search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போர்ச்சுகல்"

    போர்ச்சுகலில் ஜெர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பெண்கள் உள்பட 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். #Portugal #BusAccident #GermanTourist
    லிஸ்போன்:

    ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்ச்சுகலின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவு மடெய்ரா. பிரபல சுற்றுலா தலமான இங்கு அயல்நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் மடெய்ராவின் தலைநகர் புஞ்சாலில் இருந்து, கடற்கரை நகரமான கனிகோவுக்கு ஜெர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. கனிகோவில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.



    இதனால் தறிகெட்டு ஓடிய பஸ், சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 18 பெண்கள் உள்பட 29 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 27 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.   #Portugal #BusAccident #GermanTourist
    வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக போர்ச்சுகல் கால்பந்து அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரூ.154 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #CristianoRonaldo #TaxFraud #Football
    மாட்ரிட்:

    போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது இத்தாலியில் உள்ள யுவென்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். முன்னதாக அவர் 9 ஆண்டுகளாக ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடினார். 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடுகையில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி ரூ.46 கோடிக்கு வருமான வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மாட்ரிட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது ரொனால்டோ வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி மாட்ரிட் கோர்ட்டில் நேரில் ஆஜரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அபராத தொகையை கட்ட சம்மதம் தெரிவித்தார். இதனை அடுத்து நீதிபதி, கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரூ.154 கோடி அபராதமும், 23 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்தார். ஸ்பெயின் நாட்டு சட்டப்படி முதல்முறையாக ஒருவருக்கு 2 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால் அவர் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியதில்லை. இதனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ சிறை தண்டனையில் இருந்து தப்பினார். #CristianoRonaldo #TaxFraud  #Football
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடைபெற்ற இரண்டாவது நாக்-அவுட் போட்டியில் போர்ச்சுகல் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி வீழ்த்தியது. #FIFAWorldCup2018 #FIFA2018 #URUPOR

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் கலந்துகொண்ட இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றன. நேற்று நடைபெற்ற முதல் நாக்-அவுட் போட்டியில் பிரான்ஸ், அர்ஜெண்டினாவை வீழ்த்தியது.

    இந்நிலையில், இரண்டாவது நாக்-அவுட் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல், முன்னாள் சாம்பியனான உருகுவேவை எதிர்கொண்டது. இதில் தோல்வியடையும் அணி தொடரைவிட்டு வெளியேறும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.

    தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சித்தனர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் உருகுவே வீரர் எடின்சன் கவானி கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் உருகுவே 1-0 என முன்னிலை பெற்றது.  



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் போர்ட்டுகல் வீரர் பெப்பே கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.



    அதன்பின் 62-வது நிமிடத்தில் உருகுவே வீரர் எடின்சன் கவானி கோல் அடித்தார். இது இந்த ஆட்டத்தில் அவர் அடித்த இரண்டாவது கோலாகும். இதனால் உருகுவே அணி மீண்டும் 2-1 என முன்னிலை பெற்றது.



    அதைத்தொடர்ந்து இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்கப்படாததால் உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முன்னதாக நடைபெற்ற மற்றொரு நாக்-அவுட் போட்டியில் பிரான்ஸ் அணி, அர்ஜெண்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. முதல் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - உருகுவே அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #FIFAWorldCup2018 #FIFA2018 #URUPOR
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடைபெற்றுவரும் இரண்டாவது நாக்-அவுட் போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் உருகுவே அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. #FIFAWorldCup2018 #FIFA2018 #URUPOR

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் கலந்துகொண்ட இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றன. நேற்று நடைபெற்ற முதல் நாக்-அவுட் போட்டியில் பிரான்ஸ், அர்ஜெண்டினாவை வீழ்த்தியது.

    இந்நிலையில், இரண்டாவது நாக்-அவுட் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல், முன்னாள் சாம்பியனான உருகுவேவை எதிர்கொண்டது. இதில் தோல்வியடையும் அணி தொடரைவிட்டு வெளியேறும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.

    தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சித்தனர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் உருகுவே வீரர் எடின்சன் கவானி கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் உருகுவே 1-0 என முன்னிலை பெற்றது.  #FIFAWorldCup2018 #FIFA2018 #URUPOR
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் அணிக்கு எதிராக பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறிவிட்டதால் போர்ச்சுகல் வெற்றி வாய்ப்பு பரிதாபமாக பறிபோனது. #WorldCup #RonaldoCR7
    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்துள்ள ஈரான் மற்றும் போர்ச்சுகல் அணிகள் நேற்றிரவு மோதின.

    போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி வாய்ப்பை தவற விட்டார். அவர் அடித்த பந்தை ஈரான் கோல் கீப்பர் அருமையாக தடுத்தார். அவர் கோல் அடித்து இருந்தால் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து ஹாரி கேனை (இங்கிலாந்து) தொட்டு இருப்பார்.

    ஏற்கனவே அர்ஜென்டினாவை சேர்ந்த நட்சத்திர வீரர் மெஸ்சி பெனால்டியை தவற விட்டு இருந்தார்.

    நேற்றைய ஆட்டத்தில் ரொனால்டோ முரட்டுத் தனத்தில் ஈடபட்டார். ஈரான் வீரரின் முகத்தை கையால் குத்தியதற்காக அவருக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. #WorldCup #WorldCupRussia2018 #Portugal #RonaldoCR7
    சென்னை விமான நிலையத்தில் ரூ.5½ கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்திய போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த வாலிபரை கைது செய்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில், பிரேசிலில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5½ கோடி மதிப்பிலான போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பிரேசில் நாட்டில் இருந்து துபாய் வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, அந்த விமானத்தில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த மெண்டஸ் அபோசன் டோம்மிங்கோஸ் (வயது 28) என்பவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்திருந்தார்.

    அவர் மீது சந்தேகம் அடைந்த போதை பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர். மெண்டஸ் அபோசன் டோம்மிங்கோஸ் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் உணவு பெட்டிகள் இருந்தது.

    அவற்றை பிரித்து பார்த்தபோது உயர்ரக போதை பொருளான கொக்கைன் இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு, ரூ.5½ கோடி ஆகும். இதையடுத்து மெண்டஸ் அபோசன் டோம்மிங்கோசை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்த 1 கிலோ 800 கிராம் கொக்கைன் போதை பொருளை கைப்பற்றினர்.

    விசாரணையில், வேலை இல்லாத காரணத்தால் போதைப்பொருளை கடத்தி வந்ததாக அவர் தெரிவித்தார். பிரேசிலில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட போதைப்பொருளை யாருக்கு கொடுக்க இருந்தார்? இவருக்கும், சர்வதேச கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×