search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார்"

    பீகாரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, எங்களிடம் தேசபக்தி உண்டு. காங்கிரசிடம் ஓட்டு பக்தியே காணப்படுகிறது என குற்றம் சாட்டினார். #LokSabhaElections2019 #PMModi
    பாட்னா:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி தொடங்கி முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது. மே 19ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது.

    பீகார் மாநிலத்தின் அராரியா பகுதியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதம்ர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும்போது தேசநலனையும், காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியலையும் பின்பற்றுகின்றன.

    பல பயங்கரவாத தாக்குதல்களில் ஓட்டு வங்கிக்காக இந்து பயங்கரவாதம் என்ற பெயரில் விசாரணையை காங்கிரஸ் அரசு திசைதிருப்பியது. ஆனால் பா.ஜனதா அரசு உரி தாக்குதலுக்காக துல்லிய தாக்குதலையும், புல்வாமா தாக்குதலுக்காக பாலகோட் வான் தாக்குதலையும் நடத்தியது. இந்த நாடு தேச பக்தி, ஓட்டு பக்தி ஆகிய இரண்டு விதமான அரசியலையும் பார்த்துள்ளது என தெரிவித்தார். #LokSabhaElections2019 #PMModi
    பீகார் மாநிலத்தில் சாலையில் நின்றிருந்த மக்கள் மீது லரி வேகமாக மோதியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். #BiharAccident
    பாட்னா:

    பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தனர். கொரியா பகுதியில் வந்தபோது, திடீரென லாரியின் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தார்.

    இதனால் சாலையில் இருந்த மக்கள் மீது லாரி வேகமாக மோதி கவிழ்ந்தது. இதையறிந்த உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #BiharAccident
    ஆயுத தடுப்பு சட்டத்தில் கைதாகி ஜாமினில் உள்ள முன்னாள் பெண் மந்திரி மஞ்சு வர்மா மத்திய மந்திரியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #ManjuVerma
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் சிறுமிகள் இல்லம் ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
      
    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும், சிறுமிகள் இல்லத்தின் நிர்வாகியுமான பிரஜேஷ் தாக்குர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டார். இவர், இந்த பாலியல் புகாரால் மந்திரி பதவியை இழந்த மஞ்சு வர்மாவின் கணவரான சந்திரசேகர் வர்மாவின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

    இதனால், சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் மஞ்சு வர்மாவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து ஏராளமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனால் கணவன்-மனைவி இருவர் மீதும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.ஐ. தனியாக வழக்குப்பதிவு செய்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பின் கீழ் நடந்து வரும் இந்த வழக்கில் சந்திரசேகர் வர்மா கோர்ட்டில் சரண் அடைந்தார்.
    அவரது மனைவி மஞ்சு வர்மா சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.

    கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மஞ்சு வர்மா சரணடைந்தார். அவரை ஜாமினில் விடுதலை செய்யும்படி பாட்னா ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இந்நிலையில், ஆயுத தடுப்பு சட்டத்தில் கைதாகி ஜாமினில் உள்ள முன்னாள் பெண் மந்திரி மஞ்சு வர்மா மத்திய மந்திரியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பன்கேற்றது சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் பங்கேற்று பேசினார். அப்போது அவருக்கு பின்புறமாக மேடையின் முன்வரிசையில் மஞ்சு வர்மா அமர்ந்திருந்தார்.

    ஆயுத தடுப்பு சட்டத்தில் கைதாகி ஜாமினில் உள்ள முன்னாள் பெண் மந்திரி மத்திய மந்திரி பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #ManjuVerma  
    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மேடை சரிந்ததில் முன்னாள் முதல் மந்திரி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். #LSpolls #Gaya #JeetanRamManjhi
    பாட்னா:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வேலை செய்து வருகின்றன.

    இதற்கிடையே, பீகார் மாநிலத்தில் உள்ள கயா தொகுதியில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி நடைபெறுகிறது. இங்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இந்நிலையில், பீகார் மாநிலம் கயா தொகுதியில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகார் முன்னாள் முதல் மந்திரியும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி தலைவருமான ஜித்தன் ராம் மஞ்சி பங்கேற்றார். இதில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த சுரேந்திர யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பொதுக்கூட்டம் நடைபெற்றபோது தொண்டர்கள் சூழ்ந்ததால் மேடையின் ஒரு பகுதி திடீரென சரிந்தது. இதில் ஜித்தன் ராம் மஞ்சி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். அவரை தொண்டர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

    முன்னாள் முதல் மந்திரி பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடை சரிந்தது பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    #LSpolls #Gaya #JeetanRamManjhi
    பீகார் மாநிலத்தில் 4 கட்டங்களாக நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் ராஷ்டரிய ஜனதா தளம், உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையில் இன்று தொகுதி உடன்பாடு முடிவானது. #Biharmahagathbandhan #mahagathbandhanseatsharing
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ், ராஷ்டரிய லோக் சமதா, ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா, விக்காஷீல் இன்ஸான் ஆகிய கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது.

    இந்த அறிவிப்பின்படி, ராஷ்டரிய ஜனதா தளம் 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், ராஷ்டரிய லோக் சமதா 5 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்சசா 3 தொகுதிகளிலும், விக்காஷீல் இன்ஸான் 3 தொகுதிகளிலும்  போட்டியிடுகின்றன. ஆரா தொகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளரை எதிர்த்து எங்கள் கூட்டணியில் யாரும் போட்டியிட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



    லாலு பிரசாத் யாதவின் மூத்த மகள் மிசா பாரதி பாடலிபுத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமார் சசாராம் தொகுதியில் நிற்கிறார்.

    காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாட்னா சாகிப் தொகுதியில் பாஜகவில் இடமளிக்காமல் ஒதுக்கப்பட்ட நடிகர் சத்ருகன் சின்கா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    லோல்தந்த்ரிக் ஜனதா தளம் கட்சியின் நிறுவன தலைவர் சரத் யாதவ் ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளராக மாதேபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். #Biharmahagathbandhan #mahagathbandhanseatsharing
    பீகாரில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர். #BiharAccident
    பாட்னா:

    பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள பார்ஹ் பாக்தியார்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை ஆட்டோ ஒன்று பயணிகளுடன் வந்துக் கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்து ஆட்டோவின் மீது சற்றும் எதிர்பாராத விதமாக மோதியது.

    இவ்விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 13 பேர் பலத்த காயமடைந்தனர். உயிருக்கு போராடிய அவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். #BiharAccident
    பீகார் மாநிலம் பாட்னா மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் போட்டியிடுகிறார். #NDACandidates #Bihar #RaviShankarPrasad
    பாட்னா:

    பாராளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் இன்று 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மாநில பாஜக பொறுப்பாளர் பூபேந்திர யாதவ் அறிவித்தார்.



    பாட்னா தொகுதியில் பாஜக சார்பில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் பாஜக சார்பில் ஏற்கனவே வெற்றி பெற்ற சத்ருகன் சின்காவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    நவடா எம்பி கிரிராஜ் இந்த முறை பெகுசராய் தொகுதியில் போட்டியிடுகிறார். பாடலிபுத்திரத்தில் ராம்கிரிபால் யாதவ், அர்ராஹ் தொகுதியில் ஆர்.கே.சிங், புக்சார் தொகுதியில் அஸ்வனி சவுபே, கிழக்கு சம்பரன் தொகுதியில் ராதா மோகன் சிங், சரன் தொகுதியில் ராஜீவ் பிரதாப் ரூடி போட்டியிடுகின்றனர்.

    லோக் ஜனசக்தி கட்சியின் சந்தன் குமார் நவடா தொகுதியிலும், சிரக் பஸ்வான் ஜமுய் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். #NDACandidates #Bihar #RaviShankarPrasad
    பீகாரில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. #Bihar #LaluYadav #Congress
    பாட்னா:

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை கொண்டுள்ள பீகார் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு ஆளும் கட்சியாக உள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளமும், பாரதீய ஜனதா கட்சியும், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இந்த கூட்டணிக்கு சரியான போட்டியை ஏற்படுத்துகிற விதத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ், ராஷ்ட்ரீய லோக்சமதா, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மத சார்பற்றது), விகாஷீல் இன்சான் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இந்த கட்சிகள் இடையே நேற்று தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.

    மொத்தம் உள்ள 40 இடங்களில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் தரப்பட்டுள்ளன.

    உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக்சமதா கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜித்தன் ராம்மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மத சார்பற்றது) கட்சிக்கு 3 தொகுதிகளும், முகேஷ் சானியின் விகாஷீல் இன்சான் கட்சிக்கு 3 இடங்களும் தரப்பட்டுள்ளன.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டு) கட்சிக்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தனது தொகுதிகளில் இருந்து ஒரு தொகுதியை ஒதுக்கித்தருகிறது.

    காங்கிரசுக்கு மாநிலங்களவை இடம் ஒன்றும் தரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி சின்னத்தில் போட்டியிடுவார். தேர்தலுக்கு பின்னர் அவர் தனது லோக்தந்திரிக் ஜனதாதளம் கட்சியை ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியுடன் இணைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

    இடது சாரி கட்சிகளுக்கு இந்த கூட்டணியில் இடம் தரப்படவில்லை. இது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி கூறி உள்ளார்.
    பீகார் மாநிலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்துக்குள் இன்று புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் பணியாளர்களை மிரட்டி 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை அள்ளிச் சென்றனர். #Goldlooted #Rs10crorelooted
    பாட்னா:

    பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டம், பகவான்பூர் பகுதியில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது.

    இன்று காலை இந்த அலுவலகத்துக்கு வந்த 6 பேர் தங்க நகையின் மீது பண உதவி தேவை என வாசலில் இருந்த காவலாளியிடம் கூறினர். காவலாளி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றபோது, பின்னால் இருந்து ஒருவன் அவரது தலையில் ஆயுதத்தால் தாக்கினான்.

    காவலாளி மயங்கி விழுந்த நிலையில், ஆறுபேரும் துப்பாக்கிகளை உருவியவாறு அலுவகத்துக்குள் பாய்ந்தனர். மேனேஜர் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய இருவர் தங்க நகைகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பெட்டக அறைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.



    வெளியே நின்ற கொள்ளையர்கள் இதர பணியாளர்களை மிரட்டி, கூச்சலிடாத வகையில் பார்த்து கொண்டனர். மேனேஜரிடம் இருந்த சாவிகளை பறித்து, பெட்டகங்களை திறந்த கொள்ளையர்கள் 5 பெரிய பைகளில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை அள்ளிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    கொள்ளைபோன நகையின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என தெரிவித்த போலீசார் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவன பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Goldlooted  #Rs10crorelooted

    பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். #BiharFireAccident
    பாகல்பூர்:

    பீகாரில் உள்ள பாகல்பூர் மாவட்டம், ஸ்ரீபூர் கிராமத்தில், சதீஸ் சிங் என்பவரின் வீடு நேற்றிரவு திடீரென தீப்பிடித்தது. குளிர்காய்வதற்காக தீ மூட்டியபோது, அதில் இருந்த தீப்பொறி சதீஸ் சிங்கின் வீட்டில் பட்டு தீப்பிடித்துள்ளது. தீ மளமளவெனப் பரவியதால், வீட்டிற்குள் இருந்த குழந்தைகள் கிருஷ்ண குமார் (10), கிரந்தி குமார்(8), ஷைலஜா குமாரி(6), பூஷா குமாரி(4) ஆகியோர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    சதீஸின் சகோதரர் மற்றும் தாயார் கருணா தேவி(50) ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாகல்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கருணாதேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சதீஸ் சிங்கின் வீட்டில் பற்றிய தீ, அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. இதனால் 7 வீடுகள் தீயில் கருகின. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #BiharFireAccident

    பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 17 தொகுதிகளிலும் லோக் ஜனசக்தி கட்சி 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. #NDAseatsharing #Biharseatsharing
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மாநில வாரியாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்வதிலும் வேட்பாளர் தேர்விலும் பா.ஜ.க. தலைமை தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில், பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோருடன் இன்று டெல்லியில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா தொகுதி உடன்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார்.



    இந்த ஆலோசனைக்கு பின்னர் பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 17 தொகுதிகளிலும் லோக் ஜனசக்தி கட்சி 6 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று உடன்படிக்கை செய்யப்பட்டது.

    மேலும், பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு இடம் அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அநேகமாக, மேல்சபை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #NDAseatsharing #Biharseatsharing
    பீகார், கேரள மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க மாவட்டம்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #Criminalcases #casesagainstMPMLAs #specialcourts
    புதுடெல்லி:

    குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட  அரசியல்  தலைவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க கோரி, வழக்கறிஞரும் பா.ஜ.க. தலைவருமான அஸ்வினி உபாத்யாய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    கிரிமினல் வழக்குகளில் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகி தண்டனை அளிப்பதில் நீண்டகால இழுத்தடிப்பு நடந்து வருவதால் கிரிமினல்கள் மக்கள் பிரதிநிதிகளாக உலா வருகின்றனர். எனவே, இவர்கள் மீதான வழக்குகளில் விசாரணையை விரைவுப்படுத்தி, தண்டித்து அரசியலில் ஈடுபட தடை விதிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டுக்கு உதவுவதற்காக வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா ‘அமிகஸ் கியூரி’யாக நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், நாடு முழுவதிலும் பல்வேறு நீதிமன்றங்களில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 4122 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் அதிகபட்சமான வழக்குகள் பீகார் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், பீகார், கேரள மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க மாவட்டம்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. தேவை ஏற்படும் மாவட்டங்களில் எத்தனை சிறப்பு நீதிமன்றங்களை வேண்டுமானாலும் அமைத்து கொள்ளலாம்.

    தற்போது, மாநில ஐகோர்ட் மற்றும் சில சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றுவரும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் அனைத்தும் புதிதாக அமைக்கப்படும் மாவட்ட சிறப்பு நீதிமன்றங்களுக்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும். இந்த நீதிமன்றங்களில் ஆயுள் தண்டனைக்கு வாய்ப்புள்ள குற்ற வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து விசாரிக்கப்பட வேண்டும்.

    இவ்வகையில், பீகார் மற்றும் கேரளாவில் மாவட்டங்கள்தோறும் அமைக்கப்படும் புதிய சிறப்பு நீதிமன்றங்களின் பட்டியலை பாட்னா மற்றும் கேரளா ஐகோர்ட்டுகள் வரும் 14-ம் தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். #Criminalcases #casesagainstMPMLAs #specialcourts #Biharpecialcourts #Keralapecialcourts
    ×