search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இட்லி"

    இட்லியை பலவிதமான வகைகளில் செய்யலாம். இன்று 4 வகையான பருப்பை வைத்து சுவையான சத்தான இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா அரை,
    அரிசி - கால் கப்
    எலுமிச்சைச் சாறு - சிறிதளவு,
    தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
    மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு.

    தாளிக்க:

    நெய் - ஒரு டீஸ்பூன்,
    கடுகு, பெருங்காயத்துள் - தலா அரை டீஸ்பூன்,
    நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு,
    பச்சை மிளகாய் - 3,
    எண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன்.



    செய்முறை :

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பருப்பு வகைகளை அரிசியுடன் சேர்த்து நன்றாக கழுவி முக்கால் மணி நேரம் ஊறவிட்டு… உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, தயிர் விட்டு (தண் ணீர் வேண்டாம்) கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து மாவுடன் சேர்த்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

    மாவை புளிக்க விடக்கூடாது.

    மாவை சிறிய இட்லி தட்டில் நெய் / எண்ணெய் தடவி மாவை ஊற்றி, 13 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

    சூப்பரான சத்தான மிக்ஸ்டு பருப்பு இட்லி ரெடி

    இதற்குத் தொட்டுக் கொள்ள இட்லி மிளகாய்ப் பொடி, தேங்காய் சட்னி மிகவும் ஏற்றது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேழ்வரகில் கால்சியம், நார்ச்சத்து ஆகிய இரண்டும் அதிகம் இருக்கிறது. இன்று கேழ்வரகில் சத்தான இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 2 கப்
    உளுத்தம் பருப்பு - 3/4 கப்
    உப்பு - 1 தே.கரண்டி



    செய்முறை :

    உளுத்தம் பருப்பினை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைக்கவும். ஊறவைத்த உளுத்தம் பருப்பினை, இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும்.

    கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.

    கரைத்து வைத்த கேழ்வரகு மாவுடன் உப்பு, அரைத்த உளுத்தம் மாவினை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.( மிகவும் தண்ணீயாக கரைத்துவிட வேண்டாம்.) இதனை குறைந்தது 6 - 8 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும்.

    இட்லி பாத்திரத்தில் அடுப்பில் வைத்து மாவை இட்லிகளாக ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான சத்தான கேழ்வரகு இட்லி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    வெஜிடபிள் இட்லி உப்புமா மிகச் சிறந்த காலை உணவு. இட்லி சாப்பிட விரும்பாத குழந்தைகளும் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வேகவைத்த இட்லி - 7,
    பச்சை மிளகாய் - 2,
    நல்லெண்ணெய் - சிறிதளவு,
    இஞ்சி - சிறிது துண்டு,
    சீரகத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிதளவு,
    கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி ஆகியவை சேர்த்து - 50 கிராம்.



    செய்முறை :

    கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி, பச்சைப் பட்டாணியுடன் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

    இட்லியை நன்றாக உதிர்த்து வைத்து கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சித்துண்டுகள், சீரகத்தூள், ப.மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வேகவைத்த கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை சேர்த்து, நன்றாக வதக்கவும்.

    கடைசியாக உதிர்த்த இட்லியை சேர்த்துக் கிளறவும்.

    இட்லி உப்புமா போல உதிர்ந்து வரும் போது அதன் மேல் கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கவும்.

    வெஜிடபிள் இட்லி உப்புமா ரெடி.

    சாம்பார், சட்னியுடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வெந்தயக்கீரையை வைத்து சத்தான சுவையான இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி மாவு - 2 கப்
    வெந்தயக்கீரை - 1 கட்டு,
    சாம்பார் வெங்காயம் - 50 கிராம்,
    காய்ந்தமிளகாய் - 3,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் காய்ந்தமிளகாய் போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் வெந்தயக்கீரை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.

    வதக்கிய கீரையை இட்லி மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    இந்த மாவை இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்து நிறைந்த வெந்தயக்கீரை இட்லி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கறிவேப்பிலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கறிவேப்பிலை பொடி இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மினி இட்லி - 40
    நெல் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

    அரைக்க :

    கறிவேப்பிலை - 3 கப்
    கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 4
    உளுந்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
    மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கடுகு - அரை டேபிள்ஸ்பூன்

    தாளிக்க  :

    கடுகு - சிறிதளவு,
    உளுந்தம் பருப்பு - சிறிதளவு,
    காய்ந்த மிளகாய் - 2.



    செய்முறை :

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாணலியில் எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். இப்போது கறிவேப்பிலை பொடி ரெடி.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் மினி இட்லி, கறிவேப்பிலை பொடி சேர்த்து மீதம் இருக்கும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கறிவேப்பிலை பொடி இட்லி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் கேழ்வரகை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகு, காய்கறிகள் சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்,
    தோசை மாவு - கால் கப்,
    உப்பு - தேவைக்கு,
    தயிர் - அரை கப்,
    துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ் கலந்தது - 1 கப்,
    வெங்காயம் - 2,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    இஞ்சி, பச்சைமிளகாய் விழுது - 1/4 டீஸ்பூன்,
    முந்திரிப்பருப்பு - 4,
    கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு,
    நெய் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் சிறிது நெய் விட்டு கேழ்வரகு மாவை வறுத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வறுத்த கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் தோசை மாவு, தயிர், உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.

    கடாயில் சிறிது நெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்த பின் இஞ்சி, பச்சைமிளகாய் விழுது போட்டு வதக்கி, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் கேரட் துருவல், பீன்ஸ் கலவையை சேர்த்து வதக்கவும்.

    காய்கறிகள் நன்கு வதங்கியதும் கொத்தமல்லி, பொடித்த முந்திரிப்பருப்பை சேர்த்து கலந்து, ஊறவைத்த கேழ்வரகு மாவில் கொட்டி நன்றாக கலந்து கொள்ளவும்.

    இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து மாவை இட்லிகளாக ஊற்றி வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

    சத்தான சுவையான கேழ்வரகு வெஜிடபிள் இட்லி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் ஓட்ஸ், சம்பா ரவையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று இந்த இரண்டையும் சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஓட்ஸ் - 1 கப்
    சம்பா ரவை - அரை கப்
    தயிர் - கால் கப்
    சோடா மாவு - கால் டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    தாளிக்க

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்
    ப.மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    இஞ்சி - சிறிய துண்டு



    செய்முறை

    கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் ஓட்ஸை போட்டு 5 நிமிடங்கள் வறுத்து ஆறியதும் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்த பின்னர்  சம்பா ரவையை போட்டு 5 நிமிடங்கள் வறுக்கவும்.

    அடுத்து அதில் பொடித்த ஓட்ஸ் சேர்த்து சிறிது கிளறிய பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

    பிறகு அதில் சோடா மாவு, தயிர், 1 1/2 தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். கலவை இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

    அடுத்து அதில் உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவிய பின்னர் அதில் மாவை ஊற்றி ஆவியில் 20 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    சாம்பார், புதினா சட்னியுடன் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆர்.கே.வித்யாதரன் இயக்கத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா நடிப்பில் வெளியாகி இருக்கும் `இட்லி' படத்தின் விமர்சனம். #ITLY #SaranyaPonvannan
    சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா மூன்று பேரும் நெருங்கிய தோழிகள். கல்லூரியில் படித்து வரும் சரண்யா பொன்வண்ணனின் பேத்திக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், தலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தகவல் வருகிறது. இதையடுத்து ஆபரேஷன் செய்ய தேவையான பணத்தை மூன்று பேரும் சேர்த்து சேர்த்து விடுகின்றனர். 

    அந்த பணத்தை வங்கிக் கணக்கில் போடுவதற்காக மூன்று பேரும் வங்கிக்கு செல்கின்றனர். அந்த நேரம் பார்த்து வங்கிக்குள் நுழையும் கொள்ளையர்கள் அவர்களிடமிருக்கும் பணத்தை மிரட்டி பிடுங்கி செல்கின்றனர். வங்கி மேலாளரான சித்ரா லட்சுமணனிடம் இதுகுறித்து மூன்று பேரும் புகார் கூற, பணத்தை வங்கிக் கணக்கில் போட்டால் மட்டுமே அதனை திருப்பித் தர ஏற்பாடு செய்ய முடியும் என்று அவர் கையை விரிக்கிறார். 



    பணம் போனதை எண்ணி என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டிற்கு செல்கின்றனர். அந்த நேரம் பார்த்து சுவாமிநாதன் மூலமாக அவர்களுக்கு துப்பாக்கி ஒன்று கிடைக்கிறது. 

    அந்த துப்பாக்கியை பயன்படுத்தி, பணத்தை தொலைத்த வங்கியில் இருந்தே கொள்ளையடிக்க திட்டமிட்டு வங்கிக்கு செல்கின்றனர். இந்த நிலையில் போலீசார் அந்த வங்கியை சுற்றிவிட, வங்கியில் இருக்கும் அனைவரையும் பிணயக் கைதிகளாக பிடித்து வைத்து அங்கிருந்து தப்பிக்க மூன்று பேரும் முயற்சி செய்கின்றனர். 



    அவர்கள் தனது ஆட்கள் தான் என்று கூறி, தீவிரவாதியான மன்சூர் அலி கான் போலீசுக்கு தகவல் கொடுத்து ஜெயிலில் இருக்கும் தனது ஆளை ரிலீஸ் செய்ய நிபந்தனையிடுகிறார். 

    இதனால் மூன்று பேரும் தீவிரவாதிகள் எனவும் முத்திரை குத்தப்பட கடைசியில், விட்ட பணத்தை மீட்டார்களா? போலீசில் சிக்கினார்களா? சரண்யா பொன்வண்ணனின் பேத்திக்கு என்ன ஆனது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா மூன்று பேரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிக்கும்படியாக இருக்கிறது. மூன்று பேருமே படத்தில் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். மனோபாலா, வெண்ணிறஆடை மூர்த்தி, பாண்டு என மூத்த நடிகர்கள் முதிர்ச்சியான நடிப்புடன் காமெடிக்கு கைகொடுத்திருக்கின்றனர். மன்சூர் அலி கான் அவரது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

    விட்ட பணத்தை திரும்ப பெற பணம் போன வழியையே தேர்ந்தெடுத்து அதில் சிக்கிக் கொண்டு அல்லோல கல்லோலபடும் மூன்று பெண்கள் அதில் வெற்றி பெற்றார்களா என்பதை மையமாக வைத்து காமெடி, பாசம், குடும்பம் என ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார் ஆர்.கே.வித்யாதரன். படத்தின் திரைக்கதையில் கொஞ்சம் விறுவிறுப்பையும், காட்சியின் நீளத்தையும் கொஞ்சம் குறைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். 



    ஹரி கே.கே இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. பரணி கண்ணன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `இட்லி' இன்னும் வேகவைத்திருக்கலாம். #ITLY #SaranyaPonvannan #KovaiSarala #Kalpana

    கீரை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கீரையில் இட்லி செய்து கொடுக்கலாம். இன்று இந்த இட்லியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இட்லி மாவு - 1 கிலோ,
    சிறுகீரை - 1 கட்டு,
    சிறுபருப்பு - 100 கிராம்,
    காய்ந்த மிளகாய் - 6,
    தக்காளி - 1,
    பெரிய வெங்காயம் - 2,
    உப்பு - தேவைக்கு,
    பூண்டு - 4 பல்.



    செய்முறை

    சிறுகீரையை சுத்தம் செய்து கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பொடியாக நறுக்கிய கீரையுடன் சிறுபருப்பு, காய்ந்தமிளகாய், தக்காளி, வெங்காயம், பூண்டு, சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் 1 விசில் விட்டு எடுக்கவும்.

    பின்பு ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    இட்லி மாவில் உப்பு, அரைத்த கீரை கலவையை சேர்த்து கலந்து இட்லி தட்டில் ஊற்றி வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான சிறுகீரை இட்லி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, மறைந்த நடிகை கல்பனா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இட்லி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Idly
    இயக்குநர் வித்யாதரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “இட்லி“. இப்படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, மறைந்த நடிகை கல்பனா மற்றும் மனோபாலா, லொள்ளு சபா ஸ்வாமிநாதன் மற்றும் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

    இப்படம் வங்கியை கொள்ளையடிக்கும் மூன்று வயதான பெண்களை பற்றி கதையை கொண்டதாகும். காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில், இந்த சமூகத்துக்கு தேவையான கருத்துகள் படத்தின் இறுதியில் வருவது போல் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இட்லி குடும்ப ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். 



    இப்படத்தின் படப்பிடிப்பு 40 நாட்களில் நிறைவுபெற்றது. இப்படத்தின் படம் சென்னையில் படமாக்கப்பட்டது. பாடல் காட்சிகள் கேரளாவில் படமாக்கபட்டது.  பாபு தூயவன் மற்றும் ஜி.கார்த்திக் அப்பு மூவீஸ் சார்பில் தயாரித்துள்ள இப்படத்திற்கு தரன் இசையமைத்துள்ளார்.  
    ×