என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 110194
நீங்கள் தேடியது "உத்தரபிரதேசம்"
உ.பி.யின் ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பண மதிப்பிழப்பு, கப்பார் சிங் வரியை நடைமுறைப்படுத்தியது முட்டாள்தனமான முடிவு என குற்றம்சாட்டினார். #LokSabhaElections2019 #Raebareli #Congress #RahulGandhi #SoniaGandhi #Modi
லக்னோ:
உத்தரபிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டில் உள்ள இளைஞர்களில் யாராவது ஒருவர், காவலாளி மோடி எனக்கு வேலை வாய்ப்பை தந்தார் என சொல்ல முடியுமா? காரணம், 45 ஆண்டில் இருந்ததை விட கடந்த 5 ஆண்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த 70 ஆண்டுகளில் பண மதிப்பிழப்பு மற்றும் கப்பார் சிங் வரியை நடைமுறைப்படுத்தும் முட்டாள்தனமான முடிவை எந்த அரசும் எடுத்தது கிடையாது. பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளாக நாட்டு மக்களிடம் தொடர்ந்து பொய்களை மட்டுமே பேசி வருகிறார்.
வேலைவாய்ப்பு, விவசாயிகள் பிரச்னை மற்றும் 15 லட்சம் ரூபாய் ஆகியவை குறித்து அவர் பேசுவதில்லை. தனக்கு எழுதி தருபவற்றை பிராம்டரை பார்த்து படிக்க மட்டும் செய்கிறார். எது பேச வேண்டும் என எழுதி தருவதை மட்டுமே படிக்கிறார். காலம் அதனை மாற்றும் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #Raebareli #Congress #RahulGandhi #SoniaGandhi #Modi
உத்தரபிரதேசத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ராகுல் காந்தியும், உ.பி. கிழக்கு பகுதி பொது செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்காவும் இணைந்து 18 பேரணிகளில் பங்கேற்கின்றனர் என அக்கட்சி அறிவித்துள்ளது. #LSpolls #Congress #RahulGandhi #PriyankaVadra
லக்னோ:
பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, கட்சியின் அகில இந்திய தலைவர்கள், முக்கிய தலைவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ராகுல் காந்தியும், பிரியங்காவும் இணைந்து 18 பேரணிகளில் பங்கேற்க உள்ளனர் என அக்கட்சி இன்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக 45 நாட்கள் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த தேர்தல் பிரசாரங்களில் கட்சியின் தலைவர் ராகுலும், பிரியங்காவும் 18 பேரணிகளில் ஒன்றாக பங்கேற்க உள்ளனர்.
சஹரான்பூர், காஜியாபாத், மீரட், பெரெய்லி, பதேபூர் சிக்ரி, அலிகார், லக்னோ, பாரபங்கி, அலகாபாத், கோரக்பூர், கான்பூர், வாரணாசி உள்ளிட்ட 18 பகுதிகளில் பேரணிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கும் பிலிபிட், கான்பூரில் நடக்கவுள்ள பேரணிகளில் கலந்து கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #LSpolls #Congress #RahulGandhi #PriyankaVadra
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X