search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேபரேலி"

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோர் நாளை தேர்தல் பிரசாரம் மேற்கொள்கின்றனர். #LokSabhaElections2019 #SoniaGandhi #RahulGandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி தொடங்கி முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது. மே 19ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் போட்டியிடுகின்றனர். 

    உபியின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் மே 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நாளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    ரேபரேலியில் சோனியாவை எதிர்த்து பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங்கும், அமேதியில் ராகுலை எதிர்த்து பாஜக சார்பில் ஸ்மிருதி இரானியும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #SoniaGandhi #RahulGandhi
    “தாயும், மகளும் கஷ்டமான தருணங்களில் ரேபரேலிக்கு வருவதே இல்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டும் வருகின்றனர்” என ரேபரேலியில் பிரியங்காவை குறித்து சுவரொட்டியில் விமர்சனம் செய்யப்பட்டு இருந்தது. #PriyankaGandhi #RaeBareli
    ரேபரேலி:

    காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா, உத்தரபிரதேசத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று தனது தாயாரின் சொந்த தொகுதியான ரேபரேலிக்கு சென்றார்.அதே சமயத்தில், அவரை விமர்சித்து ஏராளமான சுவரொட்டிகள் ரேபரேலி நகரில் ஒட்டப்பட்டு இருந்தன. சில சுவரொட்டிகள், காங்கிரஸ் அலுவலகத்துக்கு அருகிலேயே காணப்பட்டன. அதில், சோனியா-பிரியங்கா ஆகிய இருவரின் புகைப்படங்களும் இருந்தன. ஒரு சுவரொட்டியில், “தாயும், மகளும் கஷ்டமான தருணங்களில் ரேபரேலிக்கு வருவதே இல்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டும் வருகின்றனர்” என்று கூறப்பட்டு இருந்தது.

    மேலும், ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் ஒட்டப்பட்டு இருந்த ஒரு சுவரொட்டியில், “5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஏன் அமேதிக்கு வருகிறீர்கள்? எங்களை முட்டாள் ஆக்காதீர்கள்” என்று பிரியங்கா படம் போட்டு விமர்சனம் செய்யப்பட்டு இருந்தது.
    ரேபரேலியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி 5-வது முறையாக களமிறங்க உள்ளார். #SoniaGanthi #LokSabha #RaeBareli
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதி தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கி வருகிறது. இங்கு 1971-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட தேர்தல்களில் 1977-ல் இந்திரா காந்தி தோல்வியடைந்ததை தவிர, பிற தேர்தல்கள் அனைத்திலும் அந்தக்கட்சி வெற்றிக்கனியை பறித்து இருக்கிறது.

    இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ரேபரேலியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கடந்த 2004-ம் ஆண்டு முதல் போட்டியிட்டு வருகிறார். 2006-ல் நடந்த இடைத்தேர்தல் உள்ளிட்ட 4 தேர்தல்களில் அந்த தொகுதியில் போட்டியிட்டு அவர் வென்றிருந்தார். 2004-ம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் 2.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்று இருந்தார்.இதைத்தொடர்ந்து வருகிற தேர்தலுக்கும் ரேபரேலி தொகுதி சோனியாவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

    சமீபத்தில் வெளியிடப்பட்ட கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இந்த தகவல் இடம்பெற்று இருந்தது. இதன் மூலம் 5-வது முறையாக ரேபரேலி தொகுதியில் அவர் களமிறங்க உள்ளார்.முன்னதாக சோனியாவின் உடல்நலக்குறைவு காரணமாக அவர் போட்டியிடுவது குறித்து சந்தேகங்கள் கிளம்பி இருந்த நிலையில், அவர் போட்டியிடுவதை கட்சித்தலைமை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.  SoniaGanthi #LokSabha #RaeBareli
    உ.பி.யில் ரேபரேலி தொகுதி பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ரத்துசெய்துள்ளார். ஆனால், திட்டமிட்டபடி ராகுல் காந்தி அமேதி தொகுதிக்கு நாளை சுற்றுப்பயணம் செல்கிறார். #Congress #SoniaGandhi #RahulGandhi #RaeBareli #Amethi
    லக்னோ: 

    வரும் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த வேலைகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி சோனியா காந்தியின் பாராளுமன்ற தொகுதி ஆகும். இதேபோல், உ.பி.யில் உள்ள அமேதி தொகுதி ராகுல் காந்தியின் பாராளுமன்ற தொகுதி ஆகும்.

    இதற்கிடையே, காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவரான ராகுல் காந்தி ஆகியோர் தங்களது பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஜனவரி 23, 24-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.



    இந்நிலையில், உ.பி.யின் ரேபரேலி தொகுதி பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ரத்துசெய்துள்ளார். ஆனால், திட்டமிட்டபடி ராகுல் காந்தி அமேதி தொகுதிக்கு நாளை முதல் சுற்றுப்பயணம் செல்கிறார்.

    இதுதொடர்பாக, உ.பி. மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜிஷான் ஹைடர் கூறுகையில், தவிர்க்க முடியாத காரணங்களால் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டபடி அமேதி தொகுதியில் நாளை முதல் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார், அங்கு பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி பணிகளை முடுக்கி விடும் பணிகளில் ஈடுபடவுள்ளார் என தெரிவித்துள்ளார். #Congress #SoniaGandhi #RahulGandhi #RaeBareli #Amethi
    சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தங்களது தொகுதிகளுக்கு ஜனவரி 23, 24-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளனர் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. #Congress #SoniaGandhi #RahulGandhi #RaeBareli #Amethi
    லக்னோ: 

    வரும் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த வேலைகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி சோனியா காந்தியின் பாராளுமன்ற தொகுதி ஆகும். இதேபோல், உ.பி.யில் உள்ள அமேதி தொகுதி ராகுல் காந்தியின் பாராளுமன்ற தொகுதி ஆகும்.



    இந்நிலையில், காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவரான ராகுல் காந்தி ஆகியோர் தங்களது பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஜனவரி 23, 24-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர் என காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அமேதி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அனில் சிங் கூறுகையில், உ.பி. செல்லும் சோனியா மற்றும் ராகுல் காந்தி பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி பணிகளை முடுக்கி விடும் பணிகளில் ஈடுபட உள்ளனர் என தெரிவித்துள்ளார். #Congress #SoniaGandhi #RahulGandhi #RaeBareli #Amethi
    சுப்ரீம் கோர்ட்டைகூட குறை காணும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியினர் தயாராக உள்ளனர் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #Modi #Congressstronghold #Modivisit #ModivisitRaeBareli #SCverdict #Rafaleverdict
    லக்னோ:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் எம்.பி. தொகுதியான ரேபரேலியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் ரேபரேலி நகருக்கு வந்த அவர், ரேபரேலி-பான்டா நான்குவழி நெடுஞ்சாலையை திறந்து வைத்ததுடன் 1100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

    ரேபரேலியில் உள்ள ரெயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிட்ட மோடி, அங்கு தயாரிக்கப்பட்ட 900-வது ‘ஹம்சபர்’ ரெயில் பெட்டியை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கலந்து கொண்டார்.

    பின்னர், ரெயில் பெட்டி தொழிற்சாலை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, ரேபரேலியின் வளர்ச்சிக்காக முந்தைய காங்கிரஸ் அரசு எதுவுமே செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.

    ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக மத்திய அரசுமீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் காங்கிரசார் நமது நாட்டு ராணுவ மந்திரி சொல்வதை நம்பவில்லை. விமானப்படை உயரதிகாரிகள் கூறியதை நம்பவில்லை. அவர்களை எல்லாம் பொய்யர்கள் என்று புறக்கணித்து விட்டார்கள்.

    பிறகு, பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் சொன்னதையும் நம்பவில்லை. தற்போது சுப்ரீம் கோர்ட்டைகூட குறை காணும் அளவுக்கு அவர்கள் தயாராக உள்ளனர் என்று மோடி குறிப்பிட்டார்.



    பாதுகாப்பு விவகாரத்தில் காங்கிரஸ் அரசின் மெத்தனப்போக்கான அணுகுமுறையை இந்த நாடு ஒருபோதும் மன்னிக்காது. கார்கில் போருக்கு பின்னர் நமது விமானப்படையை அதிநவீனப்படுத்த வேண்டும் என பலமுறை பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இதற்காக ஒன்றுமே செய்யவில்லை. 

    சுதந்திரத்துக்கு பின்னர் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் ராணுவத்துக்கு ஆயுதம் வாங்கிய போதெல்லாம் வெளிநாட்டு இடைத்தரகர்கள் நுழைக்கப்பட்டனர். அவர்கள் வெளிநாட்டு தாய்மாமாக்களுடன் மட்டுமே ஆயுத வியாபாரம் செய்தனர்.

    இப்போது காங்கிரசாருக்கு ஒரு புது தாய்மாமா கிடைத்திருக்கிறார். அகஸ்ட்டா வெஸ்ட்லேன்ட் ஹெலிகாப்டர் ஊழலில் தலைமறைவாக இருந்த கிறிஸ்டியன் மைக்கேலை நாங்கள் துபாயில் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வந்தோம். ஆனால், அவருக்காக கோர்ட்டில் வாதாடுவதற்காக அவசர அவசரமாக காங்கிரஸ் கட்சி தங்களது வக்கீலை ஏற்பாடு செய்து தந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்,

    இன்று பிற்பகல் ரேபரேலியில் இருந்து பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகருக்கு சென்று கும்பமேளா விழாவுக்கான முன்னேற்பாடுகளை பார்வையிடும் பிரதமர் மோடி, இங்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர், ஜுன்சி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார். #Modi #Congressstronghold #Modivisit #ModivisitRaeBareli #SCverdict #Rafaleverdict
    ×