search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடைபயிற்சி"

    குறைந்தது ஒரு மணி நேரம் விறுவிறுப்பாக நடைபயிற்சி செய்தால், அது மாரடைப்பு மற்றும் வாதம் தாக்கும் அபாயத்தை 35 சதவீதம் குறைக்கிறது.
    குறைந்தது ஒரு மணி நேரம் விறுவிறுப்பாக நடைபயிற்சி செய்தால், அது மாரடைப்பு மற்றும் வாதம் தாக்கும் அபாயத்தை 35 சதவீதம் குறைக்கிறது. சர்க்கரை நோய் வரும் அபாயத்தை 50 சதவீதம் குறைக்கிறது. சிலவகை புற்றுநோய்கள் வரும் அபாயத்தை 20 முதல் 50 சதவீதம் வரை குறைக்கிறது.

    உடல் எடையை குறைப்பதற்கும் வாக்கிங் உதவுகிறது. 20 நிமிடங்களில் 1,500 மீட்டர் தூரம் நடந்தால்கூட சுமார் 100 கலோரி எரிக்கப்படுகிறது. வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வழியில்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும், உடல் நலனுக்காக ஏதாவது ஒன்றை செய்ய நினைப்பவர்களுக்கும் நடைபயிற்சி எளிமையானது.

    நம் உடல் தசைகளின் சுருங்கி விரியும் தன்மை இயல்பாக இருப்பதற்கு உதவுகிறது. வேகமாக நடக்கும் போதுதான் உடலில் எல்லா தசைகளும் ஒரே நேரத்தில் இருக்கமாகின்றன. நடைபயிற்சி பழக ஆரம்பிக்கும்போது வலிப்பது இதனால்தான். போகப் போக இந்த வலி குறைந்து தசைகள் நெகிழ்வு பெறுகின்றன.

    இடுப்புக்கு கீழ் தேவையற்ற சதையைக் குறைத்து கச்சிதமான உடல்வாகு பெற நினைப்பவர்களுக்கு இதைவிட சிறந்த உடற்பயிற்சி எதுவுமில்லை. இதற்கு எவ்வளவு வேகம் முடியுமோ, அவ்வளவு வேகத்தில் நடக்க வேண்டும்.

    ஒரு நாளில் 15 நிமிடமாவது விறுவிறுப்பான நடைபயிற்சி செய்பவர்களுக்கு ஆயுளில் 3 ஆண்டுகள் கூடுகிறது. முறையாக இதை செய்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கூடுகிறது. அடிக்கடி ஜலதோஷம், காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் வருவதில்லை. நடைபயிற்சியால் மூட்டுவலி தொல்லை 25 சதவீதம் குறைகிறது. முதுமை காலத்தில் ஆஸ்தியோபோரோசிஸ் எனப்படும் எலும்புச் சிதைவு நோய் தாக்குவதையும் இதன்மூலம் தவிர்க்கலாம்.

    உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து இதம் தருகிறது. கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. சுவாச கோளாறு உள்ளவர்களுக்கு நடைபயிற்சியைவிட சிறந்த பலன் தரும் மருந்து எதுவும் இல்லை. எந்த உடற்பயிற்சியும் உடலுக்கு ஏராளமான ஆக்சிஜனைத் தரும். எனவே கடற்கரை, பூங்கா, திறந்தவெளி, மொட்டைமாடி என எங்கு நடைபயிற்சி செய்தாலும் சுத்தமான காற்று அதிகம் கிடைப்பதால் நுரையீரல் சீராக இயங்க உதவுகிறது. ஆஸ்துமா தாக்கும் அபாயத்தையும் தவிர்க்கலாம்.
    நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும். இதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
    ஒருவர் தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும்.

    பயிற்சியும் செய்முறையும்

    8 type walking Exercies- க்கு மேற்படி படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்று வரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும்.

    நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும்.



    தினமும் காலையும் மாலையும் 15 - 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 - 6 (am or pm). வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்லமுறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.

    நடைப்பயிற்சி முடியும் வரை மெளனமாக நடக்க வேண்டும். மனதிற்குள் மந்திரம் ஜெபித்தபடி நடக்கலாம். முத்திரைகள் செய்ய தெரிந்திருந்தால் பிராண முத்திரையில் நடக்கலாம்.

    இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம். பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.


    எளிய உடற்பயிற்சியான நடைபயிற்சியினை தினமும் செய்யுங்கள். அவ்வகையில் நாமும் தினம் 30 நிமிடம் நடைபயிற்சி செய்பவர்கள் பெறும் பலனை மீண்டும் பார்ப்போம்.
    எளிய உடற்பயிற்சியான நடைபயிற்சியினை தினமும் செய்யுங்கள் என எப்போதும் மருத்துவ குறிப்பு கூறுபவர்களும் வலியுறுத்திக் கொண்டேதான் இருக்கின்றார்கள். அவ்வகையில் நாமும் தினம் 30 நிமிடம் நடைபயிற்சி செய்பவர்கள் பெறும் பலனை மீண்டும் பார்ப்போம்.

    * இருதய நோய் பாதிப்பினை குறைக்கின்றது.
    * சீரான எடையினை காக்க முடிகின்றது.
    * மன உளைச்சலை வெகுவாய் குறைக்கின்றது.
    * உடலில் சக்தியினைக் கூட்டுகின்றது.
    * மன நலம் நன்கு இருக்கின்றது.

    * ரத்த ஓட்டம் சீராய் இயங்குகின்றது.
    * பட படப்பு குறைகின்றது.
    * நுரையீரல் நன்கு இயங்குகிறது.
    * உடலுக்கு சூரிய ஒளி முலம் வைட்டமின் டி கிடைக்கின்றது.

    * புற்று நோய் பாதிப்பு குறைகின்றது.
    * தேவையான அளவு தூக்கம் கிடைக்கின்றது.
    * கை, கால் இயக்கங்கள் சீராய் இருக்கின்றது.
    * தரமான ஆரோக்கியம் கிடைக்கின்றது.
    * சர்க்கரை நோய் பாதிப்பு குறைகிறது.

    * மூளை செயல்பாட்டு திறன் கூர்மையாகின்றது.
    * சதைகளும், எலும்புகளும் பலம் பெறுகின்றன.
    * ரத்த அழுத்தம் சமநிலையில் இருக்கின்றது.
    * நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.

    உடம்பு கொஞ்சம் சோர்வாக இருக்கின்றதா? சற்று அக்கறை எடுத்து உங்கள் உடம்பை கவனியுங்கள்.

    * மூக்கு அடைத்தாற் போல் உள்ளதா?
    * தும்மல், இருமல் இருக்கின்றதா?
    * ஜுரம் இருப்பது போல் உணர்கின்றீர்களா?

    * நன்கு நீர் குடியுங்கள். சுடுநீரும் குடிக்கலாம். படுத்து ஓய்வு எடுங்கள். ஆவி பிடியுங்கள். வெது வெதுப்பான சூப் குடியுங்கள். வீட்டில் இருங்கள். உலகமே உங்கள் தலையில்தான் சுழல்வது போல் உடல் அறிகுறிகளை ஒதுக்கி வேலை, வேலை என ஓட வேண்டாம். இந்த சிறிய சிகிச்சைகள் மிகுந்த பலன் அளிக்கும். உங்கள் உடம்பை நன்கு அறிந்த இயற்கை மருத்துவர் நீங்கள்தான்.
    நோனாங்குப்பத்தில் நடைபயிற்சி சென்ற முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.

    பாகூர்:

    அரியாங்குப்பம் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது72). இவர் சம்பவத்தன்று நோனாங்குப்பம் சுண்ணாம்பாறு பழைய பாலத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார். பின்னர் வீட்டுக்கு செல்ல படகுகுழாம் எதிரே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக தனபால் மீது மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட தனபால் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று மாலை தனபால் பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×