search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிலிப்பைன்ஸ்"

    பிலிப்பைன்சில் மங்குட் புயல் தாக்கியதையடுத்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. #Mangkhut
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘மங்குட்’ என்ற புயல் இன்று கடுமையாக தாக்கியது. இது இந்த ஆண்டின் மிக சக்தி வாய்ந்த புயல் என கருதப்படுகிறது. புயல் காரணமாக பிலிப்பைன்சின் வடக்கு கடற்கரை பகுதியில் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.  மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. மின்சாரம் தடைபட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    காற்று கடுமையாக வீசுவதால் சேதம் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ‘மங்குட்’ புயல் 4-வது ரகம் என கணிக்கப்பட்டுள்ளது. இது ககபான், வடக்கு இசபெல்லா, அபயாவோ மற்றும் அபாரா மாகாணங்களில் கடும் சேதத்தை விளைவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கு முன்பு 2013-ம் ஆண்டில் ‘கையான்’ என்ற சூப்பர் புயல் பிலிப்பைன்சை தாக்கியது. அதில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.


    இதேபோன்று இந்த ‘மங்குட்’ புயலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இப்புயலினால் 40 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

    புயல் காரணமாக பிலிப்பைன்சில் கடல் மற்றும் வான்வழி மார்க்க பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இங்கு ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.

    ‘மங்குட்’ புயல் பக்காயோ என்ற இடத்தில் கரையை கடந்தது. அது இன்று மாலை ஹாங்காங் பகுதியில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Mangkhut
    தென் சீனக்கடல் பகுதியில் போர் விமானங்களை இறக்கி சோதனை செய்த விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக தேவையான தூதரக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிலிப்பைன்சிஸ் தெரிவித்துள்ளது.
    மணிலா:

    சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதி முழுவதும் தங்களுக்குரியது என உரிமை கொண்டாடி வரும் சீனா அங்கு செயற்கை தீவுகளை உருவாக்கி ராணுவ தளவாடங்களை குவித்து வருகிறது.

    அதே சமயம் தென் சீனக்கடல் பகுதியில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக உரிமை கோரும் பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், மலேசியா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆட்சேபனை தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் சீனா கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘எச்-6கே’ ரக குண்டு வீச்சு விமானம் உள்பட பல்வேறு போர் விமானங்களை தென் சீனக்கடல் பகுதியில் தரை இறக்கி சோதனையில் ஈடுபட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக ஆழ்ந்த கவலை தெரிவித்து உள்ள பிலிப்பைன்ஸ், இதற்காக சீனா மீது தூதரக ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளது. பிலிப்பைன்சின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் சீனக்கடல் விவகாரத்தில் பிலிப்பைன்சின் நிலைப்பட்டை உறுதி செய்யும் விதமாக சீனாவுக்கு எதிராக தேவையான தூதரக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும், நாட்டின் இறையாண்மைக்கு சொந்தமான பிரதேசங்கள் மற்றும் பகுதிகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் பிலிப்பைன்ஸ் பாதுகாக்கும் என்பதை உறுதிபட தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 
    ×