என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருக்கனூர்"
புதுவையில் பிப்ரவரி மாதம் முதலே கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
காலை 9 மணிக்கே வெயில் தாக்கம் தொடங்கி விடுகிறது. நேரம் செல்ல, செல்ல வெயிலின் உக்கிரம் அதிகரித்தபடியே உள்ளது. இதனால் பகல் வேளையில் வெயிலுக்கு பயந்து பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி போய் உள்ளனர்.
இதற்கிடையே கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில் புதுவையில் மழை பெய்யவில்லை. இதனால் இரவு வேளையில் ஏழை மக்கள் மற்றும் நடுத்தரமக்கள் புழுக்கத்தினால் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருக்கனூர் பகுதியில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மழை கொட்டியதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசினாலும் மின் இணைப்பு துண்டிப்பால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். திருக்கனூர் கடை வீதியில் மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது.
திருக்கனூர் பகுதியில் பலத்த மழை கொட்டிய நிலையில் புதுவை நகர பகுதியில் சிறிய தூறல் மழை மட்டுமே பெய்தது குறிப்பிடத்தக்கது.
திருக்கனூர்:
திருக்கனூர்- மண்ணாடிப்பட்டு மெயின் ரோட்டில் பிரசித்தி பெற்ற ஆத்மலிங்கேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினமும் சாமிதரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை பணம் செலுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் கோவிலின் முன்பக்க இரும்பு கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது போல் திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு தேவனாத பெருமாள் கோவிலில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியல் பணத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
திருக்கனூர் பகுதியில் ஒரே நாள் இரவில் 2 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருக்கனூர்:
திருக்கனூர் அருகே காட்டேரிகுப்பம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரந்தாமன். விவசாயி. இவரது மனைவி சங்கரி (வயது 38).
இவர் நேற்று காரில் தனக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள வயல்வெளிக்கு ஓட்டி சென்றார்.
அப்போது வயல் வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் சங்கரி மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சங்கரியை அருகில் வயல் வேலையில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சங்கரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மின்சாரம் தாக்கி பலியான சங்கரிக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்