search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திப்பு"

    அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் ஆகிய இருவரும் அடுத்த மாதம் ஜூலை 16-ம் தேதி பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். #TrumpPutinSubmmit #HelsinkiSummit
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றது முதலே ரஷியாவும் சர்ச்சைகளில் சிக்கி வந்தது. அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற ரஷிய உளவுத்துறை வேலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ விசாரித்து வருகிறது.

    எனினும், இந்த குற்றச்சாட்டுகளை இரு நாடுகளும் மறுத்து வருகின்றன. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் பனிப்போர் நீடித்து வரும் நிலையில், மூன்றாம் நாட்டில் சந்திப்பு நடத்த இரு தலைவர்களும் தயாராக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் 16-ம் தேதி பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் டிரம்ப் - புதின் சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை இன்று அறிவித்துள்ளது.

    இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ள இரு தலைவர்களும், கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, கடந்தாண்டு ஜெர்மனியில் நடந்த ஜி-5 உச்சி மாநாட்டில் இருவரும் சந்தித்து பேசியிருந்தனர். ஆனால், பின்லாந்தில் நடக்க இருக்கும் இந்த சந்திப்பு விரிவானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 12-ம் தேதி வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சிங்கப்பூரில் சந்தித்து பேசிய டிரம்ப், வரலாற்றில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ரஷியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி சோச்சி நகரில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை இன்று சந்தித்து இரு தரப்பு உறவுகளை முன்னேற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். #ModiInRussia
    மாஸ்கோ:

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் முறைசாரா பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். சோச்சி நகரில் நடந்து வரும் இந்த சந்திப்புக்கு வருகை தந்த மோடியை, புதின் கைக்குலுக்கி கட்டியணைத்து வரவேற்றார். இதனை அடுத்து, இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதித்து வருகின்றனர்.

    “இந்த பேச்சுவார்த்தைக்கு என்னை அழைத்ததற்கு அதிபர் புதினுக்கு நன்றி. ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில் இந்தியா நிரந்தர உறுப்பினராகும் விஷயத்தில் ரஷியா முக்கிய பங்களித்து வருகிறது. பிரிக்ஸ் மற்றும் ஐஎன்எஸ்டிசி அமைப்புகள் மூலம் இரு நாடுகளும் ஒன்றினைந்து பணியாற்றுவோம்” என பேச்சுவார்த்தையின் போது மோடி கூறினார். 
    மத்திய வெளியுறவு இணை மந்திரி வி.கே சிங் திடீர் அரசுமுறை பயணமாக வடகொரியா சென்றுள்ளார். 20 ஆண்டுகளுக்கு பின்னர் இரு நாடுகளுக்கு இடையே உயர்மட்ட அளவிலான சந்திப்பு நடந்துள்ளது. #India #NorthKorea
    பியான்ங்யன்ங்:

    ஏவுகணை சோதனை, அணு ஆயுத பரிசோதனை ஆகியவற்றை ஓரங்கட்டிவிட்டு மற்ற நாடுகளுடன் உறவை மேம்படுத்த முடிவு செய்துள்ள வடகொரியா, முதற்கட்டமாக தென்கொரியா உடன் பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

    இதன் பின்னர், அடுத்த மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சிங்கப்பூரில் சந்திக்க உள்ளார். இந்நிலையில், மத்திய வெளியுறவு இணை மந்திரி வி.கே சிங் நேற்று முன் தினம் திடீரென முன்னறிவிப்பு இன்றி வடகொரியா சென்றுள்ளார்.

    அந்நாட்டு துணை அதிபர் கிம் யோங் டேய் மற்றும் வெளியுறவு, கலாச்சார துறை மந்திரிகளை வி.கே சிங் சந்தித்துள்ளார். பிராந்திய அரசியல் சூழல், பொருளாதாரம், கல்வி மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

    வடகொரியாவுக்கு பாகிஸ்தானுடன் உள்ள அணு ஆயுத உறவு குறித்து வி.கே சிங் தனது கவலையை தெரிவித்துள்ளார். கடந்த திங்கள் அன்று வடகொரியாவுக்கான இந்திய தூதராக அதுல் கோட்சர்வ் நியமிக்கப்பட்டார். பதவி்யேற்ற இரண்டு நாட்களில் இந்தியா - வடகொரியா இடையே உயர்மட்ட சந்திப்பை அவர் நடத்த முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

    கடைசியாக கடந்த 1998-ம் ஆண்டு இந்தியா - வடகொரியா இடையே உயர்மட்ட சந்திப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது. #India #NorthKorea
    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று திடீரென சந்தித்து பேசினார். #MKStalin #KamalHaasan
    சென்னை:

    காவிரி விவகாரத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். மே 19-ம் தேதி நடக்க உள்ள இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விஜயகாந்த், திருமாவளவன், தமிழிசை உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்நிலையில், திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், காவிரி விவகாரம் தொடர்பாக மே 19இல் நடைபெறவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ரஜினியையும் அழைக்க உள்ளேன். ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்பதே ஆலோசனை கூட்டத்தின் பெயர். என கூறினார்.

    கமல்ஹாசனின் கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என மு.க ஸ்டாலின் அதன்பின்னர் தெரிவித்தார். #MKStalin #KamalHaasan
    ×