search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிராட்பேண்ட்"

    ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் சேவையின் கீழ் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. என மூன்று சேவைகளுக்கு ஒரே கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. #RelianceJio



    ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் சேவையுடன் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகள் ஒரே கட்டணத்தில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.600 எனும் மாத கட்டணத்தில் ஜியோ இத்தனை சேவைகளை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    ஜியோ ஜிகாஃபைபர் சேவையில் அதிகபட்சம் 40 சாதனங்களை ஸ்மார்ட் ஹோம் நெட்வொர்க்கில் ரூ.1,000 கட்டணத்தில் இணைக்க முடியும் என கூறப்படுகிறது. ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் வெளியிடப்பட்டது.

    தற்சமயம் இந்த சேவை தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டும் கிடைக்கிறது. இதனை பயன்படுத்த பயனர்கள் ரூ.4,500 எனும் ஒருமுறை பாதுகாப்பு கட்டணமாக செலுத்த வேண்டும்.



    ஜியோ ஜிகாஃபைபர் சேவை தற்சமயம் பிரீவியூ சலுகையாக வழங்கப்படுகிறது. இதில் அவர்களுக்கு மாதம் 100 ஜி.பி. டேட்டா 100Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. ஜியோ ஜிகாஃபைபருடன் பிராட்பேண்ட்-லேண்ட்லைன்-டி.வி. என மூன்று சேவைகளை ரூ.600 கட்டணத்தில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 600 தொலைகாட்சி சேனல்கள் மற்றும் 100Mbps வேகத்தில் டேட்டா உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜியோ ஜிகாஃபைபர் பயன்படுத்துவோருக்கு லேண்ட்லைன் மற்றும் தொலைகாட்சி சேவைகள் அடுத்த மூன்று மாதங்களில் வழங்கப்படும் என்றும் இவை அடுத்த ஒரு ஆண்டிற்கு இலவசமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    காம்போ சேவைகளை இயக்க ரிலையன்ஸ் ஜியோ ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் ரவுட்டரை பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ரவுட்டர் கொண்டு 40 முதல் 45 சாதனங்கள், மொபைல் போன்கள், ஸ்மார்ட் டி.வி.க்கள், லேப்டாப்கள் மற்றும் கனெக்ட்டெட் சாதனங்களை இணைக்க முடியும் என கூறப்படுகிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் பிராட்பேண்ட் சேவையை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. #BSNL



    பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு பிராட்பேண்ட் சேவையை இலவசமாக வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் சேவையை பயன்படுத்துவோருக்கு டேட்டா பலன்களுடன் கூடிய பிராட்பேண்ட் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.

    புதிய சலுகை பி.எஸ்.என்.எல். சேவை வழங்கப்படும் அனைத்து வட்டாரங்களிலும் பொருந்தும். இதனை ஆக்டிவேட் செய்து கொள்ள வாடிக்கையாளர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு விடுக்க வேண்டும். இதுவரை அதிகாரப்பூர்வமாக சேவை துவங்கப்படாத ரிலையன்ஸ் ஜியோவின் பிராட்பேண்ட் சேவைக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். புதிய முடிவினை எடுத்திருக்கிறது.

    பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 18003451504 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைப்பு விடுத்து பிராட்பேண்ட் சேவைக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ததும், பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களின் முகவரியில் கட்டணமின்றி பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்படும்.



    வழக்கமான பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்துவோர் இதற்கென தனி கட்டணம் செலுத்த வேண்டும், அந்த வகையில் புதிய சலுகையின் பேரில் இந்த கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இலவச பிராட்பேண்ட் சேவை மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். மேலும் சில இலவசங்களை வழங்குகிறது.

    இந்த இணைப்பின் மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 5 ஜி.பி. டேட்டாவினை இலவசமாக வழங்குகிறது. 5 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும், பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் பயனர்கள் கூடுதல் டேட்டாவிற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். தற்சமயம் வரை பி.எஸ்.என்.எல். நிறுவனம் பிராட்பேண்ட் சேவையை மட்டுமே இலவசமாக வழங்குகிறது. இதனால் பயனர்கள் கூடுதல் டேட்டாவிற்கு கட்டணம் செலுத்த வேண்டும். 

    புதிய சலுகையின் மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிராட்பேண்ட் சேவையில் புதிய பயனர்களை சேர்க்க முயற்சிக்கிறது. இத்துடன் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஆண்டு சலுகைகளை வாங்கும் போது 25 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குகிறது. இந்த சலுகை டிசம்பர் 31, 2018 வரை அறிவிக்கப்பட்டு தற்சமயம் மார்ச் 31, 2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்தியாவில் தனது ஃபைபர் பிராட்பேண்ட் சேவையை துவங்கியது. ஃபைபர் பிராட்பேண்ட் சேவையில் ஒரு ஜி.பி. டேட்டா ரூ.1.1 விலையில் வழங்கப்படுகிறது. #bsnl #Broadband



    இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ களமிறங்கியதும், டெலிகாம் சேவை கட்டணம் முழுமையாக மாறிப்போனது. ஜியோவின் மலிவு விலை டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சலுகைகளை தொடர்ந்து மற்ற டெலிகாம் நிறுவனங்களும் தங்களது சேவை கட்டணங்களை குறைக்க ஆரம்பித்தன. 

    டெலிகாம் சேவையை தொடர்ந்து பிராட்பேண்ட் சந்தையில் முகேஷ் அம்பானியின் ஜியோ ஜிகாஃபைபர் சேவைகள் விரைவில் அறிமுகமாக இருக்கின்றன. இந்நிலையில், போட்டிக்கு தயாராகும் வகையில் பி.எஸ்.என்.எல். இந்தியாவில் தனது ஃபைபர் பிராட்பேணேட் சேவைகளை துவங்தியுள்ளது.

    பாரத் ஃபைபர் என அழைக்கப்படும் பிராட்பேண்ட் சேவைகள் அதிகபட்சம் நொடிக்கு 100 எம்பி. வேகத்தில் (100Mbps) டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.500 முன்பணமாக செலுத்த வேண்டும். இந்த தொகை ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் சேவைக்கானதாகும். இதற்கு வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.50 வாடகை செலுத்த வேண்டும். 



    பிராட்பேண்ட் சலுகைகளை பொருத்த வரை பி.எஸ்.என்.எல். பாரத் ஃபைபர் ரூ.777 விலையில் துவங்குகிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு 50Mbps வேகத்தில் 500 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது. டேட்டா மட்டுமின்றி இந்தியா முழுக்க அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை மற்றும் 1 ஜி.பி. மெமரியுடன் இலவச மின்னஞ்சல் அக்கவுண்ட் ஒன்றும் வழங்கப்படுகிறது.

    பி.எஸ்.என்.எல். பாரத் ஃபைபர் விலை உயர்ந்த சலுகை ரூ.16,999 விலையில் வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 100Mbps வேகத்தில் 3500 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் 10Mbps ஆக குறைக்கப்படும். இத்துடன் இந்தியா முழுக்க அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை மற்றும் 1 ஜி.பி. மெமரியுடன் இலவச மின்னஞ்சல் அக்கவுண்ட் ஒன்று வழங்கப்படுகிறது.
    ×