என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 112400
நீங்கள் தேடியது "விருப்பமனு"
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்.21ம் தேதி விருப்பமனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ADMK #EPS #OPS
சென்னை:
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் வரும் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம்.
விண்ணப்பப் படிவங்களை ரூ.25,000-ஐ செலுத்தி பெற்று பூர்த்தி செய்து அன்றைய தினமே வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #ADMK #EPS #OPS

தி.மு.க.வில் பாராளுமன்றம் மற்றும் 21 சட்டசபை தொகுதி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்பமனு வினியோகிக்கும் பணி இன்று தொடங்கியது. #DMK
சென்னை:
தி.மு.க.வில் பாராளுமன்றம் மற்றும் 21 சட்டசபை தொகுதி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்பமனு வினியோகிக்கும் பணி இன்று தொடங்கியது.
விருப்பமனு பெறுவதற்காக தி.மு.க.வினர் இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர்.
விருப்பமனு வினியோகிக்கும் பணி இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தி.மு.க.வினர் ரூ.1000 செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக்கொண்டனர். மனுவை பூர்த்தி செய்து ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி மனுவை அளிக்க வேண்டும்.
விருப்பமனுவில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. விண்ணப்பதாரரின் பெயர், பாராளுமன்ற தொகுதியின் பெயர், விண்ணப்பதாரரின் முகவரி, தொழில், எத்தனை வருடம் கட்சியில் உறுப்பினராக இருக்கிறீர்கள்? ஒன்றியம், நகரம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண், கட்சியில் இப்பொழுது வகிக்கும் பொறுப்பு, பொதுப்பணித்துறை பொறுப்பில் இருந்திருக்கிறீர்களா?
உள்ளாட்சி அமைப்பு பொறுப்பில் இருந்திருக்கிறீர்களா? கட்சிக்காக போராட்டம் நடத்தி எத்தனை முறை சிறை சென்றுள்ளீர்கள்? வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? இதற்கு முன்பு தேர்தலில் போட்டியிட்டுள்ளீர்களா? வேறு அரசியல் கட்சியில் இருந்துள்ளீர்களா? உள்ளிட்ட 14 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
வருகிற 7-ந்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது. பூர்த்திசெய்த விண்ணப்பங்களை மார்ச் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். #DMK
×

X