என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரசியல்"
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த வருமான வரி சோதனையை சிலர் விமர்சிக்கிறார்கள். தேர்தல் நேரம் என்பதால் அந்த வருமான வரி சோதனையை ஆளும் கட்சியுடன் முடிச்சு போடுகிறார்கள். இந்த வருமான வரிசோதனைகள் எல்லாம் சட்டப்படிதான் நடந்துள்ளது.
அரசியல் ரீதியாக பழி வாங்கும் வகையில் எந்த வருமான வரி சோதனையும் நடத்தப்படவில்லை. போபால் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள பிரக்யா சிங் காங்கிரசுக்கு தக்க பதிலடி கொடுப்பார்.
பயங்கரவாதத்தை மதத்துடனும், கலாச்சாரத்துடனும் இணைத்து பேசுபவர்களுக்கு அவரது தேர்தல் போட்டி நிச்சயம் பதில் அளிப்பதாக இருக்கும்.
வங்கிகளில் கடன் வாங்கிய தொழில் அதிபர்கள் விஜயமல்லையா, நிரவ்மோடி, மொகுல்சோக்சி போன்றவர்கள் தங்களது கடனை இந்த ஆட்சியில் திருப்பி கொடுத்தே தீர வேண்டிய நிலை உருவாகி இருப்பதை உணர்ந்தனர். அதனால்தான் அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுள்ளனர்.
அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள்.
பாரதிய ஜனதா கட்சி இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். 2014-ம் ஆண்டு பெற்ற வெற்றியை விட இந்த தடவை கூடுதல் வெற்றி கிடைக்கும்.
பாரதிய ஜனதா கட்சிக்கு மீண்டும் தனி பெரும்பான்மை கிடைக்கும். அதில் சந்தேகமே இல்லை.
இவ்வாறு மோடி கூறினார். #PMModi #Incometax
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் ராணுவ தளபதிகள் ரோட்ரிக்ஸ், சங்கர்ராய் சவுத்ரி, தீபக் கபூர், முன்னாள் விமானப்படை தளபதி என்.சி.சூரி, முன்னாள் கடற்படை தளபதிகள் எல்.ராமதாஸ், அருண் பிரகாஷ், மேத்தா, விஷ்ணு பகவத் மற்றும் ஓய்வு பெற்ற 148 முப்படை உயர் அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ஆயுதப்படைகள், எல்லைதாண்டி சென்று நடத்தும் தாக்குதல்களுக்கு அரசியல் தலைவர்கள் உரிமை கோரும் ஏற்க இயலாத, வழக்கத்துக்கு மாறான நடைமுறை நிலவி வருகிறது. ஆயுதப்படைகளை ‘மோடி சேனை’ என்று அழைக்கும் அளவுக்கு சென்றுவிட்டனர்.
அவர்களின் அரசியல் செயல் திட்டங்களுக்கு ராணுவத்தை பயன்படுத்துகிறார்கள். மேலும், விமானி அபிநந்தன் புகைப்படத்தை பிரசாரத்துக்கு உபயோகிக்கிறார்கள். இதற்கு எங்கள் ஆட்சேபனையை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #MilitaryVeterans
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சுற்றி வித்தியாசமான முறையில் பிரசரம் செய்து வருகிறார்.
சூ பாலீஷ் போடுவது, புரோட்டா செய்வது, டீ போடுவது, தெருக்களை கூட்டுவது, டயர்களுக்கு பஞ்சர் ஒட்டுவது, குழந்தைகளுக்கு தாலாட்டு பாடுவது என விதவிதமான முறையில் பிரசாரம் செய்து பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளார்.
மேலும் பொதுக்கூட்டத்தில் விவசாயி போல் உடையணிந்து வந்தார். தொகுதிக்குள் பொதுமக்களிடம் உரிமையாக பேசி பழகி அவர்களது கஷ்ட நஷ்டங்களை கேட்டு வருகிறார்.
ஆத்தூர், பஞ்சம்பட்டி, ஆரியநல்லூர், சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று மன்சூர்அலிகான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது சாலையோரம் இருந்த கடையில் கம்பங்கூழ் வாங்கி பருகினார். மேலும் கம்பங்கூழை பொதுமக்களுக்கு விற்பனை செய்தார். வியாபாரம் குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்தார்.
பொதுமக்களிடையே பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய பிரச்சினையாக உள்ளது குடிநீர் பிரச்சினை. எனவே என்னை தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் செந்துறை, குடகனாறு பகுதியில் அணை கட்டி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன்.
புதிய பட அறிவிப்பு வரும் போது மட்டுமே நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசி வருகிறார். அதன் பின்னர் அமைதியாகி விடுகிறார். மற்றொரு புதிய படம் வெளியாகும் போது அறிக்கை வெளியிடுவார். ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்வது கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
பூஞ்சோலை பகுதியில் மன்சூர் அலிகானை கண்டதும் அப்பகுதி வாலிபர்கள் ஆர்வமாக செல்பி எடுத்துக் கொண்டனர். #LokSabhaElections2019 #MansoorAliKhan
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகன் அருண்மொழிதேவனை ஆதரித்து விருதுநகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். விருதுநகர் மின்வாரியம் அலுவலகம் முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-
அரசியல் என்பது நமது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கியிருப்பது தவறான நடைமுறையாகும். அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கினாலும் எந்தவகையிலாவது அரசியல் நம்மை விடாமல் தொடரும். அரசியலிலும், தேர்தலிலும் மாற்றம் தேவை. இந்த மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காக தான் நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். நாங்கள் உங்களிடம் ஓட்டு கேட்டு வரவில்லை. ஓட்டுக்கு பணம்பெற்றுக்கொண்டு நாட்டை விற்றுவிடக்கூடாது என்பதை வலியுறுத்தத்தான் வருகிறோம்.
கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது ஒரு கிலோ அரிசி ரூ.2-க்கு கொடுத்தார். ஐந்தாண்டுகள் கழித்து ஒரு கிலோ அரிசி ரூ.1-க்கு கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதுதான் வளர்ச்சியா?. வளர்ச்சியில்லை, இது வறுமையின் வளர்ச்சியாகும். இதுவரை மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் என்ன செய்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதைச்செய்வோம், இதை செய்வோம் என்று கூற இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இதனை சொல்வதற்கு தகுதி உள்ள ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான். இலவச கல்வி, இலவச தரமான மருத்துவம் வழங்குவோம். முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் அரசு ஆஸ்பத்திரியில் தான் சிகிச்சை பெற வேண்டும். தரமான அரசு மருத்துவமனைகள் இருந்தால் மருந்துகள் வாங்குவது குறையும். தரமான மருந்துகள் வழங்கப்பட்டால் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் குறையும்.
விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது நமது வரலாற்று கடமை. தமிழகத்தில் தமிழன் தலைநிமிர்ந்து நிற்க நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை விவசாயியுடன் கரும்பு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #Seeman
தரமணியில் உள்ள ராமானுஜம் ஐ.டி. பார்க் நிறுவனம் சார்பில் பாராளுமன்ற தேர்தலையொட்டி இளம் இந்திய குரல் சின்னம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தி ரிவர் என்ஜிஓ நிறுவனர் டாக்டர் மதுசரண் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
நான் எனது 25-வது வயதில் அரசியலுக்கு வந்தேன். எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது புரட்சி தலைவி அம்மா அவர்கள் என்னை அரசியலுக்கு அழைத்து எம்.பி.யாக்கினார். என்னைப் போன்ற இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும். உங்களால் தான் அரசியல் மாற்றத்தை கொண்டு வரமுடியும். எனது எம்.பி. பதவியின் மூலம் தென் சென்னை தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.
மீண்டும் வெற்றி பெற்று மத்திய அரசிடம் போராடி பல்வேறு திட்டங்களை தொகுதி மக்களுக்கு கொண்டு வருவேன். தினமும் 100 பேருக்கு சிகிச்சை அளித்து வந்த நான் இன்று எம்.பி. பதவி மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தொண்டு செய்து வருகிறேன். ஐ.டி. ஊழியர்கள் முதலாளிகளை எளிதில் தொடர்பு கொள்வதற்கான பிரத்யேக திட்டம் ஒன்றை விரைவில் செயல்படுத்துவேன்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019
பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது சத்ருகன்சின்கா எம்.பி.யாக தேர்வானார்.
ஆனால் அதன் பிறகு அவருக்கும், பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக பிரதமர் மோடியை அவர் மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சத்ருகன்சின்கா பெயர் மீண்டும் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பாட்னா தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நடிகர் சத்ருகன்சின்கா காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சத்ருகன்சின்காவை பீகார் மாநில காங்கிரஸ் தலைவர்கள் சிலர் எதிர்ப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் சத்ருகன்சின்கா தேர்தலில் போட்டியிடுவது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில் சத்ருகன்சின்காவை கிண்டல் செய்து பீகார் துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடி பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
நடிகர் சத்ருகன் சின்கா அரசியலில் உச்சத்துக்கு வந்ததே பா.ஜனதாவை வைத்துதான். ஆனால் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது போல பா.ஜனதாவை மிக கடுமையாக சத்ருகன் சின்கா சேதப்படுத்தி விட்டார். கட்சிக்கு அவர் அப்படி துரோகம் செய்திருக்கக்கூடாது.
மக்கள் மத்தியில் அவர் மீதான நம்பிக்கை போய் விட்டது. அதோடு அவருக்கு வயதும் அதிகரித்து விட்டது. எனவே சத்ருகன்சின்கா உடனடியாக அரசியலை விட்டு விலகி செல்வது நல்லது.
பாட்னா தொகுதியில் அவர் களம் இறங்கினால் அவருக்கு ஆதரவாக பூத் ஏஜெண்டுக்கு கூட ஆள் கிடைக்காது. பாட்னா பா.ஜனதாவின் கோட்டையாகும். அங்கு சத்ருகன்சின்காவின் சித்து வேலைகள் எடுபடாது.
இவ்வாறு சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார். #LSPolls #ShatrughanSinha
மக்களின் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுப்பது எப்படி இலவசமாகும்? தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். தற்போது மக்கள் முன்வைக்கும் பிரச்சனைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். டெல்லியை தவிர்த்து விட்டு இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியலுக்கு லாயக்கு இல்லாமல், சினிமா போல நினைத்துக்கொண்டு அரசியல் பேசுகிறார் கமல்ஹாசன், தி.மு.க. நல்ல விஷயங்களை என்றும் கையில் எடுத்தது கிடையாது. பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கொடுத்ததை பாராட்டியது கிடையாது.
கஜா புயலின்போது தமிழக அமைச்சர்கள் அங்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர், இதனை அனைவரும் பாராட்டினார்கள்.
ஆனால் தி.மு.க. பாராட்டவில்லை. குற்றம் சொல்லியே பேர் வாங்கவேண்டும் என்ற பட்டியலில் மு.க.ஸ்டாலின் உள்ளார். மேலும் கூட்டணி பற்றி முதல்வர், துணை முதல்வர், தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள், கற்பனையான, ஊர்ஜிதம் இல்லாத தகவலுக்கு கருத்துக்கூற முடியாது. ஜல்லிக்கட்டு போட்டிகள் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடியில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக ஆரம்பத்தில் ஆணை கொடுக்கப்பட்டபோது தூத்துக்குடி மாவட்டம் இடம்பெறவில்லை, இனிமேல் மேல்முறையீடு செய்து உத்தரவு வாங்கும்போது போட்டிகள் நடத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார். #KadamburRaju #KamalHaasan
நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது சினிமா, அரசியல் பயணம் குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
கேள்வி:- சீரியசான படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டீர்களே?
பதில்:- ஆமாம். எனது சினிமா வாழ்க்கையை மனிதன் படத்துக்கு முன், பின் என இரண்டாக பிரிக்கலாம்.
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றிக்கு பின் நான் காமெடி படங்களிலேயே நடித்தேன். மனிதன் படம் தான் எல்லா வகையான படங்களிலும் என்னால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது. சீரியசான படங்கள் மட்டுமல்ல நல்ல காமெடி படங்களிலும் கூட நடிப்பேன்.
கே:- மிஷ்கினுடன் இணையும் படம் பற்றி?
ப:- யுத்தம் செய் படத்தில் அவர் இயக்கத்தில் தான் நடிகராக அறிமுகமாகி இருக்கவேண்டும். முகமூடி கதையையும் என்னிடம் தான் சொன்னார். 2 படங்களிலும் இணைய முடியாமல் போய்விட்டது. இப்போது இணைந்து இருக்கிறோம். மனிதன் படத்துக்கு பின் தான் அவர் படங்களில் நடிக்கும் நம்பிக்கை வந்தது.
கே:- கண்ணே கலை மானே படம் பற்றி?
ப:- சீனு ராமசாமி படங்கள் மனிதநேயம் பேசும் படங்களாக தான் இருக்கும். கண்ணே கலை மானே படத்தில் மனித நேயத்துடன் விவசாயிகளின் பிரச்சனைகள், நீட், இயற்கை விவசாயம் என பல விஷயங்கள் அடங்கிய கதை இது.
கே:- சினிமாவா... அரசியலா... எது உங்கள் பாதை?
ப:- இனி ஆண்டுக்கு ஒரு படம் என்று சினிமாவை குறைத்துக்கொண்டு அரசியலில் அதிக கவனம் செலுத்த இருக்கிறேன்.
நான் தேர்தலில் நிற்பதை பற்றி யோசிப்பதற்கான நேரம் இது இல்லை. கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்பட காரணம் நடிகராக இருப்பதும் கட்சியின் செய்தித்தாளுக்கு மேலாளராக இருப்பதும் தான். ஒரு கட்சி உறுப்பினராக தான் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் மட்டும்தான் போராட்டங்களில் கலந்து கொள்கிறேன்.
எந்த சூழ்நிலையிலும் எம்.எல்.ஏ. சீட்டோ வேறு எந்த பதவியோ கேட்க மாட்டேன்.
கே:- சீனியர் தலைவர்களோடு உங்களை ஒப்பிட்டு கிண்டலடிக்கப்படுகிறதே?
ப:- உண்மை தெரியாமல் கிண்டல் செய்பவர்களை என்ன சொல்வது? ஒரு சாதாரண அடிமட்ட உறுப்பினராக இருப்பதை தவிர நான் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை.
சில தொண்டர்கள் என் மீதான அளவு கடந்த பிரியத்தால் இதுபோன்று செய்துவிடுகிறார்கள். தவிர்க்குமாறு பல முறை சொல்லிவிட்டேன். போஸ்டர் அடிப்பதற்கு எல்லாம் நான் ஒன்றும் செய்ய முடியாது. எல்லா போஸ்டர்களையும் கிழித்துக்கொண்டா இருக்க முடியும்?
இவ்வாறு அவர் கூறினார். #UdhayanidhiStalin #KanneKalaimaane #Psycho
சீனாவின் பன்னாட்டு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்வான்ஜவ், கனடாவில் வாங்கூவர் நகரத்தில் கடந்த 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த நடவடிக்கையை கனடா எடுத்தது.
அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் ஈரான் மற்றும் வட கொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை மீறியதாக கூறப்படுகிற விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை, அமெரிக்கா, சீனா இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்த கைது நடவடிக்கை மனித உரிமை மீறல் என சீனா கொந்தளித்து இருப்பதுடன், மெங்வான்ஜவ்வை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது.
சீனாவில் வலைத்தள ஆர்வலர்கள் மெங்வான்ஜவ் கைதை கடுமையாக விமர்சித்து பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர். இது அரசியல் விளையாட்டு என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
இந்தநிலையில், மெங்வான்ஜவ் கைதில் அரசியல் நோக்கம் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று ஒரு அறிக்கையில் உறுதிபட கூறி உள்ளார். #Huawei #MengWanzhou #ChinaTelecom #JustinTrudeau
தமிழக முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-12-2016 அன்று மரணம் அடைந்தார்.
அவர் மறைந்து 2 ஆண்டுகள் ஆகியும் அவரை பற்றிய சர்ச்சைகள் இன்றும் தொடர்கின்றன. ஜெயலலிதா பற்றி வெளிவந்ததைவிட, வெளிவராத உண்மைகளே அதிகம். ஜெயலலிதாவின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யும் சில முயற்சிகள் முன்பு மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், அவரது வாழ்வின் முக்கியமான பக்கங்கள் இன்றும் வெளிவராத மர்மங்களாக தொடர்கின்றன.
ஜெயலலிதாவின் சொந்த ஊர் எது? என்பது முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அவரது வாழ்வின் வெளிவராத உண்மைகளை ‘தந்தி’ டி.வி. பிரத்யேக ஆவணங்களோடு ஆவணப்படுத்தி உள்ளது.
‘தந்தி’ டி.வி.யில் இன்று (திங்கட்கிழமை) முதல் வெள்ளிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ என்ற இந்த புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. இந்த தொடரில் ஜெயலலிதா பற்றி இதுவரை வெளிவராத ரகசியங்கள் இடம் பெறுகின்றன.
ஜெயலலிதாவுடன் அவரது வீட்டில் வளர்ந்து, வாழ்ந்த அனுபவங்களை பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார் ஜெயலலிதாவின் தங்கை அமீதா சாரி. இவர் ஜெயலலிதாவும், அவரது அம்மாவும் திரைத்துறைக்குவர காரணமாக இருந்த அவரது சித்தி வித்யாவதியின் மகள்.
ஜெயலலிதாவை தந்தை நிலையிலிருந்து பெங்களூருவில் வளர்த்த அவரது தாய்மாமா சீனிவாசனின் மகள் அனுராதா ரமேஷ், ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத குமுறலை இந்த தொடரின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். “அனாதை போல் இறந்தாரே அக்கா” என அவர் வேதனை தெரிவித்து இருக்கிறார்
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் அவருடன் இறுதிவரை வாழ்ந்த அவரது 40 ஆண்டுகால பணியாளர் ராஜம், ஜெயலலிதா பற்றிய உலகறியாத ஏராளமான புதிய தகவல்களை முதன்முறையாக கூறியுள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 22-9-2016 அன்றிரவு அவரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்சில் நடந்தது என்ன? என்பது பற்றியும், ஜெயலலிதா பற்றிய ஆச்சரியமான பல தகவல்களையும் பகிர்ந்து உள்ளார் ஜெயலலிதாவின் தனி மருத்துவரான டாக்டர் சிவக்குமார்.
ஜெயலலிதாவின் அத்தை மகன் ரங்காச்சார், சசிகலாவின் அண்ணன் மகள்கள் அனுராதா தினகரன், பிரபா சிவக்குமார் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய அரிய தகவல்களை வெளிக்கொண்டு வருகிறார்கள்.
ஜெயலலிதாவின் உடல்நிலை மோசம் அடைய தொடங்கியது எப்போது? ஜெயலலிதா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டபோது நடந்த அதிர்ச்சி சம்பவங்கள், ஜெயலலிதாவின் நிறைவேறாத கடைசி கனவு, ஜெயலலிதாவின் உண்மையான சொந்த ஊர் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வெளிக்கொண்டு வருகிறது “ஜெ.ஜெயலலிதா எனும் நான்” என்ற இந்த தொடர்.
இந்த தொடரின் முத்தாய்ப்பாக ஜெயலலிதாவின் எதிர்கால விருப்பம் தொடர்பான சில பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. முன்னர் ஒரு பேட்டியின்போது தனது ஓய்வுகால ஆசை தொடர்பாக மனம் திறந்த ஜெயலலிதா, கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது திராட்சை தோட்டத்துக்குச் சென்று அரசியல், ஆர்ப்பாட்டம், பத்திரிகையாளர்கள் கேள்விகள் இவை எல்லாவற்றையும் தவிர்த்து நிம்மதியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுக்கோட்டையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.6 கோடி மதிப்பிலான அரிசி, போர்வை, பாய், தண்ணீர் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. புயல் பாதிப்பு மீட்பு பணியில் ஈடுபட தமிழக அரசிடம் போதிய வலிமை இருந்ததால் ராணுவத்தின் உதவி தேவைப்படாமல் இருந்து இருக்கலாம் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதா ராமன் கூறியுள்ளார். மேலும் அவர் தானாக முன்வந்து ராணுவ உதவி தேவையென்றால் அனுப்புகிறோம் என கூறியதற்கு நன்றி.
தற்போது டெல்டா பகுதி மக்கள் புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் வேளையில் எதிர் கட்சியினர் நிவாரணம் கொடுக்கும் பணியில் கவனம் செலுத்தாமல் அண்ணா அறிவாலயத்தில் அரசியல் நடத்துகின்றனர். தமிழக அரசின் புயல் நிவாரண பணிகளை மூடி மறைக்க மேகதாது அணை பிரச்சினையை கிளப்பி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துகிறார்.
மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம் தான். கூட்டணியில் உள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின், சோனியா மற்றும் ராகுல் காந்தியிடம் பேசி மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும். இல்லையென்றால் ஸ்டாலின் காங்கிரசுடன் உள்ள உறவை முறித்து கொள்வாரா?.
மேகதாதுவில் அணை கட்ட அ.தி.மு.க. அரசாங்கம் விடாது. இதற்காக தொடர்ந்து அ.தி.மு.க. அரசு போராடும். அ.தி.மு.க.வால் மட்டும்தான் மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த முடியும். எங்களிடம் 50 எம்.பி.க்கள் உள்ளனர். வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #Mekedatudam
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்