search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்ணூர்"

    கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். #LokSabhaElections2019 #PinarayiVijayan
    கண்ணூர்:

    பாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மற்றும் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

    பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.  அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டம்  பினராயி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.



    கர்நாடக மாநிலம் ஷிமோகா தொகுதி பாஜக வேட்பாளர் ராகவேந்திரா ஷிகாரிபுரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, வாக்களிப்பதற்காக இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றார். காந்தி நகரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்ற அவர், தன் தாயாரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். மேலும் தன்னை பார்ப்பதற்காக வீட்டின் வெளியே திரண்டிருந்த மக்களையும் மோடி சந்தித்து பேசினார்.  #LokSabhaElections2019 #PinarayiVijayan
    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் இன்று காலை புதர்மறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தில்லன்சேரி பகுதியில் உள்ள சாலையில் இன்று காலை தொழிலாளர்கள் சாலை அருகே உள்ள புதர்களை வெட்டி சுத்தம் செய்தனர்.

    அப்போது ஒரு வாழைமரத்தடியில் பந்து வடிவில் 2 மர்ம பொருட்கள் இருந்தன. சந்தேகம் அடைந்த தொழிலாளர்கள் முழக்குன்னு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். முழக்குன்னு போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    2 மர்ம பொருளை பத்திரமா மீட்டு மணல் போட்ட ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் வைத்தனர். மர்ம பொருளை சோதனை செய்தபோது நிபுணர்கள் அதிர்ச்சியடைந்தனர். மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு என்பதும், இது வெடித்தால் சுமார் 1 கி. மீட்டருக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினர். இந்த பகுதியில் பா. ஜனதாவுக்கும், கம்யூனிஸ்ட்டு கட்சிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இதனால் தொண்டர்கள் வெட்டு, குத்து, வெடிகுண்டு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த வெடிகுண்டு கிடைத்துள்ளது. எனவே திட்டமிட்டு ஒரு தரப்பினர் கலவரத்தை ஏற்படுத்திவிட்டு அப்போது இந்த குண்டுகளை வீச சதி திட்டம் தீட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

    கைப்பற்றப்பட்ட 2 வெடிகுண்டுகளையும் கண்ணூர் மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு நிபுணர்கள் எடுத்துச்சென்றனர். இது குறித்து முழக்குன்னு போலீசார் மற்றும் கண்ணூர் மாவட்ட தலைமை போலீசார் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். உளவுத்துறை போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    தாங்கள் கண்டு பிடித்தது வெடிகுண்டு என்று தெரிந்ததும் தொழிலாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். #Tamilnews
    ×