என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 111277
நீங்கள் தேடியது "கேமிங்"
பப்ஜி மொபைல் கேமினை உருவாக்கிய பப்ஜி கார்ப் நிறுவனம் கடந்த ஆண்டு முழுக்க ஈட்டிய வருவாய் தொகை விவரம் வெளியாகியுள்ளது. #PUBG
உலகின் பிரபல கேமாக இருக்கும் பப்ஜியை உருவாக்கிய பப்ஜி கார்ப் நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 92 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.6,362 கோடி) வருவாய் ஈட்டியிருக்கிறது. இதில் மொத்த லாபம் 31 கோடி (இந்திய மதிப்பில் ரூ.2,143) ஆகும்.
மொத்த வருவாயில் பெருமளவு பங்கு கம்ப்யூட்டருக்கான பப்ஜியில் இருந்து கிடைக்கிறது. முதற்கட்டமாக பப்ஜி கேம் கம்ப்யூட்டரில் அறிமுகமாகி அதன்பின் இதன் மொபைல் பதிப்பை டென்சென்ட் கேம்ஸ் உருவாக்கியது. பப்ஜி கேம் விதிகளை பொருத்தவரை கேம் துவங்கும் போது பயனர் வானில் இருந்து தீவு ஒன்றில் இறங்க வேண்டும்.
தீவில் இறங்கியதும் அவர்களுக்கான சவால்கள் இருக்கும், அவற்றை எதிர்கொண்டு தனியே இருக்கும் கடைசி நபர் வெற்றி பெற்றவராக முடியும். கம்ப்யூட்டருக்கான பப்ஜி கேம் மட்டும் சுமார் 79 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.5,463 கோடி) வருவாய் ஈட்டியிருக்கிறது.
கன்சோல்கள் மற்றும் மொபைல் பதிப்புகளில் இருந்து பப்ஜி கேம் வருவாய் முறையே ரூ.414 கோடி மற்றும் ரூ.450 கோடிகளை ஈட்டியிருக்கிறது. பப்ஜி கார்ப் வருவாய் விவரங்கள் VG247 மூலம் வெளியாகியிருக்கிறது. பப்ஜி கேம் ஆசிய கண்டத்தில் மிகவும் பிரபலமான கேமாக இருக்கிறது.
ஆசியாவில் மட்டும் பப்ஜி வருவாயில் சுமார் 53 சதவிகிதம் வருவாய் கிடைத்திருக்கிறது. ஆசியாவை தொடர்ந்து வட அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்டவை அதிக வருவாய் ஈட்டித்தரும் பகுதிகளாக இருக்கின்றன.
பப்ஜி மொபைல் விளையாட அதிக எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளதை தொடர்ந்து அதிக நேரம் விளையாடினால் எச்சரிக்கை செய்யும் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. #PUBGMobile
குரஜராத் அரசாங்கம் பப்ஜி மொபைல் கேம் விளையாட இந்த ஆண்டு துவக்கத்தில் தடை விதித்தது. இந்த கேம் விளையாடுவோர் அதற்கு அடிமையாவதை தடுக்கும் நோக்கில் கேம் விளையாட தடை விதிப்பதாக அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், தடையை மீறி பப்ஜி விளையாடிய பத்து பேர் சமீத்தில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கேம் விளையாட விதிக்கப்பட்டிருக்கும் தடையை கருத்தில் கொண்டும் இதேபோன்று மற்ற பகுதிகளில் கேம் விளையாட தடை ஏற்பட கூடாது என்பதால் இந்த கேமினை உருவாக்கியவர்கள் கேமில் சில மாற்றங்களை செய்திருக்கின்றனர். அதன்படி தொடர்ந்து அதிக நேரம் பப்ஜி விளையாடும் போது திரையில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறும்.
ஹெல்த் ரிமைண்டர் என அழைக்கப்படும் இந்த அம்சம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து பப்ஜி விளையாட முற்படும் போது, கேமினை நிறுத்திவிடும். பின் கேம் சொல்லும் நேரத்தில் மீண்டும் விளையாட முடியும். இது தொடர்ந்து அதிக நேரம் பப்ஜி விளையாடுவோருக்கு இடைவெளி போன்று அமைகிறது.
பப்ஜி விளையாடுவோரில் 18 வயதுக்கு உட்பட்டவர்களிடம் ஹெல்த் ரிமைண்டர்களை ஆக்டிவேட் செய்ய கேம் கோருகிறது. இந்த அம்சம் ஆக்டிவேட் ஆனதும், தொடர்ந்து ஆறு மணி நேரங்களுக்கும் அதிகமாக பப்ஜி விளையாடினால் கேம் தானாக நிறுத்தப்பட்டு விடுகிறது.
சிலருக்கு இந்த இடைவெளி இரண்டு மணி நேரங்களிலும் ஏற்படுவதாக சிலர் தெரிவிக்கின்றனர். இதுவரை இந்த இடைவெளியை கடக்கும் வழிமுறை பற்றி எவ்வித தகவலும் இல்லை. பப்ஜி விளையாடுவோர் மத்தியில் ஹெல்த் ரிமைண்டர் அம்சத்திற்கு கலவையான விமர்சங்கள் எழுந்துள்ளன.
சிலர் திடீரென கேம் நிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். 18 வயத்துக்கும் அதிகமானவர்களுக்கும் ரிமைண்டர் வருவதாக சிலர் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த அம்சம் எதிர்ப்புக்குரல் எழுப்புவோருக்கு சற்று ஆறுதலான விஷயமாகவே இருக்கும்.
ஏற்கனவே பப்ஜி கேம் தொடர்பான கருத்துக்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்து தடையை விலக்குவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதாக பப்ஜி உருவாக்கிய டென்சென்ட் மொபைல்ஸ் தெரிவித்தது. மேலும் இந்த விவகாரத்தில் முறையான தீர்வை எட்ட முயற்சி செய்வதாகவும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
கூகுள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ஸ்டேடியா எனும் கேமிங் சேவையை அறிமுகம் செய்தது. #Google
கூகுள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது கேமிங் சேவையை அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற ஜி.டி.சி. 2019 நிகழ்வில் கூகுள் தனது கேமிங் சேவையை அறிமுகம் செய்தது. கூகுள் ஸ்டேடியா என அழைக்கப்படும் புதிய சேவையை கொண்டு தொலைகாட்சியில் கேம்களை விளையாடலாம்.
இதுமட்டுமின்றி கூகுள் ஸ்டேடியா பயன்படுத்தி கூகுள் க்ரோம்காஸ்ட் அல்ட்ரா கொண்டு லேப்டாப், டெஸ்க்டாப், டேப்லெட், அல்லது மொபைல் போன் உள்ளிட்டவற்றில் 4K தரம் நொடிக்கு 60 ஃபிரேம் வேகம் ஹெச்.டி.ஆர். தரத்தில் சரவுண்ட் சவுண்ட் நுட்பத்தில் கேம் விளையாடலாம்.
ஸ்டேடியா கேமிங் சேவை முழுமையாக ஆன்லைனில் விளையாட வேண்டும் என்பதால், இண்டர்நெட் இணைப்புக்கு ஏற்ப கேம்பிளே அனுபவம் ஒவ்வொருத்தருக்கும் மாறுபடும். கேம்களை உருவாக்க கூகுள் தனது டெவலப்பர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளது. ஸ்டேடியாவின் கிரவுட் பிளே அம்சம் கொண்டு பார்வையாளர்கள் நேரலையில் ஸ்டிரீம் செய்யப்படும் கேமில் கலந்துகொள்ளலாம்.
கூகுளின் டேட்டா சென்டருடன் நேரடியாக இணைக்கப்படும் ஸ்டேடியா கண்ட்ரோலரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கேமிங் அனுபவத்தை வைபை இணைப்பின் மூலம் சிறப்பாக மேம்படுத்த முடியும். இதில் வழங்கப்பட்டிருக்கும் இன்ஸ்டன்ட் கேப்ச்சர் அம்சம் கொண்டு கேம்பிளேக்களை 4K தரத்தில் யூடியூபில் பகிர்ந்து கொள்ள முடியும்.
இத்துடன் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் மற்றும் பில்ட்-இன் மைக்ரோபோன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கூகுள் ஸ்டேடியா ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பகுதிகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளில் அறிமுகம் செய்வது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
கூகுள் ஸ்டேடியா அறிமுக வீடியோவை கீழே காணலாம்
Welcome to #Stadia, an all-new way to play from @Google. Coming in 2019. pic.twitter.com/Hlj0fVw3zC
— Stadia (@GoogleStadia) March 19, 2019
இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் விளையாடியவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து டென்சென்ட் இந்தியா களத்தில் குதித்திருக்கிறது. #PUBG
குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் பப்ஜி விளையாடியதாக பத்து பேர் கைது செய்யப்பட்டதற்கு டென்சென்ட் இந்தியா அதிர்ச்சி தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பப்ஜி மொபைல் வெறும் கேம் தான். இதனை பொழுதுபோக்காக மட்டுமே எடுத்துக் கொண்டு ஆரோக்கியம் மற்றும் பொறுப்புணர்வுடன் அணுக வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சில நகரங்களில் பப்ஜி விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களில் பெற்றோர்களும், சில பள்ளி நிர்வாகத்தினரும் பப்ஜி மொபைல் கேமிற்கு எதிராக தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அவர்களை பொருத்தவரை பப்ஜி மொபைல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வியை பாதிக்கும் ஒன்றாக பாரக்கப்படுகிறது.
இந்நிலையில், அவர்களது கவலையை போக்கும் வகையில், இந்தியாவுக்கென ஆரோக்கியமான கேம்பிளே அமைப்பை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம் என டென்சென்ட் இந்தியா தெரிவித்திருக்கிறது. இதுதவிர குறைந்த வயதுடையோருக்கு கேம் விளையாடும் நேரத்தை குறைப்பதற்கான பணிகளும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
இதனால் எதிர்காலத்தில் பப்ஜி மொபைல் கேம் விளையாடும் போது, பயனர்கள் தினமும் எவ்வளவு நேரம் விளையாட வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளும் வசதி மொபைல் இன்டர்ஃபேசில் இடம்பெறும் என தெரிகிறது. பப்ஜி மொபைல் மீதான தடை பற்றி அதன் டெவலப்பர்கள் கூறும் போது, இந்த கேமிற்கு எதிராக வரும் கருத்துக்களை புரிந்து கொள்ள விரும்புகிறோம்.
மேலும் இந்த கேம் தொடர்பான எங்களது கருத்துக்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்து தடையை விலக்குவதற்கான பணிகளை தொர்ந்து செய்வோம். பப்ஜி மொபைல் விளையாடுவோருடன் நாங்கள் இருக்கிறோம், இந்த விவகாரத்தில் முறையான தீர்வை எட்ட முயற்சி செய்கிறோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன் ராஜ்கோட்டில் தடையை மீறி பப்ஜி மொபைல் கேமினை விளையாடியதாக பத்து பேரை போலீசார் கைது செய்தனர். குஜராத் மாநிலத்தில் பப்ஜி மொபைல் மற்றும் மோமோ சவால்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மார்ச் 6 ஆம் தேதி சிறப்பு அரசாணையை அம்மாநில அரசு பிறப்பித்து இருந்தது.
பிளேயர் அன்-நோன் பேட்டிள்கிரவுன்ட் (பப்ஜி) பிளே ஸ்டேஷன் 4இல் வெளியாகிறது. இதன் வெளியீடு மற்றும் பி.எஸ். 4 டிஸ்க் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #PUBG #Playstation4
பிளேயர் அன்-நோன் பேட்டிள்கிரவுன்ட் (பப்ஜி) கேம் பிளே ஸ்டேஷன் 4ல் அறிமுகமாவது உறுதியாகி இருக்கிறது. பப்ஜி கார்ப் மற்றும் சோனி இத்தகவலை உறுதி செய்திருப்பதோடு, இவை டிஸ்க் வடிவில் சர்வதேச சந்தையில் கிடைக்கும் என தெரிவித்துள்ளன.
பப்ஜி பி.எஸ்.4 இந்திய வெளியீடு குறித்து சோனி இந்தியா சார்பில் எவ்வித தகவலும் இல்லாத நிலையில், பல்வேறு விற்பனையாளர்கள் பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் இந்திய வெளீயட்டை உறுதி செய்துள்ளன. இது பப்ஜி பி.எஸ்.4 டிஜிட்டல் வெர்ஷனை விட விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் விலை ரூ.1,999 முதல் துவங்குகிறது. சர்வதேச சந்தையில் டிசம்பர் 7ம் தேதி அறிமுகமாகும் நிலையில், இதே தேதியில் இந்தியாவிலும் கிடைக்கும் என தெரிகிறது. இந்தியாவில் டிஜிட்டல் வடிவம் ரூ.2,750 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், டிஸ்க் விலை ரூ.1,999 முதல் துவங்குகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் கிடைக்கும்.
பப்ஜி பி.எஸ்.4 விலை மற்றும் விவரங்கள்
டிஸ்க் எடிஷன் பேஸ் கேம் விலை ரூ.1,999
லூட்டர்ஸ் டிஜிட்டல் எடிஷன் பேஸ் கேம் விலை ரூ.2,750
சர்வைவர்ஸ் டிஜிட்டல் எடிஷன்
பேஸ் கேம், விகென்டி ஈவென்ட் பாஸ், 2,300 ஜி-காயின் பேக், 20,000 விலை ரூ.2,750
சேம்பியன் டிஜிட்டல் எடிஷன்
பேஸ் கேம், விகென்டி ஈவென்ட் பாஸ், 6,300 ஜி-காயின் பேக், 20,000 விலை ரூ.3,999
பப்ஜி சர்வைவர்ஸ் மற்றும் லூட்டர்ஸ் எடிஷன் டிஸ்க் ஒரே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது சோனி தரப்பில் நடைபெற்று இருக்கும் பிழையாக இருக்கலாம் என்றும் இது திறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளே ஸ்டேஷனில் பப்ஜி கேமின் வெளியீட்டு தேதி அமேசான் மூலம் தெரியவந்து இருக்கிறது. #PUBG #PlayStation4
ஸ்மார்ட்போன்களில் பிரபலமாக இருக்கும் பப்ஜி கேம் பிளே ஸ்டேஷன் 4 சாதனத்திற்கு வழங்கப்பட இருக்கும் நிலையில் இதன் வெளியீட்டு தேதி அமேசான் மூலம் தெரியவந்துள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் நவம்பர் மாதத்தில் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் அமேசான் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் பிளே ஸ்டேஷன் 4ல் பப்ஜி கேம் டிசம்பர் 8ம் தேதி வழங்கப்படும் என தெரிகிறது. பிளே ஸ்டேஷனில் அறிமுகமானதும் பப்ஜி கேம், ஸ்மார்ட்போன், எக்ஸ்பாக்ஸ் ஒன் மற்றும் கம்ப்யூட்டர் என அனைத்து தளங்களிலும் கிடைக்கும்.
பிளே ஸ்டேஷன் 4 சாதனத்தில் பப்ஜி கேம் சில மாற்றங்களுடன் வழங்கப்படுகிறது. பிளே ஸ்டேஷனில் விளையாடுவதற்கு ஏற்ப அந்த மாற்றங்கள் இருக்கும் என்பதால், கேமின் அனுபவம் வேறாக இருக்கும். பிளே ஸ்டேஷனுக்கென பப்ஜியில் வடிவமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அமேசானில் வெளியீட்டு விவரம் பிழை காரணமாக இடம்பெற்று இருந்த நிலையில், உடனடியாக பதிவு நீக்கப்பட்டு விட்டது.
முன்னதாக ரெஸ்ட்இரா எனும் கேமிங் தளம் மற்றும் பி.எஸ்.என்.ப்ரோஃபைல்ஸ் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியான தகவல்களில் பி.எஸ்.4 கேமிங் டேட்டாபேசில் பப்ஜி இருப்பதை உறுதிப்படுத்தின.
செப்டம்பர் மாதத்தில் கொரிய கேம் ரேட்டிங் மற்றும் நிர்வாக குழு பி.எஸ்.4-க்கான பப்ஜி கேமினை வரிசைப்படுத்தி இருந்தது. சமீபத்தில் எக்ஸ்பாக்ஸ் ஒன் (Xbox One) தளத்தில் பப்ஜி 1.0 வெளியிடப்பட்ட நிலையில் மற்ற தளங்களிலும் பப்ஜி வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X