search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிங்குசாமி"

    திரையுலகில் 25 வருடங்களை கடந்த இயக்குநர் ஷங்கரை கவுரவிக்கும் விதமாக பிரபல இயக்குநர்கள் பலரும் ஒன்றிணைந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். #Shankar25 #Mysskin
    தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். தனது படங்கள் மூலமாக தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு கொண்டு செல்லும் இவரது படங்கள் வணிக ரீதியிலும் பெரிதாக பேசப்படும்.

    இயக்குநர் ஷங்கர் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவரை பெருமைப்படுத்தும் விதமாக ஷங்கர் 25 என்ற நிகழ்ச்சியை ஷங்கரிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்கள் மற்றும் இருப்பவர்கள் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டாடினர்.



    இந்த நிலையில், ஷங்கருடன் நட்புடன் இருக்கும் இயக்குநர்கள் பலரும் இணைந்து ஷங்கரை பாராட்டி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். இயக்குநர் மிஷ்கின் அவரது அலுவலகத்தில் ஒருங்கிணைத்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மணிரத்னம், லிங்குசாமி, பாண்டிராஜ், மோகன் ராஜா, கவுதம் மேனன், எழில், சசி, பா.ரஞ்சித், வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், அட்லி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஷங்கரை கவுரவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு கேக் ஒன்றும் வெட்டப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர் தவிர மற்ற அனைவரும் எஸ் 25 என்று எழுதப்பட்டிருந்த நீல நிற டீசர்ட் அணிந்து பங்கேற்றிருந்தனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Shankar #Shankar25 #Mysskin

    லிங்குசாமி இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை உருவாக்கப் போவதாகவும், தான் தயாரிக்கப் போவதாகவும் திவாகரன் மகன் அறிவித்துள்ளார். #JayalalithaaBiopic #Lingusamy
    அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பழம்பெரும் நடிகர், நடிகைகள் வாழ்க்கை கதைகள் படமாகி வருகின்றன. அந்த வரிசையில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதில் கடும் போட்டி நிலவுகிறது.

    பெண் இயக்குனர் பிரியதர்ஷினி ஏற்கனவே ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்து படத்துக்கு ‘தி அயன் லேடி’ என்ற தலைப்பையும் சூட்டினார். இதில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நித்யா மேனன் தேர்வாகி உள்ளார்.

    இயக்குநர் பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கையை படாக்குகிறார். இந்த படத்தை மும்பையை சேர்ந்த ஆதித்ய பரத்வாஜ் தயாரிக்கிறார். அவர் கூறும்போது, “ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவது உறுதி. படத்துக்கு தற்காலிகமாக புரட்சித்தலைவி என்று பெயர் வைத்துள்ளோம். இசையமைக்க இளையராஜாவிடம் பேசி வருகிறோம்” என்றார்.



    ஏ.எல்.விஜய்யும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குகிறார். இந்த நிலையில் திவாகரன் மகன் ஜெயானந்தும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப் போவதாகவும், லிங்குசாமி இயக்குவார் என்றும் நேற்று அறிவித்தார்.

    இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில், “அம்மாவின் வாழ்க்கை வரலாறு தனித்துவம் கொண்ட இயக்குனர், எனது நண்பர் லிங்குசாமியால் படமாக்கப்படும். இதில் நடராஜன், மற்றும் சின்னம்மாவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தமிழக அரசியல் தலைவர்களுடன் இயக்குனர் பல செய்திகளின் உண்மைத் தன்மை அறிந்து தகுந்த ஆதாரங்களுடன் இப்படம் எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். #JayalalithaaBiopic #Lingusamy

    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ் - வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தின் விமர்சனம். #Sandakozhi2Review #Vishal #Varalakshmi
    தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பல ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் தடைப்பட்டுள்ளது. எப்படியாவது இந்த ஆண்டு திருவிழாவை நடத்தியாக வேண்டும் என்று ஊர்த்தலைவரான ராஜ்கிரன் முடிவு செய்கிறார்.

    7 வருட பகையை தீர்த்துக் கொள்ள விரும்பும் வரலட்சுமியின் குடும்பம், ராஜ்கிரன் பாதுகாப்பில் வளரும் ஜானி ஹரியை திருவிழாவில் வைத்து கொலை செய்ய திட்டமிடுகிறது. இந்த நிலையில் 7 வருடமாக ஊரில் இல்லாத நாயகன் விஷால் ஊர் திருவிழாவுக்காக கம்பம் வருகிறார். அங்கு போலீசாக வேண்டும் என்று முயற்சி செய்து வரும் கீர்த்தி சுரேஷுக்கும், விஷாலுக்கும் காதல் வருகிறது.



    கடைசியில், திருவிழாவில் நல்ல படியாக நடந்ததா? வரலட்சுமியின் குடும்ப பகை தீர்ந்ததா? விஷால் - கீர்த்தி சுரேஷ் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    விஷால் தனது வழக்கமான அதிரடியுடன் பஞ்ச் வசனங்களை பேசி ரசிகர்களை கவர்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் தனக்கே உரிய ஸ்டைலில் பட்டையை கிளப்புகிறார். காதல் காட்சிகளும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் முற்றிலும் மாறுபட்ட குறும்புத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.



    வரலட்சுமிக்கு அழுத்தமான கதாபாத்திரம், வில்லியாக வித்தியாசமான தோற்றத்தில் வந்து பாராட்டை பெறுகிறார். படத்தின் ஓட்டத்திற்கு, படத்தின் தூணாக நிற்கிறார் ராஜ்கிரன். அவரது கதாபாத்திரமே படத்திற்கு பெரிய பலம். சூரி, முனிஸ்காந்த், கஞ்சா கருப்பு காமெடிக்கு துணை நிற்கின்றனர். மற்றபடி அர்ஜய், ஹரிஷ் பேரடி, அப்பானி சரத், சண்முக ராஜன், தென்னவன் துரைசாமி, விஸ்வந்த் என மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்துக்கு பெரிதும் உதவுகின்றனர்.

    சண்டக்கோழி இரண்டாவது பாகத்தையும் பழிவாங்கல் கதையை மையப்படுத்தியே உருவாக்கி இருக்கிறார் லிங்குசாமி. இருப்பினும் முதல் பாகத்தை போலவே இதிலும் குடும்பம், காதல், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்தையும் தனது பாணியில் கலந்து கொடுத்திருக்கிறார்.



    யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம். பாடல்களும் கேட்கும் ரகமாகவே உள்ளது. கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக நகர்கிறது.

    மொத்தத்தில் `சண்டக்கோழி 2' சீற்றம். #Sandakozhi2Review #Vishal #Varalakshmi

    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தில் வில்லியாக நடித்துள்ள வரலட்சுமி, தான் பயங்கரமான தோற்றத்திற்கு மாற ராஜ்கிரண் தான் காரணம் என்று கூறினார். #Sandakozhi2 #Varalaksmi
    சண்டக்கோழி 2, சர்கார் என 2 படங்களில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வரலட்சுமி வில்லியாக நடிக்கிறார்.

    இதுகுறித்து கேட்டபோது ‘இரண்டு படங்களில் நாங்கள் இணைந்து நடித்தாலும் இரண்டிலுமே எங்களுக்கு இணைந்து தோன்றும் காட்சிகள் இல்லை. கீர்த்தி சுரேஷ் மிக சிறந்த நடிகை.

    இன்னும் பல உயரங்களை தொடுவார். சண்டக்கோழி 2 படத்தில் ராஜ்கிரணோடு நடித்தபோது அவர் என்னை பார்த்து உன்னை பார்த்தால் வில்லி மாதிரியே தோன்றவில்லை. கல்லூரி மாணவி போல இருக்கிறாய் என்றார். இதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சி ஆனது. எடையை கூட்டி பார்க்க பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன். #Sandakozhi2 #Varalaksmi

    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ் - வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தின் முன்னோட்டம். #Sandakozhi2 #Vishal #KeerthySuresh
    விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் மற்றும் பென் ஸ்டூடியோஸ் சார்பில் அக்‌ஷய், தவால், ஜெயந்திலால் கடா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சண்டக்கோழி 2'.

    விஷால் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா, கஞ்சா கறுப்பு, ராம்தாஸ், கபாலி விஷ்வந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மீரா ஜாஸ்மின் கவுரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

    இசை - யுவன் ஷங்கர் ராஜா, படத்தொகுப்பு - கே.எல்.பிரவீன், ஒளிப்பதிவு - கே.ஏ.சக்திவேல், கலை இயக்குனர் - வி.செல்வகுமார், சண்டைப்பயிற்சி - அனல் அரசு நடனம் - ராஜு சுந்தரம், தயாரிப்பு - விஷால், ஜெயந்திலால் கடா, தயாரிப்பு நிறுவனம் - விஷால் பிலிம் பேக்டரி, பென் ஸ்டூடியோஸ், திரைக்கதை - லிங்குசாமி, பிருந்தா சாரதி, வசனம் - எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்து, இயக்கம் - லிங்குசாமி.



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷால் பேசும் போது,

    25 படங்களில் என்னுடன் சேர்ந்து பயணம் செய்த அனைவருக்கும் நன்றி. சண்டக்கோழி எனக்காக எழுதப்பட்ட கதையில்லை. விஜய் அல்லது சூர்யாவுக்காக எழுதப்பட்டது. இந்த மாதிரி ஒரு கதை இருப்பதாக எனக்கு தெரியவந்து நான் தான் லிங்குசாமியிடம் சென்று கேட்டேன். அவர் என்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவா கொண்டு வந்து நிறுத்திவிட்டார். 24 படங்களை முடித்துவிட்டு 25-வதாக சண்டக்கோழி-2 படத்தில் நடித்திருக்கிறேன். கண்டிப்பாக இந்த படம் எனது வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும். கீர்த்தி உடன் நடித்ததில் பெருமை. 

    தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஒரு கோரிக்கையை வைக்கிறேன். படத்திற்கு விமர்சனம் செய்பவர்கள் தயவுசெய்து 3 நாட்களுக்கு பிறகு விமர்சியுங்கள். அப்போது தான் சிறிய படம் என்றாலும், பெரிய படம் என்றாலும் வரவேற்பு கிடைக்கும். 

    படம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Sandakozhi2 #Vishal

    சண்டக்கோழி 2 படத்தின் டீசர்:


    பாலியல் தொல்லை பற்றிய மீ டூ இயக்கத்தில் பலரும் புகார் தெரிவித்து வரும் நிலையில், சின்மயி சொன்ன புகார்களில் உண்மை இருப்பது தெளிவாக தெரிகிறது என்று நடிகை வரலட்சுமி கூறினார். #MeToo #TimesUp #Varalakshmi
    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சண்டக்கோழி-2. படத்தில் நடிகை வரலட்சுமி வில்லியாக நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    எனக்கு கதாநாயகியாக மட்டுமே நடிப்பதில் ஆர்வம் இல்லை. வித்தியாசமான வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன். அப்படித் தான் சண்டக்கோழி-2, சர்கார் படங்கள் அமைந்தன.

    ‘மீ டூ’ இயக்கம் இப்போது தான் வந்துள்ளது. ஆனால் நான் போன வருடத்தில் இருந்தே இதை பற்றி பேசி வருகிறேன். சேவ்சக்தி என்ற அமைப்பையும் பெண்கள் பாதுகாப்புக்காக தொடங்கினேன்.



    பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அநியாயங்களை பேச தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரத்தில் இவ்வளவு நடந்திருக்கிறதா என்ற வருத்தமும் ஏற்படுகிறது.

    ஒரு பெண் சமூகத்தில் இருக்கும் நல்ல பெயரை பணயமாக வைத்து தான் தனக்கு நேர்ந்ததை பகிர்கிறார். எனவே அவரது வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். நாம் அவர்களை சந்தேகப்பட கூடாது.

    இது சினிமாவில் மட்டுமல்ல. உங்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு கூட நடந்திருக்கலாம். எனக்கு கூட நடந்திருக்கிறது. ஏன் இப்போது சொல்கிறீர்கள்? ஏன் அவரை சொல்கிறீர்கள்? என்ற கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. பெண்களுக்கு பல வி‌ஷயங்களில் தயக்கம் இருந்திருக்கலாம்.

    ஒரு பெண் இந்த அளவுக்கு தன்னை தாழ்த்திக்கொண்டு விளம்பரம் தேடுவாரா என்றும் பார்க்க வேண்டும். வரும் கதைகள் எல்லாம் முழு விபரங்களுடன் வருகிறது. சின்மயி சொன்ன புகார்களில் உண்மை இருப்பது தெளிவாக தெரிகிறது.



    பார்ப்பவர்கள் எல்லோரும் நல்லவர் அல்ல. நல்லவர் போல நடிப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எல்லாம் தெரிந்தும்கூட ஒன்றுமே தெரியாதவர்கள் போல நடிக்கிறார்கள். சின்மயிக்கு கூட மிகச் சிலரே ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

    அடுத்து வருபவர்களாவது பாதிப்பில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கிறோம்.

    இந்த புகார்களுக்காக மத்திய அரசு எல்லா மாநிலங்களிலுமே தனி கோர்ட்டு அமைத்திருக்கிறது.

    ப:- இல்லை. நான் நடித்தால் ஜெயலலிதா வேடத்தில் மட்டுமே நடிப்பேன். சசிகலா வேடத்தில் நடிக்க மாட்டேன்.

    நான் அரசியலுக்கு வருவேன். ஆனால் இப்போது இல்லை. எனக்கான நேரம் வர வேண்டும். அப்பா கட்சியில் சேரமாட்டேன். அரசியலை நோக்கி நான் செயல்படவில்லை.

    கற்பழிப்புக்கு தண்டனையை அதிகப்படுத்த வேண்டும். சவுதியில் உள்ளது போன்ற கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேட்டி அளித்தார். #MeToo #TimesUp #Varalakshmi #Chinmayi

    லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 படத்தில் விஷால் ஜோடியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தானும், வரலட்சுமியும் சேர்ந்து நடிக்கவில்லை ஆனால் அவர் மிரட்டலாக நடித்திருக்கிறார் என்று கூறினார். #Sandakozhi2 #KeerthySuresh
    சண்டக்கோழி 2 படத்தில் விஷாலுக்கு ஜோடியாகி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அவர் அளித்த பேட்டி:-

    இந்த படத்தில் என் பெயர் செம்பருத்தி. கிராமத்தில் இருக்கும் குறும்புத்தனமான பெண்ணாக வருகிறேன். முதல் பாகத்தில் மீரா ஜாஸ்மின் பார்ப்பதற்கு அடக்கமான பெண்ணாக இருந்துகொண்டு வால்தனம் செய்வார். ஆனால் இதில் பார்த்தாலே இது இப்படித்தான் என்று தெரிந்துவிடும். மீரா ஜாஸ்மின் செய்த கதாபாத்திரம் என்றதும் பயந்தேன். லிங்குசாமி கொடுத்த தைரியம் தான் நடிக்க காரணம். அவர் நடித்தே காட்டுவார். எனவே எளிதாக இருந்தது.

    வரலட்சுமி?

    இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் இல்லை. அவர் நடித்த சில காட்சிகள் பார்த்தேன். மிரட்டி இருக்கிறார்.

    விஷால்?

    ரொம்ப நட்பான நபர். நம் மீது அக்கறை எடுத்துக்கொள்வார். எப்போது பார்த்தாலும் பிசியாகவே இருப்பார். எப்போதும் போனும் கையுமாகவே பார்க்கலாம். ஒவ்வொரு காட்சியும் பேசி ஆலோசனை செய்துவிட்டு தான் நடிப்போம்.



    சாவித்திரியாக நடித்த பிறகு கமர்ஷியல் படங்களில் நடிப்பது ஏன்?

    ஒரு நடிகையாக எல்லா விதமான படங்களிலும் நடிக்கத் தான் ஆசைப்படுகிறேன். முன்னணி ரோல் தான் என்று இல்லாமல் ஹீரோவுடன் கமர்ஷியல் படங்களிலும் நடிக்க வேண்டும். அதிலும் நல்ல வேடங்களாக நடிக்க வேண்டும்.

    சாவித்திரியாக நடித்ததற்கு கிடைத்த பாராட்டுகள் உங்கள் மனதில் ஏதாவது மாற்றத்தை உருவாக்கியதா?

    பொறுப்பு அதிகரித்துள்ளது. நான் நடிக்க வந்த 4 ஆண்டுகளில் இந்த ஒன்றரை மாதம் தான் நடிக்காமல் ஓய்வில் இருக்கிறேன். இதுவரை 20க்கும் மேற்பட்ட கதைகள் கேட்டுள்ளேன். எதிலும் கமிட் ஆகவில்லை. கதை தேர்வில் இனி அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

    பயோபிக் படங்களாக நடிக்க ஆர்வம் இல்லை. சாவித்திரியாக நான் தெரிந்தது ஒரு மேஜிக். திரும்பவும் அதே சாவித்திரி கதாபாத்திரத்திலேயே என்னால் நடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். ஏர்போர்ட்டில் ஒரு பெரியவர் என்னிடம் வந்து நீங்கள் சாவித்திரியா? என்று கேட்டார். இல்லை சாவித்திரியாக நடித்தேன் என்று கூறினேன்.



    நீங்கள் சாவித்திரியாக நடிப்பதாக செய்தி வந்ததும் அதை கிண்டல் செய்து வந்த மீம்ஸ்களை கவனித்தீர்களா?

    நான் கவனிக்கவில்லை. நடிகையர் திலகம் புரமோ‌ஷனின் போது தான் கேள்விப்பட்டேன். ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் சாவித்திரியாக நான் நடிப்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பது தெரியும். எனக்கே பயம் இருந்தது. படம் அவற்றுக்கான பதிலை கொடுத்துவிட்டது.

    ஆமாம். எனக்கு கவிதைகள் எழுத மிகவும் பிடிக்கும். தமிழில் சில கவிதைகள் எழுதியுள்ளேன். என் கவிதைகள் ரொம்ப ஆழமாக இருக்கும். எமோ‌ஷனலான கவிதைகள். நிறைய படிப்பேன். #Sandakozhi2 #Vishal #KeerthySuresh #Varalakshmi

    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தில் மீசைவச்ச வேட்டைக்காரன் பாடலுக்காக பாடலாசிரியர் அருண்பாரதி ஒரு புத்தகத்தையே எழுதியிருப்பதாக கூறினார். #Sandakozhi2 #ArunBharathi
    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் `சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளியான பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்த படத்தில் `மீசவச்ச வேட்டக்காரன்' என்ற ஒரு பாடலை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் அருண்பாரதி.

    இந்த பாடல் பற்றி அருண்பாரதி கூறிய போது, 

    மீசைவச்ச வேட்டைக்காரன் பாடலுக்கு நான் பல வரிகளை எழுதிக்கொடுத்தேன். எங்க அப்பா, ராஜ்கிரண் ரசிகர் என்பதால் எனக்கும் அவரை பிடிக்கும். அதனாலேயே அவருக்காக " நல்லி எலும்போட அடுப்புலதான் வெள்ளாடு மெதக்குதய்யா; அத அள்ளிக் கடிக்கத்தான் அடிவயிறு தண்டோரா அடிக்குதய்யா " என்ற வரிகளை எழுதினேன். மேலும் விஷாலுக்காக " நம்ம தான் நம்ம தான் கருப்பு தங்கம் யாருக்கும் அடங்காத மதுர சிங்கம் திமிருதான் திமிருதான் நம்ம ரத்தம் நாம திமுருனா திரும்புமே ஊரு மொத்தம் " என பாடல் வரிகளை எழுதினேன். 



    மேலும் இந்தப் பாடலுக்காக நான் எழுதிய எல்லாமே இயக்குனருக்கு பிடிச்சுருந்துச்சு. எல்லாத்தையும் வைக்கமுடியாது என்பதால் சிலவற்றை மட்டும் இந்த பாடலில் பயன்படுத்தி உள்ளோம். இந்த பாடல்களுக்காக நான் எழுதிய வரிகளை வைத்து ஒரு புத்தகமே வெளியிடலாம் அந்த அளவுக்கு ஒரு பத்து திருவிழா பாடலுக்கான வரிகள் உள்ளது சீக்கிரமே அதை புத்தகமாக வெளியிட உள்ளேன் என்றார். #Sandakozhi2 #ArunBharathi

    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி-2' படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Sandakozhi2 #Vishal
    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் `சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளியான பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தநிலையில் படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    விஷாலின் 25-வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரித்துள்ளார். படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ரிலீஸாக இருக்கிறது. #Sandakozhi2 #Vishal #KeerthySuresh 

    விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் `சண்டக்கோழி 2' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விவசாயிகளுக்கு உதவும் வகையில் நடிகர் விஷால் ரூ.11 லட்சம் வழங்கினார். #Sandakozhi2 #Vishal
    விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `சண்டக்கோழி 2'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விஷால் 25 விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் மோகன்லால், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு பேசினார்கள். 

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பதவியேற்பு விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஒவ்வொரு டிக்கெட்டின் லாபத்திலிருந்து ஒரு ரூபாய் நலிந்த ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி தற்போது விஷால் விஷால் 25 நிகழ்ச்சியில் தேர்தெடுக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட நலிந்த விவசாயிகளுக்கு 11 லட்சம் வழங்கினார். துப்பறிவாளன் மற்றும் இரும்புத்திரை படத்தின் டிக்கெட் விற்று கிடைத்த லாபத்தில் விஷால் இதை வழங்கியுள்ளார்.



    அதன் பின்னர் பேசிய விஷால், இது எனக்கு மகிழ்ச்சியான தருணம். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கால் வைக்க முடியும். விவசாயிகளுக்கு நம்மால் உதவ முடிகிறது என்பது மிகப்பெரிய விஷயம். நாம் 30 விவசாயிகளுக்கு உதவுவதை பார்த்து மேலும் 2 பேர் நாம் உதவியதை விட அதிகமான விவசாயிகளுக்கு உதவுவார்கள். நாம் பலருக்கு முன்னுதாரணமாக உள்ளது மகிழ்ச்சி. இதை போல் எல்லோரும் விவசாயிகளுக்கு உதவி அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும். 



    அப்போது மேடையிலிருந்து இயக்குனர் பாண்டிராஜ், விஷால் எதற்கு என்னை விவசாயிகளுக்கான உதவி தொகையை வழங்க சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்த எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியை தந்தது. நான் வேகமாக படமெடுப்பவன். விஷால் எனக்கு கதகளி திரைப்படத்தை வேகமாக முடித்து தந்து சொன்ன தேதியில் வெளியிட்டார் என்றார் பாண்டிராஜ். #Sandakozhi2 #Vishal #KeerthySuresh

    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஷால், படத்தை தயவு செய்து விமர்சனம் செய்யாதீர்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார். #Sandakozhi2 #Vishal
    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் விஷால், கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரண், ஒளிப்பதிவாளர் சக்தி, எடிட்டர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

    விழாவில் நடிகர் விஷால் பேசும் போது,

    25 படங்களில் என்னுடன் சேர்ந்து பயணம் செய்த அனைவருக்கும் நன்றி. சண்டக்கோழி எனக்காக எழுதப்பட்ட கதையில்லை. விஜய் அல்லது சூர்யாவுக்காக எழுதப்பட்டது. இந்த மாதிரி ஒரு கதை இருப்பதாக எனக்கு தெரியவந்து நான் தான் லிங்குசாமியிடம் சென்று கேட்டேன். அவர் என்னை ஒரு அக்ஷன் ஹீரோவா கொண்ட வந்து நிறுத்திவிட்டார். 24 படங்களை முடித்துவிட்டு 25-வது படத்தில் சண்டக்கோழி-2 படத்தில் நடித்திருக்கிறேன். கண்டிப்பாக இந்த படம் எனது வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும். கீர்த்தி உடன் நடித்ததில் பெருமை. 



    கூடியவிரைவில் நான் படம் இயக்குகிறேனோ இல்லையோ, கீர்த்தி சுரேஷ் படம் இயக்குவார். சண்டக்கோழி-2 ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி வெளியாகும். 

    தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஒரு கோரிக்கையை வைக்கிறேன். படத்திற்கு விமர்சனம் செய்பவர்கள் தயவுசெய்து 3 நாட்களுக்கு பிறகு விமர்சியுங்கள். அப்போது தான் சிறிய படம் என்றாலும், பெரிய படம் என்றாலும் வரவேற்பு கிடைக்கும். நான் அனைவரையும் சொல்லவில்லை, குறிப்பிட்ட நபர்களுக்கு தான் வேண்டுகோள் வைக்கிறேன். #Sandakozhi2 #Vishal

    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் `சண்டக்கோழி-2' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Sandakozhi2 #Vishal
    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் `சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 24-ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்தில் இருந்து ஏற்கனவே செங்கராட்டன் கோட்டையிலே, கம்பத்து பொண்ணு உள்ளிட்ட இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
    இதில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    விஷாலின் 25-வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரித்துள்ளார். படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ரிலீஸாக இருக்கிறது. #Sandakozhi2 #Vishal #KeerthySuresh #VaralakshmiSarathKumar

    ×