search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீநகர்"

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை பாதுகாப்பு படை வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில், 19 வீரர்கள் காயமடைந்துள்ளனர். #JammuAndKashmir #CRPFvehicleaccident
    ஸ்ரீநகர்:

    இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘இன்று அதிகாலை 21 பாதுகாப்பு படை வீரர்களுடன் சென்ற வாகனம், பெமினா தலைமையகம் அருகே செல்லும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் சுமார் 19 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகாமையில் உள்ள ஜெ.வி.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் ஸ்ரீநகரில் உள்ள இராணுவ முகாம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ஒரு வீரர் மேல் சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்’ என தெரிவித்துள்ளார். #JammuAndKashmir #CRPFvehicleaccident
    ஜோசிலா சுரங்கப்பாதை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்காக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள பிரதமர் மோடியின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக அங்குள்ள பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அத்துமீறி வருவதாக பிரிவினைவாத அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரிவினைவாத தலைவர்களான மிர்வாய்ஸ் உமர் பாரூக், சையது அலி ஷா கிலானி ஆகியோர் தலைமையில் ஸ்ரீநகரின் மையப்பகுதியான லால் சவுக் பகுதியை நோக்கி இன்று 11 மணிக்கு பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

    ஆனால் பிரதமர் மோடியின் வருகையையொட்டி, அந்த பேரணியை நிறுத்துவது மற்றும் இதர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பிரிவினைவாத தலைவர்களான மிர்வாய்ஸ் உமர் பாரூக், சையது அலி ஷா கிலானி ஆகியோர் அவரவர் வீடுகளிலேயே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மிர்வாய்ஸ் உமர் பாரூக், ‘ஜனநாயகம் மீதான நம்பிக்கையை ஆளும் அரசு மீண்டும் தர மறுத்துள்ளது. நாங்கள் அமைதியான முறையில் பேரணியை நடத்துவோம்’ என பதிவிட்டிருந்தார்.

    மோடியின் வருகைக்காக அப்பகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஷேர் இ காஷ்மீர் சர்வதேச கருத்தரங்க மையத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நாளை பிரதமர் அங்கிருந்து கிளம்பும் வரை நீட்டிக்கப்படும் எனவும் போலீசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. #separatist #ModiVisitJK #housearrest
    ×