search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 111885"

    • காலையில் தீபம் ஏற்றி, இறைவனுக்கு ஏதேனும் ஒரு நைவேத்தியம் படையுங்கள்.
    • ஆதரவற்ற இல்லங்களுக்கு ஒருநாள் உணவு வழங்கலாம்.

    புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமை தினத்திலும் விரதம் இருந்து பெருமாளை வழிபடுதல் மற்றும் விரத தினத்தில் செய்யக் கூடியது என்ன என்பதை தெரிந்து கொண்டு அதை பின்பற்றுவது நம் வாழ்க்கையை செம்மைப்படுத்தும்.

    பிரம்ம முகூர்த்தம் எனப்படும் காலை 4 மணி முதல் 6 மணிக்குள் எழுந்து விடுங்கள். வீட்டைச் சுத்தம் செய்து கொள்ளவும். காலையில் எண்ணெய் வைக்காமல் தலைக்கு குளியுங்கள்.நெற்றியில் பெருமாளுக்கு உகந்த நமம் இட்டுக் கொள்ளவும். வீட்டில் அழகிய கோலம் இடவும். மாவிலை தோரணம் கட்டவும். வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றி இருந்தால், அந்த விளக்கில் இருக்கும் எண்ணெய், திரியை எடுத்துவிட்டு, புதிதாக எண்ணெய்யை ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றவும்.

    காலையில் தீபம் ஏற்றி, இறைவனுக்கு ஏதேனும் ஒரு நைவேத்தியம் படையுங்கள். எளிமையாக ஒரு இனிப்பை இறைவனுக்கு படைக்க விரும்பினால், பொரிகடலை மற்றும் சர்க்கரை கலந்து சுவாமிக்கு படைக்கலாம்.

    அதன் பின்னர், உங்கள் வீட்டில் இருக்கும் சொம்பை நன்றாக சுத்தம் செய்து, காயவைத்து, அதற்கு மூன்று நாமம் இடவும். அதில் சிறிது அரிசி, ஓரிரு நாணயங்களை இடவும். அதை வைத்து பெருமாளிடம் வேண்டவும். பின்னர் அந்த சொம்பை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள நான்கு வீட்டிற்காவது சென்று "கோவிந்தா, கோவிந்தா" என ஒலி எழுப்பு அரிசியை, யாசகம் பெற வேண்டும்.

    பின்னர் வீட்டுக்கு வந்து, அந்த அரிசியால், சமைக்கவும். பருப்பு, இரண்டு காய்கறிகள் போட்டு சாம்பார், பொரியல் செய்து படைக்கலாம்.

    அதோடு உங்களால் முடிந்தால், அதே சமயம் இனிப்பு உங்கள் வீட்டில் சாப்பிடுவீர்கள் என்றால் கூடுதலாகச் சர்க்கரைப் பொங்கல், வடை, பாயசம் செய்யலாம்.

    சமைத்த உணவுகளை ஒரு வாழை இலையில் படைக்கவும். மதியம், பெருமாளை வழிபட்டு, தீபாராதனை, தூப ஆராதனை காட்டவும். நாம் சமைத்த அனைத்து உணவுகளிலிருந்து சிறிதளவு எடுத்து ஒரு இலையில் வைத்து, காகத்திற்கு வைக்கவும்.

    நாம் சமைத்து வைத்த உணவுகளை, அருகில் குழந்தைகளை அழைத்து விருந்து படைக்கவும். அவர்கள் வாயால் "கோவிந்தா, கோவிந்தா" என்ற நாமம் சொல்ல சொல்லவும்.

    அவர்கள் கூறும் "கோவிந்தா" என்ற நாமத்தின் மூலம் பெருமாள் நம் வீட்டிற்கு வந்து அருளுவார். குழந்தைகள் வயிறார விருந்து படைத்து பின்னர், நாம் சாப்பிட வேண்டும்.

    வீட்டில் நீங்கள் விருந்து படைக்க முடியாவிட்டால், ஏதேனும் ஆதரவற்றவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கலாம். அல்லது ஆதரவற்ற இல்லங்களுக்கு ஒருநாள் உணவு வழங்கலாம். மாலையில் அருகில் உள்ள ஏதேனும் ஒரு பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.

    • திருப்பதி ஏழுமலையானுக்கு மண் சட்டியில் நைவேத்தியம் படைக்கப்படுகிறது.
    • இதற்கு ஒரு ஆன்மிக கதை உள்ளது.

    திருப்பதியில் பீமன் என்ற மண்பாண்ட தொழிலாளி வசித்து வந்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக் கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார். அதனால் சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையானின் கோவிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. ஏதாவது ஒரு சனிக்கிழமையில் ஆலயத்திற்குச் சென்றால், "பெருமாளே, நீயே எல்லாம்" என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார்.

    ஒருமுறை அவரது மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோவிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார். களிமண்ணில் ஒரு சிலை வடித்தார். அதற்கு பூ வாங்கும் அளவுக்கு அவரிடம் பணம் இல்லை. எனவே தான் மண்பாண்டம் செய்யும்போது சிதறிய களிமண்ணை ஒன்று சேர்த்து, அவற்றில் சிறிய சிறிய பூக்களை செய்து அதைக் கோர்த்து பெருமாளின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார்.

    அந்த பகுதியை ஆட்சி செய்த தொண்டைமான் என்ற அரசனும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை ஏழுமலையானுக்கு அணிவிப்பார்.

    ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது. 'பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ?' என குழப்பத்தில் அங்கிருந்து மன்னன் சென்றுவிட்டார். அன்று இரவு அவரது கனவில் தோன்றிய பெருமாள், நடந்த விவரங் களைச் சொன்னார்.

    மறுநாள் காலையிலேயே பீமனின் குடிசைக்குச் சென்ற மன்னன், அவருக்கு வேண்டிய பொருளுதவியைச் செய்வதாகச் சொல்லியும், பீமன் அதை ஏற்கவில்லை. அவர் செய்த பெருமாள் பணிக்காக, இறுதி காலத்தில் வைகுண்டம் அடைந்தார். அவரை கவுரவிக்கும் வகையில்தான், இப்போதும் திருப்பதி ஏழுமலையானுக்கு மண் சட்டியில் நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

    • பெருமாள் அபிஷேகங்களை விட, அலங்காரங்களே விமரிசையாக செய்யப்படும்.
    • திருப்பதி பெருமாளுக்கு பயன்படுத்தப்படும் அலங்காரப்பொருட்கள் பற்றி அறியும் போது நம் விழிகள் வியப்பால் விரியும்.

    பொதுவாக, பெருமாளுக்கு அபிஷேகங்களை விட, அலங்காரங்களே விமரிசையாக செய்யப்படும். ஏனெனில் அவர் 'அலங்காரப் பிரியர்' ஆவார். திருமலையில் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருக்கும் திருவேங்கடவனுக்கு பயன்படுத்தப்படும் அலங்காரப்பொருட்கள் பற்றி அறியும் போது நம் விழிகள் வியப்பால் விரியும்.

    வேங்கடவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக உயர்தரமான குங்குமப்பூ, ஸ்பெயினில் இருந்து வரவழைக்கப்படுகிறது. கஸ்தூரி என்ற வாசனை பொருளானது அண்டை நாடான நேபாளத்தில் இருந்து தருவிக்கப்படுகிறது. உயர்தரமான பூனையின் உடலில் இருந்து பெறப்படும் புனுகு என்ற வாசனைப்பொருள் சீனாவில் இருந்து வாங்கப்படுகிறது.

    பாரிஸ் நகரில் இருந்து விமானங்கள் மூலமாக பல்வேறு வாசனாதி திரவியங்கள் வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் இருந்து விமானம் மூலம் பக்குவப்படுத்திய ரோஜா மலர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. சீனாவில் இருந்து உயர்தரமான சூடம், அகில், சந்தன கட்டைகள், அம்பர், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையானுக்காக கொண்டுவரப்படுகின்றன.

    அபிஷேகத்தின்போது தங்க தாம்பாளத்தில் சந்தனத்துடன், மற்ற வாசனாதி திரவியங்கள் சேர்த்து கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். அத்துடன் 50-க்கும் மேற்பட்ட வட்டில் (சல்லடை போன்ற அபிஷேகத் தட்டு) பால் அபிஷேகம் நடக்கும். அதன் பிறகு கஸ்தூரி சாற்றப்பட்டு, புனுகு தடவப்படும்.

    • தல்லாகுளம் கோவிலில் புரட்டாசி திருவிழா நாளான இன்று பெருமாள் சேஷசயன அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
    • இன்று இரவு சூர்னோசயம் நடக்கிறது.

    மதுரை

    மதுரை தல்லாகுளத்தில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி பெருந்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

    கடந்த 26-ந் தேதி அக்குரார்ப்பணம், 27-ந் தேதி கொடியேற்றம், 28-ந் தேதி கிருஷ்ணாவதாரம், 29-ந் தேதி ராமாவதாரம், 30-ந் தேதி கஜேந்திர மோட்சம், 1-ந் தேதி ராஜாங்க சேவை நடந்தது. 6-ம் நாளான நேற்று காலை காளிங்க நர்த்தனமும், இரவு மோகனாவதாரமும் நடந்தது. பெருமாள் யானை வாகனத்தில் காட்சி அளித்தார். கோவிலில் 7-வது நாளான இன்று காலை சேஷசயனம் நடந்தது. இதனை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர். இன்று இரவு சூர்னோசயம் நடக்கிறது. பெருமாள், புஷ்ப விமானத்தில் காட்சி அளிக்கிறார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் சீனிவாச பெருமாள் கோவில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    • மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள்கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த வாரம் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி தரிசனம் செய்தனர்.

    தமிழகத்தின் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் மலைக்கோவிலான ஸ்ரீவில்லி புத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா விமரிசையாக கொண்டாடபடுகிறது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்வார்கள்.

    புரட்டாசி மாத 4 வார சனிக்கிழமைகளில் 2-வது வார சனிக்கிழமையான இன்று அதிகாலை சீனிவாச பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்று அதை தொடர்ந்து அதிகாலை காலசாந்தி என்னும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் அங்கு காணிக்கைகளை வழங்க முடியாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து ஆடு, மாடுகள், விவசாய பொருள்கள், தானிய பொருள்கள் போன்ற வற்றை சீனிவாசபெரு மாளுக்கு காணிக்கையாக வழங்குவார்கள்.

    இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பஸ் வசதிகள், மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர். 30-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள் மூலம் பக்தர்கள் கண்கா ணிக்கபட்டு வருகி ன்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காட்டழகர் கோவிலிலும் 2-வது சனிக்கிழமை பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது. அங்கும் திரளான பக்தர்கள் சென்று காட்டழகரை தரிசித்து வருகின்றனர்.

    • வருகிற 9-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • தினமும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திவ்யதேச பெருமாளை தரிசனம் செய்யலாம்.

    திருச்சியில் புரட்டாசி மாதத்தில் ஒரே இடத்தில் 108 திவ்யதேச பெருமாள் தரிசனம் நிகழ்வு பறவைகள் சாலையில் உள்ள வாசவி மகாலில் நேற்று தொடங்கி வருகிற 9-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனம், எஸ் டி.வி. நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இங்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், உறையூர் அழகியமணவாளன், அன்பில் சுந்தரராஜபெருமாள், உத்தமர்கோவில், திருவெள்ளறை, காஞ்சி வரதராஜபெருமாள், திருப்பதி, கபிஸ்தலம், திருவனந்தபுரம் பத்மநாபசாமி, திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள், நாங்குநேரி வானமாமலை, ஸ்ரீவைகுண்டம், திருப்புளிங்குடி, இரட்டை திருப்பதி, ஆழ்வார் திருநகரி என்று தமிழகத்தில் உள்ள 84 திருத்தலங்கள், கேரளாவில் உள்ள 11 திருத்தலங்கள், ஆந்திராவில் உள்ள 2 திருத்தலங்கள், உத்தரபிரதேசத்தில் உள்ள 4 திருத்தலங்கள், உத்தராகாண்டில் உள்ள 3 திருத்தலங்கள், குஜராத், நேபாளத்தில் உள்ள தலா ஒரு திருத்தலம் மற்றும் வானுலகத்தில் உள்ள 2 திருத்தலங்கள் என்று 108 திவ்யதேசங்களில் அமைந்திருக்கும் பெருமாள், அங்கங்கு எப்படி எழுந்தருளி இருக்கின்றனரோ, அதுபோன்ற உருவ ஒற்றுமையுடன் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திவ்யதேச பெருமாள் தரிசனத்தை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.

    மேலும் இந்த நிகழ்ச்சியையொட்டி வருகிற 8-ந் தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு பல்வேறு தலைப்புகளில் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறுகிறது.

    • புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.
    • அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைக்கும்.

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. அதுவும் புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால், கூடுதல் பலன் கிடைக்கும். இந்த மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை கடைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

    நவக்கிரகங்களில் புதன் கிரகத்திற்குரிய மாதமாக இருப்பது, புரட்டாசி. புதன் கிரகத்தின் அதிதேவதையாக இருப்பவர், மகாவிஷ்ணு. எனவேதான் புதன் கிரகத்தின் அருளைப் பெற விஷ்ணுவின் வழிபாடு புரட்டாசியில் உகந்ததாக இருக்கிறது. மகாவிஷ்ணு எனப்படும் பெருமாளின் அம்சமாகவே கருதப்படும் புதனுக்குரிய வீடு, கன்னி ராசி.

    இந்த ராசியில் சூரியன் அமர்வதும் புரட்டாசி மாதத்தில்தான். எனவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு பஜனைகள் செய்து வழிபடுவது, ஆலயங்களில் பிரம்மோற்சவங்கள் நடத்துவது போன்றவை செய்யப்படுகின்றன. புதன் கிரகத்திற்கு நட்பானவர், சனி பகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள், பெருமாள் வழிபாட்டிற்கு கூடுதல் சிறப்புக்குரியதாக இருக்கிறது.

    புரட்டாசி மாதத்தை, எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.

    ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் பெருமாளை நினைத்து விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அது முடியாதவர்கள், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளிலாவது, பெருமாளுக்குரிய பூஜைகளை செய்து வழிபடுவதோடு, அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைக்கும்.

    புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென மேலும் ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

    • இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆகும்.
    • சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    சென்னை :

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம் ஆகும். அதிலும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு மிகவும் விசேஷமானது. இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆகும்.

    இதையொட்டி சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற்றது.

    இதையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். நேரம் செல்ல செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்தது. இதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். பல பக்தர்கள் துளசி மாலை கொடுத்து வழிபாடு செய்தனர்.

    சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான பெருமாள் கோவிலில் இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தது.

    இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான கோவிலில் குவியத்தொடங்கினார்கள். அவர்கள் வரிசையில் நின்று சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

    சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று சிறப்பு அலங்காரங்களும், விசேஷ பூஜைகளும் நடைபெற்றன. இங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று அதிகாலையிலேயே நடைதிறக்கப்பட்டது. சிறப்பு 4 கால பூஜை நடக்கிறது.

    மேலும் கல் பதித்த ரத்னாங்கி சேவையும் நடைபெறுகிறது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், துளசி மாலை, தாமரை மாலை, சம்பங்கி மாலை ஆகியவற்றால் அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது. அதிகாலையிலேயே பக்தர்கள் திரண்டு வந்து கோவிந்தா கோவிந்தா என்று பக்திபரவசத்துடன் கோஷம் எழுப்பியபடியே சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் வைகுண்ட பெருமாள், அஷ்டபுஜ பெருமாள், யதோத்தகாரி பெருமாள் உள்ளிட்ட திவ்ய தேசங்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    • புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது

    நாகர்கோவில் :

    புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி ஆனந்தம் கிடைக்கும் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.

    இதனால் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

    2 ஆண்டு களுக்குப் பிறகு புரட்டாசி சனிக்கிழமையான இன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெரு மாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவிலில் இன்று காலையில் பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. பெருமாளை தரிசிப்பதற்காக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலிலும் இன்று காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவி லில் காலை முதலே பக்தர் கள் வந்து பெருமாளை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கன்னியாகுமரி விவேகானந்தர் கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவிலி லும் இன்று காலையில் சுப்ரபாத தரிசனம், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழி பாடுகளும், தீபாராதனை களும் நடந்தது.

    திருப்பதிசாரம் திருவாள் மார்பன் கோவிலில் காலையில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் காண் பிக்கப்பட்டது. பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், சுசீந்திரம் துவா ரகை கிருஷ்ணன் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ண சாமி கோவில், கோட்டார் வாகையடி தெருவில் உள்ள ஏழாகரம் பெருமாள் கோவில், வட்ட விளை தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று காலையில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜை கள் நடந்தது.

    பெருமாளை தரிசிப்ப தற்காக காலை முதலே பக்தர்கள் கூட்டம் கோவில்களில் நிரம்பி வழிந்தது.

    • பெருமாளை வழிபாடு செய்ய புரட்டாசி சிறந்த மாதமாகும்.
    • இன்று 108 போற்றியை சொல்லி பெருமாளை வழிபாடு செய்யலாம்.

    ஸ்ரீ நரநாராயணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நரசிங்க பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அத்புத நாராயணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வைகுண்ட நாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ த்ரிவிக்ரமன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ லோகநாத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீனிவாசன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருவண் புருஷோத்தமன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ குடமாடு கூத்தன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அஷ்ட புஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ யோக நரசிம்மசுவாமி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பால சயனக் கோலம் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தேவாதி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நீலமேக பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தல சயன பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திரு சாரநாத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ உப்பிலியப்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வையம் காத்த பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஜெகன்னாத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கஜேந்திர வரத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வல்வில் ராமன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சாரங்கபாணி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கோலவில்லி ராமர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நித்திய கல்யாண பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அப்பக்குடத்தான் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அன்பில் சுந்தரராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ புண்டரீகாட்சன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ புருஷோத்தமன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ரங்கநாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பக்த வத்சல பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வீர ராகவ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ விஜய ராகவ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நீர் வண்ண பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ விளக்கொளி பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆதி வராக பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நிலா துண்ட பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பவள வண்ண பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பரமபத நாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கருணாகர பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பார்த்தசாரதி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பேரருளாளன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அழகிய மணவாளர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருநறையூர் நம்பி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நாவாய் முகுந்தன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ உய்யவந்த பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நீலமேக பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சவுந்தர ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நாண்மதியப் பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திரிவிக்ரம நாராயணர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தாமரைக் கண்ணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ செங்கண் மால் ரங்கநாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தாமரையாள் கேள்வன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தேவநாத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ காட்கரையப்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ லெட்சுமண பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருவாழ் மார்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ இமையவரப்பர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ மாயப்பிரான் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருக்குறளப்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பாம்பணையப்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அனந்த பத்மநாபர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அழகிய நம்பியார் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தோத்தாத்ரி நாதன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வைகுண்ட நாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ விஜயாசனர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பூமி பாலகர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆதி நாதன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ மகர நெடுங்குழைக்காதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வேங்கட வாணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஸ்ரீனிவாஸன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தெய்வ நாயகர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அரவிந்த லோசனர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வடபத்ரசாயி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கூடலழகர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கள்ளழகர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ காளமேக பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சவுமிய நாராயணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆதி ஜெகந்நாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சத்திய மூர்த்தி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ரகுநாயகன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கோவர்த்தநேசன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பிரகலாதவரதன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வெங்கடாஜலபதி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ முக்திநாத் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நைமிசாரண்யம் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நவமோகன கிருஷ்ணா திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ரகுநாத் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருவல்லவாழ் திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நாராயணா திருவடிகளே சரணம்

    ஸ்ரீ மகாவிஷ்ணு திருவடிகளே சரணம்

    • மாலையில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.
    • காலையில் தீபம் ஏற்றி, இறைவனுக்கு ஏதேனும் ஒரு நைவேத்தியம் படையுங்கள்.

    புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமை தினத்திலும் விரதம் இருந்து பெருமாளை வழிபடுதல் மற்றும் விரத தினத்தில் செய்யக் கூடியது என்ன என்பதை தெரிந்து கொண்டு அதை பின்பற்றுவது நம் வாழ்க்கையை செம்மைப்படுத்தும்.

    பிரம்ம முகூர்த்தம் எனப்படும் காலை 4 மணி முதல் 6 மணிக்குள் எழுந்து விடுங்கள். வீட்டைச் சுத்தம் செய்து கொள்ளவும். காலையில் எண்ணெய் வைக்காமல் தலைக்கு குளியுங்கள். நெற்றியில் பெருமாளுக்கு உகந்த நமம் இட்டுக் கொள்ளவும். வீட்டில் அழகிய கோலம் இடவும். மாவிலை தோரணம் கட்டவும். வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றி இருந்தால், அந்த விளக்கில் இருக்கும் எண்ணெய், திரியை எடுத்துவிட்டு, புதிதாக எண்ணெய்யை ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றவும்.

    காலையில் தீபம் ஏற்றி, இறைவனுக்கு ஏதேனும் ஒரு நைவேத்தியம் படையுங்கள். எளிமையாக ஒரு இனிப்பை இறைவனுக்கு படைக்க விரும்பினால், பொரிகடலை மற்றும் சர்க்கரை கலந்து சுவாமிக்கு படைக்கலாம்.

    அதன் பின்னர், உங்கள் வீட்டில் இருக்கும் சொம்பை நன்றாக சுத்தம் செய்து, காயவைத்து, அதற்கு மூன்று நாமம் இடவும். அதில் சிறிது அரிசி, ஓரிரு நாணயங்களை இடவும். அதை வைத்து பெருமாளிடம் வேண்டவும். பின்னர் அந்த சொம்பை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள நான்கு வீட்டிற்காவது சென்று "கோவிந்தா, கோவிந்தா" என ஒலி எழுப்பு அரிசியை, யாசகம் பெற வேண்டும்.

    பின்னர் வீட்டுக்கு வந்து, அந்த அரிசியால், சமைக்கவும். பருப்பு, இரண்டு காய்கறிகள் போட்டு சாம்பார், பொரியல் செய்து படைக்கலாம். அதோடு உங்களால் முடிந்தால், அதே சமயம் இனிப்பு உங்கள் வீட்டில் சாப்பிடுவீர்கள் என்றால் கூடுதலாகச் சர்க்கரைப் பொங்கல், வடை, பாயசம் செய்யலாம்.

    சமைத்த உணவுகளை ஒரு வாழை இலையில் படைக்கவும். மதியம், பெருமாளை வழிபட்டு, தீபாராதனை, தூப ஆராதனை காட்டவும். நாம் சமைத்த அனைத்து உணவுகளிலிருந்து சிறிதளவு எடுத்து ஒரு இலையில் வைத்து, காகத்திற்கு வைக்கவும்.

    நாம் சமைத்து வைத்த உணவுகளை, அருகில் குழந்தைகளை அழைத்து விருந்து படைக்கவும். அவர்கள் வாயால் "கோவிந்தா, கோவிந்தா" என்ற நாமம் சொல்ல சொல்லவும்.

    அவர்கள் கூறும் "கோவிந்தா" என்ற நாமத்தின் மூலம் பெருமாள் நம் வீட்டிற்கு வந்து அருளுவார். குழந்தைகள் வயிறார விருந்து படைத்து பின்னர், நாம் சாப்பிட வேண்டும்.

    வீட்டில் நீங்கள் விருந்து படைக்க முடியாவிட்டால், ஏதேனும் ஆதரவற்றவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கலாம். அல்லது ஆதரவற்ற இல்லங்களுக்கு ஒருநாள் உணவு வழங்கலாம். மாலையில் அருகில் உள்ள ஏதேனும் ஒரு பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.

    • ஒவ்வொரு ஏகாதசி திதியும் தனித்துவம் வாய்ந்தது.
    • அஜா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

    புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசிக்கு "அஜா ஏகாதசி" என்று பெயர். "அஜா" என்றால் வருத்தத்தை நீக்குவது என்று பொருள். உயிர்களின் வருத்தத்தை நீக்கி, உயர்நிலைக்குக் கொண்டு செல்லுகின்ற ஆற்றலைத் தருகிறது இந்த ஏகாதசி.

    இந்த ஏகாதசியை பெருமாளுக்குரிய புரட்டாசி மாதத்தில், நம்மால் இயன்ற அளவு அனுஷ்டித்தால், நாம் இழந்ததை மீண்டும் பெறலாம். இதனால் மன கவலை நீங்கும்.

    அஜா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும். பொதுவாக விரத முறைகள் வழிபாடுகள் அனைத்தையும் கடைப்பிடிக்க வாய்ப்பில்லாதவர்கள் இந்த அஜா ஏகாதசி அன்று வெறும் உபவாசம் இருந்தாலே முழு விரத பலன்களைப் பெறுவார்கள்.

    அஜா ஏகாதசி விரதத்தின் பெருமைகளைத் தமக்கு விளக்கி அருளுமாறு யுதிஷ்டிரர் பகவான் கிருஷ்ணனிடம் கேட்கிறார். கிருஷ்ணரும் அஜா ஏகாதசி விரதத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார்.

    "தர்ம புத்திரரே, அஜா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும். பொதுவாக விரத முறைகள் வழிபாடுகள் அனைத்தையும் கடைப்பிடிக்க வாய்ப்பில்லாதவர்கள் இந்த அஜா ஏகாதசி அன்று வெறும் உபவாசம் இருந்தாலே முழு விரத முறையையும் ஆச்ரயித்த பலன்களைப் பெறுவார்கள். மேலும் ரகுவம்சத்தில் தோன்றிய ஹரிச்சந்திரன் இந்த விரதத்தை அனுஷ்டித்து தன் துன்பம் நீங்கப் பெற்றான்" என்று ஹரிச்சந்திரனின் கதையினை எடுத்துக்கூறினார்.

    உலகம் போற்றும் சத்தியசந்தனாக விளங்கிய ஹரிச்சந்திர மகாராஜா தன் முன்வினைப்பயன்களால் தன் நாட்டை இழந்தான். மேலும் தன் மனைவி, மகனையும் பிரியும் நிலை வந்தது. ஆனாலும் தன் இயல்பில் மாறாது சுடுகாட்டைக் காக்கும் வேலையைச் செய்து சத்தியத்தையே கடைப்பிடித்துவந்தான். ஒருநாள் ரிஷி கௌதமரை சந்தித்தான். ரிஷியின் பாதங்களைப் பணிந்த ஹரிச்சந்திரன் தன் வாழ்க்கையில் நடந்த துயரங்களை எடுத்துக்கூறினான். அவற்றைக் கேட்ட முனிவர் மிகவும் மனம் வருந்தி, "நல்லவர்களும் துன்பப்படுகிறார்கள் என்றால் அதன்காரணம் அவர்களின் முன்வினைப்பயன்தான்.

    அதை அழிக்கும் சக்தியுடைய விரதம் அஜா ஏகாதசி விரதம். அடுத்து வரும் ஏகாதசி அஜா ஏகாதசிதான். அந்த நாளில் நீ முழு உபவாசம் இருந்து, ஹரியை நாள்முழுவதும் மனதாலும் வாக்காலும் துதிப்பாயாக. அப்படிச் செய்வதன் மூலம் ஹரி மகிழ்ந்து உன் வினைப்பயன்களை நீக்குவார். மேலும் நீ விரைவில் நன்னிலை அடைவாய். நீ அடையும் நன்னிலையே இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும்" என்று உபதேசித்தார்.

    ஹரிச்சந்திரனும் அதன்படி விரதமிருந்து உபவாசம் அனுஷ்டிக்க விரைவில் அவன் வினைப்பயன்கள் நீங்கின. அவனோடு வாதம் செய்தவர் தோற்றார். அவன் துன்பங்கள் யாவும் நீங்கின. தன் பிள்ளையோடும் மனைவியோடும் இணைந்தான். அவன் ராஜ்ஜியம் மீண்டது என்று பகவான் கிருஷ்ணர் அவற்றை எடுத்துரைத்தார்.

    மேலும் அஜா ஏகாதசியின் சிறப்புகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறினாலும் அதைக் கேட்டாலும் சகல நன்மைகளும் உண்டாகும். கலியுகத்தில் சில யாகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட யாகங்களில் ஒன்று அஸ்வமேத யாகம். அந்த யாகம் செய்வதால் உண்டாகும் புண்ணிய பலனை நாம் அஜா ஏகாதசி விரத்தைக் கடைப்பிடித்து, அதன் பலனை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதன் மூலம் பெறலாம் என்கிறது ஏகாதசி புராணம்.

    இத்தகைய சிறப்புகளையுடைய அஜா ஏகாதசி இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே தவறாமல் இந்த நாளில் உபவாசம் இருந்து ஹரியை வழிபட வேண்டும். இந்த நாளைத் தவறவிடாமல் பகவான் விஷ்ணுவை வழிபட்டு சகல நலன்களையும் பெறுவோம்.

    ×