search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுச்செயலாளர்"

    அமமுகவின் துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரன், கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #AMMK #TTVDhinakaran #Sasikala
    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) உதயமானது. டிடிவி தினகரனால் தோற்றுவிக்கப்பட்ட அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார். அதிமுகவை மீட்பதாக கூறி தொடர் சட்டப்போராட்டம் நடத்தியதால், அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்யாமல் இருந்தார்.

    சமீபத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அமமுகவுக்கு பொது சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கு விசாரணையின்போது, அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்யாததால், பொது சின்னம் ஒதுக்க முடியாது என உத்தரவிட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில், அமமுக வேட்பாளர்களுக்கு பொது சின்னம் ஒதுக்கப்பட்டது. அமமுக வேட்பாளர்கள் பரிசுப் பெட்டகம் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டனர்.

    தற்போது, நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி, அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், அமமுகவின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், இன்று கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுள்ளார்.

    இதுபற்றி, அமமுக செய்தி தொடர்பாளர் சிஆர்.சரஸ்வதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக கூறினார்.



    சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தபின்னர், அவர் அமமுக தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும், அமமுகவை தனிக்கட்சியாக பதிவு செய்யும் வேலைகள் நடப்பதாகவும் சிஆர் சரஸ்வதி தெரிவித்தார். #AMMK #TTVDhinakaran #Sasikala
    பிரதமர் மோடி அனைத்து கட்சிகளின் கருத்து வேறுபாடுகளை களைந்து மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார் என்று பா.ஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறினார். #PMModi #RamMadhav
    புதுடெல்லி:

    தீவிரவாதிகளுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது பற்றி பா.ஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறியதாவது:-

    புல்வாமாவில் இந்திய வீரர்கள் பலியான சம்பவம் ஒவ்வொரு இந்தியன் மத்தியில் ஆவேசத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அதன்படி இந்திய விமானப்படை தக்க பதிலடி கொடுத்துள்ளது. நமது படைகள் எப்போதும் உலகத்தரம் வாய்ந்தது என்பதை நிரூபித்துள்ளது. வீரர்களுக்கு வீர வணக்கம்.

    இதில் பிரதமர் மோடி அரசியல் ரீதியாகவும் அனைத்து கட்சிகளின் கருத்து வேறுபாடுகளை களைந்து மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMModi #RamMadhav

    ×