வம்சாவளிகளை தேர்வு செய்துள்ளார். #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் பணியாற்ற 3 இந்திய வம்சாவளிகளை தேர்வு செய்துள்ளார். அவர்கள், ரீட்டா பரன்வால், ஆதித்யா பம்சாய், பீமல் பட்டேல் ஆவார்கள்.

    இவர்களில் ரீட்டா பரன்வால், எரிசக்தித்துறை (அணுசக்தி) உதவி செயலாளராகவும், ஆதித்யா பம்சாய் தனிஉரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினராகவும், பீமல் பட்டேல் நிதித்துறை உதவி செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களின் தேர்வு குறித்து அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபைக்கு ஜனாதிபதி டிரம்ப் எழுதி உள்ளார். அந்த சபை, இவர்களின் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    செனட் சபையில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால், அதன் ஒப்புதல் கிடைப்பதில் பிரச்சினை இல்லை. இந்த ஒப்புதல் கிடைத்து விட்டதால், ரீட்டா பரன்வால் செல்வாக்கு மிகுந்த எரிசக்தித்துறைக்கு (அணுசக்தி) தலைமை பொறுப்பு ஏற்பார். இந்த துறைதான் அணுசக்தி தொழில் நுட்ப ஆராய்ச்சி, வளர்ச்சி, நிர்வாகம் என அனைத்தையும் கவனிப்பது குறிப்பிடத்தக்கது.

    டிரம்ப் நிர்வாகத்தில் கேபினட் மந்திரி அந்தஸ்தில் ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதராக பதவி வகித்த இந்திய வம்சாவளி நிக்கி ஹாலியும், வாஷிங்டன் வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளர் ராஜ் ஷாவும் சமீபத்தில் பதவி விலகியது நினைவுகூரத்தக்கது. 
    ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் ‘வொர்க் பிளேஸ்’ என்னும் நிறுவன தகவல்தொடர்பு பிரிவின் தலைவராக கரன்தீப் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். #Facebook #KarandeepAnand
    நியூயார்க்:

    ‘பேஸ்புக்’ நிறுவனத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்து அதிகாரியாக உள்ளவர் கரன்தீப் ஆனந்த் இந்தியர். இவர் 15 ஆண்டுகள் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தில் பணியாற்றி விட்டு, ‘பேஸ்புக்’ நிறுவனத்தில் சேர்ந்தவர் ஆவார். இவர் ‘பேஸ்புக்’ நிறுவனத்தில் மார்க்கெட் பிளேஸ், ஆடியன்ஸ் நெட்வொர்க், ஆட் சொல்யூசன்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றியவர்.

    இந்த நிலையில் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் ‘வொர்க் பிளேஸ்’ என்னும் நிறுவன தகவல்தொடர்பு பிரிவின் தலைவர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சாப்ட்வேர் என்னும் மென்பொருள் தயாரிப்பாளர்கள், என்ஜினீயர்கள், ஆராய்ச்சியாளர்கள், தரவு (டேட்டா) என்ஜினீயர்கள் அடங்கிய குழுவுக்கு தலைமை வகிப்பார். ‘வொர்க் பிளேஸ்’ தகவல் தொடர்பு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு கரன் தீப் ஆனந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “உலகமெங்கும் உள்ள நிறுவனங்களுக்கு வொர்க்பிளேஸ்சை கொண்டு செல்வதில் நான் ஒரு அங்கமாக இருக்கப்போகிறேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என கூறி உள்ளார்.

    கரன்தீப் ஆனந்த் வொர்க்பிளேஸ் பிரிவில் தலைமை ஏற்பது குறித்து அதன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “கரன்தீப் வொர்க்பிளேஸ் தலைமை பதவிக்கு வருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். அவர் நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் பின்னணியில் மிகுந்த அனுபவம் பெற்றிருப்பவர். அவர் எங்களுடன் சேர்வது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” என குறிப்பிட்டார். #Facebook #KarandeepAnand
    அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்தபோது பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இந்திய பொறியாளருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #IndianTechie #USCourt
    வாஷிங்டன்:

    இந்தியாவை சேர்ந்த பிரபு ராமமூர்த்தி, அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவில் தற்காலிக விசாவில் வசித்து வருகின்றனர். ராமமூர்த்தி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் புராஜெக்ட் மானேஜராக வேலை பார்த்து வருகிறார்.

    பிரபு ராமமூர்த்தி கடந்த ஜனவரி மாதம் லாஸ் வேகாசில் இருந்து டெட்ராய்டுக்கு ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றபோது தனதருகில் இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த பெண், விமான ஊழியர்களிடம் புகார் செய்தார். பின்னர் விமானம் தரையிறங்கியதும் பிரபு  ராமமூர்த்தி கைது செய்யப்பட்டார்.

    அவர் மீது டெட்ராய்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்த நிலையில், ராமமூர்த்தியை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. அதன்பின்னர் அவருக்கான தண்டனை தொடர்பான வாதம் நடைபெற்றது. இந்த வாதம் நிறைவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அப்போது, விமானத்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட பிரபு ராமமூர்த்திக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அவரது தண்டனைக் காலம் முடிவடைந்ததும் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்தவேண்டும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். #IndianTechie #USCourt

    கலிபோர்னியாவில் உள்ள யோசெமைட் தேசிய பூங்காவில் ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயன்ற இந்திய தம்பதி, தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். #California #YosemiteNationalPark #SelfieKills
    நியூயார்க்:

    உலக அளவில் செல்பி மோகத்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. செல்பியால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன்மீதான மோகத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பலரும் விளக்கி வந்தாலும் பலரும் அதன் ஆபத்தை உணரவில்லை. செல்பியின் மோகத்தினால், இந்திய தம்பதி தங்கள் உயிரையே பறிகொடுத்துள்ளனர்.

    அமெரிக்காவில் வாழும் இந்திய தம்பதிகளான விஷ்ணு விஷ்வநாத், மீனாட்சி மூர்த்தி பலதரப்பட்ட சுற்றுலாத்தளங்களுக்கும் சென்று தங்களது அனுபவங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக யோசெமைட் தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்று மலைப்பகுதியின் முகடில் ஆபத்தான நிலையில், செல்பி எடுத்துள்ளனர்.


    அப்போது எதிர்ப்பாராத விதமாக 800 அடி பள்ளத்தாக்கில் இருவரும் விழுந்து உயிரிழந்துள்ளனர். அந்த சுற்றுலா தளத்தில் தடுப்புகள் ஏதும் இல்லை என்பதும் இவர்களின் மரணத்துக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களது உடல்களை மீட்ட மீட்புக்குழுவினர், மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #California #YosemiteNationalPark #SelfieKills

    ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியருக்கு அபுதாபி ‘பிக் டிக்கெட்’ லாட்டரியில் ரூ.23 கோடி பரிசு தொகை கிடைத்துள்ளது. #UAElottery
    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியில் ‘பிக் டிக்கெட்’ லாட்டரி குலுக்கல் நடந்தது. அதில் இந்தியாவை சேர்ந்த ஜார்ஜ் மாத்யூ என்பவருக்கு முதல் பரிசுத்தொகையான 12 மில்லியன் திர்காம் கிடைத்தது.

    இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.23 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜார்க்மாத்யூ வாங்கிய 175342 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு இந்த பரிசுதொகை கிடைத்துள்ளது.

    இந்த லாட்டரியில் மேலும் 6 இந்தியர்களுக்கும் பரிசுதொகை விழுந்துள்ளது. அண்மை காலமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் பல இந்தியர்களுக்கு லாட்டரியில் பரிசுகள் கிடைத்து உள்ளன.

    கேரளாவை சேர்ந்த தாடுஜா மாத்யூவுக்கு கடந்த ஜுலையில் முதல் பரிசு தொகையான ரூ.13 கோடியே 65 லட்சம் கிடைத்தது. அதற்கு முன்பு ஏப்ரலில் துபாயில் வசிக்கும் இந்திய டிரைவருக்கு ரூ.23 கோடி முதல் பரிசு விழுந்தது.

    கடந்த ஜனவரியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் கேரளாவை சேர்ந்த மற்றொருவருக்கு அபுதாபி லாட்டரியில் ரூ.23 கோடி பரிசு தொகை கிடைத்தது. #UAElottery
    ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்கொலை செய்து கொண்ட இந்தியரின் உடல் 4 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. #UAE
    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் யூசுப் கான் ரஷித் கான் என்பவர் தான் தங்கியிருந்த இடத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை அறிந்த அப்பகுதி போலீசார் அவரது உடலை மீட்டு, அவரது உறவினர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    இறந்த யூசுப் கானின் உடலை பெற யாரும் முன்வராததால், அங்கு உள்ள இந்தியர்களின் சங்கத்தின் உதவியை போலீசார் நாடியுள்ளனர். யூசுப் கானின் விசாவில் இருந்த இந்திய முகவரி மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் அவரது உறவினர்கள் இல்லை. இதனால், 4 மாதங்களாக பிண அறையில் இறந்தவரின் உடல் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில், அவரது பாஸ்போர்ட்டை வைத்து ஆராய்ந்ததில், யூசுப் கானின் உறவினர்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவரது மரணம் குறித்து தகவல் அளிக்கப்பட்டனர். இந்த தகவலை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான பணம் எங்களிடம் இல்லை எனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து, அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முழு செலவையும் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரூப் சித்து ஏற்றுக்கொண்ட நிலையில், இறந்தவரின் உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. #UAE
    அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப கம்பெனிகளில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய இந்தியர், ‘எச்1-பி’ விசா மோசடியில் கைது செய்யப்பட்டார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு ‘எச்1-பி’ விசா வழங்கப்படுகிறது. அதை பெறுவதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன.

    அதில் முறைகேடு செய்து ஊழியர்களை பணியில் நியமித்ததாக பிரதியும்னா குமார் காமல் (49) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க குடியுரிமை துறை வழக்குப்பதிவு செய்து இருந்தது.

    இந்த நிலையில் அவர் சீட்டில் விமானநிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அமெரிக்காவை விட்டு வெளியேறவிடாமல் இவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியரான இவர் அமெரிக்காவில் 2 தகவல் தொழில்நுட்ப கம்பெனிகளில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிகிறார். 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ‘எச்பி-1’ விசா மோசடி மூலம் அமெரிக்காவில் பணிபுரிவதாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கனடாவில் காரை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் இந்தியர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது இணையதளத்தில் செய்தியாக வெளிவந்தது.
    டொராண்டோ:

    இந்தியாவில் இருந்து 7 ஆண்டுகளுக்கு முன்பாக கனடா சென்று குடியேறியவர், ராகுல்குமார். அங்கு மனித வள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றிக்கொண்டு, எட்மண்டன் என்ற இடத்தில் வசித்து வருகிறார்.

    ஏஞ்சலிக் என்ற வெள்ளைக்காரப் பெண், ராகுல் குமார் வீட்டு வளாகத்தில் உள்ள தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்கு காரில் சென்றார். அப்போது காரை எங்கு நிறுத்துவது என்பதில், அவருக்கும், ராகுல் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    அந்த வெள்ளைக்காரப்பெண் நிதானம் இழந்து இனவெறி பிடித்தவராக ராகுல் குமாரை கண்டபடி திட்டினார். உடனே அதை ராகுல்குமார் செல்போனில் படம் பிடித்தார். அது அந்தப் பெண்ணுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    ராகுல் குமாரை நோக்கி, “நீ எப்படி வேண்டுமானாலும் படம் பிடித்துக்கொள் பக்கி... பக்கி, நீ உன் நாட்டுக்கு போய் விடு” என்று கூறினார். கடைசியில் ராகுல் குமார் கார் மீது அந்தப் பெண் எச்சிலை உமிழ்ந்தார்.

    இந்த இனவெறி தாக்குதல், அங்கு சி.டி.வி. செய்தி இணையதளத்தில் செய்தியாக வெளிவந்தது. வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதில் ராகுல் குமார், “இது போன்று எனக்கு ஒருபோதும் ஏற்பட்டது இல்லை. அந்தப்பெண் பேசிய வார்த்தைகளால் நான் அதிர்ந்து போய் விட்டேன்” என்று கூறி உள்ளார்.

    ஆனால் அந்தப் பெண்ணோ, தான் அப்படி நடந்து கொண்டதற்காக மனம் வருந்தவும் இல்லை. ராகுல் குமாரிடம் வருத்தம் தெரிவிக்கவும் தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் கனடா வாழ் இந்தியர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. 
    அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியான தனிஷ்க் என்ற 15 வயது சிறுவன் தனது இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு தற்போது பி.எச்.டி படிப்பை தொடங்க உள்ள நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. #US #India #TanishqAbraham
    நியூயார்க்:

    அமெரிக்காவில் வாழும் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் தனிஷ்க் ஆப்ரகாம். இவர் தனது 15 வயதில் உயிரிமருத்துவம் சார்ந்த இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு தற்போது பி.எச்.டி படிப்பை துவக்கியுள்ளார். இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தனிஷ்க், மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



    மேலும், 15 வயது சிறுவன் தனிஷ்க், தீவிபத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அவர்களை தொடாமல், அவர்களின் இதயத்துடிப்பை கண்டறியும் சாதனத்தையும் கண்டறிந்துள்ளார். மேலும், பல புதிய கண்டுபிடிப்புகளின் மீது ஆர்வம் கொண்ட தனிஷ்க், புற்றுநோய்க்கான புதிய சிகிச்சை முறை குறித்தும், நோயை சரிசெய்வதற்கான வழிமுறை குறித்தும் ஆராய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே கலிபோர்னியா பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனிஷ்க், அடுத்த 5 வருடங்களுக்குள் தனது எம்.டி படிப்பை துவங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். #US #India #TanishqAbraham
    சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் குறைந்து உள்ளதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிதி மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்தார். #SwissBank #IndianDeposit #PiyushGoyal
    புதுடெல்லி:

    மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு, கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி பதவிக்கு வந்தது. அந்த காலகட்டம் முதல் வெளிநாடுகளில் இந்திய கருப்பு பண முதலைகளால் பதுக்கிவைக்கப்பட்டு உள்ள கருப்பு பணத்தை இந்தியாவில் கொண்டு வந்து சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



    ஆனால் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 3 ஆண்டுகளாக குறைந்து வந்ததாகவும், கடந்த 2017-ம் ஆண்டில் கருப்பு பணத்துக்கு எதிரான மத்திய அரசின் கடும் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.7 ஆயிரம் கோடி) ஆகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது சுவிஸ் தேசிய வங்கியின் புள்ளிவிவரங்கள் என கூறப்பட்டது.

    இந்த புள்ளி விவரங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

    இது தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிதி மந்திரி பியூஸ் கோயல் நேற்று கேள்வி நேரத்தின்போது விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து உள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து சுவிஸ் அதிகாரிகளிடம் நான் விவாதித்தேன்.

    இதில், சுவிஸ் தேசிய வங்கியின் புள்ளிவிவரங்கள் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் தவறாக வழிநடத்துகிற தலைப்புகளுடன், ஆய்வுடன் வெளியிடப்படுகின்றன என்று சுவிஸ் அதிகாரிகள் கூறினர். இது தவறானது என்றும் சுவிஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்கிற கருப்பு பணத்தை பொறுத்தவரையில், மிகவும் நம்பத்தகுந்த தகவல்கள் என்றால், அவை சர்வதேச செட்டில்மென்டுகள் வங்கியின் (பிஐஎஸ்) உள்ளூர் வங்கியியல் புள்ளிவிவரம் தான் என்று சுவிஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    அதன்படி 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையில் கருப்பு பண பதுக்கல் 80 சதவீதம் குறைந்து உள்ளது.

    2013-ம் ஆண்டு கருப்பு பண டெபாசிட் 2.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.17,680 கோடி). 2014-ம் ஆண்டு இது 2.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.15,640 கோடி). 2015-ம் ஆண்டு இது 1.4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9,520 கோடி).

    கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் இது 34.5 சதவீதம் சரிவு கண்டு உள்ளது. 2016-ம் ஆண்டு கருப்பு பண டெபாசிட்டுகளின் அளவு 800 மில்லியன் டாலர் (சுமார் ரூ.5,440 கோடி) ஆகும். இது 2017-ல் 524 மில்லியன் டாலராக (சுமார் ரூ.3,563 கோடி) குறைந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே பியூஸ் கோயல் பேட்டி அளித்தார். அப்போது சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் அதிகரித்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், ஆதாரம் இல்லாத தகவல்களின் அடிப்படையில் இப்படிப்பட்ட கருத்தை கூறி நாட்டுக்கு அவதூறு ஏற்படுத்துவது பற்றி ராகுல் காந்திதான் நாட்டுக்கு பதில் கூற வேண்டும்.

    அவர் உண்மைகளை அறிந்து கொள்ளாமலேயே இப்படி சொல்வதை வழக்கமாக்கி கொண்டு உள்ளார்.

    சுவிஸ் அதிகாரிகள் தந்த தகவல்கள்படி, 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017-ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண டெபாசிட்டுகள் 34.5 சதவீதம் குறைந்து உள்ளது. 2017-ம் ஆண்டின் கடைசி காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர் 2017) 44 சதவீதம் குறைந்து உள்ளது. இது சர்வதேச செட்டில்மென்டுகள் வங்கியின் (பிஐஎஸ்) உள்ளூர் வங்கியியல் புள்ளிவிவரம் ஆகும்.

    இது மத்தியில் அமைந்து உள்ள மோடி அரசின் மீது மக்கள் கொண்டு உள்ள அச்சத்தை பிரதிபலிக்கிறது. கருப்பு பணம் பதுக்குகிறவர்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SwissBank #IndianDeposit #PiyushGoyal #Tamilnews
    கனடாவில் லாரி ஓட்டுனராக பணிபுரியும் இந்தியர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஒட்டாவா:

    2009-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து கனடாவுக்கு சென்றவர் பல்விந்தர் சிங். இவர் அங்கு லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், பல்விந்தர் சிங் வீட்டில் இருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.

    தகவல் அறிந்த காவல்துறையினர் பல்விந்தர் சிங்கின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, 2 வாலிபர்கள் தாமாக முன்வந்து  சரணடந்தனர்.

    ஆனால், கொலை செய்துவிட்டு 3-க்கும் மேற்பட்டவர்கள் ஓடியதாக கொலை சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறியுள்ளார்.

    கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் மட்டும் இந்த ஆண்டுக்குள் 11 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×