search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கோ"

    காங்கோ நாட்டில் நடாகாஷி மற்றும் மடாபிஷி என்கிற 2 கொரில்லாக்கள் ‘செல்பி’க்கு போஸ் கொடுக்கிற போது மனிதர்களை போலவே விதவிதமாக முகபாவனைகளை மாற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. #Gorilla #CongoPark #Selfie
    கின்ஷாசா:

    மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் விருங்கா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு கொரில்லா வகை குரங்குகள் பாதுகாக் கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு வனத்துறை ஊழியராக பணியாற்றும் மேத்யூ ஷவாமு, என்பவர் கொரில்லாக்கள் குட்டிகளாக இருக்கும் போதே, அவற்றுடன் விதவிதமாக ‘செல்பி’ எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.



    அவரின் இந்த பழக்கமானது அங்குள்ள நடாகாஷி மற்றும் மடாபிஷி என்கிற 2 கொரில்லாக்களை ‘செல்பி’க்கு அடிமையாக்கிவிட்டது. மேத்யூ ஷவாமு செல்போனை தூக்கினாலே அந்த 2 கொரில்லாக்களும் வேகமாக வந்து போட்டோக்களுக்கு ‘போஸ்’ கொடுக்கின்றன.

    அது மட்டும் இன்றி அந்த 2 கொரில்லாக்களும், ‘செல்பி’க்கு போஸ் கொடுக்கிற போது மனிதர்களை போலவே விதவிதமாக முகபாவனைகளை மாற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. அந்த வகையில், மேத்யூ ஷவாமு அண்மையில் அந்த 2 கொரில்லாக்களுடன் எடுத்த ‘செல்பி’ படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

    இதனை ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள் அதிக அளவில் இந்த படங்களை பகிர்ந்து வருகின்றனர். இதனால் இந்த படம் உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது.   #Gorilla #CongoPark #Selfie
    ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதல் காரணமாக 200 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #EbolaVirus #Congo
    கின்ஷசா:

    ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோய் (ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோயினால் அங்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் 298 பேருக்கு கடும் காய்ச்சல் தாக்கி உள்ளது. அதில் 263 பேருக்கு எபோலா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 35 பேருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.



    இந்த நோய் தாக்கியவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வடக்கு கிவு பிராந்தியத்தில் உள்ள பேனி நகரை சேர்ந்தவர்கள், அங்கு 8 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள் என அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    இப்படி அங்கு எபோலா வைரஸ் தாக்கி வருகிற நிலையில், சிகிச்சை அளிக்கிற மருத்துவ குழுவினருக்கு ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் தொல்லைகள் கொடுத்து வருவதாக அந்த நாட்டின் சுகாதார துறை மந்திரி ஒளி இலுங்கா கூறினார்.

    காங்கோ நாட்டைப் பொறுத்தமட்டில், எபோலா வைரஸ் நோயை எதிர்த்து போராடுகிறபோது, பாதுகாப்பு பிரச்சினை பெரும் சவாலாக அமைந்துள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரஸ் அதனாம் கேப்ரேயெசஸ் தெரிவித்தார்.  #EbolaVirus #Congo 
    தென் ஆப்பிக்க நாடான காங்கோவில் மீண்டும் ஏற்பட்ட எபோலா வைரஸ் நோய் தாக்கத்தினால் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. #Ebolavirus #Ebola
    காங்கோ:

    தென் ஆப்பிரிக்க நாடுகளில் 1976-ம் ஆண்டுகளில் இருந்து கொடூரமான நோயாக கருதப்பட்டது எபோலா என்னும் உயிர்கொல்லி நோய். இந்த வைரசின் தாக்கத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். தென் ஆப்பிரிக்காவின் வடமேற்கு நாடான காங்கோவில் எபோலா நோய் பரவி வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

    இந்நிலையில், கடந்த வாரம் காங்கோவின் வடக்கு பகுதிகளில் 22 பேர் எபோலா வைரஸ் தாக்கி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கிழக்கு காங்கோவில் எபோலா நோய் பாதிப்பு காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 879 பேருக்கு எபோலா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

    உலக சுகாதார நிறுவனம் அனுப்பியுள்ள எபோலா வைரஸ் தடுப்பு மருந்துகள் மூலம் அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. 

    காங்கோவில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் இயங்கி வரும் நிலையில் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள எபோலா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான மருந்து உள்ளிட்ட உதவிப்பொருட்களை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

    எபோலா கிருமியினால் இந்நோய் உண்டாக்கப்படுகிறது. இந்தக் கிருமியானது தொற்று ஏற்பட்டுள்ள ஒரு விலங்கின் ரத்தம் அல்லது உடல் திரவங்களால் பரப்படுகிறது. பழம் தின்னும் வௌவால்கள் கிருமியைக் பரப்புவதாக கூறப்படுகிறது.  #Ebolavirus #Ebola
    காங்கோ நாட்டில் மீண்டும் எபேலா வைரஸ் நோய் பரவத்தொடங்கி உள்ளதாகவும், கடந்த சில தினங்களில் இந்த வைரஸ் நோய் தாக்கி 23 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Congo #EbolaVirus
    கின்சசா:

    விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய எபோலா வைரஸ் நோய், உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

    இந்த நோய் முதலில் 2013-ம் ஆண்டு, ஆப்பிரிக்க நாடுகளில் பரவியது. 2016-ம் ஆண்டு வரை இந்த வைரஸ் நோய்க்கு 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். எபோலா வைரஸ் நோய் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த நர்சுகளும் பாதிப்புக்கு ஆளாகினர்.

    இப்போது மறுபடியும், காங்கோ நாட்டில் இந்த வைரஸ் நோய் பரவத்தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கு மபண்டாகா நகரில் இந்த நோய் பரவி வருகிறது. கடந்த சில தினங்களில் இந்த வைரஸ் நோய் தாக்கி 23 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த வைரஸ் நோய் பரவி வருவதை காங்கோ நாட்டின் சுகாதார மந்திரி ஒலி இலுங்கா கலிங்கா உறுதி செய்தார்.



    தற்போது 52 பேரை இந்த நோய் தாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்கிடையே அந்த நாட்டுக்கு 4 ஆயிரம் பேருக்கு செலுத்தத்தகுந்த எபோலா வைரஸ் தடுப்பு மருந்தை உலக சுகாதார நிறுவனம் சோதனை ரீதியில் அனுப்பி வைத்து உள்ளது.  #Congo #EbolaVirus
    ×