search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷ்யா"

    இந்திய தலைமை தளபதி பிபின் ராவத் ஐந்து நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா செல்ல உள்ளார். #BipinRawat #Russia #TombofUnknownSoldier
    புதுடெல்லி:

    இந்தியாவின் தலைமை ராணுவ தளபதி பிபின் ராவத் 5 நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6-ம் தேதி இந்தியா திரும்புவதாக திட்டமிடப்பட்டுள்ள பயண திட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.

    ரஷ்யாவில் உள்ள ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் இடமான உலகில் உள்ள பல்வேறு போர்களிலும் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கல்லறைக்கு மரியாதை செலுத்த உள்ளார்.

    அதைத்தொடர்ந்து, ரஷ்ய பொது ஊழியர்கள் அகாடமி நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் ராணுவ தளபதி பிபின் ராவத், அங்கு சிறப்பு விருந்தினர் உரையாற்ற உள்ளார். #BipinRawat #Russia #TombofUnknownSoldier
    ரஷியாவில் புதிதாக தயாரிக்கப்பட்ட புதிய ரக ஸ்னைப்பர் துப்பாக்கியை பயன்படுத்தி, இரண்டாயிரம் அடி தூர இலக்கை துல்லியமாக ரஷ்ய அதிபர் புதின் தாக்கினார். #VladimirPutin #Russia
    மாஸ்கோ:

    மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காலானிஷ்கோவ் நிறுவனம் தயாரித்த எஸ்.வி.சி.எச். 308 ரக துப்பாக்கி வெளியீட்டு விழா நடந்தது. இதில் ரஷ்ய அதிபர் விளாமிடிர் புதின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

    அப்போது 2 ஆயிரம் அடி தூரத்தில் வைக்கப்பட்ட மனித உருவ இலக்கினை குறிதவறாமல் சுட்டார். இதில் ஒரு தோட்டா இலக்கின் தலைப் பகுதியை தாக்கியது.

    ரஷ்ய அதிபர் புதின் ராணுவத்தில் பணியாற்றிவர் என்பதும், ஜூடோ வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. #VladimirPutin #Russia
    வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், 2 நாள் அரசு முறை பயணமாக ரஷ்யாவுக்கு புறப்பட்டு சென்றார். #SushmaSwaraj #Russia
    புதுடெல்லி:

    வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அரசு முறை பயணமாக ரஷ்யாவுக்கு புறப்பட்டு சென்றார். இந்த பயணம் இரண்டு நாள் பயணமாக திட்டமிடப்பட்டுள்ளது.

    ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு செல்லும் சுஷ்மா சுவராஜ், அங்கு நடைபெறும் தொழில்நுட்பம், பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான 23-வது சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #SushmaSwaraj #Russia
    தொலைபேசி அழைப்புகள் மட்டுமே போதாது என்பதால் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ நகருக்கு வருமாறு டிரம்ப்புக்கு புதின் அழைப்பு விடுத்துள்ளார். #Putin #Trump
    ஜோகனஸ்பர்க்:

    சமீபத்தில் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கி நகரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இடையே வரலாற்று சிறப்புமிக்க முதல் சந்திப்பு நடைபெற்றது.

    இந்நிலையில், ஈரான், சிரியா உள்ளிட்ட  உலக நாடுகளின் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச தொலைபேசி அழைப்புகள் மட்டுமே போதாது என்பதால் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ நகருக்கு வருமாறு டிரம்ப்புக்கு புதின் அழைப்பு விடுத்துள்ளார்.



    பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா தலைநகர் ஜோகனஸ்பர்க் நகருக்கு வந்துள்ள ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபருடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு வருமாறு டிரம்ப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். #Putin #Trump
    ரஷ்யாவில் தனது காதலியை கொடூரமாக கொலை செய்து, அவளது மூளையை வறுத்து தின்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். #Russia
    மாஸ்கோ:

    ரஷ்யாவில் டிமிரிட்டி லிசின் என்ற 21 வயது இளைஞரும், ஒலாகா புடுனோவா என்ற 45 வயது பெண்ணும் காதலித்து வருகின்றனர். சீரியல் கில்லர்கள் குறித்து அதிக ஆர்வமுடைய டிமிரிட்டி லிசன், மனிதர்களை கொலை செய்து, உடலை தின்னும் சடங்குகள் குறித்தும் அதிகமாக வாசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளான்.

    இந்நிலையில், தனது காதலியின் வீட்டுக்கு சென்ற டிமிரிட்டி, மது பாட்டிலால் அவளது தலையில் 25 முறை கொடூரமாக தாக்கி அவரை கொலை செய்துள்ளான். அதனைத் தொடர்ந்து அவளது மூளையை எடுத்து சமைத்து சாப்பிட்டுள்ளான்.

    இதையடுத்து, ஒலாகா புடுனோவாவின் கொலை தொடர்பாக விசாரித்த காவல்துறையினர் சைக்கோ கொலைகாரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தனது காதலியை கொடூரமாக கொலை செய்து மூளையை வறுத்து தின்ற சைக்கோ கில்லர் தற்போது ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். #Russia
    சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரின் சந்திப்பு நடைபெற்ற நிலையில், அடுத்த சந்திப்புக்காக காத்திருப்பதாக ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Trumph
    வாஷிங்டன்:

    உலக நாடுகளில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இரு துருவங்களாக இருந்தன. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு நிகழ்வுகளில் பகை இருந்துவந்தது. இந்த பகையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரது சந்திப்பு நடைபெற்றது.

    வெற்றிகரமாக நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு நாட்டு அதிபர்களும் தங்கள் பகை மறந்து, பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.



    இந்நிலையில், ரஷ்ய அதிபருடனான அடுத்த சந்திப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில்,  ரஷ்யாவுடனான சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும், அடுத்த சந்திப்பில், இருநாடுகளும் ஆலோசித்த பயங்கரவாத தடுப்பு, இஸ்ரேல் பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதற்கெனவே தாம் அடுத்த சந்திப்பை எதிர்நோக்கி இருப்பதாகவும் ட்ரம்ப் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். #Trumph
    ரஷியா மீது சர்வதேச நாடுகள் கொண்டிருந்த கண்ணோட்டத்தை உலக கோப்பை கால்பந்து போட்டிகள் மாற்றியுள்ளதாக ’பிபா’ தலைவர் குறிப்பிட்டுள்ளார். #FIFApresident #FIFAWorldCup
    மாஸ்கோ:

    அமெரிக்காவுக்கு நிகரான வல்லரசு நாடாக ஒருகாலத்தில் கருதப்பட்ட சோவியத் யூனியன் உடைந்த பின்னர் தனிநாடுகளாக சோவியத் யூனியன் அமைப்பு சிதறிப்போனது. குறிப்பாக, செர்னோபில் அணுஉலை விபத்துக்கு பின்னரும், அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளாலும் ரஷியா நிதிசார்ந்த விவகாரங்களில் சிறிது தள்ளாட்டத்தை எதிர்கொள்ள நேரிட்டது.

    இடையில், உக்ரைன் நாட்டை உடைத்து கிரிமியா என்னும் தனிநாடு உருவாக்கியது மற்றும் சிரியா விவகாரத்தில் அதிபருக்கு ஆதரவாகவும், அமெரிக்காவின் கருத்துக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதுபோன்ற நடவடிக்கைகளால் ஐரோப்பிய நாடுகளின் தாக்குதலுக்கு ரஷியா உள்ளானது.

    இதற்கிடையில், ‘பிபா’ என்னும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளை ரஷியா வெற்றிகரமாக நடத்தி காட்டியது. இன்று குரோஷியா - பிரான்ஸ் மோதும் இறுதிப்போட்டி இன்று மாஸ்கோ நகரில் நடைபெறுகிறது.



    இந்நிலையில், மாஸ்கோ நகரில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், உலக கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்திவரும் ‘பிபா’ அமைப்பின் தலைவர் கியானி இன்பான்ட்டினோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

    அப்போது, பேசிய கியானி இன்பான்ட்டினோ, ரஷியா மீது சர்வதேச நாடுகள் கொண்டிருந்த கண்ணோட்டத்தை உலக கோப்பை கால்பந்து போட்டிகள் மாற்றியுள்ளதாக குறிப்பிட்டார்.  இதனை வரவேற்ற புதின் இந்த கால்பந்து போட்டிகள் நமது நாட்டுக்கு பல புதிய நண்பர்களை உருவாக்கி தந்துள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். #FIFApresident  #WorldCupchanged  #perceptionofRussia   #GianniInfantino
    298 பயணிகளுடன் கடந்த 2014-ம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தை, ராக்கெட் மூலம் ரஷ்யாதான் தாக்கி அழித்ததாக வெளியான தகவலை நெதர்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி உறுதிபடுத்தியுள்ளார். #MH17investigation #Russianinvolvement #StefBlok
    ஆம்ஸ்டர்டாம்:

    உக்ரைனில் கடந்த 2014-ம் ஆண்டு அரசியல் நிலையற்ற தன்மை ஏற்பட்ட போது, கிரீமியா பகுதி மக்கள் ரஷ்ய கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்தனர். இதனால், ரஷ்யா ராணுவ படைகள் கடந்த 2014-ம் ஆண்டு கிழக்கு உக்ரைன் பகுதிக்குள் ஊடுருவி கிரீமியா பகுதியை மீண்டும் ரஷ்யாவுடன் இணைத்தது.

    அந்தாண்டில் ஜூலை 17-ம் தேதி, மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச்-17 விமானம் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 298 பயணிகளுடன் சென்றது.அப்போது ஒரு ஏவுகணை இந்த விமானத்தை தாக்கியதில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர்.



    விமானத்தை சுட்டு வீழ்த்தியது யார் என அறிய சர்வதேச அளவில் கூட்டு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவின் விசாரணை அறிக்கையின்படி, ரஷ்யாவின் விமான எதிர்ப்பு ஏவுகணை பிரிவிலிருந்துதான் பக்-டெலர் ரக ஏவுகணை ஏவப்பட்டு, மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதாகவும், ஆனால் ஏவுகணையை உபயோகித்தது யார் என்பது குறித்து தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, நெதர்லாந்து நாட்டின் அமைச்சரவையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த நெதர்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஸ்டெப் பிளாக், விமானம் தாக்கப்பட்ட சம்பவத்தில் ரஷ்யாவிற்கு நேரடி தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஸ்டெப் பிளாக்கின் இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெப் பிளாக்கின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த ரஷ்யா, விமானம் தாக்கப்பட்ட சம்பவத்தில் ரஷ்யாவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என கூறியுள்ளது. #MH17investigation #Russianinvolvement #StefBlok
    ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கெல் இன்று ஆலோசனை நடத்தினார். #IranNuclearDeal #Putin #Merkel
    மாஸ்கோ:

    மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.

    ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்யப்பட்டதாகும்.

    இதற்கிடையே, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 9-ம் தேதி அறிவித்தார். டிரம்ப்பின் இந்த முடிவுக்கு இஸ்ரேல், சவூதி அரேபியா உள்ளிட்ட அமெரிக்க பாசம் கொண்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    அதேவேளையில் முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் ரஷியா, சிரியா உள்ளிட்ட சில நாடுகள் டிரம்ப் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகியவை அறிவித்துள்ளன.

    இந்நிலையில், ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கெல் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இன்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுடன் ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஏஞ்சலா மெர்க்கெல் ஆலோசனை மேற்கொண்டார். #IranNuclearDeal #Putin #Merkel
    ×