என் மலர்
நீங்கள் தேடியது "தீ விபத்து"
- நடுரோட்டில் லாரி தீப்பற்றி எரிந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
குன்னம்:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து வெள்ளை எம்சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி ஒரு லாரி சென்றது. லாரியை கரூர் கிருஷ்ணராயபுரம் குப்பனம்பட்டியை சேர்ந்த கதிர்வேல் (வயது 23) என்பவர் ஓட்டினார்.
லாரி பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள அயன் பேரையூர் சமத்துவபுரம் அருகே சென்றபோது எதிர் பாராதவிதமாக லாரியின் டயர் வெடித்து தீப்பற்றியது. உடனே டிரைவர் கதிர்வேல் லாரியில் இருந்து கீழே இறங்கினார்.
சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது.
பின்னர் இதுபற்றி பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் லாரி முழுவதுமாக எரிந்து சேதமானது. தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னர் அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. நடுரோட்டில் லாரி தீப்பற்றி எரிந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- கியாஸ் சிலிண்டரில் ஏற்பட்ட தீ காற்றின் வேகம் காரணமாக மள மளவென அருகிலுள்ள குடிசை வீடுகளுக்கும் பரவியது.
- தீ விபத்தில் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, நகை பணம் எரிந்து சாம்பலானது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், ஹயாத் நகர், ரவி நாராயண ரெட்டி காலனியில் 300-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் குடிசை வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் எதிர்பாராத விதமாக கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. கியாஸ் சிலிண்டரில் ஏற்பட்ட தீ காற்றின் வேகம் காரணமாக மள மளவென அருகிலுள்ள குடிசை வீடுகளுக்கும் பரவியது.

இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, நகை பணம் எரிந்து சாம்பலானது. குடிசையில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் 300-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து நாசமானது. ஏழைகளின் குடிசை வீடுகள் எரிந்து நாசமானதால் அவர்கள் கடும் துயரத்திற்கு ஆளாகினர்.
- 12 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- தீ விபத்துக்கான காரணம் என்னவென்று இன்னும் தெளிவான தகவல் கிடைக்கவில்லை
மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று அதிகாலை 2:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து 12 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தீ விபத்துக்கான காரணம் என்னவென்று இன்னும் தெளிவான தகவல் கிடைக்கவில்லை என மும்பை தீயணைப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்தால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
- பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் புகை மண்டலமாக காணப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாதவரம்:
புழல் பகுதியில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் தினசரி குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் புழல், சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலை ஓரத்தில் அங்குள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது.
இந்த நிலையில், குப்பைக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த இடத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குப்பை கிடங்கு முழுவதும் வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
குப்பைக் கழிவுகளில் காய்ந்த ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் புகை மண்டலமாக காணப்பட்டது. தகவல் அறிந்ததும் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரசாயனக் கலவையால் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். குப்பை கழிவில் இரவில் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.
- தீ விபத்து நடந்த அறையில் இருந்த பெண்கள் வேறு வார்டுக்கு பத்திரமாக மாற்றப்பட்டனர்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூா் பழைய பஸ் நிலையம் அருகில் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தினமும் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். குறிப்பாக இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் அதிக அளவில் நடந்து வருகிறது.
இதற்காக மருத்துவமனையில் பிரசவ வார்டுக்கு என்று தனி கட்டிடம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஏராளமான பிரசவம் நடந்து வருகின்றன. மேலும் பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.
இந்த நிலையில் இன்று மதியம் திடீரென பிரசவ வார்டின் முதல் தளத்தில் தீ பற்ற தொடங்கியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் பிரசவத்திற்காக வந்திருந்த கர்ப்பிணி பெண்கள், உடன் வந்த உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர். அப்போது மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பான் கருவிக்கொண்டு ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தகவல் அறிந்து உடனடியாக தஞ்சாவூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
உடனடியாக தீயை அணைத்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்து துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையடுத்து தீ விபத்து நடந்த அறையில் இருந்த பெண்கள் வேறு வார்டுக்கு பத்திரமாக மாற்றப்பட்டனர்.
ஏ.சி.யில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருந்தாலும் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் தீ விபத்து நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- டெல்டா விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- இந்த தீ விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஃபளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் திடீரென தீ பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தீ விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக விமானத்தில் இருந்த 300 பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- மின் கசிவு ஏற்பட்டு கடை முழுவதும் தீ பிடித்த எரிய தொடங்கியது.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் துர்காலயா சாலையை சேர்ந்த மகாலிங்கம் மகன் அசோக்குமார். இவர் எல்லையம்மன் கோவில் சன்னதி தெருவில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென கடையில் வைக்கப்பட்டிருந்த யு.பி.எஸ் பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு கடை முழுவதும் தீ பிடித்த எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் மளமளவென பற்றி எரிந்தது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர்.
இதில் பெரும்பாலான தங்க நகைகள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்ததால் தப்பித்தது. இருந்தாலும் கடை ராக்கரில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பொருட்கள் தீயில் உருகி சேதமானது என்று நகைக்கடை உரிமையாளர் தெரிவித்தார்.
இந்த தீ விபத்து குறித்த புகாரின் பேரில் திருவாரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அகமதாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
- தனது குழந்தைகளை காப்பாற்றிய தாயின் வீடியோ இணையத்தில் வைரலானது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்திற்கு பிறகு அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கிய தனது குழந்தைகளை மீட்க போராடிய ஒரு தாயின் வீடியோ இணையத்தில் வைரலானது.
பெண் ஒருவர் பால்கனியில் நின்றுகொண்டு, தன உயிரை பற்றி கவலைப்படாமல் கீழே தரையில் இருந்தவர்களிடம் தனது 2 குழந்தைகளை கவனமாக ஒப்படைத்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, தனது குழந்தைகளின் உயிரை துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றிய தாயை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
- தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையாக வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்து கார்களுக்கு வேகமாக பரவி எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் விலை உயர்ந்த பல கார்கள் எரிந்து நாசமானது. தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீ விபத்தில் கார்களின் சேதம் குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பவன் கல்யாணின்மகன் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
- தீக்காயமடைந்த மார்க் சங்கர் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிங்கப்பூரில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் படிக்கும் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பவன் கல்யாணின் 8 வயது இளைய மகன் மார்க் சங்கர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தீக்காயமடைந்த மார்க் சங்கர் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து பவன் கல்யாண் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு மகனை பார்க்க சிங்கப்பூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
+2
- பனியன் நிறுவனத்தில் பேப்ரிக், பேக்கிங், ஸ்டிச்சிங் என பல்வேறு பிரிவுகளில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
- மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த அய்யம்பாளையத்தில், சுரேஷ், ஸ்ரீதர் ஆகியோருக்கு சொந்தமான பனியன் நிறுவனமானது 35,000 சதுர அடி பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பேப்ரிக், பேக்கிங், ஸ்டிச்சிங் என பல்வேறு பிரிவுகளில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று இரவு பணி முடிந்து நிறுவனத்தை மூடி விட்டு சென்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை பனியன் நிறுவனத்தில் இருந்து புகை வருவதை பார்த்து பனியன் நிறுவன காவலாளி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து உரிமையாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பனியன் நிறுவனத்தில் பின்னலாடை எந்திரங்கள் மற்றும் துணிகள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
திருப்பூர் மாநகர் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் கஞ்சம்பாளையம் பிரிவு பகுதியில் பனியன் வேஸ்ட் குடோன் ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று வழக்கம்போல் பணி முடிந்து குடோனை பூட்டி விட்டு அண்ணாதுரை மற்றும் ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அதிகாலையில் குடோனுக்குள் இருந்து புகை வெளியேறி உள்ளது. இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
குடோன் முழுவதும் பனியன் கழிவு துணிகள் இருந்ததால், அனைத்து துணிகளும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- எரிவாயு குழாய் திடீரென தீப்பிடித்தது. பின்னர் பயங்கர சத்தத்துடன் அந்த குழாய் வெடித்து சிதறியது.
- முன்னெச்சரிக்கையாக அங்குள்ள 3 கியாஸ் நிலையங்களும் மூடப்பட்டன.
கோலாலம்பூர்:
மலேசியா தலைநகர் கோலாலம்பூர் புத்ரா ஹைட்ஸ் பகுதியில் கியாஸ் நிலையம் அமைந்துள்ளது. அங்கு தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாசின் எரிவாயு குழாய் மூலம் கியாஸ் கொண்டு செல்லப்படுகிறது.
இந்தநிலையில் அங்குள்ள எரிவாயு குழாய் திடீரென தீப்பிடித்தது. பின்னர் பயங்கர சத்தத்துடன் அந்த குழாய் வெடித்து சிதறியது.
அப்போது சுமார் 300 அடி உயரத்துக்கு தீக்குழம்பு மேலெழும்பியது. இது பார்ப்பதற்கு எரிமலை வெடித்து சிதறியது போல இருந்தது. தொடர்ந்து பரவிய தீயால் அங்கு சுமார் 50 வீடுகள் எரிந்து நாசமாகின.
எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதேபோல் முன்னெச்சரிக்கையாக அங்குள்ள 3 கியாஸ் நிலையங்களும் மூடப்பட்டன.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். இந்த பணியில் ஏராளமான ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. இதனால் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அதேசமயம் இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தேசிய எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.