search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா"

    ஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்த்த சிவப்பு மானுக்கு உணவு கொடுக்கும் போது அது தாக்கியத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். #Australia #DeerAttack
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள வான்கரட்டா நகரை சேர்ந்தவர் பவுல் மெக்டொனால்டு (வயது 47). இவர் தனது வீட்டில் சிவப்பு மான் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். மிகப்பெரிய அளவில் வளரக்கூடிய இந்த சிவப்பு மான் ராட்சத கொம்புகளை கொண்டிருக்கும். பார்ப்பதற்கு மிகவும் மூர்க்கமாக இருக்கும்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை பவுல் மெக்டொனால்டு, மானுக்கு உணவு கொடுப்பதற்காக சென்றார். மான் அடைத்துவைக்கப்பட்டிருந்த வேலிக்கு மிக அருகில் நின்று உணவு கொடுத்துக்கொண்டிருந்த அவரை, மான் திடீரென தாக்கியது. பவுல் மெக்டொனால்டின் அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவியும், மகனும் ஓடி வந்தனர். கணவரை காப்பற்றுவதற்காக அருகில் சென்ற பவுல் மெக்டொனால்டின் மனைவியையும் மான் கொடூரமாக தாக்கியது. இதில் இருவரும் நிலைகுலைந்துபோயினர்.

    இது பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மானை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திவிட்டு, இருவரையும் மீட்டனர். அங்கு தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது பவுல் மெக்டொனால்டு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, அவரது மனைவி ஹெலிகாப்டர் மூலம் மெல்போர்னில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.   #Australia #DeerAttack 
    அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி, பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. 3 முன்னணி விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றினார். #AUSvIND #Ashwin
    அடிலெய்டு:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணியின் முன்னணி வீரர்கள் சொதப்பியதால் இந்தியா தடுமாறியது. கடுமையாகப் போராடிய புஜாரா சதம் அடித்து அணியின் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்தினார். நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. ஷமி 6 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் பந்திலேயே ஷமி ஆட்டமிழந்தார். இதனால் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் 250 ரன்களில் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹாசில்வுட் 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ், லயன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. துவக்க வீரர் ஆரோன் பிஞ்ச், முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். அவரது விக்கெட்டை இஷாந்த் சர்மா கைப்பற்றி அசத்தினார். அதன்பின்னர் ஹாரிஸ்-கவாஜா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.



    அணியின் ஸ்கோர் 45 ரன்களை எட்டியபோது, அஸ்வின் பந்தில் ஹாரிஸ் ஆட்டமிழந்தார். அவர் 26 ரன்கள் சேர்த்திருந்தார். அவரைத் தொடர்ந்து ஷான் மார்சையும் அஸ்வின் வீழ்த்தினார். இதன்மூலம் 59 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து கவாஜாவுடன் இணைந்த ஹேண்ட்ஸ்காம்ப் மிகுந்த எச்சரிக்கையுடன் பந்துகளை கையாண்டார். 40-வது ஓவரில் கவாஜாவின் விக்கெட்டையும் அஸ்வின் கைப்பற்றினார். அப்போது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 87/4. முன்னணி வீரர்களை இழந்த ஆஸ்திரேலிய அணியின் வேகம் குறைந்தது. #AUSvIND #Ashwin
    ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்க அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #Australia #SouthAfrica #AUSvsSAT20
    கார்ரா:

    ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கார்ராவில் நேற்று நடந்தது. போட்டி தொடங்கும் முன்பு மழை பெய்து பாதிப்பு ஏற்பட்டதால் இந்த ஆட்டம் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 27 ரன்னும், குயின்டான் டி காக் 22 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் கவுல்டர் நிலே, ஆன்ட்ரூ டை தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன்களே எடுத்தது. இதனால் தென்ஆப்பிரிக்க அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 38 ரன்னும் (23 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன்), கிறிஸ் லின் 14 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் நிகிடி, கிறிஸ் மோரிஸ், பெலக்வாயோ தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர் போட்டிக்கான கோப்பையை தனதாக்கியது. முன்னதாக நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச ஆளில்லா விமான போட்டில் நடிகர் அஜித் ஆலோசகராக இருக்கும் சென்னை அண்ணா பல்கலைக்கழக அணி 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. #AjithKumar #Australia #DHAKSHA
    கேன்பெர்ரா:

    நடிகர் அஜித்குமாரை ஆலோசகராக கொண்ட சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, கல்லூரி மாணவர்கள் குழு உருவாக்கிய தக் ஷா என்ற ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் பங்கேற்று உலக நாடுகளுக்கு சவால் விட்டது

    ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாண்ட் மாநிலத்தில் உள்ள டால்பி நகரில் கடந்த 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையில் மருத்துவ சேவைக்கு உதவும் ஆளில்லா விமானங்களுக்கான என்ற போட்டி நடத்தப்பட்டது. உலகெங்கிலும் இருந்து 55 நாடுகளில் இருந்து ஆளில்லா குட்டி விமானங்கள் இப்போட்டியில் பங்கேற்றன. அதில் 11 விமானங்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.

    இதில் நடிகர் அஜீத்தை தொழில் நுட்ப ஆலோசகராக கொண்ட அண்ணா பல்கலைகழகத்தின் மாணவர் குழுவின் தக்ஷா விமானம் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு சென்று அங்கு இருந்து ரத்த மாதிரியை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் இலக்கை வந்தடைய வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட போட்டியில், அதில் அஜீத் மாணவர் குழுவின் தக்ஷா விமானத்திற்கும் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் யூஏஎஸ் குழுவின் விமானத்திற்கும் இடையே கடுமையான போட்டி நடந்தது.

    இதில் விமானத்தின் பறக்கும் திறனைப் பொருத்தவரை தக்ஷா விமானம் 91 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் மோனாஷ் குழு விமானம் 88.8 புள்ளிகளுடன் இரண்டாம் இடமும் பெற்றது.



    நேர்முக தேர்வு மற்றும் ஆய்வறிக்கை ஆகியவற்றிலும் தக்ஷா குழு சிறப்பாக செயல்பட்ட நிலையிலும், 0.85 மதிப்பெண் வித்தியாசத்தில் தக் ஷா விமானம் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

    இதற்கு ஆஸ்திரேலிய நடுவர்களே காரணம் எனவும், திட்டமிட்டு அவர்கள் மதிப்பெண்களை குறைத்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த வெற்றியின் மூலமாக ஏரோஸ்பேஸ் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பெருமையை உலகறிய செய்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்த எம்.ஐ.டி.யின் ஏரோஸ்பேஸ் துறை பேராசிரியர் செந்தில்குமார், அமெரிக்கா உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகள் கூட இறுதிப்போட்டியை எட்ட முடியாத சூழலில் ஆஸ்திரேலியாவுடன் கடும் போட்டி நிலவியதாகவும், அதிக புள்ளிகள் பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய நடுவர்களின் நிறவெறி காரணமாக நேர்முக தேர்வில் மதிப்பெண் குறைக்கப்பட்ட சதியால் நமது மாணவர்கள் முதலிடத்தை எட்ட இயலாமல், இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டதாக வேதனை தெரிவித்தார்.

    விஸ்வாசம் படப்பிடிப்பில் இருப்பதால் குழுவுடன் செல்ல இயலாத நிலை அஜீத்திற்கு ஏற்பட்டது. இருந்தாலும் தினமும் பேராசிரியர்களையும், மாணவர்களையும் போனில் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கி வந்த அஜீத், வெற்றிக்காக தக் ஷா குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். #AjithKumar #Australia #DHAKSHA
    ×