search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனிச்சரிவு"

    உலகப் புகழ்பெற்ற 3 மலையேறும் வீரர்கள் பனிப்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
    மாண்ட்ரியல்:

    உலகப் புகழ்பெற்ற மலையேறும் வீரர்கள் ஜெஸ்ரோஸ்கெல்லி (36), ஹன்ஸ் ஜோர்ஜ் அயூயர் (35), டேவிட்லாமா (28), இவர்களில் ஜெஸ்ரோஸ்கெல்லி அமெரிக்காவை சேர்ந்தவர். மற்ற 2 பேரும் ஆஸ்திரியாவை சேர்ந்தவர்கள்.

    இவர்கள் கனடாவில் உள்ள அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா எல்லையில் உள்ள பனி மலையில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    உரிய பாதுகாப்பு உபகரண வசதிகளுடன் மலையேறிய இவர்கள் திடீரென மாயமாகி விட்டனர். அவர்களை தேடும் பணி நடைபெற்றது. இருந்தும் அவர்கள் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே இவர்கள் மலையேறிய பகுதியில் பனிப்பாறை சரிவு நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே அவர்கள் 3 பேரும் பனிப்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

    மோசமான வானிலையே இவர்களின் மரணத்துக்கு காரணம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
    இமாசலப்பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். அம்மாநில முதல் மந்திரி ஜெய்ரம் தாக்கூர் இரங்கல் தெரிவித்துள்ளார். #HimachalAvalanche
    சிம்லா:

    இமாசலப்பிரதேசம் மாநிலம் கின்னவூர் மாவட்டத்தில் உள்ள நம்கியா பகுதியில் இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 6 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர்.

    தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ராணுவ வீரர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஒருவரது உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து பனிச்சரிவில் சிக்கிய 5 ராணுவ வீரர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 

    இதற்கிடையே, பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு முதல் மந்திரி ஜெய்ராம் தாக்கூர் இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை மாநில அரசு செய்யும் என உறுதியளித்துள்ளார். #HimachalAvalanche
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். #KulgamAvalanche
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தின் வடபகுதியில் அமைந்துள்ள போலீஸ் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் போலீசார் உள்பட 20 பேர் சிக்கிக் கொண்டனர்.

    தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் 10 போலீசாரை பத்திரமாக மீட்டனர். நேற்று நடைபெற்ற மீட்புப் பணியில் 5 போலீசார் மற்றும் 2 கைதிகளின் உடல்களை மீட்டனர். மேலும், 2 போலீசாரை உயிருடன் மீட்டனர். மாயமான ஒரு போலீசை தேடும் பணி நடந்து வருகிறது.



    இந்நிலையில், இன்று நடைபெற்ற மீட்புப் பணியின்போது காணாமல் போன ஒரு போலீசின் உடலை மீட்டனர்.

    இதையடுத்து, ஜம்மு காஷ்மீரின் பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். #KulgamAvalanche
    காஷ்மீர் பனிச்சரிவிற்குள் சிக்கியவர்களில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். #Kashmir #Avalanche
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. நேற்று காஷ்மீரின் வட மாவட்டங்களில் பனிப்பொழிவு சீற்றம் அதிகமாக இருந்தது. இதையடுத்து பனிச்சரிவு ஏற்படலாம் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    காஷ்மீரில் உள்ள அனந்தநாக், பாட்கம், பாரமுல்லா, பந்தீப்போரா, கண்டர்பால், கார்கில், குல்கான், குப்வாரா மற்றும் லே ஆகிய 9 மாவட்டங்களிலும் பனிச்சரிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாக வானிலை இலாகா கூறியிருந்தது. அதுபோல கடும் குளிரும் நிலவும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

    இதற்கிடையே, இன்று காலை லே மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள லடாக் பகுதியில் கர்துங்லா நெடுஞ்சாலையில் பனிக்கட்டிகள் விழுந்தன.



    இந்த பனிச்சரிவுகளில் ஒரு சொகுசு வாகனம் சிக்கிக்கொண்டது. அதில் இருந்த 10 பேர் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாக தெரிய வந்தது.

    பனிச்சரிவு ஏற்பட்டுள்ள கர்துங்லா பகுதி காஷ்மீர் மலைப்பகுதிகளில் இருக்கும் மிக உயரமான சாலைகளில் ஒன்றாகும். இந்த சாலை சையோக்-நுப்ரா பள்ளத்தாக்குகளை இணைக்கும் பாதை ஆகும். அங்கு செல்ல கடும் சவால் நிலவுகிறது.

    பனிச்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவ ராணுவத்தினரும் விரைந்து உள்ளனர். மீட்பு பணிகள் கடும் போராட்டத்துக்கு மத்தியில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி புதைந்தவர்களில் இருந்து 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். #Kashmir #Avalanche
    ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் மாயமானார். #AustrianAvalanche #GermanSkierKilled
    வியன்னா:

    ஆஸ்திரியாவின் வோரேர்ல்பெர்க் மாகாணத்தில் லெக் என்கிற மலைக் கிராமம் உள்ளது. பனிப்பிரதேசமான இங்கு பனிச்சறுக்கு விளையாட்டு பிரபலமானது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இங்கு ஏராளமானவர்கள் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது.

    இதில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் மாயமானார். அவரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. #AustrianAvalanche #GermanSkierKilled 
    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir #Avalanche #Armyjawandies
    ஸ்ரீநகர்:

    வட மாநிலங்களில் பனிக்காலம் தொடங்கியதில் இருந்து கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. காஷ்மீர் மாநிலத்தில் குளிர்காலத்தில் 40 நாட்களில் மிகக்கடுமையான பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் இருந்து கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
     
    ஸ்ரீநகர், குல்கமார்க் மற்றும் பகல்காம் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் இன்று பனிப்பொழிவு வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. 



    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. அந்த பகுதியில் பணியில் இருந்த 2 ராணுவ வீரர்கள் இதில் சிக்கிக் கொண்டனர்.

    தகவலறிந்த மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். அதில், ராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு வீரர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார் என அதிகாரிகள் 
    தெரிவித்தனர். #JammuKashmir #Avalanche #Armyjawandies
    பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய பிரிட்டிஷ் மலையேற்ற வீரர்கள் இருவர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். #PakistanAvalanche #BritishClimbers
    இஸ்லாமாபாத்:

    பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர்கள் புரூஸ் நார்மண்ட் மற்றும் டிமோதி மில்லர். இருவரும் மலையேற்ற வீரர்கள். ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ்டியன் உபேர் என்ற வீரருடன் நேற்று மலையேற்ற பயிற்சிக்காக பாகிஸ்தான் வந்தனர்.

    இவர்கள் சுமார் 19,000 அடி தொலைவுள்ள ஹன்சா சமவெளியில் உள்ள அல்டார் சர் மலையில் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

    அப்போது ஏற்பட்ட பனிச்சரிவில் 3 பேரும் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் தங்களை காப்பாற்றுமாறு தகவல் கொடுத்தனர்.



    தகவலறிந்து பாகிஸ்தான் ராணுவத்தின் ஹெலிகாப்டர் அங்கு விரைந்து வந்தது. அவர்கள் உதவியுடன் பனிச்சரிவில் சிக்கியிருந்த பிரிட்டிஷ் வீர்ர்கள் இருவரும் சிறிய காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
     
    மேலும், பனிச்சரிவில் சிக்கிய ஆஸ்திரேலிய மலையேற்ற வீரர் கிறிஸ்டியன் உபேர் உயிரிழந்திருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். #PakistanAvalanche #BritishClimbers
    ×