என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 110175
நீங்கள் தேடியது "லைலா"
என்கிட்ட எஸ்கேப் ஆன ஒரே ஹீரோ அவர்தான் என்று நடிகை லைலா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். #Laila #lailaMehdin
90-களின் பிரபல கதாநாயகிகள் சமீபத்தில் வித்தியாசமான வேடங்களில் ரீஎன்ட்ரி ஆகின்றனர். அந்த வரிசையில் லைலாவும், ஆலிஸ் என்ற படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார்.
தனது இணைய தள பக்கத்தில் விஜய்யுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட லைலா, ‘எங்கிட்ட எஸ்கேப் ஆன ஒரே ஹீரோ’ என்று அந்த படத்துக்கு கருத்து கொடுத்ததுடன், இது என்ன திரைப்படம் என்று கண்டுபிடியுங்கள் என சவாலும் விட்டிருந்தார்.
விஜய்யோடு லைலா நடிக்கவில்லையே அப்புறம் எப்படி இந்த படம் என்று பலரும் குழப்பிக்கொள்ள ஒரு சிலர் சரியாக கணித்தனர். விக்ரமன் இயக்கிய, ‘உன்னை நினைத்து’ படத்தில் முதலில் விஜய்தான் நடித்தார். பின்னர் அப்படத்திலிருந்து விலகினார். பிறகு அந்த வேடத்தில் சூர்யா நடித்தார். விஜய்யுடன் அப்படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தைத்தான் லைலா பகிர்ந்திருக்கிறார் என சிலர் பொருத்தமாக விடை கூறி லைலாவின் பாராட்டை பெற்றுள்ளனர்.
தீனா, தில் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த லைலா, விரைவில் புதிய அவதாரம் எடுக்க இருப்பதாக பேட்டியளித்திருக்கிறார். #Laila
கள்ளழகர் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை லைலா. பார்த்தேன் ரசித்தேன், தீனா, தில் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து தன் குழந்தைத்தனமான முகத்தினால் வசீகரித்தார். திருமணம் ஆகி சினிமாவில் இருந்து ஒதுங்கியவர் அளித்திருக்கும் பேட்டி வருமாறு:-
திருமணத்திற்குப் பிறகு ஏன் நடிக்க வில்லை?
எனக்கு நடிப்பதற்கு ஆர்வம் இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் சுவாரசியமான வேடமாக இல்லை. நான் இப்போது மிக கவனமாக தேர்ந்தெடுத்து நல்ல கதாபாத்திரங்களை மட்டுமே நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். இப்படித்தான் நடிப்பேன் என குறிப்பிட்டு சொல்ல முடியாது. வில்லி வேடமோ, நகைச்சுவை பாத்திரமோ, குணச்சித்திர வேடமோ எதுவாக இருந்தாலும் ரசிக்கும்படியாக இருக்க வேண்டும். அவ்வளவு தான். அதுபோன்ற கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறேன்.
நடிப்பு தவிர வேறு ஆர்வம் இல்லையா?
இருக்கிறது. இயக்குனராக ஆசை இருக்கிறது. ஏதாவது ஒரு விஷயம் என்னை ஈர்த்தால் அதனை கதையாக்கி படம் எடுக்க தொடங்குவேன். ஆனால் தயாரிப்பில் ஈடுபடும் எண்ணம் மட்டும் இல்லை.
தமிழ் சினிமா எப்படி இருக்கிறது?
நான் நடித்தபோது இருந்ததைவிட நல்ல ஆரோக்கியமானதாக இருக்கிறது. அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறது. பெண்களை மையப்படுத்தும் படங்கள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளன. இந்த மாற்றங்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
பெண்களை அச்சுறுத்தும் பாலியல் தொல்லைகள்?
இப்போது வரக்கூடிய செய்திகள் கேட்கவே பயங்கரமாக உள்ளன. இதுபோன்ற விஷயங்களுக்கு முடிவுகட்ட பெண்கள் களத்தில் இறங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எல்லா துறைகளிலும் பெண்கள் பாதிக்கப்படுவது வருத்தமளிக்கும் விஷயம். சினிமாத்துறை மட்டுமல்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல் என எல்லா இடங்களிலுமே இது நடக்கிறது. இது ஆண்களின் சுயலாபத்திற்காக பெண்களை பயன்படுத்திக் கொண்டதற்கு எதிராக பெண்கள் நிற்கும் காலம். ஒரு ஆண் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்தல் என்பது இழிவானது, மலிவானது.
எழுத்தாளராகி விட்டீர்களாமே?
ஆமாம், நண்பர் ஒருவருடன் இணைந்து புத்தகம் எழுதி வருகிறேன். அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளேன். பெண்களின் போராட்டம் தான் என் புத்தகத்தின் மையக்கரு. பல பெண்களின் போராட்டங்களை ஆராய்ச்சி செய்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன்.
வீட்டில் லைலா எப்படி?
இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருப்பதில் மகிழ்ச்சியான பெண்ணாக உணர்கிறேன். வீட்டு வேலைக்கு ஆள் வைக்காமல் நானே குழந்தைகளை பார்த்துக்கொள்கிறேன். இது ஒவ்வொரு அம்மாவின் கடமை. அதை சரியாக நிறைவேற்றி வருகிறேன்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X