search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார்"

    பீகார் மாநிலம் முசாபர்பூர் காப்பகத்தில் சுமார் 30 சிறுமிகள் சீரழிக்கப்பட்டது தொடர்பாக பதவி விலகிய முன்னாள் மந்திரி மஞ்சு வர்மாவை கைது செய்ய இன்று வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. #Bihargovt #ManjuVerma #MuzaffarpurShelterHome
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த சுமார் 30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

    இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் காப்பகத்தின் பொறுப்பாளர் பிரஜேஷ் தாக்கூர் உள்பட 17 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சிறுமிகள் சீரழிக்கப்பட்ட பாதுகாப்பு இல்லத்திற்கு பீகார் மாநில சமூக நலத்துறை மந்திரி மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா அடிக்கடி சென்று வந்ததாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்திரசேகர் வர்மாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் மஞ்சு வர்மா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

    இதைதொடர்ந்து, தலைமறைவாக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மாவின் வீட்டை போலீசார் சோதனையிட்டபோது அனுமதி பெறாத கள்ளத்துப்பாக்கிகள் மஞ்சு சர்மா வீட்டில் கிடைத்தன. இதன் அடிப்படையில் கணவன் - மனைவி இருவருக்கும் எதிராக சி.பி.ஐ. அதிகாரிகள் தனியாக வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனால் தன்னை இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க பாட்னா உயர் நீதிமன்றத்தில் மஞ்சு வர்மா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை கடந்த 9-ம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து போலீசார் கையில் பிடிபடாமல் தலைமறைவாக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா நேற்று (திங்கட்கிழமை) பேகுசராய் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எம்.பி.லோக்குர், எஸ்.அப்துல் நசீர் மற்றும் தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் நேற்று விசாரணைக்கு வந்தது. 

    பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி ரஜேஷ் தாக்கூர் சிறைக்குள் கைபேசி வைத்திருந்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் குறிப்பிட்டதையடுத்து, பிரஜேஷ் தாக்கூரை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாதுகாப்பு நிறைந்த பாட்டியாலா சிறைக்கு உடனடியாக மாற்றுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும், முன்னாள் மந்திரி மஞ்சு வர்மா மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய தவறியதற்காக பீகார் அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு 9-ம் தேதியே தள்ளுபடியான நிலையில் இன்னும் மஞ்சு வர்மாவை கைது செய்யாதது ஏன்? என பீகார் மாநில அரசின் சார்பில் வாதாடும் வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பினர்.

    மஞ்சு வர்மா முன்னாள் மந்திரியாக இருக்கலாம். ஆனால், அவர் என்ன சட்டத்தை விட உயர்ந்தவரா? இன்னும் அவரை கைது செய்யாதது ஏன்? இவ்வளவு நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இவ்வழக்கின் மறுவிசாரணையை நவம்பர் முதல் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் கெடுபிடியால் கலக்கமடைந்துள்ள பீகார் போலீசார் மஞ்சு வர்மாவை கைது செய்ய வாரண்ட் வழங்குமாறு உள்ளூர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தனர். இதைதொடர்ந்து கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மஞ்சு வர்மாவை போலீசார் தேடி வருகின்றனர். #Bihargovt #ManjuVerma #MuzaffarpurShelterHome  
    பீகார் மாநில அரசு மருத்துவமனையில் பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையை எலி கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Bihar
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் தர்பங்கா மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நஜ்ரா கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது பிரசவத்துக்கான அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிறந்த ஆண் குழந்தை ஆரோக்கிய பற்றாக்குறை காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டது.

    இதையடுத்து வழக்கம்போல், காலை எழுந்து குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக சென்ற தாய்க்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பிறந்து 8 நாட்களே ஆன அவரது ஆண் குழந்தை சிறு சிறு ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளது. குழந்தையின் கால்களிலும், உடலின் சில பகுதிகளிலும் எலி கடித்ததற்கான வடுக்களும், உறைந்த இரத்தமும் இருந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால், இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், குழந்தைக்கு இதய குறைபாடு இருந்ததினால்தான் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து இருந்ததாகவும், அதனாலேயே குழந்தை இறந்ததாகவும் தெரிவித்துள்ளது. அதே சமயம், மருத்துவமனையில், எலிகளின் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அதனை கட்டுப்படுத்தும் வழி தெரியவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளது.

    இந்நிலையில், அம்மாவட்ட மாஜிஸ்திரேட் இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். #Bihar
    பீகாரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஜே.என்.யு. மாணவர் அணி தலைவர் கன்னையா குமார் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #KanhaiyaKumar
    பாட்னா:

    டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் அணி தலைவராக இருந்து வருபவர் கன்னையா குமார். இவர் பீகாரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றார்.

    பெகுசராய் மாவட்டம் தஹியா கிராமத்தில் உள்ள பகவான்பூர் காவல் நிலையம் அருகே நிகழ்ச்சி முடிந்து கன்னையா குமார் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் கன்னையா குமார் இருந்த காரின் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் அங்கிருந்த வாகனங்களையும் சேதப்படுத்தினர்.



    இதுதொடர்பாக, இரு தரப்பினரும் உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஜே.என்.யு. மாணவர் அணி தலைவர் கன்னையா குமார் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடைபெற்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #KanhaiyaKumar
    பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மீது செருப்பை வீசிய இளைஞருக்கு அவரது கட்சியினர் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். #Nitishkumar
    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் பாட்னாவில் உள்ள பாபு சபாகர் மைதானத்தில் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின்ர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி நிதிஷ்குமார் பங்கேற்றார். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஐக்கிய ஜனதா கட்சியின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் திடீரென நிதிஷ்குமாரை நோக்கி செருப்பை வீசினார். அதிர்ஷ்டவசமாக செருப்பு அவர்மீது படாமல் கூட்டத்தில் விழுந்தது.



    இந்த தாக்குதலை கண்டு கூட்டத்தில் இருந்தவர்கள் அந்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் சந்தன் என்பதும், பாரபட்சமான இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இதுபோன்று நடந்து கொண்டதாகவும் தெரிய வந்தது. #Nitishkumar
    பீகார் மாநிலத்தில் உள்ளூர் பாஜக தலைவர் மகனை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது. #BJP
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் உள்ளூர் பாஜக தலைவராக இருந்து வருபவர் கங்கோத்ரி பிரசாத். இவரது மகன் பியூஷ்குமார்.

    இவர் நேற்று இரவு சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை வழிமறித்து, தங்களிடம் இருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினர்.

    இதில் படுகாயம் அடைந்த பியூஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆளும் கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக பிரமுகரின் மகன் கொலை செய்யப்ப்பட்டுள்ளது, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதை நிரூபிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. #BJP
    பீகார் மாநிலத்தில் இயங்கிவரும் மகத் பல்கலைக்கழகம் 32 கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். #Bihar #StudentsProtest
    பாட்னா:

    பீகார் மாநிலம் புத்தகயா பகுதியில் இயங்கிவரும் மகத் பல்கலைக்கழகத்தின் இணைப்பில் இல்லாத கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை வெளியிட பீகார் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், தற்போது அக்டோபர் 1 முதல் துவங்க இருக்கும் தேர்விலும் இணைப்பில் இல்லாத கல்லூரிகள் பங்கு பெற மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் சுமார் 86 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் மறுஆய்வு செய்யுமாறு மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது.



    இந்நிலையில், மகத் பல்கலைக்கழகத்தினால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 32 கல்லூரிகளின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது, பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும், அரசுக்கும் கண்டனம் தெரிவித்த கல்லூரி மாணவர்கள் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த போராட்டத்தின் போது பீகார் அரசு பேருந்து தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியின் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.

    மாணவர்கள் தங்கள் வாழ்வின் முக்கிய பகுதியான தேர்வுக்காக போராடும் நிலையில், வன்முறையை கையில் எடுத்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. #Bihar #StudentsProtest
    ரபேல் விவகாரத்தில் பரிசுத்தத்தன்மையை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும் என பாஜக எம்.பி சத்ருகன் சின்ஹா வலியுறுத்தியுள்ளார். #RafaleDeal #Modi #ShatrughanSinha
    பாட்னா:

    இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன.
     
    ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்த்தை மாற்றி அமைத்து கடந்த 2015-ம் ஆண்டில் பாரதிய ஜனதா ஆட்சியில் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

    பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்படும் போர் விமானங்களை பராமரிக்கும் பொறுப்பை இந்திய அரசுக்கு சொந்தமான எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு வழங்காமல் விமானத்துறையில் முன் அனுபவம் இல்லாத அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்துக்கு அளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும், அதிக தொகை கொடுத்து விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. 



    இதற்கிடையே, ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் அம்பானி நிறுவனத்தை நுழைத்தது இந்திய அரசின் நிர்பந்தத்தால்தான் என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே நேற்று குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், பீகாரை சேர்ந்த பாஜக எம்.பி சத்ருகன் சின்ஹா, ரபேல் விவகாரத்தில் பரிசுத்தத்தன்மையை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ரபேல் பேரம் விவகாரம் தொடர்பான பிரச்னையில் உண்மை நிலையை மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். அதன்மூலம் ரபேல் போர் விமானத்தின் விலை மூன்று மடங்கு கூடுதலாக வாங்கப்பட்டது உறுதியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் இருந்து நீங்கள் (பிரதமர் மோடி) வெளிவருவதற்கு நீண்ட நாள்களாகும்.

    மக்கள் என்னை புரட்சிகரமான எம்.பி. என அழைக்கிறார்கள். ஆனால், நான் கட்சி மற்றும் நாட்டின் நலனுக்காகவே பேசி வருகிறேன்.

    எனவே, ரபேல் விவகாரத்தில் பரிசுத்தத்தன்மையை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும். இந்த விவகாரத்தின் உண்மை நிலையை அறிந்து கொள்ள நாடு ஆவலாக இருக்கிறது என வலியுறுத்தியுள்ளார். #RafaleDeal #Modi #ShatrughanSinha
    பீகார் மாநிலத்தில் விபத்தில் இறந்த 11 வயது சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தர மறுத்ததால், சிறுவனின் தந்தை அவரை தோளில் தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Bihar
    பாட்னா:

    பீகார் மாநிலம் நாலந்தா பகுதியில் நேற்று 11 வயது சிறுவன் வாகன விபத்தில் காயம் அடைந்தான். அப்போது அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்தும் நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

    இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். தனது மகன் இறந்த செய்தி கேட்ட சிறுவனின் தந்தை கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.



    அதுமட்டுமின்றி, இறந்த சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது மகனின் உடலை தந்தை தாமே தோளில் தூக்கிச் சென்றுள்ளார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் இருசக்கர வாகனம் மூலம் சிறுவனின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல உதவியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், குறித்த நேரத்துக்கு ஆம்புலன்ஸ் வந்திருந்தால் சிறுவனின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் எனவும் இறந்த சிறுவனின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து சிறுவன் இறந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கண்டனங்கள் குவிந்து வருகின்றன. #Bihar
    பீகாரில் பள்ளிக்குள் புகுந்து மாணவியை கடத்த முயன்றபோது பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தாக்கியதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் பெகுசரை மாவட்டத்துக்கு உட்பட்ட நாராயணிபூர் கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் படித்து வருகிறார். நேற்று காலையில் இந்த பள்ளிக்கு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 3 பேர், அந்த மாணவியை கடத்த முயன்றனர்.

    இதை தடுக்க முயன்ற ஆசிரியர்களை அவர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டினர். இதைப்பார்த்த பிற மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கம்பு, கற்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு ஏராளமான பொதுமக்கள் பள்ளிக்கு வந்தனர். அவர்களை பார்த்ததும் மாணவியை கடத்த முயன்ற 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் அவர்களை விரட்டிப்பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    அந்த வழியாக வந்த போலீசார், கிராமத்தினரிடம் இருந்து மற்ற இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். கொல்லப்பட்டவரில் ஒருவர், அப்பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஆவார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெகுசரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஸ்ரீஜன் ஊழல் தொடர்பாக பீகார் துணை முதல் மந்திரி சுசில்குமார் மோடியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறை இன்று அதிரடி சோதனை நடத்தியது. #SrijanScam #SushilKumarModi #ITRaid
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    பீகார் மாநிலம் பாகல்பூரில் ஸ்ரீஜன் மகிளா விகாஸ் சயோக் சமிதி என்ற என்.ஜி.ஓ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது பெண்களுக்கு தொழில்முறை பயிற்சி வழங்குகிறது. இந்த அமைப்பு அரசு நலத்திட்டங்களுக்கான நிதியை பாகல்பூர் மாவட்ட நிர்வாகத்தின் வங்கி கணக்குகளில் இருந்து முறைகேடாக எடுத்துள்ளதாக புகார் எழுந்தன. ரூ.1200 கோடி அளவில் ஊழல் நடந்தது தெரிய வந்தது. 

    ஸ்ரீஜன் தொண்டு நிறுவனம் மூலம் மாநில அரசு ரூ.1200 கோடி ஊழல் செய்ததாகவும் இதற்கு பொறுப் பேற்று முதல் மந்திரி நிதிஷ்குமார், துணை முதல் மந்திரி சுசில்குமார் மோடி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதாதளம் குற்றம் சாட்டியது. இதையடுத்து, இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நிதிஷ்குமார் உத்தரவிட்டார். சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், ஸ்ரீஜன் ஊழல் விவகாரம் தொடர்பாக பீகாரில் உள்ள துணை முதல் மந்திரி சுசில்குமார் மோடியின் உறவினர் ரேகா மோடி ஆகியோரின் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

    இதேபோல், பாகல்பூரில் உள்ள பல்வேறு இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    துணை முதல் மந்திரி  சுசில்குமார் மோடி உறவினர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையை தொடர்ந்து, அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. #SrijanScam #SushilKumarModi #ITRaid
    டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவரான கன்னையா குமார் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். #KanhaiyaKumar
    பாட்னா:

    டெல்லியில் அமைந்துள்ளது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம். இதன் மாணவர் சங்க தலைவரான கன்னையா குமார் உள்பட 4 மாணவர்கள் கடந்த 9.2.16 அன்று அப்சல் குரு நினைவு தினத்தில் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கூறப்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜாமீனில் வெளிவந்தார்.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பீகார் மாநிலத்தில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கன்னையா குமார் போட்டியிடுகிறார். இவர் பீகார் மாநிலம் பெகுசராய் லோக்சபா தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளார் என கூறப்படுகிறது.

    கன்னையா குமார் பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அப்சல் குருவை ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #KanhaiyaKumar
    பீகாரில் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். #BiharShelter
    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் உள்ள நேபாளி நகரில் செயல்பட்டு வருவது ஆஸ்ரா பெண்கள் காப்பகம். இங்கு ஏராளமான பெண்கள் தங்கி வருகின்றனர்.

    இதற்கிடையே, அந்த காப்பகத்தில் சுமார் 17 வயது மற்றும் 21 வயது மதிக்கத்தக்க இரு பெண்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பக உரிமையாளர் சீரந்தான் குமார் மற்றும் காப்பக பாதுகாவலர் ரேணுகா தயாள் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அங்கிருந்த சில பெண்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்டு பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே, முசாபர்பூர் நகரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அரசு உதவி பெற்று நடத்தப்படும் காப்பகத்தில் தங்கியிருந்த 30-க்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து காப்பக நிர்வாகிகள் மற்றும் பலர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. #BiharShelter
    ×