search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரசகுல்லா"

    மேற்கு வங்காளத்தின் தினாஜ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசுகையில், பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ரசகுல்லாதான் கிடைக்கும் என கிண்டலாக குறிப்பிட்டார். #LokSabhaElections2019 #MamataBanerjee
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பாலுர்காட் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    பிரதமர் மோடி இந்த தேர்தலில் பா.ஜ.க. அதிகப்படியான இடங்களை கைப்பற்றும் என பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு ரசகுல்லா தான் கிடைக்கும்.

    இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஒட்டுமொத்தமாக 100 இடங்களுக்கு மேல் கிடைக்காது. குறிப்பாக ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றி பெறாது என தெரிவித்தார்.

    இனிப்பு வகையில் ஒன்றான ரசகுல்லா வங்காளதேசத்தில் மிகவும் பிரபலமானது. மேலும் மாணவர்கள் தேர்வில் பூஜ்யம் வாங்கினால் உள்ளூர் மக்கள் பூஜ்யத்தை ரசகுல்லா எனக்கூறி கேலி செய்வது வழக்கமாக உள்ளது நினைவிருக்கலாம். #LokSabhaElections2019 #MamataBanerjee
    ரசகுல்லா அறிமுகம் செய்யப்பட்டு 150-வது ஆண்டு நிறைவடைவதையொட்டி நேற்று முன்தினம் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. #Rasogolla #PostalStamp
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தை பிறப்பிடமாக கொண்ட இனிப்பு வகையான ரசகுல்லா, நாடு முழுவதும் சுவை பிரியர்களின் ஆதரவை பெற்றது. நாவில் எச்சில் ஊறவைக்கும் இந்த இனிப்பை, கொல்கத்தாவின் பக்பசாரில் வசித்து வந்த நோபின் சந்திரதாஸ் என்பவர் கடந்த 1868-ம் ஆண்டு உலகுக்கு அறிமுகம் செய்தார்.

    மிகவும் பிரபலம் வாய்ந்த இந்த இனிப்பு கடந்த ஆண்டு புவிசார் குறியீட்டை பெற்றுக்கொண்டது. இந்த இனிப்புக்கு ஒடிசாவும் சொந்தம் கொண்டாடியதால், புவிசார் குறியீடு பெறுவதற்காக மேற்கு வங்காள மாநிலம் பயங்கரமாக சட்டப்போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் வெற்றியும் பெற்றது.

    ரசகுல்லா அறிமுகம் செய்யப்பட்டு 150-வது ஆண்டு நிறைவடைவதையொட்டி நேற்று முன்தினம் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. பக்பசாரில் நடந்த ரசகுல்லா திருவிழாவில் இந்த தபால் தலை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில மந்திரி பிர்ஹத் ஹக்கிம், நோபின் சந்திரதாசின் பேரன் திமான் தாஸ், கொல்கத்தா தபால் நிலைய அதிகாரி சாருகேஷி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். #Rasogolla #PostalStamp 
    ×