search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியர்"

    நகம் வளர்ப்பதில் கின்னஸ் சாதனை படைத்த இந்தியர் 66 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக அமெரிக்காவில் இன்று நகம் வெட்டுகிறார். #ShridharChillal
    நியூயார்க்:

    மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால். தற்போது 88 வயதாகும் ஸ்ரீதர், கடந்த 1952-ம் ஆண்டுமுதல் தனது இடது கையில் நகத்தை வெட்டாமல், நீளமாக வளர்க்க ஆரம்பித்தார்.

    இதன் விளைவாக கடந்த 66 ஆண்டுகளில் அவரது இடது கையில் உள்ள ஐந்து விரல்களிலும் வளர்ச்சி அடைந்துள்ள நகங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி தற்போது 909.6 செண்டிமீட்டர்களாக உள்ளது. இதில் அவரது இடது கை கட்டை விரலில் உள்ள நகத்தின் வளர்ச்சி மட்டும் 197.8 செண்டிமீட்டர் ஆகும்.

    உலகிலேயே ஒரு கையில் மிக நீளமான நகத்தை கொண்டவர் என்ற முறையில் கடந்த 2016-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஸ்ரீதர் சில்லால் இடம்பிடித்தார்.


    இந்நிலையில், 66 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஸ்ரீதர் அமெரிக்காவில் இன்று தனது கை நகங்களை வெட்டுகிறார்.

    அமெரிக்காவின் பிரபலமான ‘ரிப்லி’ஸ் பிலிவ் இட் ஆர் நாட்’ ( Ripley's Believe It or Not!) என்னும் தொலைக்காட்சி தொடர் உலகில் அதிசயமான செயல்கள் மற்றும் சாதனைகள் புரிந்தவர்களின் பதிவுகளை ஒளிபரப்பி வருகிறது.

    ’நம்பினால் நம்புங்கள்’ என்னும் பொருள்படும் இந்த தொடருக்கான நிகழ்ச்சிகளை தயாரிக்கும் அலுவலகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் ஆச்சரியப்பட வைக்கும் அரியப் பொருட்களை சேமித்து  வைக்கும் அருங்காட்சியகமும் உண்டு.

    ஆசையாசையாக கடந்த 66 ஆண்டுகளாக பேணிப் பராமரித்து, பாதுகாத்து வளர்த்த நகத்தை இந்த அருங்காட்சியகத்தில் நிரந்தரமாக வைத்து அழகுபார்க்க விரும்பிய ஸ்ரீதர், சமீபத்தில் இதற்கான அனுமதியை ‘ரிப்லி’ஸ் பிலிவ் இட் ஆர் நாட்’ நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் பெற்றார்.

    இதையடுத்து, இந்தியாவில் இருந்து விமானம் மூலம் நியூயார்க் நகரை வந்தடைந்துள்ள ஸ்ரீதர் சில்லால், இன்று (புதன்கிழமை) பல கேமராக்கள் முன்னிலையில் தனது 66 ஆண்டு ‘நகதவத்தை’ துறக்கிறார். #ShridharChillal #longestfingernails #GuinnessRecord #Ripley'sBelieveItorNot
    அபுதாபியில் இருந்து வரும்போது விமான நிலையத்தில் இந்தியர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 13 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது. #TojoMathew #UAEraffledraw
    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் சூப்பர்வைசராக பணியாற்றிவந்த இந்தியர் டோஜோ மேத்யூ(30). கேரள மாநிலத்தை சேர்ந்தவரான இவரது மனைவிக்கு சமீபத்தில் டெல்லியில் நர்சு வேலை கிடைத்தது.

    மனைவியை சந்திப்பதற்காக கடந்த மாதம் 24-ம் தேதி இந்தியா புறப்பட்ட டோஜோ மேத்யூ, அபுதாபி விமான நிலையத்தில் அந்நாட்டு அரசு நடத்தி வரும் மாதாந்திர ‘பிக் லாட்டரி’ பரிசு சீட்டை வாங்கினார்.

    இந்தியா வந்து சேர்ந்த பின்னர் ‘பிக் லாட்டரி’ இணையதளத்தை பார்வையிட்டபோது, நேற்று நடைபெற்ற குலுக்கலில் முதல் பரிசான 70 லட்சம் திர்ஹம்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 13 கோடி ரூபாய்) தனக்கு கிடைத்துள்ளதை அறிந்து டோஜோ மேத்யூ, ஆனந்தத்தில் திக்குமுக்காடிப் போனார்.

    இவரைத்தவிர, 5 இந்தியர்கள் உள்பட 9 அதிர்ஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசாக  தலா ஒரு லட்சம் திர்ஹம்கள் கிடைத்துள்ளது.



    முன்னதாக, அபுதாபி லாட்டரி குலுக்கல் வரலாற்றில் முதன்முறையாக கடந்த ஜனவரி மாதம் கேரளாவை சேர்ந்தவர் 1.2 கோடி திர்ஹம்களை ஜாக்பாட் பரிசாக பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.

    தற்போது கிடைத்துள்ள பரிசு தொகையின் மூலம் கேரளாவில் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்னும் தனது நெடுங்கால கனவு பலித்துள்ளதாக டோஜோ மேத்யூ தெரிவித்துள்ளார். #TojoMathew  #UAEraffledraw
    அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி வகித்த அந்தோணி கென்னடி ஓய்வு பெறுவதையடுத்து, அவருடைய இடத்துக்கு புதிய நீதிபதியை நியமிக்கும் பணியில் டிரம்ப் தீவிரமாக இறங்கி உள்ளார். #Justice #AnthonyKennedy
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி வகித்து வருபவர் அந்தோணி கென்னடி (வயது 81). இவர் அடுத்தமாதம் (ஜூலை) 31-ந் தேதி, தான் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.

    இது தொடர்பாக அவர் ஜனாதிபதி டிரம்பை, வெள்ளை மாளிகையில் சந்தித்து தன்னுடைய முடிவை தெரிவித்தார். அந்தோணி கென்னடி ஓய்வு பெறுவதையடுத்து, அவருடைய இடத்துக்கு புதிய நீதிபதியை நியமிக்கும் பணியில் டிரம்ப் தீவிரமாக இறங்கி உள்ளார்.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு, 25 நீதிபதிகளின் பெயர்களை டிரம்ப் பட்டியலிட்டு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன. இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீதிபதி அமுல் தாபர் பெயரும் இடம்பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.

    அமுல் தாபர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் 6-வது மேல்முறையீட்டு கோர்ட்டின் நீதிபதியாக டிரம்பால் நியமனம் செய்யப்பட்டவர் ஆவார். அதன் மூலம் அமெரிக்காவில் மேல்முறையீட்டு கோர்ட்டின் நீதிபதியான முதல் தெற்கு ஆசிய வம்சாவளி என்கிற பெயரை அவர் பெற்றார்.

    இந்தியாவில் இருந்து சென்று அமெரிக்காவில் குடியேறிய தம்பதியின் மகனான அமுல் தாபர், 1991-ம் ஆண்டு பாஸ்டன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பை முடித்தார். இவர் கென்டக்கி மாகாணத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டில் வக்கீலாகவும், நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளார்.

    கடந்த ஆண்டு அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் காலியாக இருந்த நீதிபதி பதவிக்கு அமுல் தாபர் பெயர் பரிசீலிக்கப்பட்டதும், இதற்காக டிரம்ப் அவரிடம் நேர்காணல் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.  #Justice #AnthonyKennedy #tamilnews
    துபாயில் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் விற்கப்படும் பிரசித்தி பெற்ற பிக் டிக்கெட் அபுதாபி என்ற லாட்டரியில் இந்தியர் ஒருவர் 18 கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார்.
    அபுதாபி:

    அபுதாபியின் சர்வதேச விமானநிலையத்தில் பல காலமாக விற்கப்படும் பிரசித்தி பெற்ற லாட்டரியாக பிக் டிக்கெட் அபுதாபி திகழ்ந்து வருகிறது.

    சமீபத்தில், பிக் டிக்கெட் அபுதாபி வெளியிட்ட 10 அதிஷ்டசாலிகள் பட்டியலில் 5 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக நைஜீரியாவில் வாழும் இந்தியரான திக்சன் கட்டிதாரா ஆபிரகாம் என்பவருக்கு 10 மில்லியன் திர்காம் பரிசு அறிவிக்கப்பட்டது.

    இது இந்திய ரூபாய் மதிப்பில் 18 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதலே பிக் டிக்கெட் அபுதாபி லாட்டரியில் இந்தியர்கள் அதிக அளவில் பரிசு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    உத்தரகாண்ட் மாநிலத்தில், பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்ட இந்தியர் கைது செய்யப்பட்டார். அவர் இந்திய தூதரக அதிகாரி வீட்டில் வேலை செய்து கொண்டு உளவு வேலை பார்த்தது அம்பலத்துக்கு வந்து உள்ளது. #Pakistan #Spy #IndianCookHelped
    லக்னோ:

    உத்தரகாண்ட் மாநிலம், பித்தோரகார் பகுதியில் உள்ள திதிஹாட் என்ற இடத்தை சேர்ந்தவர், ரமேஷ் சிங் கன்யால். இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் தனது சகோதரர் மூலமாக பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவரது வீட்டில் சமையல்காரராக வேலைக்கு சேர்ந்தார்.

    2015-17-ம் ஆண்டுகளில் அங்கு வேலை செய்த அவர், பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ.யின் ஏஜெண்டாக இருந்து, உளவு வேலை பார்த்தது அம்பலத்துக்கு வந்து உள்ளது.

    குறிப்பாக இந்திய தூதரக அதிகாரியின் வீட்டை வேவு பார்த்து உள்ளார், அவரது ‘லேப்-டாப்’பில் இருந்து ரகசிய தகவல்களை திருடி உள்ளார், தொலைபேசியை ஒட்டு கேட்டு உள்ளார். பின்னர் அந்த தகவல்களை ஐ.எஸ்.ஐ.யிடம் கொடுத்து பணம் பெற்று உள்ளார்.

    அங்கு இருந்து பின்னர் சொந்த ஊருக்கு திரும்பிய பிறகும் அவர் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டாக செயல்பட்டு வந்து உள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள ராணுவ தளங்கள் பற்றிய ரகசிய தகவல்களை சேகரித்து உள்ளார். இதற்காக அவருக்கு ஐ.எஸ்.ஐ. ஒரு செல்போனை தந்து உள்ளது.

    இதையடுத்து அவர் மீது லக்னோ போலீஸ், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 121-ஏ (நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தல்), அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் பிரிவுகள் 3, 4, 5, 9 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    அதைத் தொடர்ந்து உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு போலீஸ் படையினர், உத்தரகாண்ட் போலீஸ் படை மற்றும் ராணுவ உளவு அமைப்பினர் கூட்டு நடவடிக்கையில், நேற்று முன்தினம் திதிஹாட்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பாகிஸ்தான் செல்போன் கைப்பற்றப்பட்டது. அவர் லக்னோவுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இதுகுறித்த தகவல்களை உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஆனந்த் குமார் நேற்று நிருபர்களிடம் வெளியிட்டார்.

    ரமேஷ் சிங் கன்யால், நிறைய கடன்கள் வாங்கி உள்ளதால் பணத்துக்கு ஆசைப்பட்டு, இந்த செயலில் ஈடுபட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், பணத்துக்காகத்தான் அவர் இப்படி உளவு வேலை பார்த்தாரா, வேறு ஏதாவது காரணங்கள் உண்டா என்பது அவரிடம் மேல் விசாரணை நடத்தினால் தெரிய வரும் எனவும் அவர் குறிப்பிட்டார். 
    ×