search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளிப்பதக்கம்"

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 7 பிரிவுகளை உள்ளடக்கிய ஹெப்டத்லானில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். #SwapnaBarman
    தோகா:

    23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர்தடை ஓட்டம் உள்பட 7 பிரிவுகளை உள்ளடக்கிய ஹெப்டத்லானில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் மொத்தம் 5,993 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். 

    உஸ்பெகிஸ்தான் வீராங்கனை எகடெரினா வோர்னினா 6,198 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த 22 வயதான ஸ்வப்னா பர்மன் இரண்டு கால்களிலும் தலா 6 விரல்களை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    அவர் கூறுகையில், ‘2-வது இடம் பிடித்தது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. ஈட்டி எறிதலில் எனது செயல்பாடு சரியில்லை. அது மட்டுமின்றி கணுக்காலில் வலி காரணமாக என்னால் நன்றாக தயாராக முடியவில்லை’ என்றார். #SwapnaBarman
    இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை சிம்ரன் வெள்ளிப் பதக்கம் வென்றார். #YouthOlympics #IndianWrestlerSimran
    பியூனஸ் அயர்ஸ்:

    அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 43 கிலோ எடைப்பிரிவு பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. தகுதிச்சுற்றுகளில் எளிதில் முன்னேறி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த இந்திய வீராங்கனை சிம்ரன், இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் எமிலி ஷில்சனிடம் தோல்வியடைந்தார்.



    துவக்கத்தில் சற்று முன்னிலை வகித்த சிம்ரன், அதன்பின்னர் 6-11 என்ற நிலையில் பின்தங்கி தோல்வியை சந்தித்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் இந்தியா மொத்தம் 3 தங்கம், 5 வெள்ளி பதக்கங்கள் பெற்றுள்ளது. #YouthOlympics #IndianWrestlerSimran
    அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை தங்ஜம் தபாபி தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார். #TababiDeviThangjam
    பியூனஸ் அயர்ஸ்:

    3-வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. 206 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் இந்தியா சார்பில் 47 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான ஜூடோ போட்டியின் 44 கிலோ உடல் எடைப்பிரிவில் இறுதிபோட்டியில் இந்திய வீராங்கனை தங்ஜம் தபாபி தேவி 0-11 என்ற புள்ளி கணக்கில் வெனிசுலா வீராங்கனை மரியா கிமின்சிடம் தோல்வி கண்டார். இதனால் தங்ஜம் தபாபி தேவி வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதானது.

    வெள்ளிப்பதக்கம் வென்ற தங்ஜம் தபாபி தேவி மணிப்பூரை சேர்ந்தவர். ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பந்தயத்தில் இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். முன்னதாக நடந்த துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் இந்திய வீரர் துஷர் மானே 247.5 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ரஷிய வீரர் கிரிகோரி ஷமாகோவ் 249.2 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், செர்பியா வீரர் அலெக்சா மிட்ரோவிச் 227.7 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.  #TababiDeviThangjam
    52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான ஜூனியர் ஸ்கீட் பிரிவில் இந்திய வீரர் குர்னிஹால் சிங் வெண்கலப்பதக்கத்தை வென்றார். #JuniorShooter #India ##ISSFWCH
    சாங்வான்:

    52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஜூனியர் ஸ்கீட் பிரிவில் இந்திய வீரர் 19 வயதான குர்னிஹால் சிங் 46 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

    இத்தாலி வீரர் எலியா ஸ்ட்ருச்சியோலி தங்கப்பதக்கமும் (55 புள்ளி), அமெரிக்காவின் நிக் மாஸ்செட்டி வெள்ளிப்பதக்கமும் (54 புள்ளி) பெற்றனர். இதன் அணிகள் பிரிவில் குர்னிஹால் சிங், அனட்ஜீத்சிங் நருகா, ஆயுஷ் ருத்ராராஜூ ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 355 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.

    செக்குடியரசு தங்கப்பதக்கமும் (356 புள்ளி), இத்தாலி வெண்கலப்பதக்கமும் (354 புள்ளி) வென்றது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 7 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 22 பதக்கங்களுடன் 4-வது இடம் வகிக்கிறது.  #JuniorShooter #India ##ISSFWCH
    ×