search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன்முடி"

    மே 23-ந்தேதி மதியத்திற்கு பின்னர் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி இருக்காது என்று முன்னாள் அமைச்சர்கள் கூறியுள்ளனர். #edappadipalanisamy #ponmudi #senthilbalaji

    அரவக்குறிச்சி:

    அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

    பின்னர் முன்னாள் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கோர்ட்டுக்கு சென்று முறையிட்டதன் காரணமாக தேர்தல் ஆணையம் தற்போது தேர்தலை நடத்துகிறது.

    22 தொகுதி இடைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அது இங்கு வந்த மக்கள் கூட்டத்தை வைத்து பார்ப்பதன் மூலம் தெளிவாக தெரிகிறது. மே 23-ந்தேதிக்கு மறுநாள் தமிழகத்தில் ஆட்சி கவிழும். மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க.வின் வெற்றி உறுதியாகி விட்டது. நாங்கள் வெற்றிக்கோட்டை தொட்டுவிட்டோம். எங்களுக்கு பின்னால் ஓடி வருபவர்கள் ஓடுவார்களா, மாட்டார்களா? என்று எனக்கு தெரியாது.

    அரவக்குறிச்சி பகுதியில் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்கள் வசிக்கும் சூழ்நிலை உள்ளது. நான் வெற்றி பெற்றால் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா ரூ.3 சென்ட் நிலம் வழங்கப்படும். தி.மு.க. தேர்தல் வாக்குறுதிப்படி அவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.


    க.பரமத்தி, அரவக்குறிச்சி பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நான் அமைச்சராக இருந்த போது கொண்டு வந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மே 23-ந்தேதி மதியத்திற்கு பின்னர் தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #edappadipalanisamy #ponmudi #senthilbalaji

    பாராளுமன்றத்தில் நேற்று தம்பிதுரை பேசியதில் தவறு இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் தெரிவித்துள்ளார். #TNAssembly #Jayakumar #Ponmudi
    சென்னை:

    சட்டசபையில் இன்று பொன்முடி (தி.மு.க.) பேசுகையில், ஜி.எஸ்.டி.யால் தமிழகத்துக்கு நன்மையா? கெடுதலா? என்று உங்களால் சொல்ல முடியுமா? பாராளுமன்றத்தில் நேற்று உங்கள் கட்சியில் பொறுப்பில் உள்ளவரும், துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசும் போது, ஜி.எஸ்.டி.யால் தான் எல்லாமே முடங்கி விட்டது, பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் சிறு-குறு தொழில் நிறைய மூடப்பட்டு விட்டதாக பேசி இருக்கிறார் என்றார்.

    பொன்முடி மேலும் பேசும்போது, மத்திய பட்ஜெட்டை பாராட்டி முதல்-அமைச்சர் கருத்து தெரிவித்துள்ள நிலையில் அதற்கு நேர்மாறாக தம்பிதுரை பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறாரே இது அவரது தனிப்பட்ட கருத்தா? கட்சி கருத்தா? என்று கேட்டார்.

    அமைச்சர் ஜெயக்குமார்:- மாநில அரசுக்கு விடுவிக்கப்பட வேண்டிய நிதியை தாமதமின்றி விடுவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் பேசியிருக்றார். இதில் என்ன தவறு உள்ளது.



    பொன்முடி:- நேற்று செம்மலை இங்கு பேசும்போது, முதல்-அமைச்சர் சிக்சராக அடிக்கிறார். முதல் சிக்சர், 2-வது சிக்சர் என்று பேசினார். நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் எத்தனை சிக்சர் அடித்தாலும் மு.க.ஸ்டாலின் போடும் பந்தில் ஆளும் கட்சி கண்டிப்பாக கிளீன்போல்டு ஆகி விடும்.

    அமைச்சர் ஜெயக்குமார்:- உறுதியாக சொல்கிறேன். அது “நோ-பால்” ஆகி விடும்.

    (சட்டசபையில் பலத்த சிரிப்பு எழுந்தது)

    அமைச்சர் தங்கமணி:- கிரவுண்டுக்குள் வந்து பந்து போட்டால்தான் போல்டு ஆகும். கிரவுண்டுக்குள்ளேயே வேலை இல்லாதபோது பந்துக்கு என்ன வேலை.

    இவ்வாறு அடுத்தடுத்து சிரிப்பலையுடன் விவாதம் நடந்தது. #TNAssembly #Jayakumar #Ponmudi
    பொன்முடி எம்.எல்.ஏ. மீதான சொத்து குவிப்பு வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. #ponmudimla #dmk
    விழுப்புரம்:

    தமிழகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நீதிமன்றத்தில் ஒட்டுமொத்த அரசியல் கட்சி பிரமுகர்கள் மீதான வழக்குகளின் விசாரணை நடைபெறும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    இதன் அடிப்படையில் விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்த பொன்முடி எம்.எல்.ஏ. மீதான சொத்து குவிப்பு வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 

    இனி இந்த வழக்கின் விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும். இதுபோல் பொன்முடி எம்.எல்.ஏ. மீதான செம்மண் குவாரி வழக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட உள்ளது. #ponmudimla #dmk 
    சொத்து குவிப்பு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான பொன்முடி வழக்கின் விசாரணை வரும் 31-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
    விழுப்புரம்:

    முன்னாள் தி.மு.க. அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி பிரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    பொன்முடி இன்று கோர்ட்டில் ஆஜராகினார். அதன்பின்பு வழக்கு விசாரணையை நீதிபதி வருகிற 31-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்று மீண்டும் பொன்முடி ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் மணல் அள்ளியதில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் தி.மு.க. அமைச்சர் பொன்முடி, அவருடைய மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன் உள்பட 8 பேர் மீது, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கும் இன்று இதே கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    இதில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கோர்ட்டில் ஆஜரானார்.

    இதனைத் தொடர்ந்து நீதிபதி பிரியா இந்த வழக்கையும் 31-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்று பொன்முடி ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
    ×