என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 111924
நீங்கள் தேடியது "எம்.எஸ்.டோனி"
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.டோனி, ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். #IPL2019 #CSK #RCBvCSK #Dhoni
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
இதையடுத்து, டோனி தனி ஒருவனாக போராடினார். அரை சதம் அடித்து அசத்திய அவர் 84 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். அவர் 48 பந்தில் 7 சிக்சர், 5 பவுண்டரியுடன் 84 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் ஐ.பி.எல். போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை டோனி படைத்தார். இவர் 203 சிக்சர்கள் அடித்துள்ளார். #IPL2019 #CSK #RCBvCSK #Dhoni
12-வது ஐ.பி.எல். போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எளிதாக வெற்றி பெற்றது. #IPL2019 #CSK #RCB
சென்னை:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 12-வது தொடர் இன்று தொடங்கி மே 2-வது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
தொடக்க நாளான இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதின.
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட்கோலியும், பர்திவ் பட்டேலும் களம் இறங்கினர். சுழலில் ஹர்பஜன் சிங் கலக்கினார். தடுமாறிக் கொண்டிருந்த கோலி 6 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த மொயீன் அலியை 9 ரன்னில் திருப்பி அனுப்பினார்.
தொடர்ந்து மிரட்டிய இவர் அபாயகரமான டிவிலியர்சையம் 9 ரன்னில் அவுட்டாக்கினார். ஹெட்மயர் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் துபே 2 ரன்னுக்கு இம்ரான் சுழலில் சிக்கினார். இறுதியில் பெங்களூரு அணி 17.1 ஓவரில் 70 ரன் எடுத்து சுருண்டது.
சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும், பிராவோ ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்
பின்னர் 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வாட்சனும், அம்பதி ராயுடும் நிதானமாக விளையாடினர். 10 பந்தை சந்தித்த வாட்சன் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்து வந்த ரெய்னா 19 ரன் எடுத்து நடையை கட்டினார். அடுத்ததாக களம் இறங்கிய ஜாதவ், ராயுடுவுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில் ராயுடு 28 ரன் எடுத்திருந்த நிலையில் போல்டாகி வெளியேறினார். அதைத் தொடர்ந்து வந்த ஜடேஜா ஜாதவ்வுடன் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17. 4 ஓவரில் 71 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. #IPL2019 #CSK #RCB
ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்களை அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் இடம்பெற போவது டோனியா, ரெய்னாவா அல்லது ரோகித் சர்மாவா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. #IPL2019 #200sixes #MSDhoni #SureshRaina #RohitSharma
ஐபிஎல் தொடரின் 12-வது சீசன் வருகிற 23-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இன்னும் 9 நாட்கள் மட்டுமே இருப்பதால் ரசிகர்களிடம் ஐபிஎல் ஜுரம் தொற்றிக் கொண்டது. இதனால் ஐபிஎல் தொடர் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்களை நெருங்குவது யார் என்ற போட்டியில் எம்.எஸ். டோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் உள்ளனர்.
இதுவரை நடந்துள்ள ஐபிஎல் போட்டிகளில் டோனி 186 சிக்சர்களும், சுரேஷ் ரெய்னா 185 சிக்சர்களும், ரோகித் சர்மா 184 சிக்சர்களும் அடித்துள்ளனர்.
இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் சிக்சர்கள் அடித்து 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது.
ஐபிஎல் தொடரில் சிக்சர் மன்னன் கிறிஸ் கெய்ல் 292 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #IPL2019 #200sixes #MSDhoni #SureshRaina #RohitSharma
நவராத்திரியின் நான்காவது நாளான இன்று, பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி ராஞ்சியில் உள்ள திவ்ரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து காணிக்கை செலுத்தினார். #MSDhoni #DivriTemple
டேராடூன்:
நவராத்திரி பண்டிகை கடந்த 10ம் தேதி தொடங்கி நடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம் .
நவராத்திரி பண்டிகை தினங்களில் முக்கிய தலைவர்கள், பிரபல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள்
தங்கள் வசிக்கும் பகுதியின் அருகிலுள்ள அம்மன் கோவில்களுக்கு சென்று காணிக்கை செலுத்தி மகிழ்வார்கள்.
இந்நிலையில், நவராத்திரியின் நான்காவது நாளான இன்று, பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி ராஞ்சியில் உள்ள திவ்ரி துர்கா அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து காணிக்கை செலுத்தினார்.
ராஞ்சியில் உள்ள திவ்ரி துர்கா அம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. எம்.எஸ்.டோனி அந்த கோவிலுக்கு சென்று அங்குள்ள அம்மனை வணங்கிய பின்னர் தனது காணிக்கையை செலுத்தினார். டோனி வருகையை முன்னிட்டு கோவிலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #MSDhoni #DivriTemple
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X