search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 110552"

    வோடபோன் இந்தியா நிறுவனம் இந்தியாவில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகையில் பயனர்களுக்கு 5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. #Vodafone



    வோடபோன் இந்தியா நிறுவனம் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. ரூ.139 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு வாய்ஸ் மற்றும் டேட்டா பலன்கள் வழங்கப்படுகிறது.

    புதிய ரூ.139 விலை சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரோமிங் அழைப்புகள், தேசிய ரோமிங்கின் போது அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஜி.பி. 2ஜி/3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் கூடுதல் டேட்டாவினை எம்.பி. ஒன்றுக்கு 50 பைசா கட்டணத்தில் பயன்படுத்தலாம்.

    டேட்டா தீர்ந்ததும் அதிவேக டவுன்லோடுகளுக்கு கூடுதல் டேட்டாவினை கட்டணம் செலுத்தி பயன்படுத்தலாம். இந்த சலுகை அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படும் நிலையில், இது தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.



    இதே விலையில் வோடபோன் பல்வேறு இதர சலுகைகளை வழங்குகிறது. இந்த சலுகைகளில் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதேபோன்று 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் சலுகைகள் ரூ.129 மற்றும் ரூ.169 விலையில் வழங்கப்படுகிறது.

    வோடபோன் ரூ.129 சலுகையில் 2 ஜி.பி. டேட்டாவும் ரூ.169 சலுகையில் 1 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்படுகிறது. சமீபத்தில் வோடபோன் ரூ.16 விலையில் பிரீபெயிட் சலுகை ஒன்றை அறிவித்தது. இச்சலுகையில் பயனர்களுக்கு 1 ஜி.பி. டேட்டா 24 மணி நேரத்திற்கு வழங்கப்படுகிறது. ரூ.16 வோடபோன் சலுகையில் எவ்வித வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். வழங்கப்படவில்லை.
    பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,575 வரையிலான கேஷ்பேக் வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #BSNL



    பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் சில போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ.4,575 வரை கேஷ்பேக் பெற முடியும். கேஷ்பேக் தொகையை பெற வாடிக்கையாளர்கள் ஆண்டு சந்தா சலுகைகளை தேர்வு செய்ய வேண்டும்.

    விலை உயர்ந்த முதல் மூன்று நிரந்தர மாதாந்திர ரீசார்ஜ்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 25 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குவதாகவும், மற்ற விலை குறைந்த போஸ்ட்பெயிட் சலுகைகளை தேர்வு செய்வோர் ஆண்டு சந்தா கட்டணம் செலுத்தும் போது 20 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுவதாக தெரிகிறது.

    ஆறு மாத சலுகைகளுக்கும் பி.எஸ்.என்.எல். கேஷ்பேக் வழங்குகிறது. எனினும் இதற்கான தொகை குறைவாகும். ரூ.1,525 விலையில் வருடாந்திர போஸ்ட்பெயிட் சலுகையை ஒருவர் தேர்வு செய்யும் போது ரூ.4,575 வரை கேஷ்பேக் பெற முடியும். மாதம் ரூ.1,525 மாதாந்திர சலுகைக்கான ஆண்டு சந்தா தொகை ரூ.18,300 முழுமையாக செலுத்தும் போது பயனர்களுக்கு ரூ.4,575 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    இதேபோன்று ரூ.1,125 மாதாந்திர சலுகையை தேர்வு செய்து ஆண்டு சந்தா தொகையை முழுமையாக செலுத்தும் போது ரூ.3,375 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி ரூ.799 போஸ்ட்பெயிட் சலுகையை தேர்வு செய்து ஆண்டு சந்தாவை முழுமையாக செலுத்தினாலும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.



    விலை குறைந்த ரூ.725 மற்றும் ரூ.525 மாதாந்திர சலுகைகளில் பி.எஸ்.என்.எல். 20 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குகிறது. பி.எஸ்.என்.எல். ரூ.399, ரூ.325 மற்றும் ரூ.225 போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கு 10 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஆண்டு சந்தா மட்டுமின்றி ஆறு மாதங்களுக்கான தொகையை செலுத்துவோருக்கும் பி.எஸ்.என்.எல். கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் ரூ.1,525 மாதாந்திர சலுகைக்கு ஆறு மாதங்களுக்கான தொகையை முழுமையாக செலுத்தும் போது 12 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனால் பயனர்களுக்கு ரூ.1,098 வரை கேஷ்பேக் கிடைக்கும். ரூ.1,125 மற்றும் ரூ.799 போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கு 12 சதவிகிதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

    பி.எஸ்.என்.எல். ரூ.725 மற்றும் ரூ.525 சலுகைகளை தேர்வு செய்வோருக்கு 8 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ.399, ரூ.325 மற்றும் ரூ.225 போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கு நான்கு சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    புதிய கேஷ்பேக் சலுகை முதற்கட்டமாக கேரளா வாடிக்கையார்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இச்சலுகை மற்ற வட்டாரங்களுக்கும் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு 25 சவிகிதம் கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டது.
    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த மாதத்தில் இந்த நிறுவனங்கள் தான் டாப் என தெரியவந்துள்ளது. #TRAI



    இந்திய டெலிகாம் சந்தையில் பிப்ரவரி 2019 மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் மட்டுமே புதிதாக வாடிக்கையாளர்களை சேர்த்திருப்பதாக மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிப்ரவரி 2019 வரையிலான காலக்கட்டத்தில் ஜியோ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 29.72 கோடியாக இருந்தது. இது ஜனவரியில் இருந்ததை விட 77.93 லட்சம் அதிகம் ஆகும். பி.எஸ்.என்.எல். நிறுவனம் இதே காலக்கட்டத்தில் 8.99 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக சேர்த்திருக்கிறது. அந்த வகையில் பி.எஸ்.என்.எல். பயன்படுத்துவோர் எண்ணிக்கை 11.62 கோடியாக இருக்கிறது.



    சமீபத்தில் ஜியோ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 30 கோடியை கடந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மொத்த வயர்லெஸ் சந்தாதாரர் எண்ணிக்கை 118.36 கோடியாக இருக்கிறது. பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் 57.87 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. அந்த வகையில் வோடபோன் ஐடியா பயனர் எண்ணிக்கை தற்சமயம் 40.93 கோடியாகும்.

    இதேபோன்று பாரதி ஏர்டெல் நிறுவனமும் 49,896 வாடிக்கையாளர்களை இழந்து, பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் 34.03 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் ஜியோ நியூஸ் செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த செயலியை 12-க்கும் அதிக மொழிகளில் பயன்படுத்தலாம். #JioNews



    இந்தியாவில் இணைய பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், நேரலை டி.வி., வீடியோக்கள், செய்திகளை பார்ப்போர் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

    செய்தி சேவையின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ நியூஸ் செயலியை துவங்கியிருக்கிறது. இது செயலி மற்றும் இணையம் என இருவிதங்களில் கிடைக்கிறது. 

    ஜியோ நியூஸ் சேவையில் உடனடி செய்திகள், நேரலை டி.வி., வீடியோக்கள், நாளேடு, பத்திரிகை உள்ளிட்டவற்றை ஒரே தளத்தில் இயக்க முடியும். இந்தியாவில் பொது தேர்தல், ஐ.பி.எல். 2019 கிரிகெட் தொடர், உலக கோப்பை 2019 மற்றும் பல்வேறு நிகழ்வுகள் இந்தியா மற்றும் உலகம் முழுக்க நடைபெற இருக்கும் நிலையில், ஜியோ தனது நியூஸ் சேவையை துவங்கியிருக்கிறது.



    ஜியோ நியூஸ் சேவையில் பயனர்கள் இந்தியா மற்றும் உலகம் முழுக்க கிடைக்கும் சுமார் 150-க்கும் அதிக நேரலை செய்தி சேனல்கள், 800-க்கும் அதிக பத்திரிகைகள், 250-க்கும் அதிக நாளேடுகள், பிரபல வலைபக்கங்கள் மற்றும் செய்தி வலைதளங்களை 12-க்கும் அதிக இந்திய மொழிகளில் இருந்து தேர்வு செய்து பயன்படுத்த முடியும்.

    மேலும் பயனர் விருப்பம்படி ஹோம்பேஜில் தோன்றும் தரவுகளில் அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, வியாபாரம், தொழில்நுட்பம், வாழ்க்கை முறை, அழகியல், வேலைவாய்ப்பு, ஆரோக்கியம், ஜோதிடம், வணிகம் மற்றும் பல்வேறு தலைப்புகளில் அவரவர் விரும்புவதை தேர்வு செய்து கொள்ளலாம்.

    கூடுதலாக இந்த சேவையில் டிரெண்டிங் வீடியோக்களையும் பார்க்கலாம். இத்துடன் வெவ்வேறு தலைப்புகளில் இருந்து சுமார் 800-க்கும் அதிக பத்திரிகைகளை வாசிக்க முடியும்.
    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.269 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 2.6 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. #bsnl #offers



    குடியரசு தினத்தை முன்னட்டு பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. 

    ரூ.269 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 26 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இத்துடன் 2.6 ஜி.பி. டேட்டா, 2600 நிமிடங்கள் வாய்ஸ் கால், 260 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இச்சலுகை குடியரசு தினத்தையொட்டி குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 



    அந்த வகையில் புதிய ரூ.269 சலுகையை வாடிக்கையாளர்கள் ஜனவரி 26 (குடியரசு தினம்) முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். இச்சலுகை நாடு முழுக்க அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டு இருப்பதை போன்று இச்சலுகை குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் நாடு முழுக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக பி.எஸ்.என்.எல். தனது ரூ.99 சலுகையை மாற்றியமைத்து. அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையை மட்டும் வழங்கும் இச்சலுகையில் ஏற்கனவே 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் 26 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

    இதுதவிர ரூ.899 விலையில் பி.எஸ்.என்.எல். புதிய சலுகையை அறிவித்தது. இதில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 50 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 180 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
    பாரதி ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. #Airtel #offers



    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

    365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகைக்கான கட்டணம் ரூ.1,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சலுகை ஜியோவின் வருடாந்திர சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் ரூ.1,699 சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.



    அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜி.பி. டேட்டா, எஸ்.எம்.எஸ். சலுகை தவிர ஏர்டெல் டி.வி. செயலியின் பிரீமியம் தரவுகளை இலவசமாக பார்த்து ரசிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

    ஏர்டெல் அறிவித்துள்ள புதிய சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், புதிய சலுகை அந்நிறுவன வலைதளத்தில் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை.

    ஜியோ வழங்கும் வருடாந்திர சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
    இந்தியாவில் அமேசான் வலைதளத்திற்கு போட்டியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜியோ இணைந்து புதிய சேவையை துவங்க இருக்கின்றன. #relianceindustries



    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சொந்தமாக ஆன்லைன் வலைதளம் ஒன்றை துவங்க இருக்கிறது. புதிய வலைதளம் இந்தியாவில் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    ஜியோ டெலிகாம் சேவை, மொபைல் சாதனங்கள் மற்றும் ரீடெயில் வர்த்தக நெட்வொர்க் உள்ளிட்டவற்றை ஒன்றிணைத்து உலகின் முன்னணி ஆன்லைன் வலைதளங்களை எதிர்கொள்ள முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளர். 

    ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் ஒன்றிணைந்து பிரத்யேகமாக புதிய ஆன்லைன் வலைதளத்தை துவங்கி, குஜராத்தில் இருக்கும் சுமார் 12 லட்சம் சிறு வணிகர்களை ஊக்குவிக்க இருப்பதாக முகேஷ் அம்பானி தெரிவித்திருக்கிறார். 



    இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ சேவையை இதுவரை சுமார் 28 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ரிலையன்ஸ் ரீடெயில் முணையங்கள் இந்தியா முழுக்க சுமார் 6,500 நகரங்களில் 10,000 விற்பனை மையங்களாக இயங்கி வருகின்றன. 

    புதிய ஆன்லைன் வர்த்தகத்தில் வியாபாரிகளை சேர்க்க ஜியோவின் செயலிகள் மற்றும் சாதனங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன என்று ரிலையன்ஸ் ரீடெயில் மூத்த அதிகாரியான வி. சுப்ரமணியம் தெரிவித்தார்.

    வெளிநாட்டு ஆன்லைன் வர்த்தக தளங்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களின் பொருட்களை பிரத்யேகமாக விற்பனை செய்யவோ, சிறப்பு சலுகைகள் வழங்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த விதிமுறைகள் மூலம் அமேசான் மற்றும் வால்மார்ட் கைப்பற்றியிருக்கும் ப்ளிப்கார்ட் நிறுவன வியாபாரங்களை வெகுவாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.181 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #Airtel #Offers
    பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் புதிய பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா லிமிட்டெட் நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ளும் நோக்கில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரூ.181 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஏர்டெல் சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.198 சலுகை, பி.எஸ்.என்.எல். ரூ.187 சலுகைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது.  

    ஏர்டெல் அறிவித்து இருக்கும் ரூ.181 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 42 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ.199 பிரீபெயிட் சலுகையிலும் 42 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. எனினும் இரண்டு சலுகையிலும் இருக்கும் ஒரே வித்தியாசம் ரூ.181 சலுகை 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

    டேட்டா சலுகைகளுடன் இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வோடபோன் ஐடியா லிமிட்டெட் நிறுவனம் இணைப்புக்கு பின் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனம் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

    ஏர்டெல் ரூ.181 சலுகையில் அதிக டேட்டா பயன்படுத்துவோருக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் மொத்தம் 42 ஜி.பி. டேட்டா கிடைக்கும். ரூ.200 விலையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல் நிறுவனத்தின் முதல் சலுகையாக இது அமைந்துள்ளது. #Airtel #Offers
    பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு 31 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #offer



    பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.299 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய பி.எஸ்.என்.எல். சலுகையில் பயனர்களுக்கு 31 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்றவை வழங்கப்படுகிறது.

    புதிய பி.எஸ்.என்.எல். சலுகை ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் வழங்கி வரும் ரூ.299 போஸ்ட்பெயிட் சலுகைக்கு போட்டியாக அமைகிறது. முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவன பயனர்களுக்கு ஆட்-ஆன் சலுகைகள் அறிவிக்கப்பட்டது. இதில் பயனர்கள் மாதாந்திர டேட்டாவை பயன்படுத்தி முடித்து இருந்தாலும், அதிவேக டேட்டாவை வழங்குகிறது.

    பி.எஸ்.என்.எல். ரூ.299 சலுகை முதல் முறையாக பி.எஸ்.என்.எல். சேவையில் இணையும் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஏற்கனவே பி.எஸ்.என்.எல். சலுகையை பயன்படுத்தி வருவோருக்கு புதிய சலுகையை பயன்படுத்த முடியாது. மாதம் 31 ஜிபி டேட்டா வழங்கும் புதிய சலுகையில், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களில் பொருந்தாது.

    நிர்ணயிக்கப்பட்ட டேட்டா பயன்படுத்தியதும், டேட்டா வேகம் நொடிக்கு 80 கே.பி.யாக குறைந்து விடும். எனினும் பயனர்கள் கூடுதலாக பயன்படுத்தும் டேட்டாவிற்கு கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் பயன்படுத்தாமல் இருக்கும் டேட்டாவை அடுத்த மாதத்திற்கு பயன்படுத்தும் வசதி வழங்கப்படவில்லை.

    ஜியோ வழங்கும் ரூ.199 போஸ்ட்பெயிட் சலுகையில் பயனர்களுக்கு மாதம் 25 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்கள் கூடுதலாக 500 ஜி.பி. டேட்டாவினை ஜி.பி. ஒன்றுக்கு ரூ.20 கட்டணம் செலுத்தி பெற முடியும்.
    கேரளாவில் மழை பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஏர்டெல் போன்றே ஜியோ, வோடபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல். இலவச சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFlood #TelecomOffers


    கேரளாவில் கனமழை பெய்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து பல்வேறு டெலிகாம் நிறுவனங்களும் மக்களுக்கு இலவச சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளன. ஏர்டெல் நிறுவன சலுகை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வோடபோன், ஜியோ, பி.எஸ்.என்.எல். மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களும் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சலுகை வழங்கப்படுகிறது.

    பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இலவச சலுகைகளும், போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு தங்களது கட்டணத்தை செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஏர்டெல் சார்பில் பல்வேறு பகுதிகளில் இலவச வைபை, வாய்ஸ் கால் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஏர்டெல் ஸ்டோர்களில் பயனர்கள் தங்களின் மொபைல் போன்களை சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ சார்பில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா சலுகை ஒரு வாரத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது. 


    கோப்பு படம்

    வோடபோன் பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.30 டாக்டைம், 1 ஜிபி மொபைல் டேட்டா வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு டேட்டா தானாக தங்களது அக்கவுன்ட்-இல் கிரெடிட் செய்யப்படுகிறது.வாய்ஸ் கால் சேவையை ஆக்டிவேட் செய்ய CREDIT என டைப் செய்து 144 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியோ அல்லது *130*1# டையல் செய்ய வேண்டும். வோடபோன் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு சேவைகள் துண்டிக்கப்படாமல் வழங்கப்படுகிறது.

    ஐடியா பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.10 கிரெடிட் வழங்கப்படுகிறது. பயனர்கள் *150*150# என டையல் செய்து உடனடியாக டாக்டைம் பெறலாம். அனைத்து பிரீபெயிட் பயனர்களுக்கும் 1 ஜிபி இலவச டேட்டா ஏழு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இலவச டேட்டா பயனர்களுக்கு தானாக ஆக்டிவேட் செய்யப்படும். ஐடியாவும் தனது போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு சேவைகள் துண்டிக்கப்படாமல் வழங்கப்படுகிறது.

    பி.எஸ்.என்.எல். சார்பில் நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்களுக்கு இலவச வாய்ஸ் கால் அனைத்து நெட்வொர்க்களுக்கும் வழங்கப்படுகிறது. இத்துடன் எஸ்.எம்.எஸ். மற்றும் டேட்டா அடுத்த ஏழு நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
    ×