search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைபிள்"

    அமெரிக்க நூலகத்தில் திருடப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான பைபிளை மத்திய புலனாய்வு போலீசார் நெதர்லாந்தில் மீட்டனர். #CarnegieLibrary #Bible
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிட்ஸ்பர்க் நகரில் கார்னிஜே என்ற புகழ்பெற்ற நூலகம் உள்ளது. இங்கு பழமைவாய்ந்த புத்தகங்களுடன், பழங்கால அரிய பொக்கிஷங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த 1990-ம் ஆண்டு இந்த நூலகத்தில் ஆவண காப்பாளராக பணியாற்றிய ஒருவரும், அவரது நண்பரும் இணைந்து 8 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.56 கோடியே 12 லட்சத்து 60 ஆயிரம்) மதிப்புடைய 300-க்கும் மேற்பட்ட அரிய பொக்கிஷங்களை திருடி சென்றனர். இதில் 404 ஆண்டுகள் பழமையான பைபிளும் ஒன்று.

    திருட்டு சம்பவம் நடந்த 26 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்காவின் மத்திய புலனாய்வு போலீசார் இந்த வழக்கை கையில் எடுத்தனர். திருடுபோன அரிய பொக்கிஷங்களை கண்டறிய விசாரணையை தீவிரப்படுத்தினர்.



    இந்த நிலையில், நெதர்லாந்தில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில், கார்னிஜே நூலகத்தில் இருந்து திருடப்பட்ட 404 ஆண்டுகள் பழமையான பைபிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 12 ஆயிரம் டாலர் (ரூ.8 லட்சத்து 42 ஆயிரம்) கொடுத்து, அந்த பைபிளை மீட்ட மத்திய புலனாய்வு போலீசார், அதனை கார்னிஜே நூலகத்தில் ஒப்படைத்தனர். #CarnegieLibrary #Bible
    ×